சீனா தனது றென்மின்பி நாணயத்தின் பெறுமதியை 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி 1.9 விழுக்காடும் பின்னர் 12-ம் திகதி 1.6 விழுக்காடும் குறைத்து உலக அரங்கில் ஓர் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உடனடி விளைவாக சீனாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்தன. சீனாவில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன. ஓகஸ்ட் 12-ம் திகதியும் சீனாவின் றென்மின்பியின் பெறுமதி குறைக்கப்பட்டது. நாணயப் பெறுமதியை குறைத்ததுடன் பெறுமதி மீதான சீன மைய வங்கியின் பிடியும் தளர்த்தப்பட்டுள்ளது.
சீனா தனது நாணயத்தை உலகச் சந்தையில் "மிதக்க" விட்டதைத் தொடர்ந்து அதன் நாணயத்தின் பெறுமதி மாற்றம் 0.6 விழுக்காடு வரையிலான ஏற்ற இறக்கத்துள் மட்டுப்படுத்தப் பட்டு வைக்கப் பட்டிருந்தது. சீனா திடீரென தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்தமைக்குச் சொல்லப்படும் காரணங்கள்:
1. ஏற்றுமதியை அதிகரிக்க.
2. தனது நாணயத்தை உலக நாணயமாக மாற்றும் முன்னேற்பாடு
3. தனது பங்கு விலைச் சரிவை சரிக்கட்ட
4. பன்னாட்டு நாணய நிதியத்தில் தனது நாணயத்தையும் "கூடை நாணயங்களில்" ஒன்றாக ஏற்றுக் கொள்ளச் செய்ய.
5. உலக எரிபொருள் விலை வீழ்ச்சி சீனாவிற்கு சாதகமானது
சீன நாணயமான றென்மின்பியின் பெறுமதியைக் குறைத்தது சீனப் பொருளாதாரத்தின் வலுவிழந்த நிலையைக் காட்டுகின்றது என்றும் சீன ஆட்சியாளர்கள் அதையிட்டுக் கலவரமடைந்துள்ளனர் என்றும் கருத்துக்கள் பொருளாதார நிபுணர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2015 ஜுலை மாதத்திற்கான சீன ஏற்றுமதி 8.3விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. தனது ஏற்றுமதியைத் தக்க வைத்துக்கொள்ள றென்மின்பியின் பெறுமதி டொலருக்கு எதிராக 15 விழுக்காடு குறைய வேண்டும் என்கின்றனர் சில நிபுணர்கள்.
நாணயப் போர் உருவாகுமா?
சீனாவின் நாணய மதிப்புக் குறைப்பு ஒரு நாணயப் போரை உருவாக்குமா என்ற கேள்வியையும் உருவாக்கியுள்ளது. ஒரு நாடு மற்ற நாடுகளில் தனது உற்பத்திப் பொருட்களை மலிவு விலையில் சந்தைப் படுத்துவதற்காக தனது நாட்டின் நாணயத்தை மற்றைய நாடுகளின் நாணயத்தினுடன் ஒப்பீட்டளவில் மதிப்பைக் குறைத்து வைத்திருக்க விரும்புகிறது. இந்த சொந்த நாணய மதிப்புக் குறைப்பை பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு செய்யும் போது நாணய்ப் போர் உருவாகிறது. ஏற்கனவே ஐக்கிய அமெரிக்காவில் சீனா தனது நாணயத்தைத் திட்டமிட்டு பெறுமதியைக் குறைத்து வைத்துள்ளது. இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கள் பாதிப்படைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சீன நாணய மதிப்பிறக்கத்தால் அமெரிக்கா செய்யும் என எதிர்பார்த்த வட்டி விழுக்காட்டுக் குறைப்பு கால தாமதமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது டொலரின் மதிப்பைக் குறைக்கும். அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையில் பலர் சீனாவின் நாணயத்தின் மதிப்பு உயர்த்தப்பட வேண்டும் அல்லது டொலரின் பெறுமதியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அமெரிக்காவின் குடியரசுக் கட்சி வேட்பாளராக வரப் போட்டியிடும் Donald Trump சீனாவின் நாணய மதிப்புக் குறைப்பு அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு பேரிடியாகும் என்றார்.
சீன நாணயத்தின் டபுள் ரோல்
சீனாவின் நாணயம் றென்மின்பி மற்றும் யுவான் என்னும் இரண்டு பெயர்களைக் கொண்டுள்ளது. பொதுவுடமை ஆட்சியின் பின் மக்கள் நாணயம் என்னும் பொருள்கொண்ட றென்மின்பி என்னும் பெயர் சூட்டப்பட்டது. அது இரு பெயர்கள் மட்டுமல்ல இரட்டைத் தன்மையும் கொண்டது. உள்நாட்டு (onshore) றென்மின்பி என்றும் வெளிநாட்டு (offshor) றென்மின்பி என்றும் இரு வேறு பெறுமதிகளை சீன நாணயம் கொடுள்ளது. சீனாவின் வெளிநாட்டு றென்மின்பி 2.9 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இது உள்நாட்டு நாணயத்தின் 2 விழுக்காடு வீழ்சியிலும் பார்க்க அதிகமானதாகும். வெளிநாட்டு நாணய வர்த்தகர்களின் செயற்பாடுகளில் இருந்து தனது நாணயத்தின் பெறுமதியைக் காப்பாற்ற இந்த இரட்டைத் தன்மை பேணப்படுகின்றது.
கூடையில் சீனக் கருவாடும்
தற்போது 7 விழுக்காடு வளரும் சீனப் பொருளாதாரம் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நான்கு விழுக்காட்டிற்கு குறைவான அளவே வளரும் என்பதாலும் 2015 ஜூன் மாதத்தில் சீனப் பங்குச் சந்தை பெரு வீழ்ச்சியைக் கண்டதாலும் சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் குறைத்து தனது நாட்டினது குறைந்து கொண்டிருக்கும் ஏற்றுமதியைத் தூண்ட முயல்கின்றது. அதே வேளை சீனாவின் இன்னும் ஒரு நோக்கமான தனது நாணயத்தை உலக நாணயமாக்குவதையும் சீனா நிறைவேற்ற முயல்கின்றது. இனி சீன நாணயம் பெறுமதி குறைவடையாது என்ற நிலையை சீனா உருவாக்கியுள்ளது. சீனா தனது நாணயத்தையும் பன்னாட்டு நாணய நிதியத்தின் (IMF)முக்கிய நாணயங்களான "கூடை நாணயங்களில்" ஒன்றாக இணைக்க விரும்புகின்றது. அதற்காக சீனா தனது நாணயத்தின் நடவடிக்கை தொடர்பாக பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கின்றது. சீன நாணயத்தை கூடை நாணயங்களில் ஒன்றாக இணைப்பது தொடர்பான தீர்மானத்தை 2016-ம் ஆண்டு செப்டம்பர் வரை ஒத்தி வைத்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியத்தின் கூடைக்குள் தற்போது அமெரிக்க டொலர், யூரோ, ஜப்பானிய யென், பிரித்தானியப் பவுண் ஆகிய நாணயங்கள் மட்டுமே இருக்கின்றன. சீனாவின் நாணயத்தை சுதந்திரமாக வாங்கவோ விற்கவோ முடியாது. அதற்கான கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பது பன்னாட்டு நாணயத்தின் நிபந்தனையாகும்.
நடுப்புள்ளி
தற்போது சீன நாணயத்திண் பெறுமதியை அதன் மைய வங்கி நாள் தோறும் காலை 9.15இற்கு நிர்ணயிக்கின்றது. இதை நடுப்புள்ளி என்பர் பின்னர் நாணயம் சந்தையில் நடுப்புள்ளியில் இருந்து இரண்டு விழுக்காட்டிலும் பார்க்க கூட ஏற்றவோ இறக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. இது கைவிடப்பட்டு நாணயச் சந்தைதான் நாணயத்தின் பெறுமதியை நிர்ணயம் செய்யும் வகையில் மாற்றம் செய்யப் பட வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே பன்னாட்டு நாணய நிதியத்தின் கூடை நாணயங்களுள் ஒன்றாக சீன நாணயம் இணைக்கப்படும். ஆனால் சீன நாணய வர்த்தகம் சுதந்திரமாக நடந்தால் நான்கு ரில்லியன் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு சீனாவிடம் இருப்பதால் அதன் பெறுமதி உயர வாய்ப்புண்டு. அது சீனாவின் ஏற்றுமதியைப் பாதிக்கும்.இனி சீனாவின் நடுப்புள்ளியை சீன மையவங்கி தான் விரும்பியபடி தினம் தோறும் தீர்மானிக்காமல் முதல் நாள் சந்தை மூடப்படும்போது என்ன பெறுமதியில் றென்மின்பி இருந்ததோ அதே அடுத்தநாள் நடுப்புள்ளிப் பெறுமதியாக்கப்படும். இது சீன நாணயத்தின் பெறுமதியில் அதன் மையவங்கியின் தலையீட்டைக் குறைக்கின்றது. சீனா செய்த இந்த நகர்வை பன்னாட்டு நாணய நிதியம் வரவேற்றுள்ளது. உலகச் சந்தையில் எரிபொருட்களின் விலை தொடர்ந்துவீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பும் சீனாவின் நாணய மதிப்பிறக்கம் செய்யும் முடிவிற்கு சாதகமாக உள்ளது.
உலக நாணயமாக றென்மின்பி
கடந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிராக யூரோ 22 விழுக்காடும் ஜப்பானிய நாணயமான யென் 24 விழுக்காடும் வீழ்ச்சியடைந்திருக்கும் வேளையில் சீனாவின் 2015 ஓகஸ்ட் 11-ம் திகதி தனது நாணயத்தின் மதிப்பை குறைப்பது அதன் ஏற்றுமதியை அதிகரிக்க அவசியமான ஒன்றாகும்.
சீனா உலகின் முன்னணி நாடாக தான் வரவேண்டும் என்ற கொள்கைக்கும் முயற்சிக்கும் அதன் நாணயம் உலக நாடாக மாற்றப்படுவது அவசியம். இதற்கு ஏற்ப சீனா ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை உருவாக்கியது. கடந்த 2,200 ஆண்டுகளாக சிறந்த சமூகக் கட்டமைப்பு, சிறந்த கல்வித்தரம், தொழில்நுட்பத்தில் மேன்மை கொண்ட நாடாக இருந்து வருகின்றது. அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவீனம் சீனாவின் பாதுகாப்புச் செலவீனத்திலும் பார்க்க ஐந்து மடங்கு. 1.3 மில்லியன்(1,300கோடி) மக்கள் தொகையை கொண்ட சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகும் ஆனால் தனிநபர் வருமானம் என்று பார்க்கும் போது சீனா உலகில் 79வது இடத்தில் இருக்கின்றது. இதனால் சீனா ஒரு முதல்தர நாடாக மாற நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கின்றது.
அமெரிக்காவிற்கு இலாபம்
சீன நாணயத்தின் மதிப்புக் குறைந்த படியால் அமெரிக்கா சீன பொருட்களை மலிவாக வாங்கலாம். அதன் வெளிநாட்டு செல்வாணியை இது அதிகரிக்கும். அமெரிக்காவில் விலைவாசி குறையும். அப்பாவிச் தற்போது இருக்கும் நிலையில் அமெரிக்காவும் தனது நாணயத்தின் மதிப்பைக் குறைக்க முயலாது. ஐரோப்பிய யூரோ நாணயமும் ஜப்பானின் யென்னும் ஏற்கனவே பெறுமதி குறைக்கப்பட்டு விட்டன. அப்பாவிச் சீனத் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.
Wednesday, 12 August 2015
Tuesday, 11 August 2015
சீனாவில் உருவாக்கப்பட்ட பல அம்பாந்தோட்டைகளால் அவதியுறும் பொருளாதாரம்
சீனாவின் பொருளாதாரம் ஏழு விழுக்காடு வளர்கின்றது. இந்த வளர்ச்சிக்கு அதன் ஏற்றுமதியும் அதனது உள்நாட்டு முதலீடும் நல்ல பங்களிப்பைச் செய்கின்றன. 2008-ம் ஆண்டின் பின்னர் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்த பின்னர் வேகமாக வளர்ந்து வந்த சீன பொருளாதாரம் தனது வேகத்தை இழந்து விட்டது. சீனா கடந்த பத்து ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல கீன்சிய முறைமையும் நிதிக்கொள்கையாளர்களின் முறைமையையும் சேர்த்துக் கடைப்பிடிக்கின்றது. அதன்படி சீனாவில் பணப் புழக்கம் அதிகரிக்கச் செய்ததுடன் அரச முதலீடுகளும் அதிகரிக்கப்பட்டன.
அரச செலவீனம்
சீன ஏற்றுமதி 2009-ம் ஆண்டிற்கு முன்னர் ஆண்டு தோறும் 19 விழுக்காடு வரை வளர்ந்து கொண்டிருந்தது. 2009-ம் ஆண்டு சீன ஏற்றுமதி இருபத்தைந்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதை ஈடு செய்ய சீனா தனது அரச செலவீனங்களைக் கண்டபடி அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு செலவீனத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதாயில் அது திறன்மிக்க வகையில் முதலிடப்பட வேண்டும். ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அவர்களைக் கொண்டு ஒரு பாரிய கிடங்கை வெட்டச் செய்து பின்னர் மேலும் ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க அக் கிடங்கை மூடச் செய்வது பொருளாதாரத்திற்குப் பயனளிக்காது. சீனாவின் 7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி தற்போதைய உலகப் பொருளாதாரச் சூழலில் காத்திரமானதுதான். ஆனால் பல பொருளாதார நிபுணர்கள் சீனாவின் பொருளாதாரம் தொடர்பான புள்ளி விபரங்கள் நம்பகத் தன்மை வாய்ந்தது அல்ல என்கின்றனர்.
சீனக் கூட்டாண்மைக் கடன்
சீனாவில் உள்ள கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) உலகிலேயே பெரியதாகும். 2013-ம் ஆண்டு இக்கடன் 142ரில்லியன்(14,200 கோடி) அமெரிக்க டொலர்களாக இருந்தது. 20ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) 13.1ரில்லியன்கள் மட்டுமே. 2015இல் சீனக் கூட்டாண்மைகளின் மொத்தக் கடன் 16.1 ரில்லியன்கள் ஆகும். சீனக் கூட்டாண்மைகளின் கடன் சீனவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 160 விழுக்காடாகும். 2014-ம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் சீன நிறுவனமான Shanghai Chaori Solar தனது கடன நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை சீன பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியது. கடன் மீளளிப்பு வலுக்களைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடும் நிறுவனமான Standard & Poor சீனாவின் கூட்டாண்மைகளின் கடன் பளு ஆபத்தான வகையில் உயர்வாக இருக்கின்றது என அறிவித்தது. 1. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த படியால் கூட்டாண்மைகளின் நிதிநிலைமை பாதிப்படைந்தமை; 2. சீன அரசு நாட்டில் கடன் வழங்குதல்களைக் கட்டுப்படுத்தியமை; 3. அதிகரித்த வட்டி ஆகியவை சீனக் கூட்டாண்மைகளின் கடன் பளுவை அதிகரித்தன. சீனக் கூட்டாண்மைகளின் இலாபத்திறன் ஆறு விழுக்காடாக இருக்கும் நிலையில் அவற்றின் கடன்களின் வட்டி விழுக்காடு ஏழிற்கும் அதிகமாக இருப்பது ஒரு நல்ல பொருளாதார அறிகுறியல்ல. சீனக் கூட்டாண்மைகளின் நிதிப் பாய்ச்சல் சீராக இல்லாத்தால் கடன்பளு மேலும் அதிகரிக்கின்றது. நிதிப் பாய்ச்சல் குறைவதால் கடன் படுதலைத் தொடர்ந்து கடன் பளுவால் நிதிப்பாய்ச்சல் குறைதன் என்பது ஒரு தொடர் சுழற்ச்சியாகி நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் கடனுக்கும் அதன்மொத்தப் பெறுமதிக்கும் அதன் உள்ள விகிதாசாரம் கடன் நெம்புத் திறனாகும்(debt leverage). சீனாவில் நிதி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கூட்டாண்மைகளின் கடன் நெம்புத் திறன் 113 விழுக்காடாக இருக்கின்றது. அதாவது ஒரு மில்லியன் பெறுமதியான ஒரு கூட்டாண்மை 113 மில்லியன்கள் கடன் பட்டுள்ளது. இந்தக் கடன் நெம்புத்திறன் குறைவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.
வர்த்தகத்தைக் கணனி மயமாக்கும் முயற்ச்சி
சீனாவின் தொழிற்துறையில் ஏற்றுமதி அதிகரிப்பை நோக்காகக் கொண்டு அதிக முதலீடு செய்யப்பட்டது. ஆனால் தொழில் துறையில் முப்பது விழுக்காடு ஏற்றுமதி வீழ்ச்சியால் செயற்படாமல் இருக்கின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் செய்வது போல இலத்திரனியல் வர்த்தகத்தை (e-commerce) வளர்ப்பது, திறன்படு கைப்பேசிகளில் (smart phones) செயலிகள் (apps) மூலம் வர்த்தகங்களைப் பெருக்குவது, முகில் கணனிப் பயன்பாடு (cloud computing) போன்றவற்றிலும் 2015 மார்ச் மாதத்தில் இருந்து சீனா கவனம் செலுத்தி வருகின்றது.
வட்டிக்குறைப்பு வேலை செய்வதில்லை
பங்குச் சந்தையில் விலைகள் வீழ்ச்சியடைவதைத் தடுக்கவும் சீனப் பொருளாதாரத்தைத் தூண்டவும் சீனாவில் வட்டி விழுக்காடு 2014 நவம்பருக்கும் 2015 ஜூனுக்கும் இடையில் நான்கு தடவை குறைக்கப்பட்டது. சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் அரசத் துறை பெரும் பங்காற்றுகின்றது. அரசுத் துறையின் பொருளாதார நடவடிக்கைகள் வட்டி குறையும் போதோ அல்லது குறையும் போதோ பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை. முதலாளித்துவ நாடுகளில் வட்டிக் குறைப்பு பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதுபோல் அரச முதலாளித்துவ நாடுகளில் அதிகரிப்பதில்லை.
சீனாவின் லோக்கர் முயற்சி
சீனா தனது பொருளாதார வளர்ச்சி வேகத்தைக் கூட்ட உள்ளூராட்சி மட்டத்தில் செலவுகளைக் கூட்டியது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரச வங்கிகள் கடன் கொடுத்து அவற்றின் முதலீடுகள் மூலம் மொத்தத் தேசிய உற்பத்தியை அதிகரிக்க சீனா முயன்றது. உள்ளூராட்சி மன்றங்களும் அவற்றை நடாத்தும் பொதுவுடமைக் கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளைச் செய்தனர். இதனால் உற்பத்தி பெருகியதுடன் அதிக வேலை வாய்ப்புக்களும் உருவாக்கப்பட்டன.
சீன அம்பந்தோட்டைகள்
சீனாவின் உள்ளூராட்சி மன்றங்கள் செய்த முதலீட்டினால் அதன் மூலதனங்கள் அதிக வினைத்திறன் தரக்கூடிய வகையில் பகிரப்படவில்லை. பொதுவாக அரச முதலாளித்துவ நாடுகளில் முதலீடுகள் வினைத்திறனாகச் செய்யப்படுவதில்லை என்பது முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களின் முதலீட்டினால் அம்பாந்தோட்டையில் செய்தது போல போதிய அளவு பயன்படுத்தப் படாத நெடுஞ்சாலைகள் விமான நிலையங்கள் பல உருவாக்கப்பட்டன. சீனாவின் அபிவிருத்திக்கும் சீர்திருத்தத்திற்குமான ஆணைக்குழு 2014-ம் ஆண்டு வெளிவிட்ட அறிக்கையின் படி 2009இற்கும் 2014இற்கும் இடையில் 6.8 ரில்லியன்(68 இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வினைத்திறன் குறைவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சீனாவில் செய்யப்பட்ட வினைத்திறனற்ற முதலீடுகள் பத்து ரில்லியன் (நூறு இலட்சம் கோடி அல்லது கோடானுகோடி) அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சீன உள்ளூராட்சி மன்றங்களின் கடன் ஐந்து ரில்லியன் (ஐம்பது இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்களானது. இந்தக் கடன் பளுவைத் தணிக்க சீன அரசு உள்ளூராட்சி மன்றங்கள் கடன் முறிகளை விநியோகித்து நிதி திரட்ட அனுமதி வழங்கப்பட்டது.
திறனற்ற முதலீடு
தேவையற்ற கட்டிட நிர்மாணங்கள், மிகையான உட்கட்டுமானங்கள், பயனுறா(idle) உற்பத்தித்துறையில் முதலீடு ஆகியவற்றில் அரசு செய்த செலவுகளே 2008-ம் ஆண்டின் பின்னர் சீனப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பகுதியாக அமைந்தது. எழுபது விழுக்காடு செயற்திறன் கொண்ட தொழிற்துறையால் போதிய அளவு இலாபம் ஈட்ட முடியவில்லை. இதனால் சீனாவின் பங்குச் சந்தை ஜுலை மாதத்தில் கடும் வீழ்ச்சியைக் கண்டது. சீன அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளையும் மீறி பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. சீனப் பங்குகள் மூன்று ரில்லியன்(மூன்று இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீட்டைச் சந்தித்தித்தது. இந்த இழப்பீடு உலக வரலாற்றில் என்றும் ஏற்படாத சொத்திழப்பு எனக் கருதப்படுகின்றது.
கண்டு பிடி சீனா கண்டுபிடி
கடந்த முப்பது ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்த போதிலும், சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்த போதிலும் (சில கணிப்பீடுகளின் படி முதலாவது) சீனா இன்னும் ஒரு அபிவிருத்தியடையாத நாடாகவே இருக்கின்றது. அது இப்போதும் ஒரு வளர்முக நாடாகவே இருக்கிறது. ஒரு நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக இருப்பதற்கு அதன் மொத்தத் தேசிய உற்பத்தி (gross domestic product (GDP)), தனிநபரின் சராசரி வருமானம் (per capita income), கைத்தொழில்மயமான நிலை (level of industrialization), பரவலான கட்டமைப்பின் அளவு (amount of widespread infrastructure), பொதுவான வாழ்க்கைத்தரம் (general standard of living) ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். இந்தவகையில் ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவுமே அபிவிருத்தியடைந்த நாடுகளாக இருக்கின்றன.
Sony, Toyota, Samsung, Hyundai, LG இப்படிப் பல வர்த்தகப் பெயர்கள் எமது நாளாந்த வாழ்வில் அடிபடும் பெயர்களாக இருக்கின்றன. நாம் பல சீனாவில் செய்த பொருட்களைப் பாவித்தாலும் எந்த ஒரு சீன வணிகப் பெயரோ சின்னமோ எம்மனதில் இல்லை. இதற்குக் காரணம் சீனாவில் கண்டுபிடிப்புக்கள் பெரிய அளவில் இல்லை. சீனா தனது கண்டுபிடிப்புக்களை ஊக்கவிப்பது மிகவும் அவசியம் என சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.
சீனாவின் மக்கள் தொகைக் கட்டமைப்புப் பிரச்சனை
சீனாவின் பிரச்சனைகளுக்குள் பெரும் பிரச்சனையாக இருப்பது அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பு. அங்கு வேலை செய்யும் மக்கள் தொகைக்கும் வயோதிபர்களின் மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாசாரம் மோசமடைந்து கொண்டு போகின்றது. வேலைசெய்வோரின் தொகையுடன் ஒப்பிடுகையில் வேலை செய்ய முடியாத வயோதிபர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு போகின்றது. இதை ஈடு செய்ய அங்கு உற்பத்தித் திறன் அதிகரிக்க வேண்டும். ஆனால் சீன உற்பத்தித் திறனும் குறைந்து கொண்டே போகின்றது. பார்க்க
எதையும் பிளான் பண்ணிச் செய்யும் சீனர்களால் முடியும்
சீனாவில் வருமான வரி செலுத்துவோரின் தொகை சீன மக்கள் தொகையில் 2 விழுக்காட்டிலும் குறைவானவர்களே. இது சீன பொருளாதாரம் மந்த நிலையை அடையும் போது அரச நிதி நிலைமையில் ஒரு மோசமான நிலையைத் தோற்றுவிக்கலாம். தற்போது 7 விழுக்காடு வளர்ந்து கொண்டிருக்கும் சீனப் பொருளாதாரம் 2017-ம் ஆண்டு 4 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்தப் பின்னணியில் சீனாவில் அரச நிதி நிலையில் பாரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் வரவிருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்பத் திட்டமிட்டு அத்திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றும் திறமையும் அனுபவும் சீனர்களிடம் நிறைய உண்டு.

Monday, 10 August 2015
எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையில் இறங்குமா
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு வன்முறையை வெறுக்கும் அமைப்பு. 1928-ம் ஆண்டு எகிப்த்தில் உள்ள சான்றோர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட
உறுப்பினர்களுடன் உலகிலேயே செல்வாக்கு மிகுந்த அமைப்பாக இருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா உட்பட எண்பத்து ஐந்திற்கு மேற்பட்ட நாடுகளில் இதன் செயற்பாடு உண்டு. இது தற்போது
எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
இது மக்களும் அரசும் இஸ்லாமிய மத வழிகாட்டலுக்கு இணங்க நடக்க வேண்டும்
என்று வலியுறுத்துகின்றது. எகிப்தில் உள்ள இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு பல
மருத்துவ மனைகள், வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், பராமரிப்பு
நிலையங்கள், மலிவு விலைக்கடைகள் எனப் பலவற்றை நிர்வகித்து வந்தது.
முன்னாள் எகிப்திய அதிபர் அப்துல் கமால் நாசர் கொலையில் இஸ்லாமிய
சகோதரத்துவ அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகித்து அது முன்பும் தடை
செய்யப்பட்டும் இருந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு 1970முதல்
வன்முறைகளைக் கைவிட்டு மக்களாட்சியில் நம்பிக்கையுடன் ஒரு தாராளவாதக்
கொள்கையுடைய அமைப்பாக மாறியதாகக் கருதப்பட்டது.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மேர்சி
எகிப்த்தில் 2011-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட அரபு வசந்தம் கிளர்ச்யின் பின்னர் ஏற்பட்ட அரசியல் இடைவெளியை அப்போது நன்கு கட்டமைக்கப் பட்ட அமைப்பாக இருந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு நன்கு பயன்படுத்திக் கொண்டது. அப்புரட்சியின் போது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தலைவர் மொஹமட் மேர்சி சிறையில் இருந்து தப்பிக் கொண்டார். அவர் 2012-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று எகிப்தின் அதிபர் பதவிக்கு வந்தார். அவர் நாட்டில் இஸ்லாமிய மதவாத ஆட்சியை ஏற்படுத்த முயன்றார். ஆனால் எகிப்தியப் புரட்சியில் ஈடுபட்ட இளையோர் எகிப்தில் ஒரு மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்தவே விரும்பினர். இதனால் அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். இதைத் தனக்கு வாய்ப்பாகப் பயன் படுத்திய எகிப்தியப் படைத் துறையினர் எகிப்தை மீண்டும் தமது பிடிக்குள் கொண்டு வந்தனர். இஸ்லாமிய சகோரத்துவ அமைப்புத் தடை செய்யப் பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு இறப்புத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் இன்று(ஓகஸ்ட்-2015) வரை சிறையில் இருக்கின்றார். நாற்பதினாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேர்சியின் பேச்சாளராகத் தொழில் பார்த்த பெண்ணுக்குக் கூட ஆளில்லா நிலையில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சகோதரத்துவ அமைப்பிற்கு எதிரான வன்முறைகள்
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைத் தடை செய்த எகிப்தின் படைத்துறையினரின் அரசு அதற்கு எதிராக என்றும் இல்லாத அளவு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இறப்புத் தண்டனை நீதி மன்றங்களால் விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஆதரவு நாடாக துருக்கி இருக்கின்றது. துருக்கியில் அந்த அமைப்பின் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் இருக்கின்றது.
அமைதியா வன்முறையா என்ற குழப்பம்
தொடரும் அடக்கு முறைகளால் பல இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினர் வன்முறைசார் போராட்டத்தைத் தாம் ஆரம்பிக்க வேண்டும் என குமுறுகின்றனர். ஆனால் அதன் தலைமை அமைதியான வழிகளைக் கடைப்பிடிக்கும் படி உறுதியாகச் சொல்கின்றது. இதனால் கட்டுப்பாட்டிற்குப் பெயர் போன அந்த அமைப்புக்குள் குழப்பம் உருவாகியுள்ளது. எகிப்திய அரசு எல்லா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பினரையும் பயங்கரவாதிகளாகக் கருதுகின்றது. சிறையில் இருந்து 2015 மே மாதம் விடுதலையான சகோதரத்துவ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூட் குஜ்லான் அடக்கு முறை மிகுந்த அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பது தணலைக் கையில் எடுப்பது போலாகும் என்றார். மேலும் அவர் அமைதியைக் கடைப்பிடித்தல் படைக்கலன்களை ஏந்துவதிலும் பார்க்க வலிமையானது. இப்படிச் சொன்னதால் அவர் பலரது கண்டனங்களுக்கும் உள்ளானார்.
பிளவுகள்
ஏற்கனவே இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் பலஸ்த்தீனக் கிளையினர் பிளவடைந்து வன் முறையில் இறங்கியதால் உருவாகிய அமைப்புத்தான் காசா நிலப்பரப்பில் இருந்து செயற்பட்டு இஸ்ரேலுக்குப் பெரும் சவாலாக இருக்கும் ஹமாஸ் அமைப்பு. 1987இல் ஏற்பட்ட இந்தப் பிளவின் இஸ்ரேலிய உளவுத் துறையும் பலஸ்த்தின விடுதலை இயக்கத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்குடன் பங்கு பற்றி இருந்தது. இது போன்ற இன்னும் ஒரு பிளவு சகோதரத்துவ் அமைப்புக்குள் தோன்றுமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. அத்துடன் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு எகிப்தில் தனது நடவடிக்கைகளை விரிவு படுத்துகின்றது. அல் கெய்தாவின் தற்போதைய தலைவராக இருக்கும் அய்மன் அல் ஜவஹாரி இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து பிரிந்து சென்றவரே.
எகிப்திய ஆட்சியாளரை தண்டிக்கச் சொல்லும் அறிஞர்கள்
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த அறிஞர்கள் எகிப்தை ஆளும் அதிபர் அப்துல் ஃபட்டா அல் சிசியின் ஆட்சிக்குத் துணை செய்பவர்களும் ஊழியம் செய்பவர்களும் இஸ்லாமிற்கு எதிராகச் செயற்படும் குற்றவாளிகள் என்கின்றனர். இக்குற்றாவாளிகள் கொல்லப்பட வேண்டும் எனவும் அவர்கள் சொல்கின்றனர். 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் திகதி எகிப்தின் சினாய் பிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஐ எஸ் அமைப்புடன் தொடர்புடைய ஒரு அமைப்பு உரிமை கோரி இருந்தது. ஆனால் எகிப்திய அதிபர் அப்துல் பட்டா அல் சிசி அந்தக் குண்டு வெடிப்பை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பே செய்ததாகக் குற்றம் சாட்டினார்.
அமெரிக்கா தீண்ட விரும்பாத சகோதரத்துவ அமைப்பு
2015 ஜூன் மாதம் இஸ்லாமியச் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணம் செய்த போது அவர்களை அமெரிக்க அரசு சந்திக்க மறுத்து விட்டது. 1950களிலும் 1960களிலும் அப்போதைய எகிப்தின் அதிபர் அப்துல் கமால் நாசர் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார். மத சார்பற்றவரான நாசர் மதவாத அமைப்பான இஸ்லாமிய சகோதரத்து அமைப்பினருக்கு எதிராகச் செயற்பட்டார். அதிலும் மோசமான நடவடிக்கைகள் 2013-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அல் சிசியால் எடுக்கப்படுகின்றது.
தம்மை ஆய்வு செய்யும் சகோதரத்துவ அமைப்பு
இத்தகைய சூழ் நிலையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஒரு புரட்சிகர அமைப்பாக மாற்ற வேண்டும் என அமைப்பின் பல மட்டங்களில் இருந்தும் கோரிக்கைகள் வலுக்கின்றன. அமைப்பின் மேல் மட்ட உறுப்பினர்கள் 2011-ம் ஆண்டு அரபுப் புரட்சியினால் அப்போதைய படைத்துறை ஆட்சியாளர் ஹஸ்னி முபராக்கின் ஆட்சியைக் கலைத்ததில் இருந்து 2013-ம் ஆண்டு மொஹமட் மேர்சியின் ஆட்சி கலைக்கப்பட்டமை வரை தமது அமைப்பின் செயற்பாடுகளை கவனமாக ஆராய்ந்து வருகின்றனர். தமது அமைப்பைச் சேர்ந்த இளையோர் சினாயில் இருந்து செயற்படும் அன்சர் பெயிற் அல்-மக்திஸ் (Ansar Beit al-Maqdis) என்னும் ஐஸ் எஸ் அமைப்பினருடன் தொடர்புடைய அமைப்புடனோ அல்லது நேரடியாக ஐ எஸ் அமைப்பினருடனோ இணைவதையிட்டுக் கரிசனை கொண்டுள்ளது. எகிப்த்தில் புரட்சித் தண்டனை என்னும் பெயரிலும் பிரபல எதிர்ப்பியக்கம் என்னும் பெயரிலும் இரு புதிய அமைப்புக்கள் உருவாக்கியுள்ளன. இவை வன்முறைப் போராட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன.
மாறவேண்டும்
தற்போதைய எகிப்திய ஆட்சியாளர்கள் கொடூரமான முறையில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கையாளும் போது அமைப்பு தனது வன்முறை அற்ற கொள்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகின்றது. அல்லாவிடில் அதற்குள் பிளவு ஏற்படும் அல்லது ஐ எஸ் அமைப்பை நாடி அதன் உறுப்பினர்கள் செல்வார்கள்.

Wednesday, 5 August 2015
களத்தில் குதித்த துருக்கியியும் கால்வாரப்படும் குர்திஷ் மக்களும்
துருக்கிப்படைகள் சிரியாவில் ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுப் போராளிகள் மீதும் ஈராக்கில் குர்திஷ்த்தான் தொழிலாளர்கள் கட்சியின் போராளி அமைப்பினர் மீதும் தாக்குதல் நடாத்தத் தொடங்கியமை மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையில் பெரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நட்பு நாடும் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் ஒரு உறுப்பு நாடுமான துருக்கி இதுவரை காலமும் தனது விமானப் படைத்தளங்களை ஐ எஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதலுக்குப் பயன் படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி மறுத்திருந்தது. தற்போது அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துருக்கியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் துருக்கியின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
அமெரிக்காவிற்கு இரட்டை நன்மை
யேமனில் சவுதி அரேபியா களமிறங்கி இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போர் புரிகையில் சிரியாவில் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக துருக்கி தாக்குதல் தொடங்கியது ஐக்கிய அமெரிக்காவிற்கு ஒரு வெற்றி எனச் சொல்லாம். அமெரிக்கப் படைகள் தரையில் இறங்கிப் போர் புரியாமல் ஐ எஸ் அழிக்கப் பட முடியாது எனப் பல படைத்துறை நிபுணர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கையில் நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பில் ஆளணி எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது பெரிய படைத்துறையைக் கொண்ட துருக்கி தாக்குதல் செய்வது அமெரிக்காவிற்கு ஆறுதல் அளிப்பதாக அமைகின்றது. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நேரடிப் போரில் ஈடுபட்டால் அது ஆளணி இழப்புக்களையும் பணச் செலவையும் உருவாக்கும். சவுதி அரேபியாவும் துருக்கியும் தாக்குதல் செய்வது அந்த இரண்டும் அமெரிக்காவிற்கு நடக்காமல் செய்யும். அத்துடன் அமெரிக்காவிடமிருந்து இரு நாடுகளும் படைக்கலன்களை வாங்கும் போது அமெரிக்காவின் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும். மேலும் ஒரு இரட்டை நன்மையாக ஒரு புறம் ஆப்கானிஸ்த்தானில் அல் கெய்தாவின் தற்கொடைத் தாக்குதல் போராளிகளின் பிரிவின் தலைவர் அபு காகில் அல் சுதானி அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனது படையில் ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
குர்திஷ் அமைப்புக்கள்
1. பிகேகே (PKK) - இது துருக்கியில் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியின் போராளி அமைப்பு. 1978-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீவிர இடதுசாரிக் கொள்கையைக் தொழிலாளர் கட்சி துருக்கிய அரசுக்கு எதிராக கரந்தடிப் போரைச் செய்து கொண்டிருக்கின்றது.
2. வைபிஜி/ வைபிஜே (YPG/YPJ) - இவை இரண்டும் சிரியாவில் செயற்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சியின் போராளிப் பிரிவுகளாகும். YPG ஆண் போராளிகளையும் YPJ பெண் போராளிகளையும் கொண்டவை. YPJதான் எல்லாக் குர்திஷ் போராளி அமைப்புகளில்லும் போரிடும் திறன் மிக்கது. இது சிரியாவின் தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிலப்பரப்பை வைத்திருக்கின்றது. அமெரிக்காவுடன் இது இணைந்து செயற்படுகின்றது.
3.பெஷ்மேர்கா - இது 1920களில் இருந்து ஈராக்கில் உரிமைக்காகப் போராடிவரும் குர்திஷ் மக்களின் அமைப்பாகும். 2003-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்த போது அவற்றுடன் பெஷ்மேர்கா இணைந்து போராடியது. தற்போது இது ஈராக்கில் பெரு நிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்து ஒரு நிழல் அரசை நடாத்தி வருகின்றது.
குட்டையைக் குழப்பிய துருக்கி
இதுவரை அமெரிக்காவுடன் இணைந்தும் அமெரிக்காவிடமிருந்து படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டும் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் குர்திஷ் மக்களின் போராளிகளிற்கு எதிராக துருக்கியப் படைகள் தாக்குதல் நடாத்தியமை இன்னும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எழுபதுகளில் சதாம் ஹுசேய்ன் சோவியத் ஒன்றியத்துடன் தனது உறவுகளை நெருக்கமாக்கிய போது ஈராக்கில் உள்ள குர்திஷ் மக்களுக்கு அமெரிக்கா மட்டுப்படுத்தப் பட்ட அளவில்படைக்கலன்களை ஈரானுடாக வழங்கியது. பின்னர் ஈரானில் மதவாதப் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அமெரிக்கா ஈராக்குடன் தனது உறவை வளர்த்தது. பின்னர் சதாம் ஹுசேய்ன் குர்திஷ் மக்களுக்கு எதிரான ஓர் இன அழிப்புத் தாக்குதல் செய்யும் போது குர்திஷ் மக்கள் அமெரிக்கா தமக்கு உதவி செய்யும் என நம்பி ஏமாந்தனர். அந்த ஏமாற்றத்தின் இரண்டாவது கட்டமாக இப்போது துருக்கி குர்திஷ் மக்களை அழிக்கப் போகின்றதா? துருக்கி தாக்குதலைத் தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலும் ஐ எஸ் அமைப்பினர் மீது நடாத்திய தாக்குதலிலும் பார்க்க ஈராக்கில் உள்ள குர்திஷ் நிலைகள் மீதே அதிக தாக்குதல்களை நடாத்தியது. ஐ எஸ் இற்கு எதிராக ஒரு விமானப் பறப்பும் பெஷ்மேர்காவிற்கு எதிராக 185 பறப்புக்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குர்திஷ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை துருக்கி ஐ எஸ் அமைப்பிற்கு இணையான பயங்கரவாதமாகப் பரப்புரை செய்து கொண்டிருக்கின்றது. ஈராக்கின் காந்தில் மலைப்பிரதேசத்தில் உள்ள குர்திஷ் போராளிகளின் தலைமைச் செயலக முகாம்களிலும் படைக்கலக் களஞ்சியங்கள் மீதும் துருக்கிய விமானப் படைகள் தாக்குதல் நடாத்தின. பதிலடியாக துருக்கியப் படையினர் மீது தற்கொடைத் தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன.
சுய நிர்ணய உரிமையற்ற குர்திஷ் மக்கள்
ஈராக்கின் வடக்கில் ஏர்பில் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் துருக்கியின் தெற்கில் தியர்பக்கிர் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்திலும் செறிந்து வாழும் குர்திஷ் இன மக்கள் மூன்று நாட்டு ஆட்சியாளர்களாலும் இன அழிப்பபிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 2014-ம் ஆண்டில் ஈராக்கில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிய அரசபடைகளை பல பிராந்தியங்களில் இருந்து விரட்டிய போது குர்திஷ் மக்கள் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஈராக்கில் உள்ள பெஸ்மேரா எனப்படும் குர்திஷ் போராளி அமைப்பு தமக்கு என ஒரு பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதே போல் துருக்கியில் கடும் போட்டிக்கு இடையில் நடந்த தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். விகிதாசாரப் பிரதிநித்துவப்படி துருக்கியில் நடக்கும் தேர்தலில் ஒரு கட்சி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குகளையாவது பெற வேண்டும். இதுவரை காலமும் குர்திஷ் மக்களுக்கு அப்படிக் கிடைக்கவில்லை. குர்திஷ் மக்களின் கட்சியான மக்கள் மக்களாட்சிக் கட்சி 13 விழுக்காடு வாக்குகளை முதன் முறையாகப் பெற்று 80 பாராளமன்ற உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. சரியான முறையில் இடதுசாரிகளுடன் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட்டதால அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது. மேலும் அவர்கள் துருக்கியில் வாழும் யஷீதிரியர்கள் ஆர்மினியர்கள் கிறிஸ்த்தவர்கள் ஆகியோருடன் தேர்தலில் இணைந்து செயற்பட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதும் 1970-ம் ஆண்டில் இருந்து தமது சுதந்திரத்திற்காக 40,000 உயிரிழப்புக்களுடன் போராடி வரும் குரிதிஷ் மக்கள் தியர்பக்கிர் நகரில் வாணவேடிக்கைகளுடன் தமது வெற்றியைக் கொண்டாடினர். ஆனால் ஈராக்கில் குர்திஷ்ப் போராளிகளின் நிலைகளைத் துருக்கிய விமானங்கள் தாக்கியதுடன் துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களின் கட்சியான குர்திஷ் தொழிலாளர் கட்சி துருக்கியுடன் நடாத்தி வந்த சமாதானப் பேச்சு வார்த்தை முறிவடைந்து விட்டதாக அறிவித்தது. துருக்கியில் தமக்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என முப்பது ஆண்டுகளாக குர்திஷ் மக்கள் போராடி வருகின்றனர்.சிரியாவில் செயற்படும் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி தாக்குதல் நடாத்தியது. ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் குர்திஷ் போராளிகள் இது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கோரியுள்ளனர்.
கேந்திர முக்கியத்துவம் மிக்க துருக்கி
துருக்கி குர்திஷ் மக்களுக்கு எதிராகச் செய்யும் நடவடிக்கைகளை தட்டிக் கேட்கும் நிலையில் அமெரிக்கா இல்லை. உலகின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக துருக்கி இருக்கின்றது. உலக எரிபொருள் வளத்தின் நடைபாதையில் இருக்கும் துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது. புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் அரபுக்களும் துருக்கியர்களும் ஈரானியர்களுமாகும். சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.
நேட்டோவைக் கூட்டிய துருக்கி
தமது நாட்டில் ஐ எஸ் அமைப்பினர் தாக்குதல் செய்ததாக ஐயப்பட்ட துருக்கிய அரசு நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தைக் கூட்டியது. சிரியாவில் இருந்து ஏவுகணைகள் துருக்கி மீது வீசப்பட்டது எனச் சொல்லி துருக்கியில் நேட்டோப்படையினரின் ஏவுகணை எதிர்ப்புக் கணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேட்டோவின் உறுப்பு நாடுகள் துருக்கிக்கு தமது ஆதரவைத் தெரிவித்த வேளை குர்திஷ் போராளிகளுக்கு எதிரான தாக்குதலை மட்டுப்படுத்தப் பட்ட அளவில் நடாத்துமாறு வேண்டிக் கொண்டன.
அரபு வசந்தமும் துருக்கியும்
2011-ம் ஆண்டு அரபு வசந்தம் தொடங்கியதில் இருந்து துருக்கிக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் நெருக்கடி ஏற்பட்டது. லிபியாவில் கடாஃபியின் ஆட்சியை அகற்றியது போல் சிரியாவிலும் ஒரு விமானப் பறப்பற்ற ஒரு பிரதேசம் பிரகடனப்படுத்தி பஷார் அல் அசாத்தை சிரிய ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என துருக்கி வற்புறுத்தி வருகின்றது. மேலும் அசாத்திற்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக்காரர்களிற்கு படைக்கலங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் துருக்கி அமெரிக்காவை வேண்டி இருந்தது. எகிப்தில் இஸ்லாமிய சகோதரத்துவத்தின் ஆட்சி நீடிப்பதை துருக்கி விரும்பியது. சவுதி அரேபியா இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பை ஒழித்துக் கட்ட விரும்பியது. அமெரிக்கா நடுநிலை வகிப்பது போல் காட்டிக் கொண்டது.
கேந்திரோபாயப் போட்டி
ஈராக்கின் வட பகுதியையும் சிரியாவின் வட பகுதியையும் தன்னுடன் இணைக்க துருக்கி விரும்புகின்றது. சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈராக்கில் சவுதி சுனி முஸ்லிம்கள் ஆட்சி நடத்த வேண்டும் எனக் கருதுகின்றது. ஈரான் அங்கு சியா முஸ்லிம்களின் ஆட்சி நடப்பதை விரும்புகின்றது. இவற்றால் சவுதி அரேபியா, ஈரான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களிடையே ஒரு பிராந்திய ஆதிக்கப் போட்டி நிலவுகின்றது. ஈரானைப் போல் ஒரு அரபு நாடு அல்லாத துருக்கி அரபுப் பிரதேசத்தின் வடக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட விரும்புகின்றது. அமெரிக்கா மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் தனது கேந்திரோபாயத் தரகர்களாக சவுதி, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் இருக்க வேண்டும் என விரும்புகின்றது. பொருளாதாரத் தடை நீக்கப் பட்ட ஈரானுடன் ஒரு புதிய கேந்திரோபாய உறவை உருவாக்கவும் அமெரிக்கா முயல்கின்றது. இரசியா மேற்காசியாவில் தனது ஆதிக்கத்தை மீள நிலை நாட்ட முயல்கின்றது. இந்த பல்முனைக் கேந்திரோபாயப் போட்டியில் வதை படப் போவது குர்திஷ் மக்களே.

Tuesday, 28 July 2015
இரசிய விரிவாக்கத்திற்கு அஞ்சும் போல்ரிக் நாடுகள்
உக்ரேனில் இரசியா செய்யும் நில அபகரிப்பு நடவடிக்கைகளால் அச்சமுற்றிருந்த போல்ரிக் நாடுகள் ஜோர்ஜியாவின் எல்லையில் இரசியா ஜூலை மாத நடுப்பகுதியில் செய்த நில அபகரிப்பால் மேலும் கலக்கமடைந்துள்ளன. உலகம் ஈரானுடனான அணு உற்பத்தி உடன்படிக்கை தொடர்பாக கவனம் செலுத்திக் கொண்டிருக்கையில் ஏற்கனவே 2008-ம் ஆண்டு இரசியாவால் ஜோர்ஜியாவிடமிருந்து அபகரிக்கப்பட்ட தெற்கு ஒஸேஸியாப் பிராந்தியத்தில் இரசியா தனது படைகளை மேலும் ஜோர்ஜியாவிற்குள் நகர்த்தி நில அபகரிப்புச் செய்துள்ளது.
போல்ரிக் வரலாறு
போல்ரிக் நாடுகள் மற்ற நாடுகளின் தொடர் ஆக்கிரமிக்கு உள்ளாவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. 1939-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் வியசெஸ்லவ் மொலொடோவும் ஜேர்மனிய வெளியுறத்துறை அமைச்சர் ஜோக்கிம் வொன் ரிப்பெண்ட்ரொப்பும் கைச்சாத்திட்ட மொலொடோவ்-ரிப்பெண்ட்ரொப் உடன்படிக்கையின் படி இரு நாடுகளும் ஒன்றை ஒன்று ஆக்கிரமிப்பதில்லை என ஒத்துக் கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் ஒரு இரகசிய இணைப்பின் படி போலாந்து, லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா, பின்லாந்து, ருமேனியா ஆகிய நாடுகளை சோவியத் ஒன்றியமும் ஜேர்மனியும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்பது பற்றியும் இரு நாடுகளும் ஒத்துக் கொண்டன. இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளும் போலந்தை ஆக்கிரமித்துப் பங்கு போட்டுக் கொண்டன. பின்லாந்தை சோவியத் ஆக்கிரமித்துக் தன்னுடன் இணைந்துக் கொண்டது. ருமேனியாவின் ஒரு பகுதியும் சோவியத்தின் வசமானது. சோவியத் ஒன்றியம் 1940-ம் ஆண்டு எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய போல்ரிக் நாடுகளைத் தனதாக்கிக் கொண்டது.
இரசியாவிடமிருந்து மேலும் விலகிய போல்ரிக் நாடுகள்
லித்துவேனியா, லத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகள் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனி நாடுகள் ஆகியதுடன் 2004-ம் ஆண்டு நேட்டோப் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைந்து கொண்டன. இந்த நகர்வுகளை இரசியா தனக்கு அச்சமூட்டும் செயலாகப் பார்த்தது. உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து அதிக அச்சம் கொண்டிருந்த போல்ரிக் நாடுகள் நேட்டோப் படைகள் தமது நாட்டில் அதிக அளவின் நிலை கொள்ள வேண்டும் எனக் கருத்துக்கள் வெளியிட்டன. அந்த நாடுகளின் அச்சத்தை உறுதி செய்யும் வகையில் 1991-ம போல்ரிக் நாடுகளைத் தனிநாடுகளாய் அங்கீகரிக்கும் போது இரசியா சட்டபூர்வமாகச் செயற்பட்டதா என்பது பற்றி ஆராயும் படி 2015 ஜூன் மாதம் முதலாம் திகதி இரசிய அரசின் சட்டத்துறையினர் பணிக்கப்பட்டனர். அதற்கு ஒரு வாரத்தின் முன்னர் 1953-ம் ஆண்டு நிக்கிட்டா குருஷேவ் கிறிமியாவை உக்ரேனுடன் இணைத்தது சட்ட விரோதமானது என இரசியச் சட்டதுறையினர் அறிவித்தனர். லித்துவேனிய வெளியுறவுத் துறை அமைச்சர் தமது நாடு சுதந்திரமடைந்தமை தொடர்பான இரசியாவின் சட்ட ஆய்வு ஆத்திரமூட்டுவதுடன் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் அபத்தமான ஒன்று என்றார்.
பயம் போக்கும் போர்வையில் அமெரிக்காவின் கிழக்கு ஐரோப்பிய விரிவாக்கம்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் 2015- ஜூன் மாதம் 22-ம் திகதி நேட்டோவின் ஐயாயிரம் படையினரைக் கொண்ட அதி உயர் தயார் நிலை இணை அதிரடிப்படைப் (Very High Readiness Joint Task Force) பிரிவுகள் கிழக்கு ஐரோப்பாவில் நிலை கொள்ளச் செய்யப் படும் என்றார். அத்துடன் மறு நாள் எஸ்த்தோனியத் தலைநகருக்குச் சென்ற அஸ்டன் கார்டர் எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா ஆகிய நாடுகள் உட்படப் பல மைய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முன் கூட்டியே பல படைத்துறைப் பார ஊர்திகளும் உபகரணங்களும் நிலை கொள்ளச் செய்யப்படும் என்றார். அந்த நாடுகளில் தேவை ஏற்படும் போது நேட்டோப்படையினர் ஒரு 48 மணித்தியால அவகாசத்தில் சென்று தரை இறங்கக் கூடிய வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்படும் என்றார். இந்த நகர்வுகளும் நடவடிக்கைகளும் இரசியா உக்ரேனில் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளினால் அச்ச மடைந்த நாடுகளுக்கு நம்பிக்கை ஊட்டுவனவாக அமைந்தது. ஜூன் 16-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரசியா நாற்பது அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இந்த ஆண்டு தனது படையில் சேர்த்துக் கொள்ளும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பும் அஸ்டன் கார்ட்டரின் அறிவிப்பும் ஐரோப்பாவில் ஒரு பனிப்போரை ஆரம்பித்து விடவில்லை என்றார் கார்ட்டர்.
லத்வியாவிற்குக் கட்டிய லாடன்
2015 ஜனவரியில் லத்வியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் லட்கேல் சுதந்திரக் குடியரசு ஒன்று இணையத்தில் பிரகடனப் படுத்தப் பட்டது. இந்தப் பிராந்தியத்தில் வாழும் இரசியர்கள் இந்தக் கைங்கரியத்தை நிறைவேற்றியிருந்தனர். இதன் மூலத்தைத் தேடிச் சென்ற ஊடகவியலாளர்களும் உளவுத் துறையினரும் இப்பிரகடனத்திற்கும் இரசியாவிற்கும் தொடர்புண்டு என்றனர். இரசியாவிற்கு ஆதரவான விக்டர் யனுக்கோவிச் உக்ரேன் அதிபர்பதவியில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் உக்ரேனில் உள்ள இரசியர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து உக்ரேனைத் துண்டாடிச் சின்னாபின்னப் படுத்திக் கொண்டிருக்கையில் லத்வியாவில் உள்ள இரசியர்களின் சுதந்திரப் பிரகடனம் லத்வியர்களைக் கரிசனை கொள்ள வைத்தது.
இரசியாவின் குடியேற்றவாதம்!
லத்வியாவில் 38 விழுக்காடும் எஸ்த்தோனியாவில் 24விழுக்காடும் இரசியர்கள் வசிக்கின்றார்கள். இவர்களை வைத்து தனது பிராந்திய ஆதிக்கக் காய்களை நகர்த்த இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் முயல்கின்றார் என்பது ஒரு குற்றச் சாட்டாக முன்வைக்கப்படுகின்றது. லத்வியாவில் இருக்கும் குடியுரிமையற்ற 280,000 வெளிநாட்டவர்கள் அந்த நாட்டின் மக்கள் தொகையின் 14 விழுக்காட்டினராகும். இவர்களுக்கும் வாக்குரிமையுமில்லை அரச உயர்பதவிகள் வகிக்க் அனுமதிக்கப்படுவதுமில்லை. இவர்களின் அதிருப்தியையும் இரசியா தனது பிராந்திய நலன்களுக்குப் பயன்படுத்த முடியும். உக்ரேனில் உள்ள 17 விழுக்காடு இரசியர்களை வைத்து இரசிய அதிபர் விளடிமீர் விளையாடிய அரசியல் சதுரங்கத்திலும் பார்க்க அதிக அளவு விளையாட்டை லத்வியாவிலும் எஸ்த்தோனியாவிலும் விளையாட முடியும்.
இரசிய எதிர்ப்புவாதம்
2012-ம் ஆண்டு லத்வியாவில் இரசியா இரண்டாவது அரச மொழியாக இருப்பது ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் ஒழிக்கப்பட்டது. எஸ்த்தோனியாவில் இரசியர்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடு காணப்படுகின்றது. அங்கு அவர்களுக்கு குடியுரிமை இல்லை. சோவியத் ஒன்றியம் எஸ்த்தோனியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் குடியேறிய இரசியர்களுக்கு அங்கு குடியுரிமை இல்லை. தேர்தலில் வாக்களிக்க முடியாது. குடியுரிமை பெறுவதற்கு அவர்கள் எஸ்த்தோனிய மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அச்சத்தின் உச்சத்தில் லித்துவேனியர்கள்
லித்துவேனியாவில் சுமார் 177,000 இரசியர்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் இது 5.8 விழுக்காடு மட்டுமே. மற்ற இரு நாடுகளுடனும் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையாகும். ஆனால் போல்ரிக் நாடுகள் மூன்றிலும் இரசிய ஆக்கிரமிக்கக் கூடும் என்ற அச்சத்தால் அதிகம் பீடிக்கப்பட்டுள்ளவர்கள் லித்துவேனியர்களே. 2015-ம் ஆண்டு ஜனவரியில் ஓர் ஆக்கிரமிப்பின் போது எப்படி நடந்து கொள்வது என்பது தொடர்பான கையேடு ஒன்று லித்துவேனிய அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டத்து. உக்ரேனில் இரசியா செய்த நில அபகரிப்பைத் தொடர்ந்து லித்துவேனியாவில் 2,500 பேரைக் கொண்ட ஒரு துரித நடவடிக்கைச் சிறப்புப் படையணி உருவாக்கப்பட்டது. 16,000 படையினரை மட்டும் கொண்ட லித்துவேனியாவை ஒரு சில நாட்களுக்குள் இரசியாவால் ஆக்கிரமிக்க முடியும். இதனால் லித்துவேனிய படைத்துறைக்கு கட்டாயமாக ஆட் சேர்ப்புச் செய்யும் சட்டத்தை 2015- ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தியது. போல்ரிக் கடலில் இரசியாவின் கலினினிகிராட் கடற்படைத் தளத்திற்கும் இரசியாவிற்கும் இடையில் லித்துவேனியா இருப்பதால் மற்ற இரு போல்ரிக் நாடுகளையும் விட அது இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாகும். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியின் கீழ் லித்துவேனியர்கள் அனுபவித்த கொடுமைகளை லித்துவேனியர்கள் இன்னும் மறக்கவில்லை. சோவியத் ஆட்சிக்கு எதிரானவர்களை சைபீரியாவிற்கு கடத்திச் சென்று கடும் பனியில் வாழவைத்ததை இன்றும் லித்துவேனியர்கள் ஆத்திரத்துடனும் அச்சத்துடனும் நினைவு கூருகின்றனர்.
ஒன்றியத்துடன் ஒன்றுபட்டதால் வந்த வாழ்வு
உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியம் இரசிய ஆதிக்கத்தில் இருந்து பறித்து தனது ஆதிக்கத்தில் கொண்டு வர முயன்ற போது உக்ரேனில் உள்ள இரசியர்கள் இரசியாவை ஆதரித்து அதன்கேந்திரோபயா நோக்கங்களை நிறைவேற்ற உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தது போல போல்ரிக் நாடுகளான எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா ஆகிய நாடுகளில் உள்ள இரசியர்கள் கிளர்ச்சி செய்தவதற்கான வாய்ப்புக் குறைவு என்று சொல்லலாம். உக்ரேனிய மக்களின் வாழ்கைத் தரத்திலும் பார்க்க இரசியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த மூன்று போல்ரிக் நாடுகளின் வாழ்க்கைத் தரம் இரசியர்களின் வாழ்கைத் தரத்திலும் உயர்வானது. அத்துடன் போல்ரிக் நாடுகளின் ஆட்சி முறைமையும் இரசிய ஆட்சி முறையிலும் மேம்பட்டது. இதனால் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் வாழ்வதிலும் பார்க்க ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த நாடுகளில் வாழ்வதை அவர்கள் விரும்புகின்றார்கள். அத்துடன் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அவர்கள் குடியேறி வாழவும் வேலை தேடிச் செல்லவும் முடியும்.
இரசியாவைச் சமாளிக்க அமெரிக்காவின் அதிரடி ஐக்கிய அமெரிக்கா அவசர அவசரமாக Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் ஒன்றைத் திறக்கவிருக்கின்றது. தற்போது அமெரிக்காவின் வான் படையின் செயலராக இருக்கும் டெபரா ஜேம்ஸ் விண்வெளிப் போர் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்டருக்கு ஆலோசகராக விரைவில் நியமிக்கப்பட விருக்கின்றார். சீனாவிடமிருந்தும் இரசியாவிடமிருந்தும் விண்வெளியில் உருவாகியுள்ள சவால்களை சமாளிக்க அடுத்த ஆறுமாதங்களுக்குள் Space-War Center எனப்படும் விண்வெளிப் போர் நிலையம் அமெரிக்காவால் திறக்கப்படவிருக்கின்றது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை மீள் சீரமைப்புச் செய்யும் படி வேண்டியுள்ளது. இதற்கான காரணங்கள் பகிரங்கமாக அறிவிக்கப்படாத போதிலும் இரசியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்கும் வகையில் அல்லது இரசியாவை அடக்கும் வகையில் இந்த நிதி மீள் ஒதுக்கீட்டு வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. நீர்மூழ்கிகளை இனம் காணும் கருவிகள், கவச ஊர்திகளுக்கான மேம்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், அணுக்குண்டு கட்டளையகத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவை ஆதிக்க நாடுகள் தமது போட்டிக்களமாக மீண்டும் மாற்றிவிட்டன.

Monday, 27 July 2015
20 தொகுதிகளில் வெற்றி கேட்கும் சம்பந்தர் ஐயா உங்க judgement ரெம்பத் தப்பு
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினர் 2015 ஓகஸ்ட் மாதம் 17-ம் திகதி நடக்கவிருக்கும்
இலங்கைப் பாராளமன்றத் தேர்தலில் தம்மை 20 தொகுதிகளில் வெல்ல வைத்து தமக்கு
பேரம் பேசும் வலுவை வழங்கும் படி தமிழ் மக்களை வேண்டியுள்ளனர். அது எப்படி
இந்த 20 தொகுதிக் கணக்குப் போட்டார்கள் என்று தெரியவில்லை. 20 ஆசனங்களைப்
பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் உலகமும்
ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப்
பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடேங்கப்பா எங்களுக்குத் தீர்வு பெறுவதற்கு
எத்தனை தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்?
குடியரசு தேர்தலில் பேசாத பேரம்
இலங்கையில் நடக்கவிருக்கும் பாராளமன்றத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் பொறுப்பாளர் அட்மிரல் டெனிஸ் சி பிளேயர் தெரிவித்ததைப் பார்க்கும் போது 2015 ஜனவரியில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தேவையான ஆட்சி மாற்றத்தை தமிழர்களின் வாக்கு இலகுவாகச் செய்து கொடுத்துள்ளது என்பது தெளிவாகின்றது. அந்த வாக்கு வலுவை வைத்துக் கொண்டு சீனா அரசுறவாளர்களைச் (இராசதந்திரிகள்) சந்தித்துப் பேச்சு வார்த்தை நடாத்தி பின்னர் அமெரிக்க மற்றும் இந்திய அரசுறவாளர்களையும் சிங்களத் தலைவர்களையும் சந்தித்துக் கதைத்து பேரம் பேசத் தெரியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனி யாருடன் எப்படிப் பேரம் பேசப் போகின்றது?
சம்பந்தனின் பகிடி
“நாம் அதிகபட்சமாக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெறுவதன் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இன்றியமையாத பேரம்பேசும் சக்தியைப் பெற முடியும். இதனை, நாம் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்து கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பயணத்தை நிறைவு செய்யத் தயாராகவுள்ளோம்." இது இரசவரோதயம் சம்பந்தர் அவர்கள் திருமலை சேருவாவெலத் தொகுதியில் தனது கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்த கருத்தாகும். இந்தக் கருத்துடன் திரு இராசவரோதயம் சம்பந்தர் தனது திருவாசகத்தை நிறைவு செய்ய வில்லை. மேலும் ஒரு நகைச்சுவையையும் அவர் உதிர்த்துள்ளார்:
அண்மைக் கால சரித்திரத்தைப் பார்த்தோமானால் தமிழ் அரசியல்வாதிகளின் முதல் பேரம் பேசும் பணி இலண்டனில் சோல்பரிப் பிரபுவுடன் ஆரம்பித்தது. திரு ஜி ஜி பொன்னம்பலம் இலங்கைக்கான அரசமைப்பு யாப்பை எழுதிக் கொண்டிருந்த சோல்பரிப் பிரபுவை இலண்டனில் சந்தித்து அவர் எழுதும் யாப்பில் இலங்கைப் பாராளமன்றத்தில் சிங்களவர்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவமும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கு ஐம்பது விழுக்காடு பிரதிநிதித்துவமும் வேண்டும் என்று வலியுறுத்தி வேண்டிக் கொண்டார்.சோல்பரிப் பிரபு ஜி ஜி பொன்னம்பலத்தின் ஆங்கிலப் புலமையையும் நாவன்மையையும் பாராட்டி விட்டு அவரின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
1960இல் செய்த பேரம்
1960-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியும் சி பி டி சில்வா தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் முக்கிய கட்சிகளாகப் போட்டியிட்டன. மொத்த 151(ஆறு நியமன உறுப்பினருடன் 157) தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி 50 தொகுதிகளிலும் சிறி லங்கா சுதந்திரக் கட்சி 46 தொகுதிகளிலும் தந்தை செல்வாவின் தலைமையில் தமிழரசுக் கட்சி 15 தொகுதிகளிலும் லங்கா சமசாஜக் கட்சி 10 தொகுதிகளிலும் மக்கள் ஒற்றுமை முன்னணி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தமிழரசுக் கட்சியின் ஆதரவு அரசு ஒன்றை அமைப்பதற்கு அவசியம் தேவைப்பட்டது. தேர்தல் முடிந்து தந்தை செல்வநாயகமும் மற்றத் தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களும் இரத்மலான விமான நிலையத்தில் இறங்கிய போது அவரை "வரவேற்க" ஐக்கிய தேசியக் கட்சியினரும் சுதந்திரக் கட்சியினரும் மட்டுமல்ல சௌமிய மூர்த்தி தொண்டமானின் பிரதிநிதியாக திரு ராமானுஜம் என்ற முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் காத்திருந்தார். அவரை யார் பக்கம் இழுப்பது என்ற போட்டி அப்போது இருந்தது. அப்போது சிங்களக் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கு தமது நான்கு கோரிக்கைகளை தமிழரசுக் கட்சியினர் முன்வைத்தனர்:
1. பண்டா செல்வா ஒப்பந்தத்தில் ஒத்துக் கொண்ட படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான பிராந்திய அரசை உருவாக்குதல்.
2. அரச மொழியாக சிங்களத்துக்கு ஈடாக தமிழையும் இணைத்தல்
3. பறிக்கப்பட்ட மலையக மக்களின் வாக்குரிமையை மீளளித்தல்.
4. மலையக மக்களுக்கு நான்கு பாராளமன்ற நியமன உறுப்பின பதவி வழங்கல்.
இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மறுத்து விட்டது. தந்தை செல்வா தனது இரண்டாவது மற்றும் நான்காவது கோரிக்கைகள் தொடர்பில் சிலவிட்டுக் கொடுப்புக்களைச் செய்யத் தயாராக இருந்தார். டட்லி முதலாவது கோரிக்கைக்கு மறுத்து தமிழரசுக் கட்சிக்கு அமைச்சுப்பதவி கொடுக்க முன் வந்தார். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தந்தை செல்வா மறுத்து விட்டார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிராந்திய சபை கொடுக்க மறுத்து யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களுக்கான தனித்தனி மாவட்ட சபைகளை உருவாக்கி அவற்றிற்கு பண்டா செல்வா ஒப்பந்தத்தில் உள்ள அதிகாரப் பரவலாக்கம் செய்ய முன் வந்தது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஒலிவர் குணத்திலகா அழைத்தார். ஆனால் அரியணை உரையின் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாக்ளித்து அந்த ஆட்சியை ஒரு சில நாட்களில் தமிழரசுக் கட்சியினர் கவிழ்த்தனர். பின்னர் ஆளுநர் ஒலிவர் குணத்திலகா சுதந்திரக் கட்சியின் தலைவர் சி பி டி சில்வாவை ஆட்சியமைக்க தனது மா்ளிகைக்கு அழைத்தார். அங்கு தந்தை செல்வாவும் சில்வாவுடன் சென்றார். அப்போது குணத்திலகா ஒரு குண்டைத் தூக்கி தந்தை செல்வாவின் முன் போட்டார். அது "நீ நிபந்தனையற்ற ஆதரவை சி பி டி சில்வாவிற்கு வழங்குகின்றாயா?" என்ற கேள்வியாகும். இந்தக் கேள்வி தந்தை செல்வாவிற்கும் சுததிரக் கட்சிக்கும் ஏற்பட்ட உடன்பாட்டை அறிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரான குணத்திலகாவின் திட்டமிட்ட சதியாகும். நிபந்தனை அற்ற ஆதரவு அல்ல எனத் தந்தை செல்வா நேர்மையாகப் பதிலளிக்க நாட்டின் உறுதி நிலையைக் கருத்தில் கொண்டு தான் பாராளமன்றத்தைக் கலைத்து புதுத் தேர்தலுக்கு உத்தரவிடுவதாக ஆளுநர் ஒலிவர் குணத்திலகா தெரிவித்தார். தொடர்ந்து வந்த தேர்தலில் சிறிலங்கா சுததிரக் கட்சியும் தமிழரசுக் கட்சியும் கூட்டணி அமைக்காமல் இணைந்து போட்டியிட்டன. ஏற்கனவே சி பி டி சில்வாவுடன் ஒத்துக் கொண்டவை யாவும் தேர்தலில் வெற்றி பெற்ரு ஆட்சி அமைத்தால் நிறைவேற்றப்படும் என அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தந்தை செல்வாவிற்கு உறுதி வழங்கினார். ஆனால் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற சிறிமா தந்தை செல்வாவின் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்ற வில்லை.
1965-ம் ஆண்டு நடந்த பேரம்
1965-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அறுதிப் பெரும் பான்மை பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி-66, சுதந்திரக் கட்சி -41. தமிழரசுக் கட்சி 14, சமசமாஜக் கட்சி-10, தமிழ் காங்கிரசுக் கட்சி -3 எனத் தேர்தல் முடிவுகள் அமைந்தன. டட்லி சேனநாயக்கா தமிழரசுக் கட்சியுடனும், தமிழ் காங்கிரசுக் கட்சியுடனும் இணைந்து ஒரு கூட்டணி அரசை அமைத்தார். வடக்குக் கிழக்கில் தமிழ் அரச மொழியாக்குவதாகவும் மாவட்ட சபை அமைப்பதாகவும் ஒத்துக் கொள்ளப் பட்டதுடன் மூதவை உறுப்பினர் மு திருச்செல்வத்திற்கு உள்ளூராட்சி அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் மாவட்ட சபை உருவாக்காமல் தந்தை செல்வா ஏமாற்றப்பட்டார்.
1970இல் கண்ட பேரம் பேசல் கனவு
1970-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சிகளின் மேடையில் அ அமிர்தலிங்கத்தின் முக்கிய பரப்புரையாக இருந்தவாசகம் "இந்த முறைத் தேர்தலில் எந்த ஒரு சிங்களக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற மாட்டாது. எம்மை எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள். நாம் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம்." ஆனால் சிறிமா தலைமையிலான சுதந்திரக் கட்சி தனது தேர்தல் பரப்புரையாக அமிர்தலிங்கத்தின் உரையைப் பாவித்தது. தமிழரசுக் கட்சியின் ஆதரவுடனா நாம் ஆட்சி அமைப்பது? எம்மைப் பெரு வெற்றி ஈட்டச் செய்யுங்கள் என்ற பரப்புரை செய்யப்பட்டதுடன் அமிர்தலிங்கத்தின் உரை துண்டுப் பிரசுரமாக சிங்களத்தில் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டது. தேர்தலில் சிறிமா என்றுமே இல்லாத அளவு பெரு வெற்றி பெற்று தமிழர்களுக்கு இருந்த உரிமைகளையும் பறித்தார். அன்று அமிர்தலிங்கம் சொன்னதைப் போலத்தான் இன்று சம்பந்தர் ஐயா சொல்கின்றார்.
காலம் மாறிவிட்டது சம்பந்தர் ஐயா
அறுபதுகளில் இருந்தது போல் அல்ல இன்று சிங்களத்து அரசியல் நிலைமை அறுதிப் பெரும்பானமை இல்லாத கட்சி இரத்மலான விமான நிலையத்திற்குப் போகத் தேவையில்லை. சில அமைச்சுப் பதவிகளையும் பிற பதவிகளையும் விட்டெறிந்தால் கூட்டமாக பாராளமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவார்கள். ஆனால் சம்பந்தர் ஐயாவைச் சேர்த்துக் கூட்டணி அமைத்தால் அரசியலமைப்பை மாற்றி கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு எல்லாம் செய்து கொண்டிருக்க வேண்டும் தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதற்கு. தமிழர்களின் ஆதரவுடன் மட்டும்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என ஒரு நிலைமை ஏற்பட்டால் பௌத்த தீவிரவாதிகளும் மகாசங்கத்தினரும் களத்தில் இறங்கி சிங்கள அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்துவார்கள்.
சம்பந்தர் ஐயா உங்கள் ஜட்ஜ்மென்ற் எப்போதும் தப்பு.

- "மைத்திரிபால சிரிசேன இனவாதத்துடன் எந்த சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்ளவில்லை. (மைத்திரிபால சிரிசேன) மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், மாட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா ஆகிய பெரியோர்கள் வழியில் செல்லவுள்ளார்."

Monday, 20 July 2015
சீனப் பங்குச் சந்தை வீழ்ச்சி சீன ஆட்சியாளர்களுக்கு சவாலா?
சீனப் பங்குச் சந்தையின் சுட்டியான ஷாங்காய் கொம்பசிற் சீன அரசின் தீவிர நடவடிக்கைகளையும் மீறி ஜுலை 14-ம் 15-ம் திகதிகளில் சரிவைச் சந்தித்தது. சீனப் பொருளாதாரம் ஏழு விழுக்காடு வளர்ச்சியில் உறுதியாக இருக்கின்றது என்ற செய்தி 15-ம் திகதி வெளிவந்த வேளையிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை.
வட்டி சுட்டதடா!!!!
ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது சீன அரச முதலாளித்துவவாதிகளின் தலையாய கொள்கையாகவும் முதன்மைப் பணியாகவும் இருக்கின்றது. அதற்கு உள்ளாட்டுக் கொள்வனவாளர்களை பொருளாதார ரீதியில் வலுவிக்கவர்களாக மாற்றுவது அவசியமான ஒன்றாகிவிட்டது. . 1978-ம் ஆண்டில் இருந்து சீனா உலகச் சந்தையில் தனது பொருட்களின் போட்டியிடு திறனை அதிகரிக்க உள்ளூர் ஊதியத்தையும் சேமிப்புக்கள் மீதான வட்டி வீதத்தையும் திட்ட மிட்ட முறையில் நசுக்கி வைத்திருந்தது. இதனால் சீன மக்களின் கொள்வனவு வலு அதிகரிக்கவில்லை. குறைந்த வட்டி வீதம் அரசின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மலிவான வட்டி வீதத்தில் நிதியைக் கொடுத்தது. இதனால் அரச உற்பத்தி நிறுவனங்கள் நாடெங்கும் பாரிய உட்கட்டுமானங்களை உருவாக்கின. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக சீன ஆட்சியாளர்கள் ஏற்றுமதிப் பொருட்களின் உற்பத்திச் செலவை அதிகரிக்காமல் எப்படி உள்ளூர் மக்களின் கொள்வனவு வலுவை அதிகரிப்பது என்பதில் தங்கள் தலை முடியை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். சீன மக்களை கட்டிடங்கள் வாங்கச் செய்வதாலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் செய்வதாலும் அவர்களின் கொள்வனவு வலுவை அதிகரிக்கலாம் என சீன ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டனர். இதனால் கடந்த இருபதுஆண்டுகளாக சீனாவில் கட்டிடங்களின் (அசையாச் சொத்துக்கள்) விலைகள் அதிகரித்துக் கொண்டே போயின. கடந்த ஆண்டில் இருந்து பங்குச் சந்தையிலும் பெரும் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக உலகப் பொருளாதார நிபுணர்கள் சீனாவின் அசையாச் சொத்து அளவிற்கு மிஞ்சிய விலை அதிகரிப்பைக் கண்டுள்ளது; அவற்றின் விலைகள் திடீர்ப் பெரும் சரிவைச் சந்திக்கலாம்; அப்படி நடக்கும் போது சீன அவற்றை வாங்கக் கடன் கொடுத்த வங்கிகள் பெரும் இழப்பீட்டைச் சந்திக்கும்; அது ஒரு கடன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரித்துக் கொண்டிருந்தனர்.
பங்குச் சந்தையின் பங்கு அதிகரிக்கப் பட்டது.
நீண்ட காலமாக சீனப் பொருளாதாரத்தில் பங்குச் சந்தையின் பாகம் சிறிய அளவிலேயே இருந்தது. கடந்த ஓராண்டாக பங்குச் சந்தையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கின்றது. சீன வளங்களை திறன் மிக்க வகையில் பகிர்வதற்கு முதலாளித்துவ நாடுகளில் உள்ளது போன்ற ஒரு பங்குச் சந்தை அவசியம் என சீன ஆட்சியாளர்கள் கருதியதனால் அவர்கள் சீனப் பங்குச் சந்தையை திட்ட மிட்ட முறையில் வளர்த்தெடுத்தனர். கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்வது அனுமதிக்கப்பட்டது. சீனப் பொருளாதாரத்தில் நிதிச் சேவையின் பங்கு அதிகரித்தது.
லட்சோப லட்சம் தொலைந்தது
சீனப் பங்குகள் மூன்று ரில்லியன்(மூன்று இலட்சம் கோடி) அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இழப்பீட்டைச் சந்தித்திருக்கும் வேளையில் சீனாவின் பொருளாதாரம் தொடர்பாக சீன ஆட்சியாளர்கள் மட்டுமல்ல பல வளர்ச்சியடைந்த நாடுகளும் கடும் கரிசனை கொண்டுள்ளனர். சீனாவில் ஏற்பட்ட சொத்திழப்பீடு உலக வரலாற்றில் என்றும் ஏற்படாத சொத்திழப்பு எனக் கருதப்படுகின்றது. சீனப் பொருளாதாரம் மோசமடைந்தால் அது சீன ஆட்சியாளர்களுக்கு ஆபத்தாக முடியும் என்பதை சீன ஆட்சியாளர்கள் நன்கறிவர். சீனாவில் நடக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து தென் சீனக் கடலில் உள்ள முரன்பாடுகள் வரை எந்தப் பிரச்சனைகளிலும் தாம் ஊடகங்களில் தோன்றி மக்களுக்கு ஆறுதலும் உறுதியும் வழங்கிக் கொண்டிருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனத் தலைமை அமைச்சர் லீ கேகியாங்கும் சீனப் பங்குகளின் விலை 25 நாட்களில் 32 விழுக்காடு வீழ்ச்சியக் கண்ட போது மௌனமாக இருக்கின்றார்கள். தாம் தாய் நாடு எல்லாத் துறையிலும் முன்னேறி உலகின் முதல்தர நாடாக உருவாகப் போகின்றது என நம்பிக் கொண்டிருந்த சீன மத்திய தர வர்க்கத்து மக்களின் நம்பிக்கை தளரத் தொடங்கிவிட்டது. அதிலும் கடன் பட்டு பங்குகளை வாங்கிய மத்திய தர வர்க்கத்து அபிவிருத்தி விரும்பிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
நகரவாசிகளின் நரகமான பங்குச் சந்தை
சீன நகரவாசிகளில் எண்பது விழுக்காட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளனர். அண்மைக் காலங்களாக சீன அரசு மக்களைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு உக்குவித்து வந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பேண நிறுவனங்களில் முதலீடு அதிகம் தேவைப்பட்ட போது அவறின் பங்குகளில் முதலீடு செய்யும் படி மக்கள் தூண்டப்பட்டனர். சீன அரச நிறுவங்களின் பங்குகளில் மக்கள் செய்யும் முதலீட்டின் அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் பிடியைத் தளர்த்துவதாக சீன அரசு பரப்புரை செய்தது. அதே வேளை ஆட்சியில் பொதுவுடமைக் கட்சியின் முக்கிய புள்ளிகளின் பிடியை மேலும் இறுக்கவும் அது வழிவகுத்தது. சீன நகரவாசிகளில் 80 விழுக்காட்டினர் பங்குச் சந்தையில் முதலீடு செய்த போதிலும் அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காடு மட்டுமே.
அன்று ஜப்பானில் இன்று சீனாவில்
2008-ம் ஆண்டின் பின்னர் அமெரிக்க டொலரில் பார்க்கும் போது சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது. சீனப் பங்குச் சந்தை 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அடைந்த விலை அதிகரிப்பை மட்டுமே இழந்துள்ளது. சென்ற ஆண்டின் பெறுமதியுடன் பார்க்கும் போது சீன பங்கு 75 விழுக்காடு விலை அதிகரிப்பில் இப்போதும் இருக்கின்றத்து. கடன் வாங்கி பங்குச் சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகளால் பங்குகள் பெரும் விலை அதிகரிப்பை 2015 மார்ச் மாதத்தின் பின்னர் பெற்றன. சீனாவில் தற்போது நடப்பது தொண்ணூறுகளில் ஜப்பானில் நடந்ததை ஒத்தது என்கின்றனர் சில பொருளாதார நிபுணர்கள். அப்போது ஜப்பானிய அசையாச் சொத்துக்களினதும் பங்குகளினதும் விலைகள் தொடர் வீழ்ச்சியைக் கண்டன. இதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் மூலப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சி கண்டன. அது உலகப் பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்தது. இதே நிலை இப்போதும் நடக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.
சீன அடி சிலம்படி சரியான இடத்தில் விழவில்லை
பங்குச் சந்தை விலைச் சரிவை சீன ஆட்சியாளர்கள் தமது மிகத் தீவிர கவனத்தில் எடுத்தார்கள். பல அதிரடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள். ஜூன் 26-ம் திகதி எழு விழுக்காடு விலை வீழ்ச்சி சீனப் பக்குச் சந்தையில் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 27-ம் திகதி வட்டி வீதம் குறைக்கப் பட்டது. ஜூன் 29-ம் திகதி உள்ளூராட்சிச் சபைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு எதிரான தடை நீக்கப்பட்டது. ஜூலை முதலாம் திகதி பங்கு வர்த்தகத்திற்கான கட்டணம் குறைக்கப்பட்டது. வங்கிகள் மைய வங்கியில் வைப்பிலிட வேண்டிய இருப்பு விகிதம் குறைக்கப்பட்டது. இவற்றால் நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்யப்பட்டது. ஜூலை 2-ம் திகதி வங்கிகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கும் கடன் தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சீன அரச நிறுவனங்கள் புதிதாக பங்கு விற்பனை செய்வது இடை நிறுத்தப்பட்டது. ஜூலை 8-ம் திகதி பெரிய அளவில் பங்குகளை வைத்திருப்போர் பங்குகளைப் பெருமளவில் விற்பது தடை செய்யப்பட்டது. பங்கு சந்தையில் குறுகிய கால விற்றல் (short selling) தடை செய்யப்பட்டு அதை மீறுபவர்கள் கைது செய்யப்படலாம் என மிரட்டல் சீன அரசால் விடுக்கப்பட்டது. short selling என்பது பங்குளை வாங்க முன்னரே விற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. ஆனால் சீன ஆட்சியாளர்கள் சீனப் பங்குகளின் விலை அளவுக்கு மிஞ்சி மிகைப்படுத்தப் பட்டிருந்தன என்பதை உணரவில்லை. சீனப் பங்குகள் அதன் உச்ச விலை நிலையில் ஜூன் 12-ம் திகதி இருந்த போது சீனப் பங்குகளின் விலை சராசரியாக அவை கொடுக்கும் பங்கிலாபத்திலும் பார்க்க 25 மடங்காக இருந்தன. இந்த அளவிற்கு மிஞ்சிய விலை குறைக்கப் படவேண்டிய ஒன்று அது விழுவதைத் தடுக்கக் கூடாது என மேற்குலக ஊடகங்கள் கருத்து வெளிவிட்டன.சீன நிறுவனங்களின் இலாபம் வீழ்ச்சியடையும் போது அவற்றின் விலைகள் உயர்ந்தமை விடும்பத்தகாதா ஒன்று மட்டுமல்ல நடக்கக் கூடாத ஒன்றுமாகும். சீன ஊடகங்கள் சீன அரசு பங்குச் சந்தையின் மீது போர் தொடுத்துள்ளது என்றும் அது ஓர் அணுப் படைக்கலப் போர் என்றும் விமர்சித்தன. சீனப் பங்குச் சரிவைப்பற்றி சீன ஊடகம் ஒன்று இப்படி எழுதியிருந்தது:
Price-to-earnings ratio உயர்வாக இருக்கும் போது பங்கு விலை மோசமாக உயர்ந்திருக்கின்றது எனச் சொல்லலாம்.
H-பங்குகளும் A-பங்குகளும்
சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையிலும் ஷென்ஷென் பங்குச் சந்தையிலும் குறிந்த சீனாவின் A-பங்குகள் விற்பனையும் கொள்வனவும் நடக்கும். இவற்றில் வெளிநாட்டவர்கள் பங்கு பற்றுவது மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. ஹொங்ஹொங் பங்குச் சந்தையில் H-பங்குகள் விற்பனையும் கொள்வனவும் நடக்கும். அங்கு வெளிநாட்டினர் சாதாரணமாகப் பங்கு பற்றலாம். A-பங்குகள் மட்டும்தான் 2015-ம் ஆண்டு ஜூன் வரை கன்னாபின்னா என விலை அதிகரிப்புக் கண்டு பின்னர் கடும் சரிவைக் கண்டது. H-பங்குகள் பெரும் ஏற்ற இறக்கத்தை அனுபவிக்கவில்லை. சீனாவின் A-பங்குகளில் வெளிநாட்டு பெருமுதலீட்டாளர்களின் பாதிப்பு மிகக் குறைவு.
.
அமெரிக்காவிடமிருந்து அடித்த கொப்பி
1990களில் அமெரிக்காவில் பங்குச் சந்தையில் விலைகள் சடுதியான சரிவதைத் தடுக்க என ஒரு இரகசிய நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்கப் பங்கு விலைகள் சரிந்த போது அமெரிக்காவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா செய்ததை சீனாவும் செய்ய முயல்கின்றது எனச் சொல்லப்படுகின்றது. ஆனால் அமெரிக்கா தலையிட்டது சரியான விலை நிலையிலும் பார்க்க பங்கு விலைகள் குறையாமல் இருப்பதற்கு. கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்கா நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கைகள் பங்கு விலைகளை அதிகரிக்க வைக்கின்றன. ஆனால் நாட்டின் பங்கு விலை அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அதன் வீழ்ச்சியைத் தடுக்க அரசு செய்யும் செலவு விழலுக்கு இறைத்த நீராகும். அமெரிக்க அரசு தாம் பங்குச் சந்தையில் நேரடித் தலையீடு செய்வதில்லை என்கின்றது. பங்குச் சந்தையின் முக்கிய அம்சம் நிறுவனங்கள் மலிவாகவும் பொது மக்களிடமிருந்து நேரடியாகவும் நிதியை பெறுவதும் பொதுமக்கள் சேமிப்பு கணக்கிலும் பார்க்க சிறந்த பங்கிலாபத்தைப் பெறுவதுமாகும். சீனாவின் அரச நிறுவங்கள் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முதலீட்டைப் பெற பங்குச் சந்தை மீது அவர்களுக்கு நம்பிக்கை அவசியம். இந்த ஆண்டு சீன நிறுவனங்கள் 72 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமானமான நிதியை பொதுமக்களிடமிருந்து திரட்ட ஏதுவாக அமைந்தது அப்படிப்பட்ட நம்பிக்கையே. எல்லா முதலாளித்துவ அரசுகளும் பங்குச் சந்தை விலை வீழ்ச்சியடையும் போது தலையிடுவதுண்டு ஆனால் சீனாவின் தலையீடு அதிக நேரடியானதாகவும் தீவிரமானதாகவும் இருக்கின்றது. எந்த ஒரு பொதுவுடமைவாதியும் சீன அரசு உழைக்கும் வர்க்கத்தினருக்குப் போக வேண்டிய நிதி வளத்தை பங்குச் சந்தையில் கொள்ளை இலாபமீட்டும் குட்டி பூர்ஷுவாக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துகின்றது என வாதிட முடியும். சீனாவின் உயர் பணக்காரர்கள் 400 பேர் 100பில்லியன் டொலர்களை இழந்தது நாட்டின் இழப்பீடா என அவர்களால் கேள்வி எழுப்ப முடியும். சீனப் பொதுவுடமைக் கட்சியின் உயர் பீடத்தினரும் பெரும் இழப்பீட்டைச் சந்தித்திருக்க வேண்டும்.
சீனாவால் திட்டமிட்டுத் தப்ப முடியும்
சீனச் சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை அனுபவம் மிகக் குறைவு ஜுலை மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அவர்களுக்கும் மேலும் பல புதிதாக வரவிருக்கும் முதலீட்டாளர்களுக்கும் நல்ல படிப்பினை. இந்தப் படிப்பினை சீனாவின் முதலீட்டுத் துறைக்கு உதவியாகவும் வள ஒதுக்கீட்டில் சீன அரசு சிறப்பாகச் செயற்படவும் உதவும். முதலீட்டாளர்கள் நாட்டுப்பற்றுடன் செயற்படுவதில்லை என்பதை சீன அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். சீனப் பொருளாதாரம் தற்போது எழு விழுக்காடு வளர்கின்றது இது 2009-ம் ஆண்டிற்கான வளர்ச்சியான 12 விழுக்காட்டுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும். ஆனால் 2007-ம் ஆண்டு சீனாவின் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது ஏற்படும் அதிகரிப்பு இரு மடங்காகும். வளரிச்சி அதிகரிக்கின்றது. ஆனால் கடந்த ஆண்டின் வளர்ச்சியுடன் இந்த ஆண்டின் வளர்ச்சிகும் இடையிலான வளர்ச்சி அதிகரிப்பு விழுக்காடு மட்டுமே குறைகின்றது. இருந்தும் ஏழு விழுக்காடு வளர்ச்சியே சீன ஆட்சியாளரின் இலக்காகும். பங்குச் சந்தை வேறு பொருளாதாரம் வேறு என்பதை சீனா நிரூபிக்கும் ஆனால் சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்குவதற்கு ஒரு அரச தலையீடு குறைந்த பங்குச் சந்தை அவசியம்.

- In 1999, just before the epic Nasdaq technology bubble burst, the average Nasdaq stock traded on a multiple of 59 times earnings; in China, the Shenzhen ChiNext, the country's version of the tech-heavy index, had topped out with an average price-to-earnings ratio of 150 times.

Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...