Saturday, 12 June 2010

திரைப்பட விழா நடாத்திய இந்திய நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர வேண்டும் - சிங்கள எம் பி


இலங்கையில் திரைப் படவிழா நடாத்திய இந்திய நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரவேண்டும் என்று சிங்கள பாராளமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க பொரிந்து தள்ளியுள்ளார். இலங்கையில் நடந்த திரைப்பட விழாவிற்கு இந்தியாவால் ஒரு ரூபா கூடச் செலவழிக்கப்படவில்லை. முழுச்செலவும் இலங்கை உல்லாசப் பிரயாணச் சபையே செய்தது என்று கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

திரைப்பட விழாவிற்கு விநியோகிக்கப் பட்ட நுழைவுச் சீட்டு விபரம்
விற்பனை செய்யப் பட்டவை ------------------------------ 15%
ஆதரவு தந்த நிறுவனங்களுக்கு கொடுத்தவை ----- 17%
ஆளும் கட்சியினர்க்கு கொடுத்தவை ------------------68%

மொத்தச் செலவு ----1000 மில்லியன் ரூபாக்கள்
வரவு ------------------------15 மில்லியன் ரூபாக்கள்

இதையறிந்து ஆத்திரமடைந்த சிங்கள் பாராளமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இந்திய சர்வ தேச திரைப்பட விழாவை நடாத்திய Wizcraft International Entertainment Pvt Ltd நிறுவன மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பச்சான் வராததால் ஏமாந்த சிங்கள மச்சான்
அமிதாப் பச்சான் வராதமையை சிங்கள் எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க மாப்பிளை இல்லாக் கல்யாணம் என்று சொல்லி வந்த இந்தி நடிகர்களைத் தாழ்த்திவிட்டார். அவர் நடந்த விழாத் தொடர்பான கணக்குகள் தேவை என்றும் கோரியுள்ளார். அத்துடன் இது தொடர்பாக பாராளமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்தத் திரைப்படவிழா தோல்வியில் முடிவடைந்தது தென்னக நடிகர்கள் ஒற்றுமையாக நின்று எதிர்த்தமையாகும். தமிழன் ஒன்றுபட்டால் அது தமிழ்நாட்டில் உள்ள ஆரிய சக்திகளுக்கு அது பேரிடியாகும். இதனால் அவர்கள் இப்போது திரைப்பட விழாவை எதிர்த்தமைக்கு எதிராக குரைக்கத் தொடங்கிவிட்டனர். இதில் குமுதத்தில் ஞானி முன்னிற்கிறார்.

மூன்று தடவை ஜிப் கழற்றிய கட்டழகி


அது ஒரு மக்கள் நெரிசல் மிக்க நகரம். அதில் ஒரு மக்கள் நிறைந்த பேருந்துத் தரிப்பிடம். அதில் ஒரு கட்டழகி வரிசையில் முன்னணியில் நின்றாள். இறுக்கமான குட்டைப் பாவாடை. அதுவும் தோற் பாவாடை. பேருந்து வந்து நின்றது. அவள் காலைத் தூக்கி படியில் ஏற முயன்றாள் முடியவில்லை. தடுத்தது அந்த இறுக்கமான தோற் குட்டைப் பாவாடை. பேருந்து நடத்துனரைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு தனது பாவாடையின் பின் புறத்தில் இருக்கும் ஜிப்பை கொஞ்சம் தளர்த்தினால் ஏறலாம் என்று. பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் முடியவில்லை. மீண்டும் செலுத்துனரைப் பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு மீண்டும் பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் முடியவில்லை. மூன்றாவது தடவையாக செலுத்துனரைப் பார்த்து மன்னிப்புக் கேட்பது போன் ஒரு கவர்ச்சிப் புன்னகை செய்து விட்டு பின்புறம் கையை விட்டு ஜிப்பைக் கொஞம் கீழே நன்றாகத் தள்ளிவிட்டு ஏற முயன்றாள். பாவம் மூன்றாம் தடவையும் முடியவில்லை. அவளின் பின்னால் நின்ற நல்ல காத்திரமான உடலமைப்புக் கொண்ட வாலிபன் அவளை இடுப்பில் பிடித்துத் தூக்கி பேருந்தில் ஏற்றினான்.

கட்டழகிக்குக் கோபம் வந்து அவனைப் பார்த்து எனக்கு முன் பின் தெரியாத நீ எப்படி என் உடலைத் தொட்டுத் தூக்க முடியும் என்று சீறினாள். அதற்கு அந்த வாலிபன் எனக்கும் உன்னைத் தெரியாதுதான் ஆனால் நீ முன்று தடவை எனது ஜிப்பை கீழே தள்ளி விட்டபின் நாம் இருவரும் அன்னியோன்யம் ஆகிவிட்டோம் என்றான்

மோதிக் கொள்ளும் கூகிளும் ஆப்பிளும்


கைத்தொலைபேசித் துறையில் விளம்பரங்களுக்கான் கடும் போட்டி இப்போது கூகிளுக்கும் ஆப்பிளுக்கும் இடையில் பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது.
ஒரு காலத்தில் சிலிக்கன் பள்ளத்தாக்கில்(Silicon Valley) நண்பர்களாக இருந்த இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையில் கடும் முறுகல் தோன்றியுள்ளது. இப்போது உலகெங்கும் smartphoneகள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. ஆப்பிளின் ஐபோன்களில் கூகிள் விளம்பரங்களைப் புகுத்தாமல் ஆப்பிள் தடை செய்ததைத் தொடர்ந்து இரு நிறுவங்களுக்குமிடையில் மோதல் மோசமடைந்துள்ளது.

Under the terms of Apple’s latest operating system, clarified by the company on Monday, critical information for distributing and analysing adverts cannot be shared with services owned by makers of other mobile operating systems. Effectively, this cuts AdMob, Google’s newly-acquired mobile advertising service, out of the iPhone platform completely.

அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டியை வளர்த்து அதன் மூலம் மக்களுக்கு குறைந்தவிலையில் பொருட்கள் கிடைக்க வழிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முக்கிய அம்சமாகும்.

இனிவரும் காலங்களில் இப்போது கணனிகள் வகிக்கும் இடத்தை நவீன கைத்தொலைபேசிகளான smartphoneகள் கைப்பற்ற இருக்கின்றன. அதனால் பல வர்த்தக நிறுவனங்கள் smartphone துறையில் தமது ஆதிக்கத்தை செலுத்தத் தாயாராகின்றன. இதன் முன்னோடியாக கூகிள் நிறுவனம் 750மில்லியன் டொலர்களுக்கு அட்மொப் (AdMob) என்னும் விளம்பரத் துறை நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனது இணைய விளம்பரத்துறை ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. ஆப்பிளும் தன்பங்குக்கு iAd என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. கைத்தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்கள் மூலம் விளம்பரங்களை அனுப்பி பெரும் தொகையை சம்பாதிப்பதில்தான் ஆப்பிளும் கூகிளும் மோதிக் கொள்கின்றன.

AT&T, Nissan, Disney ஆகிய நிறுவனங்கள் தமது விளம்பரங்களை iAdமூலம் ஆப்பிளின் கைத்தொலைபேசிகளில்(iPhone and iPod Touch) செய்கின்றன. இதன் மூலம் ஆப்பிளின் ஆரம்ப வருமானம் இந்த ஆண்டில் 60மில்லியன் டொலர்கள். தனது iPhone and iPod Touch ஆகியவற்றில் கூகிளின் விளம்பரங்களைத் தடுப்பதன் மூலம் தனது தனியுரிமையை iPhone and iPod Touch நிலை நாட்ட ஆப்பிள் முயல்கிறது.

கைத்தொலைபேசிகளூடான மொத்த விளம்பர வருமானம் தற்போது 600மில்லியன் டொலர்களாகும். இது இன்னும் மூன்று வருடங்களில் ஒன்றரை பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்தப் பெரும் வருமான வளர்ச்சியை யார் அதிகம் கைப்பற்றுவது என்பதுதான் கூகிளிற்கும் ஆப்பிளிற்கும் இடையில் நடக்க்கும் போட்டி.

Friday, 11 June 2010

செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்த பிரித்தானியத் தமிழ்த் தொலைக்காட்சிகள்


இம்மாதம் 23-ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் உலகத் தமிழ செம்மொழி மாநாட்டிற்கு பல தமிழ உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செம்மொழி மாநாடு ஈழத்தில் பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அவலத்துக்கு உள்ளாகி இருக்கும் இவ்வேளையில் தேவைதான என்பதும் இவர்கள் எதிர்ப்பதற்கான பல காரணங்களில் ஒன்று. இபோது அவர்கள் அவலங்களைத் துடைப்பத விட்டு தமிழுக்கு விழா எடுப்பதா என்பதும் ஒரு கேள்வி.

பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உண்டு. இதை பல சிங்கள அமைச்சர்கள் பலதடவை தெரிவித்து விட்டனர். இதை இந்திய அரசு மறுக்கவுமில்லை. இந்திய அரசில் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு அங்கம். இதனால் இலங்கைத் தமிழர்களின் அவலத்திற்கு திரு மு கருணாநிதிக்கும் அவரது கட்சிக்கும் பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் பொறுப்பு உள்ளதை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது.

ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்துள்ளது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார். யாழ் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் அமைப்பு செம்மொழி மாநாட்டைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது.

இலங்கையில் இனக் கொலை நடந்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜி என்ற சிங்களவர்களின் உற்ற நண்பன் எந்த வகையில் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்? செம்மொழி மாநாட்டு அமைப்பாளர்களின் மிக முட்டாள்த் தனமான முடிவு பிரணாப் முஹர்ஜியை அழைத்தது.

பிரித்தானியாவில் உள்ள சில "தமிழ் அறிஞர்கள்" கருணாநிதியின் செம்மொழி மாநாட்டிற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தமிழ்தொலைக்காட்சிகளை அணுகி தங்களைப் பேட்டி காணும்படி கோரினார். அதற்கு இரு தொலைக்காட்சிச் சேவைகளும் மறுத்துவிட்டன.

பத்மநாதன் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள்


கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இப்போது தெரிவிக்கப்படுகிறன. சென்றவாரம் இலங்கை அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல உள்ளூர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று தெரிவித்தார்.

பத்மநாதன் கைது செய்யப் பட்டு இலங்கை வந்தாரா? கடத்தப் பட்டாரா? அல்லது இலங்கைக்கு தனது விருப்பத்துடன் சென்றாரா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். அத்துடன் அவர் ஏன் இந்தியாவிற்கு நாடு கடத்தப் படவில்லை? இந்தியா ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பல தகவல்களை அறிந்து கொள்ள அதில் முக்கியமாக ராஜீவ் காந்தி கொலைக்கும் ஆர். பிரேமதாசா அரசிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள, விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ய நீண்ட நாட்களாக முயற்ச்சி செய்து வருகிறது. இதற்காகவே கேணல் கிட்டுவை நடுக்கடலில் வைத்து கைது செய்ய முயன்று தோல்விகண்டது. இந்நிலையில் பத்மநாதன் தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் இப்போது வெளிவருகின்றன.

தகவல் -1 - துரோகி பத்மநாதன்
பத்மநாதன் சில வருடங்களுக்கு முன்பே இலங்கை அரசின் கைப் பொம்மையாக மாறிவிட்டார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் கப்பல்கள் பல இலங்கை இந்தியக் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டன. அவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரிலேயே இலங்கை சென்றார். புலிகளின் நிதிதொடர்பாக அவர் இலங்கை அரசிற்கு தகவல்கள் வழங்கினார்.
இந்த தகவலில் சில சந்தேகங்கள் உண்டு. இலங்கைக்கு உதவி செய்ய அவர் இலங்கை செல்லாமல் தொடர்ந்தும் வெளிநாட்டில் இருந்து கொண்டே விடுதலைப்புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்பை சிதைக்க தொடர்ந்தும் உதவிகளைச் செய்திருக்கலாம்.

தகவல் - 2 துணைவன் பத்மநாதன்
பன்னாட்டு ரவுடிக் கும்பல் விடுதலை புலிகளை ரவுண்டு கட்டித் தாக்கி இறுதிப் போரை முடிவுக்குகொண்டு வந்த பின்னர் இலங்கை அரசிடம் பத்தாயிரம் விடுதலைப் புலி போராளிகள் அகப்பட்டுக் கொண்டனர். ஏற்கனவே இவர்களிடம் இவர்களை மீட்பதற்கு பன்னாட்டு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் உறுதி அளித்திருந்தது. இதன் பிரகாரம் விடுதலை புலிகளின் தலைமப் பீடமும் இலங்கை அரசும் சில உடன்படிக்கைகளைச் செய்து கொண்டன. அந்த உடனபடிக்கையின் ஒரு அம்சமாக பத்மநாதன் இலங்கை அரசிடம் சரணடைந்து விடுதலைப் புலிகளின் சொத்துக்களை இலங்கையிடம் கையளிப்பது அதற்கு கைமாறாக இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள பத்தாயிரம் விடுதலைப் புலிகளைக் கொல்லாமல் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவது.
இந்தத் தகவகளின் உண்மைத் தன்மையை பத்மநாதனுக்கு இனி என்ன நடக்கவிடுக்கிறது என்பதை ஒட்டியே அறிந்து கொள்ள முடியும்.

Thursday, 10 June 2010

தென்னிந்திய திரைப்படத் துறைக்கு நன்றி



தென்னிந்திய திரைப்படவுலகம்
தோற்கடித்தது ஆரிய சிங்களக் கூட்டமைப்பை
வெற்றி கொண்டோமென்று கொக்கரித்தது சிங்களம்
சர்வதேச மட்டத்தில் சிங்களத்தை பெருமைப்படுத்த
சதியொன்று தீட்டியது வட இந்தியம்
நடந்தது இந்தியத் திரைப்படவிழாவல்ல
வட இந்திய கோட்டான்களின் கோர தாண்டவம்
நன்றி எம் இனிய உறவுகளே

மமதை கொண்ட ஆரியம்
மண்கவ்வியது கொழும்பு நகரில்
சிங்களம் வீணடித்தது பலகோடிகள்
பாரதிதாசன் கூற்றும் நிறைவேறியது
எம் பகைவர் மறைவர் நாம் ஒன்று பட்டால்

பணம் வாங்கி பேசாதிருந்தது
பார்பனிய ஊடகக் கும்பல்
மௌனித்திருந்தது மஞ்சள் துண்டு
ஆர்பரித்தது ஆரியக் கூட்டம்

தசை மலையென்று வெறுத்திருந்தேன்
தங்கச் சிலையென்று இன்று ரசிக்கின்றேன்
நீ பேசும் ரமிளை இகழ்ந்திருந்தேன்
நின் தமிழை இன்று கேட்டு மகிழ்கிறேன்
என் தமிழரை கொன்றொழித்தோரும்
கொலைக்கு கொடுவாள் கொடுத்த
இத்தாலிச் சனியாளும் இணைந்து
செய்த திரைப் படவிழாவை நீ புறக்கணித்தாய்
துணையென வந்தோர் துரோகிகளாகிய
எம் வரலாற்றில் எமக்கென இரங்கியதற்கு
என் மனதின் இனிய நன்றிகள் நமீதா

Wednesday, 9 June 2010

படிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை


ஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசையை அவர் அரச வைத்தியரிடம் கூறினார். அவரும் பல யோசைனைகள் செய்தும் பல மருந்துகளை பரீட்சித்தும் பார்த்துவிட்டு இறுதியில் மந்திரியிடம் சொன்னார் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பேன். அதற்காக நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தரவேண்டும் என்று சொல்லி அதற்கான உறுதி மொழியையும் மந்திரியிடம் இருந்து பெற்று விட்டார்.

அரசி குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது மார்புக் கச்சையில் களவாக சருமத்திற்கு அரிப்புத் தரும் ஒரு தூளை தூவிவிட்டார் அரச மருத்துவர். குளித்துவிட்டு மார்புக்கச்சையை அணிந்த அரசிக்கு மார்பில் கடிக்கத் தொடங்கிவிட்டது. தாங்க முடியாத கடி.  அரனிடம் அரசி முறையிட்டு அரசன் அரச மருத்துவரை உடன் அழைத்தார். மருத்துவரும் அரசியை நோயின் குறிகளை விசாரிப்பது போல் பாசாங்கு செய்துவிட்டு இதற்கு உரிய மருந்து மந்திரியின் உமிழ் நீரை அவரது நாவாலும் உதட்டாலும் இருமணித்தியாலங்கள் தடவுவதுதான் என்று அரசனிடம் சொன்னார். அரசனும் அரசியாரின் தாங்கமுடியாத மார்புக்கடியை தீர்க்க வேறு வழியின்ரி ஒப்புக் கொண்டார். வைத்தியரும் மந்திரியாரின் வாய்க்குள் மாற்று மருந்தை திணித்து விட்டு மந்திரியாரின் சிகிச்சையை ஆரம்பிக்கச் சொன்னார். மந்திரியும் தனது நீண்டகால ஆசையை இருமணித்தியாலங்கள் தீர்த்து அரசியின் மார்பையும் குணப்படுத்தினார்.

பாவம் மந்திரி மருத்துவருக்கு உறுதி அளித்த படி ஆயிரம் பொற்காசுகளை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். வைத்தியருக்கு வந்ததே கோபம். அதனால் அரசன் குளித்துக் கொண்டிருக்கும் போது அரசரின் கோமணத்தில் அரசியாருக்குத் தூவிய அதே தூளைத் தூவிவிட்டார்!!!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...