Saturday, 25 April 2009

இலங்கைத் தமிழர் கொலை: குரலை மாற்றிய அமெரிக்கா.


இலங்கையில் சிங்களவரும் ஆரியரும் இணைந்து நடாத்தும் இனக்கொலை தொடர்பாக அமெரிக்கா தனது குரலை மாற்றியுள்ளது. எச்சரிக்கை என்ற பதத்தை பாவித்து விட்ட தனது அறிக்கையில் போரை உடன் நிறுத்தாவிடில் இலங்கையின் ஐக்கியமும் இனங்களுக்கிடையிலான இணக்கமும் ஆபத்துக்குள்ளாகும் என்றும் கவலை வெளியிட்டுள்ளது. இவ்வறிக்ளை வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவ்வறிக்கையில் பாதுகாப்பு வலயத்தில் எறிகணைகள் வீசுவதை உடன் நிறுத்தும் படி கேட்கப் பட்டுள்ளது. இலங்கை-இந்தியப் படைகள் இலங்கை அரசு பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த முதல் நாளில் இருந்தே பாதுகாப்பு வலயத்துள் வேதியியல் குண்டுகள் கொத்துக் குண்டுகள் (chemical bombs and cluster bombs) உட்பட பல பயங்கர ஆயுதங்களைப் பாவித்து தமிழ் இனக்கொலையை அரங்கேற்றி வருகின்றன.

இந்திய ஆதிக்கத்தை அமெரிக்கா விரும்பாது
இலங்கையில் இந்தியாவின் முற்று முழுதான ஆதிக்கம் நிலை நாட்டப்படுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பது இதிலிருந்து

மேனன்-நாராயணன் கேட்கவில்லையா? கொடுக்கவில்லையா?




சிவ் சங்கர் மேனனும் நாராயணனும் இலங்கைக்கு திடீர்பயணம் மேற் கொண்டபோது தமிழ்நாட்டிலுள்ள உத்தரப் பிரதேச பேரினவாதிகளின் கொத்தடிமைகள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
போகிறார்கள் போர்நிறுத்தம் வரப் போகிறது என்று நம்பியிருந்தனர். தாம் தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கலாம் என மகிழ்ந்திருந்தனர். இவ்விரு தமிழின விரோதிகளும் காங்கிரசுக் கட்சிக்கு அப்பால் இந்திய நலன்களுக்கு அப்பால் தமது சாதிய மேம்பாட்டை நிலை தளராமல் பார்த்துக் கொள்ளும் ஒரு கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
கேட்டு சம்மதிக்கவில்லையா? அல்லது கேட்கவில்லையா?
எவர் வற்புறுத்தினாலும் போர்நிறுத்தம் செய்யப் போவதில்லை என்று இலங்கை இனக் கொலையாளிகள் மீண்டும் கத்துகின்றனர். இவர்கள் இருவரும் போருக்குத் தேவையான வழங்களையும் தற்போதைய நிலையையும் மீளாய்வு செய்ய சென்றார்களா? அல்லது இவர்கள் போர் நிறுத்தம் கேட்டு இலங்கை இனக் கொலையாளிகள் மறுத்து விட்டார்களா?
இவ்விரு தமிழின விரோதிகளும் இலங்கை சென்று திரும்பிய பின் இனக்கொலையின் உக்கிரம் மேலும் அதிகரிக்கும். இதுவே கடந்த கால அனுபவம்.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி போர்நிறுத்தம் செய்யும்படி இந்தியப் பிரதிநிதிகள் கோரவில்லை. தமிழ்நாட்டில் உள்ள உத்திரப் பிரதேச பேரின வாதிகளின் கொத்தடிமைகள் என்ன சொல்லப் போகிறார்கள். - ராஜுவ் கொலை - சகோதர யுத்தம்...என்பதைத்தவிர.

















Friday, 24 April 2009

சனியாள் கட்சிக்கு உயிர் கொடுக்க - போர் முடிந்த பின் போர் நிறுத்தம் கோரும் இந்தியா












இத்தாலிச் சனியாளின் கட்சிக்கு எதிராக தமிழின உணர்வாளர்களும் தமிழ்த் திரை உலகினரும் திரண்டெழுந்து செயல்படத் தொடங்கியிருப்பதால் தேர்தலில் பலத்த தோல்வியை அது சந்திக்க விருக்கிறது. வெறும் அறிக்கை மூலம் போர்நிறுத்தம் கோரிவந்த சனியாள் ஆட்சி இப்போது அதனால் தமிழர்களை ஏமாற்ற முடியாது என உணர்ந்து ஏதாவது செய்து தமிழர்களை ஏமாற்ற முற்படுகிறது.
சனியாளைப் பொறுத்தவரை தேர்தலில் வெற்றி பெறுவது இப்போதைய முதல் தேவை. தனது குடும்பத்துக்கான பழிவாங்கலை தேர்தலுக்கு பிறகும் செய்யலாம். அதற்கு தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக தனது ஆலோசகர்கள் சிவ் சங்கர் மேனனையும் நாராயணனையும் இப்போது இலங்கைக்கு அனுப்பி போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் படி கேட்கிறாள் அச் சனியன். தமிழ் தேசியவாதத்திற்கு எதிராக செயல்படும் மிக மிக மோசமான எதிரகள் இந்த இருவரும்.
முடியப் போகும் போரை நிறத்தப் போகிறார்கள்
இலங்கையைப் பொறுத்தவரை இன்னும் சில் தினங்களில் போர் முடிந்து விடும். அல்லது போரை நிறுத்திவிட்டோம் என்று சம்மா அறிவித்து விட்டு போரைத் தெடர்ந்து நடத்தலாம். சும்மா சாட்டுக்கு இலங்கை அறிவிக்கப் போகும் போர் நிறுத்தத்ததை தத்தளிக்கும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் துரும்பாக எடுத்துக் கொண்டு தாம் பெரிதாக சாதித்து விட்டதாக பிரச்சாரம் செய்து தப்பலாம் என்று தப்புக் கணக்கு போட்டுள்ளார்கள்.
தேர்தலுக்குப் பிறகு மேலும் கூலிப் படையினரை அனுப்பி இனக்கொலைக்கு தேவையான சகல உதவிகளும் செய்வோம். 300 மில்லியன் டொலர் கடன் தருவோம் போர் நிறுத்தம் செய்யுங்கள் என்று இவர்கள் இருவரும் இலங்கையைக் கோரலாம்.

Thursday, 23 April 2009

இத்தாலிச் சனியாளை தமிழ்நாட்டில் காலடி வைக்க மானமுள்ள தமிழன் அனுமதிக்கமாட்டான்.



















இந்த அட்டூழியங்கள் புரியும் இலங்கை அரசிற்கு உதவி ஒத்தாசை செய்யும் இத்தாலிச் சனியனை தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைக்க எந்த மானமுள்ள தமிழனும் அனுமதிக்க மாட்டான்.
.
யுத்தத்தை வழி நடத்துவது இந்தியப்படை.
.
யுத்தத்திற்கான தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது இந்தியப்படை
.
யுத்தத்திற்கான பயிற்சி அளிப்பது இந்தியப்படை.
.
யுத்தததிற்கான நிதி உதவிகளை வழங்குவது இந்திய அரசு.
.
களத்தில் இருந்து இரசாயன ஆயுதங்களை வீசுவது இந்தியா


கையோங்கி நின்றது ஈழத் தமிழ்த் தேசியவாதம்
கை நடுங்கி நின்றது ஈனச் சிங்களப் பேரினவாதம்
ஒரு கை பார்க்க வந்தாள் இத்தாலிச் சனியாள்
கை கொடுத்து நின்றது பார்பனியச் சாதியவாதம்
கைகள் இணைத்துக் கொண்டன கொலைவெறி நாய்கள்
உத்தரப் பிரதேசத்துப் உதவாக்கரைப் பேரினவாதம்
சின்னத்தனமான சிங்களப் பேரினவாதத்திற்கு
நூறு மில்லியன் டொலர்களை அள்ளிக் கொடுத்தது
சீன எதிரியுடன் இந்தியாவிற்குப் போட்டா போட்டி
இனக் கொலைக்கு யார் கை கொடுப்பது என்று
ஆறாயிரம் ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
அடியெடுத்து வைத்தன ஈழ மண்ணில்
பல்லாயிரம் சிங்களப் கொலை வெறி நாய்களுடன்
கைகள் கோத்துக் கொண்டன
குழந்தைகளைக் கொல்ல
கையில்லா உடல்களும்
உடலில்லாக் கைகளும்.

Wednesday, 22 April 2009

இலங்கை - ஐநாமீது நற்பணி நிறுவனங்கள் பலத்த குற்றச்சாட்டு


ஐநாவின் மெளனமே கடலோர இரத்தக் களரிக்கு இட்டுச் சென்றது

பத்திரிகையாளர்களையும் அரச சார்பற்ற நற்பணி நிறுவனங்களையும் போர் நடக்கும் இடத்துக்கு அனுமதிக்காததே இலங்கையில் தமிழர்களின் கடலோர இரத்தக் களரிக்கு இட்டுச் சென்றன என்று அரச சார்பற்ற நற்பணி நிறுவனங்கள் பலவும் ஐக்கிய நாடுகள் சபையில் குற்றஞ் சாட்டியுள்ளன. Joseph Cornelius Donnelly of CARITAS International ஐநாவின் மெளனமே இந்த அனுமதி மறுப்புக்கு காரணமானது என்று கூறினார்.

அமெரிக்காவின் பயங்கர வாத(?) தடை சட்டம்
Operation USA இன் நிம்மி கெளரிநாதன் அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புச் சட்டமே தமது வட-கிழக்கு இலங்கையில் தமது பணிகளைப் பிரச்சினைக்குள்ளாக்கியது என்று கூறினார். இது தொடர்பாக கதைக்காமல் தாம் தடை செய்யப் பட்டோம் என்றும் கூறினார்.

ஐநாவின் சிறந்த நோக்கங்கள் காண்பிக்கப் படவில்லை
முன்னாள் ஐநா அதிபர் கோபி அனனின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஜேம்ஸ் ரொவுப் அவர்கள்(James Traub, policy director of the Global Center for the Responsibility to Protect) ஐநா தனது சிறந்த நோக்கங்களை இலங்கை விடயத்தில் காண்பிக்கத் தவறியது என்று குற்றம் சாட்டினார்.

இலங்கைக்கு பயந்த ஐநா
Robert Templer of the International Crisis Group, ஐநா இலங்கைக்கு பயந்து நடந்து கொண்டது என்றும் அதனால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டன என்று குற்றம் சாட்டினார். அரச நடவடிக்கைகளால் இறந்தவரகளின் எண்ணிக்கை தெரிந்தும் ஐநா வெளியிடாமல் இருந்ததையும் அவர்கள் குற்றம் சாட்டினர். தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு தாம் செல்லத் தடை விதித்ததையும் அவர்கள் கண்டித்தனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அனா நெய்ஸ்டற் அவர்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்: ஒரு சிறிய நாடான இலங்கைக்கு ஏன் பயந்து நடந்தது? அவரது மறு கேள்வி இலங்கை எப்படி அரசு சார்பற்ற நற்பணி நிறுவனங்களை வெளியேற்ற முடியும்? அவரது கேள்விகளுக்கு விடை வழங்கப் படவில்லை. அத்துடன் அவர் நிற்கவில்லை தமிழர் தடுப்பு முகாம்களுக்கு நிதி வழங்குவது சட்ட பூர்வமானதா என்றும் கேள்வி எழுப்பினார்

ஐநாவின் பொய் நா - வில்லங்கமான வில்லன் நம்பியார்



இந்திய மலையாளி நம்பியார்.
ஐக்கிய நாடுகள் சபையால் அனுப்பப்பட்ட "சிறப்புத்தூதுவர்" விஜய் நம்பியார் பாதுகாப்புச்சபைக்கு அறிக்கை சமர்பிக்க மறுத்து அடம் பிடிக்கிறார். சீனா இரசியா போன்ற நாடுகள் மூடிய அறைக்குள் இலங்கை அவலம் தொடர்பாக கலந்துரையாட ஒத்துக்கொண்டபோதும் மூடிய அறக்குள் தன்னும் தன் அறிக்கையை சமர்பிக்க முடியாதென்று அடம் பிடிக்கிறார் இந்த வில்லங்கமான வில்லன்.


இந்தியாவின் சதி?

இவர் இப்படி மறுப்பதற்கு இந்தியாவைத்தவிர வேறு யார் காரணம்? மூடிய அறைக்குள் கூட விவாதிக்கக் கூடாத அளவிற்கு நிலமை மிக உணர்ச்சி மயமானது என்று நம்பியார் அடம் பிடிக்கிறார். இது அரசியல் அல்ல மனிதபிமானம் மிக்கது என்று கூறுகிறார். இலங்கை அரசு போரை முடிப்பதற்குத் தேவையான கால அவகாசம் வழங்குவதை தவிர வேறு காரணம் என்ன இருக்கிறது இந்த நம்பியாருக்கு?


ஒரு வல்லரசு நாடு எதிர்ப்பு

ஐந்து வல்லரசுகளில் ஒன்று நம்பியாரின் நிலையை கடுமையாக எதிர்த்துள்ளது. அது பிரித்தானியாவாக இருக்கலாம்.


நம்பியார் மீது சட்ட நடவடிக்கை!

நம்பியாரின் செயலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை(subpoena) எடுக்கப் படலாம்.


subpoena
A writ issued by a court or other authorized body requiring the attendance of a person at a stated time and place, subject to penalty for non-compliance.

கல்லான கன்னி


கல்லைக் கோவிலாக்கினான் இராஜஇராஜ சோழன்
கல்லை அணையாக்கினான் அந்தக் கரிகால மன்னன்
கல்லைச் சிலையாக்கினான் மாமல்ல பல்லவன் – நீயேன்
கல்லாய் உன்மனதை ஆக்கினாய் காரிகையே.
.
சிலம்புடைத்தாள் கண்ணகி கணவன் மானம் தனைக் காக்க
வில்லுடைத்தான் ராமன் காரிகை யொருத்தியின் கைப்பிடிக்க
கல்லுடைத்தான் காஞ்சியிலே சிலைகள் பல வடிக்க – என்
நெஞ்சுடைத்தாய் நேரிழையே எக் காரணத்திற்காக.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...