ஐநா பாது காப்புச் சபையின் மார்ச் மாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கைப் பிரச்சனை உள்ளடக்கப் படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதத்திற்கான தலைவரான லிபியப் பிரதிநிதி இப்ராஹிம் தபாசியிடம் சென்ற மாதத்தில் இடம் பெற்ற இலங்கை தொடர்பான விவாதம் இம்மாதமும் தொடருமா என வினவப் பட்டபோது முதலில் பதில் கூறுவதைத் தவிர்த்தார். தொடர்ந்து இது தொடர்பாகக் கேட்டபோது பெரும்பாலான உறுப்பினர்கள் இலங்கைப் பிரச்சினை நிகழ்ச்சி நிரலில் இடம் பெறுவதை விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பிரித்தானியப் பிரதிநிதி இது தொடர்பாக ஏதும் செய்யாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை தொடர்பான தீர்மானத்தை இந்தியாவின் வேண்டுதலின் பேரில் இரசியா வீட்டோ செய்யத் தயாராக இருப்பதால் இலங்கை விவகாரம் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப் படுகிறது. இருப்பினும் சிம்பாப்பே மியன்மார் தொடர்பான விடயங்கள் வீட்டோவிற்கு உள்ளாகும் என்றபோதிலும் பிற்குறிப்பில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment