Tuesday, 25 November 2014
உலகக் கடற்பரப்பு அனைத்தையும் கண்காணிக்கும் அமெரிக்காவின் ஆளில்லாப் போர்விமானங்கள்
அமெரிக்கக் கடற்படையினர் என்னும் ஆளில்லாப் போர்விமானங்கள் மூலம் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவுள்ளனர். அமெரிக்கா உருவாக்கும் MQ-4C Triton unmanned aircraft system ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் Boeing P-8 Poseidon என்னும் விமானிகள் ஓட்டும் கண்காணிப்பு விமானங்களுடன் இணைந்து செயற்படக் கூடியவை.
40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி உயரமாகவும் மிகவும் தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும்.
2017-ம் ஆண்டு முழுமையான சேவைக்கு வரும் MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் மணிக்கு முன்னூறு மைல்கள் வேகத்தில் பறந்து இரண்டாயிரம் கடல் மைல்களைக் கண்காணிக்கக் கூடியவை. இவற்றினுள் 3200 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களை எடுத்துக் கொண்டு பறக்கும் போது வெளியில் 2400 இறாத்தல் எடையுள்ள படைக்கலன்களையும் பொருத்திக் கொண்டும் பறக்க முடியும்.
50,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது தேவை ஏற்படின் தனது electro-optical/infrared உணரிகளின் துணையுடன் எந்தவித முகில்களூடாகவும் இறங்கி மிகவும் தாழப்பறந்து உளவு, கண்காணிப்பு, வேவு போன்றவற்றைச் செய்ய முடியும்.
2014 ஒக்டோபர் மாதம் செய்யப்பட்ட இரண்டாவது பரீட்சார்த்த பறப்புக்கள் மிகவும் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்கக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Sunday, 23 November 2014
உலக எரிபொருள் விநியோகமும் புவிசார் அரசியலும்
புவிசார் அரசியல் என்பது அடிக்கடி எமது கண்களிலும் காதுகளிலும் அடைக்கடி விழும்
சொற்பதமாகும்.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பும் பொருளாதாரமும்
தொடர்பான ஆதிக்கம் புவிசார் அரசியல் எனப்படும். முதலாவது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது.
இரண்டாவது அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்பது புவிசார் அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது.
மூன்றாவது ஒரு குறித்த நிலப்பரப்பில் உள்ள மக்கள், பொருளாதாரம், மற்றும் அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை அந்த நிலப்பரப்பின் புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வகிக்கின்றது.
நான்காவது: ஆதிக்கம் தொடர்பான போட்டியை படை வலிமை (பல சமயங்களில்) முடிவு செய்யும்
இதையே சுருக்கமாகச் சொல்வதானால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளவை தொடர்பான
பல் வேறு நாடுகளின் கொள்கைகளை புவிசார் அரசியல் எனலாம். இங்கு உள்ளவை எனக் குறிப்பிட்டது
மிகவும் பரந்த பொருளுடைய ஒரு சொல்லாகும். மக்கள், மதம், கலாச்சாரம், வளம், பொருளாதாரம்,
படைவலு எனப் பலவற்றை இந்த உள்ளவை என்னும் சொல் தாங்கி நிற்கின்றது.
மதப் பரப்பலில் புவிசார் அரசியல்
கிறிஸ்த்தவ மதம் உருவாகிப் பரவத் தொடங்கியதில் இருந்து மதம் புவிசார் அரசியலில்
முக்கியத்துவம் வகிக்த்தது. பின்னர் உருவான இசுலாமிய மதத்தைப் பரப்புவது தொடர்பாக புவிசார்
அரசியல் மோசமான போட்டியாக உருவானது. கிருஸ்துவ மதத்தை முன்னெடுத்த ரோமானியப் பேரரசு
வீழ்ச்சியடைந்து இசுலாமிய மதத்தைப் பரப்பிய உதுமானியப் பேரரசு எழுச்சியடைந்தது.
1760-ம் ஆண்டில் இருந்து 1840-ம் ஆண்டு வரை நடந்த கைத்தொழிற்புரட்சிக்குப் பின்னர்
எரிபொருளே பல வலுமிக்க நாடுகளின் முக்கிய தேவையாக அமைந்தது
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து உலகப் புவிசார் அரசியலில் பெரும் பங்கு வகித்தது
எரிபொருள் பிரச்சனையே. மத்திய கிழக்கில் நடந்த பல போர்கள் எரிபொருள் உற்பத்தி மற்றும்
விநியோகம் தொடர்பானவையாகவே இருக்கின்றன. கடந்த முப்பது ஆண்டுகளாக ஆசிய நாடுகள் பல பொருளாதார
வளர்ச்சியடைந்த படியால் தற்போது உலக ஹைதரோக் காபன் எரிபொருளில் காற்பங்கை சீனா, இந்தியா,
ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பாவனை செய்கின்றன. இனி வரும் இருபது ஆண்டுகளில்
உலக எரிபொருள் பாவனை அதிகரிப்பின் 85 விழுக்காடு இந்த நாடுகளாலேயே ஏற்படும். அடுத்த
இருபது ஆண்டுகளில் அதிக எரிபொருள் பாவனையை சீனா செய்யும். அதன் பின்னர் இந்தியா அந்த
முதலாம் இடத்தைப் பெறும். இனிவரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்கா தனது ஷேல் எரிபொருள்
உற்பத்தியை மூன்று மடங்காக அதிகரிக்கும். அத்துடன் உலகில் அதிக அளவு எரிபொருள் ஏற்றுமதி
செய்யும் நாடாக மாறும். அமெரிக்காவுடன் கனடாவும் பிரேசிலும் தமது ஷெல் எரிபொருள் உற்பத்தியை
இனி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவிருக்கின்றன. இதனால் மத்திய கிழக்கை அமெரிக்கக் கண்டம்
எரிபொருள் உற்பத்தியில் இரண்டாம் இடத்திற்கு தள்ளவிருக்கின்றது. இதுவரை ஐரோப்பிய நாடுகளுக்கு
தனது எரிபொருளை ஏற்றுமதி செய்து வந்த இரசியா தனது ஏற்றுமதியை கிழக்கு நோக்கி நகர்த்தி
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் தனது ஏற்றுமதியை அதிகரிக்கவிருக்கின்றது. சீனா தனது நாட்டிற்கான
எரிபொருள் விநியோகம் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்ய பட்டுப் பாதைத் திட்டத்தையும்
முத்து மாலைத்திட்டத்தையும் இணைத்து தனது உபாயங்களை வகுக்கின்றது.
1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தை வீழ்ச்சியடையச் செய்ததில் சவுதி அரேபியாவிற்கும்
பெரும் பங்கு உண்டு. எரிபொருள் ஏற்றுமதில் அப்போது சோவியத் ஒன்றியம் பெரிதும் தங்கி
இருந்தது. தனது உற்பத்தியை அதிகரித்து உலக எரிபொருள் விலையை சவுதி அரேபியா வீழ்ச்சியடையச்
செய்தது. இதனால் சோவியத் ஒன்றியத்தின் ஏற்றுமதி வருமானம் பெரிதும் பாதிப்படைந்தது.
ஆப்கானிஸ்த்தானில் செய்த ஆக்கிரமிப்பால் ஏற்கனவே பாதிப்படைந்திருந்த சோவியத் பொருளாதாரம்
மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டு சோவியத் ஒன்றியம் விழ்ச்சியடைந்தது
சவுதியின் அடுத்த அதிரடி
தற்போது சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை விழ்ச்சியடையச் செய்ய
சவுதி அரேபியா பெரிதும் முயல்கின்றது. அங்கு பெரும்பான்மையாக வாழும் சுனி இசுலாமியரின்
ஆட்சியைக் கொண்டு வந்து சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தை அடக்க சவுதி அரேபியா விரும்புகின்றது.
சிரியாவில் அசாத்தின் ஆட்சி தொடர இரசியா பலவகைகளில் உதவுகின்றது. அசாத்திற்கு எதிராக
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபையில் கொண்டு வந்த தீர்மானங்களை இரசியய
இரத்துச் செய்தது. ஐக்கிய அமெரிக்கா சிரியாவில் அசத்தின் படைகளுக்கு எதிராகத் தாக்குதல்
நடாத்தினால் இரசியாவின் செஸ்னியப் பிராந்தியத்தில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு
உதவும் சவுதி அரேபியாவின் எர்பொருள் உற்பத்தி நிலையங்கள் மீது தான் தாக்குதல் நடாத்தப்
போவதாக இரசியா அமெரிக்காவையும் சவுதி அரேபியாவையும் எச்சரித்திருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் சவுதி அரேபியா தனது எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தும் அமெரிக்கா தனது
ஷேல் எரிவாயும் உற்பத்தியை அதிகரித்தும் உலக எரிபொருள் விலையை வீழ்ச்சியடையச் செய்தன.
இரசியாவின் 2015, 2016, 2017 ஆண்டுகளுக்கான அரச வரவு செலவுத் திட்டம உலக எரிபொருள்
விலை பீப்பாய் ஒன்றிற்கு 100 அமெரிக்க டொலர்களாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் செய்யப்
பட்டவை. தற்போது ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 85 டொலர்களிலும் குறைந்து விட்டது.
இரசியா இந்த எரிபொருள் விலை வீழ்ச்சியை தனது நாணயமான ரூபிளின் மதிப்பிறக்கத்தால் சமாளிக்கின்றது.
வீழ்ச்சியடைந்த நாணய மதிப்பு ஒரு தற்காலிக நிவாரணியே. வீழ்ச்சியடையும் ரூபிளும் எரிபொருள்
விலையும் இரசியப் பொருளாதாரத்தில் நீண்ட கால அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப்
போகின்றது. இன்னும் ஒரு புவிசார் அரசியல் பிரச்சனையான உக்ரேன் விவகாரத்தால் இரசியாமீது
வட அமெரிக்க நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கொண்டு வந்த பொருளாதாரத் தடையும்
இரசியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் நிலையில் மாற்றம்
அமெரிக்காவைப் பொறுத்தவரை கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேல் அதன் எரிபொருள் தேவை பல பிராந்தியங்களின் புவிசார் அரசியலில் தாக்கம் செலுத்தி வந்தது. இப்போது அதன் எரிபொருள் ஏற்றுமதி பல பிராந்தியங்களின் புவிசார் அரசியலில் தாக்கம் செலுத்தப் போகின்றது. இரசியாவின் பிராந்திய ஆதிக்கத்திற்கு தனது எரிபொருள் விநியோகத்தை மாற்றுவதன் மூலம் அமெரிக்கா சவால் விடுக்கின்றது. வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கக் கனவை அடக்க ஈரானின் பல் பிடுங்கும் முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா தனது மசகு எண்ணெய் மற்றும் வாயு (Crude oil and lease condensate production) உற்பத்தியை நாளொன்றிற்கு 8.6பில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் எரிபொருள் ஏற்றுமதி மீது இருந்த கட்டுப்பாடுகள் விரைவில் நீக்கப்படலாம். 2015-ம் அமெரிக்கா ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அடக்கப்படுவாரா புட்டீன்?
மேற்கு நாடுகள் விதித்த பொருளாதாரத் தடையால் இரசியாவிற்கு ஆண்டொன்றிற்கு 40பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பும் எரிபொருள் விலைவீழ்ச்சியால் ஆண்டு ஒன்றிற்கு 100பில்லியன் டொலர்கள் இழப்பும் ஏற்படுகின்றது. 2014-ம் ஆண்டில் இரசியாவில் இருந்து 130பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது 2014-ம் ஆண்டின் செப்டம்பர் ஒக்டோபர் மாதங்களில் இரசிய நாணயமான ரூபிள் 30விழுக்காடு பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி இருபதாம் நூற்றாண்டில்
நடந்த மோசமான விபத்து என்று கருதுகின்றார். மீண்டும் இரசியாவின் தலைமையில் முன்னாள்
சோவியத் ஒன்றிய நாடுகளை ஒன்று படுத்தும் கனவுடன் இருக்கின்றார். அவரது இந்த கிழக்கு
ஐரோப்பிய மத்திய ஆசிய புவிசார் அரசியல் கனவை எரிபொருள் விலை உடைக்குமா என்பதைப் பற்றி
அறிய இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும்.
Monday, 17 November 2014
சீன ஜப்பானிய உறவு நெருக்கமடையுமா நொருங்கிப் போகுமா?
சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஜப்பானிய அதிபர் சின்ஷோ அபேயும் இருபத்தொரு நாடுகளைக் கொண்ட ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டில் 2014 ஒக்டோபர் 10-ம் திகதி சந்தித்துக் கொண்டனர். பீஜிங்கில் உள்ள மக்கள் பெரு மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஒன்றுடன் ஒன்று பிரச்சனைக்கு உரிய உறவு நிலையில் உள்ள இரு நாட்டுத் தலைவர்கள் சந்திக்கும் போது அவர்களின் உடல் மொழியை அரசியல் நோக்குனர்கள் நுணுக்கமாக அவதானிப்பார்கள். 2012 டிசம்பர் மாதம் பதவிக்கு வந்த சின்ஷே அபேயிர்கும் 2013 மார்ச்சில் பதவிக்கு வந்த ஷி ஜின்பிங்கிற்கும் இடையில் நடத்த சந்திப்பு வழமைக்கு அதிகமாக அவதானிக்கப்பட்ட போதிலும் இச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தாது எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
சிரிக்காத சீனம்
இந்திய ஜப்பானியத் தலைமை அமைச்சர்கள் சந்தித்த போது அவர்கள் கட்டித் தழுவிய விதமும் அவர்கள் முகத்தில் மலர்ந்த சிரிப்புக்களும் பலராலும் விமர்சிக்கப்பட்டன. சின்ஷே அபேயும் ஷி ஜின்பிங்கும் கைகுலுக்கும் போது அபேயின் முகத்தில் அவரால் ஒரு புன்னைகை திணிக்கப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஷி ஜின்பிங்கின் முகத்தில் புன்னகையே இருக்க வில்லை. ஷி ஜின்பிங் கை குலுக்கியது ஓர் ஆர்வமற்ற கைகுலுக்கல் எனவும் அவர் ஓர் இனிய சூழலை அப்போது உருவாக்கவில்லை எனவும் அவதானிக்கப்பட்டுள்ளது. அபே சொன்ன வாழ்த்தை மொழி பெயர்ப்பாளர் மொழி பெயர்த்து ஷியிடம் சொன்னார் ஆனால் பதில் வாழ்த்து எதையும் ஷி சொல்லவில்லை. வழமையாக இரு நாடுகளின் ஆட்சியாளர்களிடையே நடக்கும் சந்திப்புக்கள் எடுக்கும் நேரத்திலும் பார்க்க அரைவாசி நேரத்தில் இவர்களது சந்திப்பு எடுத்துள்ளது. ஷியும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் சந்தித்த போது ஷியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஜப்பானியத் தலைமை அமைச்சருடன் நட்பு நிறைந்த சந்திப்பை சீன அதிபர் செய்வது சீன மக்களை ஆத்திரப்படுத்தும் என்பதை ஷி நன்கு அறிவார்.
ஒன்றானாலும் இரண்டே
சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் கலாச்சார மற்றும் மத ரீதியில் பெரும் ஒற்றுமை உண்டு. ஜப்பானியக் கலாச்சாரம் சீனாவிடமிருந்து பெறப்பட்டதே என்றும் சொல்லப்படுகின்றது. ஜப்பான் உலகத்தில் இருந்து தனிமைப் பட்டு இருந்த வேளையில் சீனா உலகெங்கும் தனது பட்டுப்பாதையை நீட்டி பலநாடுகளுடன் வர்த்தக மற்றும் கலாச்சாரப் பரிவர்த்தனை செய்யத் தொடங்கிவிட்டது. ஆனால் ஜப்பானியர்கள் சீனர்கள் தமது நாட்டுக்குள் அந்நியர்களை அனுமத்துப் போதைப் பொருளுக்கு அடிமையானார்கள் எனக் கருதுகின்றனர். இரு நாடுகளும் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூசியஸ் அவர்களின் சிந்தனை அடிப்படையில் தம் கலாச்சாரங்களை வளர்த்துக் கொண்டாலும் சரித்திரமும் பூகோளமும் இரு நாடிகளையும் பிரித்து வைத்துள்ளது.
சீன ஜப்பானியப் பிளவில் சரித்திரத்தின் பங்கு
சீனவின் சூய் அரசவம்சத்தினதும் டாங் அரசவம்சத்தினது ஆட்சிகளின் போது சீன மரபு, கலாச்சாரம், ஆட்சி நிர்வாக முறைமை, கட்டிடக் கலை நகர கட்டுமானம் ஆகியவை ஜப்பானிற்குப் பரவியது. இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது மோதல் கொரியத் தீபகற்பத்தை ஒட்டி ஆரம்பமானது. மூன்று அரசுகள் ஒன்றிணைந்து ஆட்சி நாடாத்திய கொரியாவில் மூன்று அரசுகளும் பிளவு பட்டபோது ஓர் அரசு ஜப்பானுடனும் மற்ற இரு அரசுகள் சீனாவுடனும் உறவு கொண்டாடின. இதனால் கிபி 663-ம் ஆண்டு இரு நாடுகளும் மோதிக் கொண்டன. சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையில் நடந்த கடற்போரில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஜப்பானியப் கடற்கலன்கள் அழிக்கப்பட்டன. பின்னர் 1593-ம் ஆண்டில் இருந்து 1598-ம் ஆண்டு வரை ஜப்பான் கொரியத் தீபகற்பத்தைக் கைப்பற்ற முயன்று தோற்றுப் போனது. சீனர்களினதும் கொரியர்களினதும் மிகையான ஆளணிவலுவைன் முன்னால் ஜப்பானால் நின்று பிடிக்க முடியவில்லை. ஆனால காலப் போக்கில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜப்பான் தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டது. 1876-ம் ஆண்டு தற்போது தென் கொரியா, வட கொரியா எனப்படும் இரு நாடுகளைக் கொண்ட கொரியத் தீபகற்பத்தை ஜப்பான் கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள ரியுகியூ தீவுகள் யாருக்கும் சொந்தம் என்பதில் இரு நாடுகளும் 1894-ம் ஆண்டு மோதிக்கொண்டன. இதில் தாய்வான் தீவு உட்படப் பல நிலப்பரப்புக்களை சீனா ஜப்பானிடம் இழந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப்படும்வரை கொரியத் தீபகற்பமும் தாய்வான் தீவும் ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தன. 1931-ம் ஆண்டில் இருந்து 1937-ம் ஆண்டு வரை இரு நாடுகளும் தொடர்ச்சியாகவும் அடிக்கடியும் மோதிக் கொண்டன. இதில் சீனா ஷங்காய் உடபடப் பல நகரங்களை ஜபபானிடம் பறிகொடுத்தது. இப்போர்களின் போது ஜப்பானியப் படைகள் சீனப் போர்வீரர்களையும் பெண்களையும் பல வன்கொடுமைக்கு உள்ளாக்கியதை இன்றும் சீனர்கள் மறக்கவில்லை. 2014 ஒக்டோபர் மாதம் 10-ம் திகதி ஜப்பானியத் தலைமை அமைச்சருடன் கைகுலுக்கும் போது சீன அதிபர் நட்புப் பாராட்டமைக்கு இதுவே காரணம்.
சீன ஜப்பானியப் பிளவில் பூகோளத்தின் பங்கு
சீனாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான முரண்பாட்டின் இரண்டாம் அம்சம் கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் யாருக்குச் சொந்தம் என்பதாகும். இத் தீவுகள் யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான முறுகல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே போகின்றது. கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013 நவம்பர் 24-ம் திகதி அறிவித்தது. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது. இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது. இது சீனா தனது வான் பாது காப்பு வலயம் என அறிவிக்க முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பறப்பு என்கின்றது அமெரிக்கா. அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம் சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீள்கின்றது. சீனா சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களிற்கு அடிக்கடி விமானங்களை அனுப்புவதும் அவற்றின் அலைவரிசைகளை ஜப்பான் குழப்புவதும் ஒன்றின் விமானங்கள் மீது மற்ற விமானங்கள் ரடார் பூட்டுப் போடுவதும் அடிக்கடி நடந்தன. இரு நாட்டுக் கடற்படைக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோதும் சூழலும் உருவாகி இருந்தது.
சீன ஜப்பானிய உறவில் பொருளாதாரம்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத் தொடர்புகளைப் பார்த்தால் 2013-ம் ஆண்டு சீனா ஜப்பானில் 434 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீட்டைச் செய்திருந்தது. ஆனால் சீனாவில் ஜப்பான் செய்யும் முதலீடு குறைந்து கொண்டு செல்லும் வேளையில் சீனா ஜப்பானில் செய்யும் முதலீடு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 2013-இல் ஜப்பான் சீனாவில் ஒன்பது பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான முதலீட்டைச் செய்திருந்தது. சீனா ஜப்பானிற்கு ஆண்டு ஒன்றிற்கு 153 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்கின்றது. ஜப்பான் சீனாவிற்குச் செய்யும் ஏற்றுமதி 130 பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும். சீனா ஜப்பானிற்குச் செய்யும் ஏற்றுமதி அதிகரிக்கும் வேளையில் ஜப்பானின் ஏற்றுமதி குறைந்து கொண்டே போகின்றது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து கொண்டு போகும் வேளையில் ஜப்பானியப் பொருளாதாரம் கடந்த இருபது ஆண்டுகளாக வளர மல் இருக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமும் நேரடி முதலீடுகளும் அமைதியான கடற்போக்கு வரத்துகளும் இரு நாட்டுப் பொருளாதாரங்களுக்கு மிகவும் அவசியமானதாக அமைகின்றது.
உருகாத உறைநிலை
மேற்படி தீவுக் கூட்டங்களில் ஏற்பட்ட முரண்பாட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு நாட்டுத் தலைவர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்புகளின்றி இருந்தனர். ஷியும் அபேயும் சந்தித்துக் கொண்டது உறைநிலையில் இருந்த இருநாட்டு உறவை "உருகச் செய்யும்" என எதிர்பார்க்கப்பட்டது. ஷி எப்படியும் ஜப்பானை அடக்குவதில் தீவிரமாக உள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் தந்தை ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியவர் என்றவகையிலும் தந்தையின் நண்பர்களின் பிள்ளைகளுடன் சிறுவயது முதற்கொண்டே ஜப்பானிய அக்கிரமங்களைப்பற்றி பலதடவைகள் உரையாடியவர்கள் என்றவகையிலும் ஜப்பான் மீது அதிக வெறுப்பு உள்ளவராகக் கருதப்படுகின்றார். 1979-ம் ஆண்டு பிஜிங்கின் தின்மன் சதுக்கக் கிளர்ச்சிக்குப் பின்னர் சீனா தனது கல்வித் திட்டத்தில் “அந்நிய ஆக்கிரமிப்பின் மானபங்கத்தில் நூறு ஆண்டுகள்” என்பதை புகுத்தியுள்ளது. இதனால் பல சீன இளைஞர்கள் ஜப்பான் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர். அண்மைக்கால ஜப்பானியத் தலைமை அமைச்சர்களில் சின்ஷே அபேயே அதிக அளவு தேசியவாதியாவார். ஷி ஜின்பிங்கும் அவ்வாறே. அபே சீன ஜப்பானியப் போரின் போது இறந்தவர்களின் நினைவிடமான யசுக்குனிக்கு அஞ்சலி செய்யச் சென்றது சீனர்களைக் கடுமையாக ஆத்திரப்படுத்தியிருந்தது. இரு தலைவர்களின் சந்திப்பின்போது நிலவிய சிநேகமற்ற சூழலுக்கு இதுவும் ஒரு காரணியாக அமைந்தது.
அமெரிக்காவே துணை.
ஆண்டு தோறும் ஏழு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட சீனா பாதுகாப்பிற்கு 131 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குகின்றது. அத்துடன் சீனாவின் பாதுகாப்புச் செலவீனம் 12 விழுக்காட்டிற்கு மேல் ஆண்டுக்கு அதிகரிக்கின்றது. ஆண்டொன்றிற்கு 0.8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட ஜப்பான் பாதுகாப்புச் செலவிற்கு 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டும் ஒதுக்குகின்றது. அத்துடன் ஜப்பானின் பாதுகாப்புச் செலவு ஆண்டுக்கு 2.8 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கப்படுகின்றது. ஜப்பானிய அரசமைப்பின் படி அது ஒரு தாக்குதல் படையை வைத்திருக்க முடியாது. அதனால் ஒரு பாது காப்புப் படையை மட்டுமே வைத்திருக்க முடியும். இன்னொரு நாட்டின் மீது ஜப்பானால் படையெடுக்க முடியாது. இருந்தும் ஜப்பானியப் படைவலு உலக நாடுகளின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. அதனிடம் ஒரு உழங்கு வானூர்தி தாங்கி நசகாரிக் கப்பல் உண்டு. இது ஒரு விமானம் தாங்கிக் கப்பலுக்கு ஈடானதாகும். சீனாவின் படைவலுவின் முன்னர் ஜப்பானால் தனித்து நிற்க முடியாது. அது தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவுடன் அது செய்த பாதுகாப்பு ஒப்பந்தம் தான் கைகொடுக்க வேண்டும்.
வாராது காக்க வேண்டும் ஆசியப் போர்
உலகிலேயே போர் மூளும் அபாயம் கூடிய இடங்களாக தென் சீனக் காடலும் கிழக்குச் சீனக் கடலும் இருக்கின்றன. இதற்கு ஜப்பானிற்கும் சீனாவிற்கும் இடையில் பேச்சு வார்த்தை அவசியம். சீன ஜப்பானியப் போர் நடந்தால் அங்கு அமெரிக்காவும் தலையிடும் கட்டாயம் உள்ளது. ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவின் உச்சி மாநாட்டின் முன்னர் இரு தலைவர்களும் சந்திப்பார்களா என்பது ஒரு முயற்கொம்பாகவே இருந்தது. சீன அதிபர் ஷி ஜின்பிங் ஜப்பானி எதிர்ப்புப் பரப்புரைகள் மூலமும் கிழக்குச் சீனக் கடலுக்கு அடிக்கடி கடற்கலங்களையும் வான் கலன்களையும் அனுப்பி ஜப்பானைச் சீண்டுவதன் மூலமும் சீனாவில் தனது செல்வாக்ககிப் பெருக்கிக் கொள்கின்றார் என்பது ஜப்பானின் குற்றச்சாட்டு. ஜப்பானியர்கள் போரின் போது செய்ய அட்டூழியங்களைப் பற்றி சீனாவில் அதிகம் பேசுவதால் சீனர்கள் இப்போதும் பழைமையிலேயே வாழ எத்தனிக்கின்றார்கள் எனக் குற்றம் சாட்டும் ஜப்பான் அவர்கள் பழையவற்றை மறந்து புது யுகத்தில் இரு நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றது. ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீன இரு நிபந்தனைகளை விதித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. ஒன்று சர்ச்சைக்குரியதான ஜப்பானின் இறந்த போர்வீரர்களின் யசுக்குனி எனப்படும் நினைவிடத்திற்கு ஜப்பானியத் தலைமை அமைச்சர் பயணம் மேற்கொள்ளக் கூடாது. மற்றது கிழக்குச் சீனக் கடலில் உள்ள சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்கள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கின்றது என்பதை ஜப்பான் ஒத்துக் கொள்ள வேண்டும். சந்திப்பின் போது இரு நாடுகளும் தமது படை நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு உடனடித் தொடர்பாடலை ஏற்படுத்துவதாக ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்ஷே அபே இரு நாடுகளிடையே அடிக்கடி உரையாடல்கள் நடக்க வேண்டும் என்றதுடன் ஒரு நாட்டுக்கு மற்ற நாட்டின் நட்பு அவசியம் என்றார். சண்டைகள் தொடங்காமல் இருக்க உரையாடல்கள் உதவட்டும்.

Sunday, 16 November 2014
சீன விமானக் கண்காட்சி - 2014
![]() |
| சீனாவின் J-31 போர் விமானம் |
சீனாவின் J-31 stealth fighter
சீனா தான் உருவாக்கிவரும் stealth fighter வகையைச் சார்ந்த J-31 போர் விமானங்களை சீன விமானக் கண்காட்சியில் பகிரங்கப்படுத்தியுள்ளது. இரு இயந்திரங்களைக் கொண்ட ஒருவர் மட்டும் செலுத்தக் கூடிய J-31 ரடார்களுக்குப் புலப்படாத் திறனுடையவை. J-31 விமானங்கள் Falcon Eagle என்னும் குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்படுகின்றன. சீனா இந்த J-31 stealth fighter போர்விமானங்களை அமெரிக்காவின் F-35 போர் விமானங்களுக்குப் போட்டியாக உருவாக்கி வருகின்றது. இந்த உருவாக்கம் இன்னும் முற்றுப் பெறாத நிலையில் சீனா தனது ஆரம்ப உற்பத்திகளை இப்போது பகிரங்கமாகப் பறக்க விட்டுள்ளது. கிழக்குச் சீனக் கடலில் அமெரிக்காவினதும் ஜப்பானினது வான் ஆதிக்கத்திற்கு சீனாவின் J-31 stealth fighter என்னும் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் பெரும் சவலாக அமையும் என சீன வான் படையைச் சேர்ந்த Ni Leixiong கூறியுள்ளார். ஆனால் சீனாவின் J-31 stealth fighterவிமானங்களால் high-G maneuver எனப்படும் விமானப் பறப்பில் கடினமானதும் முக்கியமானதுமான பறப்பைச் செய்ய முடியாது என ஜேர்மனியைச் சேர்ந்த விமானத் துறை நிபுணர் தெரிவித்துள்ளார். சீனாவின் J-31 stealth fighter விமாங்களின் இயந்திரங்கள் இரசியாவில் தயாரிக்கப் படுபவை என்பது சீனாவின் பின்னடைவு நிலையை எடுத்துக் காட்டுகின்றது. அமெரிக்காவின் F-35 வாங்க முடியாத நாடுகள் தனது வ் J-31 விமானங்களை வாங்கும் என சீனா எதிர்பார்க்கின்றது. ஆனால் The Diplomat இணையத் தளம் சீனாவின் J-31 விமானங்களை ஒரு நாடும் வாங்கப் போவதில்லை என எதிர்வு கூறியுள்ளது. அமெரிக்கச் ஊட்கமான Wall Street Journal அமெரிக்காவின் F-35 விமானங்களின் தொழில் நுட்பத்தை சீனா இணையவெளியினூடாகத் திருடியே தனது J-31 விமானங்களை உருவாக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அசையக் கூடிய செய்மதி செலுத்திகள்
சீனா தனது விமானக் கண்காட்சியில் காட்சிப்படுத்திய இன்னும் ஒரு படைக்கலன் அசையக் கூடிய செய்மதி செலுத்திகள் ஆகும். இவை FT-1 solid launch vehicle for emergency satellite launches எனப்படுகின்றது இவை தெருக்களில் செல்லக் கூடிய பார் ஊர்திகளில் இருந்து செய்மதிகளை அவசரத் தேவைகளின் போது செலுத்தக் கூடியவை. இவற்றில் இருந்து மூன்னூறு கிலோ எடையிலும் குறைந்த செய்மதிகளைச் செலுத்த முடியும். இது போன்ற ஏவுகணைச் செலுத்திகளை வேறு எந்த நாடும் உருவாக்கவில்லை எனச் சொல்லலாம். இவற்றிக்கான தேவை எதுவும் ஏற்படவில்லை என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். இவற்றை சீனா உருவாக்கியமை பலரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளது.
சீனாவின் ஆளில்லா வான்கலங்கள்
சீன விமானக்
கண்காட்சியில் சீனா உருவாக்கிய ஆளில்லா உழங்கு வானூர்திகளையும்
காட்சிப்படுத்தியுள்ளது. அத்துடன் தாக்கும் படைக்கலன்களைக் கொண்டஆளின்றிப்
பறக்கக் கூடியதுமான Stealthy WJ-500என்னும் விமானங்களையும் சீனா முதல்
தடவையாகக் காட்சிப் படுத்தியுள்ளது. இதன் பெயரில் இருக்கும் Stealthy
என்னும் சொல்லிற்கு ஏற்ப இவை ரடார்களுக்குப் புலப்படாமல் பறக்கக் கூடியவை. ![]() |
| FM-3000 எனப்படும் air defense missile system |
சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள FM-3000 எனப்படும் air defense missile system சீன விமானக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்படுள்ளது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை வரும் குறுந்தூர மற்றும் நடுத்தரத் தூர ஏவுகணைகளை இனம் காணும் ரடார்கள் ஒரு பகுதியாகும். இரண்டாம் பகுதி கட்டளையும் கட்டுப்பாட்டு நிலையமாகும். மூன்றாவது வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகளை வீசும். ரடார் நிலையம் வரும் ஏவுகணைகளைப் பற்றிய தகவல்களை கட்டளை கட்டுப்பாட்டகத்திற்கு வழங்க அங்கிருந்து தாக்குதல் சமிக்ஞைகள் ஏவுகணைவீச்களுக்கு வழங்கப்படும்.
Tuesday, 11 November 2014
ஐ.எஸ்ஸிற்கு எதிரான போரின் துருப்புச் சீட்டு துருக்கியின் கையில்
துருக்கி எப்போதும் மூன்றின் நடுவில்.
துருக்கி ஐரோப்பா,ஆசியா ஆகிய நாடுகளுக்கு நடுவில் இருக்கின்றது. அங்கு ஒரு மக்களாட்சி நிலவினாலும் அது மக்களாட்சி, படைத்துறை, இசுலாமியவாதம் ஆகிய மூன்றின் நடுவில் இருக்கின்றது. துருக்கியில் நிலப்பரப்பில் 97 விழுக்காடு ஆசியாக் கண்டத்தில் இருக்கின்றது. ஓர் இசுலாமிய நாடான துருக்கி மேற்கு நாடுகளுடன் இணைந்துள்ளது. நேட்டோவினது ஓர் உறுப்பு நாடாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தினது இணண உறுப்பு நாடாகவும் இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு இருந்து வருகின்றது. ஐரோப்பா, அரபு நாடுகள், ஈரான் ஆகிய மூன்றின் மத்தியில் துருக்கியின் வெளிநாட்டுக் கொள்கை தடுமாறுகின்றது. துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் முழுமையான உறுப்புரிமை பெறவிரும்புகிறது ஆனால் அது இழுத்தடிக்கப்படுவதால் இரசியாவின் யூரோ ஏசியன் கூட்டமைப்பில் அல்லது பிரேசில், இரசியா, இந்தியா, சீனா ஆகியவற்றைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைவது குறித்து கருத்தில் கொள்கின்றது. இங்கும் ஐரோப்பிய ஒன்றியமா யூரோ ஏசியனா பிரிக்ஸா என்பது துருக்கியின் தடுமாற்றம்.
துருக்கிய ஆட்சியாளர்கள் இசுலாமியவாதிகளே!
துருக்கியில் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி அடிப்படையில் ஒரு மதவாதக் கட்சியாகும். நாளடைவில் பொருளாதார அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு தன்னை ஒரு மேற்குலகு சார்பானதாகவும் அமெரிக்காவிற்கு நட்பானதாகவும் காட்டிக் கொண்டது. தாராண்மைவாத சந்தைப் பொருளாதாரக் கொள்கையை தனது கொள்கையாகவும் காட்டிக் கொண்டது. ஆனால் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் ஆட்சியில் துருக்கி தேவையான போதெல்லாம் இசுலாமியத் தீவிரவாதிகளுடன் இரகசியமாக இணைந்து செயற்பட்டது எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.
அமெரிக்காவும் துருக்கியும்
அமெரிக்காவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு 1950-ம் ஆண்டு ஆரம்பமான கொரியப் போரில் மலர்ந்தது. இந்த உறவில் முதல் விரிசல் துருக்கி 1973-ம் ஆண்டு சைப்பிரசை ஆக்கிரமித்த போது உருவானது. இதனை அடுத்து துருக்கி மீது அமெரிக்கா படைக்கல விற்பனைத் தடை விதித்தது. 2003-ம் ஆண்டு சதாம் ஹுசேயினிற்கு எதிராக அமெரிக்காவும் பிரித்தானியாவும் படை எடுத்த போது இரண்டாவது விரிசல் உருவாகியது. துருக்கியின் கேந்திர நிலை ஈராக் மீதான தாக்குதலுக்கு அமெரிக்காவிற்கு மிகவும் தேவைப்பட்டது. துருக்கியை தளமாக வைத்து ஈராக் மீது தாக்குதல் நடாத்த அமெரிக்கா விரும்பியது ஆனால் துருக்கியப் பாராளமன்றம் அதை நிராகரித்து விட்டது. தற்போது ஐ. எஸ் போராளிகளுக்கு எதிராக சிரியாவிலும் ஈராக்கிலும் தாக்குதல் நடாத்த துருக்கியைத் தளமாகப் பாவிக்க அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் துருக்கிய விமானத் தளங்களில் அமெரிக்காவின் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்கள் மட்டும் பாவிக்க துருக்கி அனுமதி வழங்கியுள்ளது. எகிப்த்தில் முஹமட் மேர்சியின் ஆட்சி தொடர்வதை துருக்கி விரும்பியது. அதை சவுதி அரேபியா கடுமையாக எதிர்த்ததுடன் படைத்துறையினரின் ஆட்சி மீண்டும் அமைய சவுதி அரேபியாவும் வேறு அரபு நாடுகளும் விரும்பின. அமெரிக்கா எகிப்திய விவகாரத்தில் விலகி இருப்பது போலக் காட்டிக் கொண்டது. ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்தது. துருக்கி திரைமறைவில் ஈரானின் எரி பொருள் விற்பனைக்கு உதவி செய்கின்றது. 2012 மார்ச் மாதத்தில் இருந்து 2013 ஜூலை மாதம் வரை 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான தங்கம் துருக்கியில் இருந்து ஈரானுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இவை ஈரானிடமிருந்து துருக்கி பெற்ற எரிவாயுவிற்கான விலையாகும். இதில் சம்பந்தப் பட்ட துருக்கிய அரச வங்கியை அமெரிக்கா தண்டிக்கவில்லை! அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் செய்த ஆக்கிரமிப்பை துருக்கிய மக்கள் பரவலாக எதிர்க்கின்றார்கள். சிரிய அதிபர் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதில் துருக்கி உறுதியாக இருக்கின்றது. அமெரிக்கா அதுவே தனது நீண்டகாலத் திட்டம் என்கின்றது. அதை துருக்கி ஏற்க மறுக்கின்றது.
நேட்டோவும் துருக்கியும்
சோவியத் விரிவாக்கத்திற்கு எதிராக உருவாக்கப் பட்ட நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பில் 1952-ம் ஆண்டு துருக்கி இணைந்து கொண்டது. ஆனால் தற்போது நேட்டோவின் முக்கிய பணிகளில் ஒன்றாக இசுலாமியத் தீவிரவாத ஒழிப்பு உருவெடுத்து விட்டது. லிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சியைக் கவிழ்த்தது போல சிரியாவில் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை நேட்டோ கவிழ்க்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு நேட்டோப் படைகள் படைக்கலங்கள் வழங்க வேண்டும் என துருக்கி எதிர்பார்த்தது. ஆனால் இரண்டையும் நேட்டோ செய்யவில்லை. வேல்ஸில் நடந்த நேட்டோக் கூட்டமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஐ. எஸ் தீவிரவாதிகளின் பணம் கடத்தல், இரகசிய எரிபொருள் விற்பனை போன்றவற்றைத் தடுக்குமாறு துருக்கியை வேண்டியிருந்தார். துருக்கி தனது ஏவுகணை எதிர்ப்பு முறைமையை சீனாவிடம் வாங்க முடிவு செய்தமை பல நேட்டோ நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கியது.
ஐ.எஸ் இற்கு எதிரன தாக்குதலும் துருக்கியும்
துருக்கி ஈராக்குடனும் சிரியாவுடனும் 780 மைல் நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் ஒரு உறுதியான அரசியல் சூழ்நிலை உருவாக துருக்கியின் உதவி தனக்கு அவசியம் என அமெரிக்கா கருதுகின்றது. துருக்கியின் அடானா மாகாணத்தில் உள்ள இன்செர்ளிக் விமானப் படைத்தளத்தில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடாத்துவது மிகவும் இலகுவானதாகும். ஆனால் துருக்கி இதை அனுமதிக்கவில்லை. இந்த அனுமதியைப் பெறுவதற்கு அமெரிக்காவின் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்ட அமெரிக்கத் தூதுவர் ஜோன் அலன் துருக்கிகுப் பயணத்தையும் மேற் கொண்டிருந்தார். அமெரிக்கப் படைத்துறையின் உச்சத் தளபதி மார்டின் டிம்செ துருக்கி உட்பட இருபது நாடுகளின் படைத்துறைத் தளபதிகளின் கூட்டம் ஒன்றை 2014-10-13-ம் திகதி வாஷிங்டனின் கூட்டியிருந்தார். துருக்கியப் படைத்தளபதி இதில் பங்கேற்கவில்லை. ஐ. எஸ் அமைப்பிற்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும்படி அமெரிக்கா துருக்கிய அதிபரை வலியுறுத்தியது ஆனால் துருக்கியின் அதிபர் ஐ. எஸ் அமைப்பிற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் தொடர்பில்லை எனக் கூறியதுடன் நிறுத்திக் கொண்டார். சிரியாவில் செயற்படும் குர்திஷ் மக்களின் மக்களாட்சி ஒன்றிய கட்சியினருக்கு அமெரிக்கப் படையினர் விமானத்தில் இருந்து படைக்கலன்களைப் போட்டது துருக்கிக்குப் பிடிக்கவில்லை. குர்திஷ் மக்களாட்சி ஒன்றியக் கட்சி என்பது துருக்கியில் தடை செய்யப்பட்ட குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சியின் சிரியக் கிளை என்பதால் துருக்கி இதை விரும்பவில்லை. குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சி அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட "பயங்கரவாத" அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் துருக்கி செய்த பேருதவி ஈராக்கில் இருக்கும் குர்திஷ் அமைப்பான பெஸ்மேராப் போராளிகளை சிரியப் பிரதேசமான கொபானிக்கு துருக்கியூடாகச் சென்று அங்குள்ள குர்திஷ் அப்பாவிகளை ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொலையில் இருந்து பாதுகாக்க அனுமதித்தமையாகும். துருக்கியில் செயற்படும் குர்திஷ்த்தான் தொழிலாளர் கட்சிக்கும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பும் துருக்கியை குர்திஷ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைத்துள்ளது. ஐ. எஸ் போராளிகள் வெற்றி பெற்றால் அது துருக்கிக்கும் ஆபத்தாக முடியும். அந்த ஆபத்து குர்திஸ் போராளிகளால் ஏற்படும் ஆபத்தைவிட மோசமானதாக இருக்கும்.
துருக்கியும் டென்மார்க்கும்
டென்மார்க்கைச் சேர்ந்த பசில் ஹசான் என்னும் ஐ.எஸ்சின் "புனிதப் போராளி" லார்ஸ் ஹெடெகார்ட் என்னும் இசுலாமிய தீவிரவாதத்திற்கு எதிராக எழுதும் ஒரு ஆய்வாளரைக் கொலை செய்ய முயன்றார். இவர் துருக்கியில் பிடிபட்டிருந்த வேளை அவரை நாடுகடத்தும் படி டென்மார்க் அரசு துருக்கிய அரசைக் கோரியிருந்தது. பசில் ஹசானை நாடு கடத்தாமல் துருக்கி விடுவித்தது. ஐ. எஸ் அமைப்பினர் ஈராக்கில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றிய போது துருக்கிய இராசதந்திரிகள் 39 பேரைப் பணயக் கைதிகளாக பிடித்திருந்தனர். இவர்களை விடுவிக்க துருக்கி பசில் ஹசானை விடுவித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடான டென்மார்க் துருக்கிக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தில் செயற்படப்போவதாகச் சூளுரைத்துள்ளது. புதிதாக சேரும் ஒரு நாட்டின் விண்ணப்பத்தை ஒரு நாடு நிராகரித்தாலே விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான கிரேக்கமும் சைப்பிரசும் துருக்கியுடன் நல்ல உறவு நிலையில் இல்லை. ஏற்கனவே துருக்கி ஐரோப்பிய ஒன்றியம் தன்னை முழுமையான உறுப்பினராக இணைப்பதில் இரட்டை நாக்குடன் செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
குர்திஷ் போராளிகளா ஐ.எஸ் போராளிகளா?
சிரியாவின் துருக்கிய எல்லையை ஒட்டிய பிரதேசமான கொபானியில் அப்பாவி குர்திஷ் மக்களை ஐ. எஸ் திவிரவாதிகள் கொன்று குவித்த போது துருக்கியால் ஒரு சில நாட்களில் கொபானியின் வாழும் குர்திஷ் மக்களைப் பாதுகாக்க முடியும். நேட்டோ நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் துருக்கிய படைகள் இரண்டாவது பெரிய படைகளாகும். துருக்கியப் பாராளமன்றம் 2014-10-02-ம் திகதி துருக்கியப் படைகள் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐ. எஸ் போராளிகளை அழித்து குர்திஷ் மக்கள் ஈராக்கில் வலுப்பெறுவதை துருக்கி விரும்பவில்லை. ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுவடைந்தால் அது துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களை வலுவடையச் செய்யும் என துருக்கி அஞ்சுகின்றது.
துருக்கியின் கையில் துருப்புச் சீட்டு
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மாதக் கணக்காகச் செய்து வரும் விமானத் தாக்குதல்கள் அவர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அமெரிக்கப் படைத் துறை நிபுணர்கள் ஆரம்பத்திலேயே ஒருதரைவழிப் படை நகர்வு செய்யாமல்ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க முடியாது என எச்சரித்திருந்தனர். ஐ. எஸ் போராளிகளுக்கு எதிரான தக்குதல் தொடர்த் தொடர மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளை இனம் காணுவதும் இலகுவாகிக் கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு அங்குள்ள இசுலாமியர்களில் தீவிரவாதப் போக்குள்ளவர்கள் ஐ.எஸ் அமைப்பினருடன் இணைந்து கொண்டே இருக்கின்றனர். இது வட அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பாவையும் சுத்தப்படுத்த உதவுகின்றது. ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிரான போர் விரைவில் முடியுமா அல்லது இழுபடுமா என்பது துருக்கியின் கையில்தான் இருக்கின்றது.
Monday, 3 November 2014
மும்பாயில் மோதும் இந்துத்துவாவும் சிவசேனாவும்.
2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான(லோக் சபா) தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சியின்(பா.ஜ.க) முக்கிய பிரச்சனைகளாக அமைந்தவை:- 1. காங்கிரசுக் கட்சி பதவியில் அமர்த்திய குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும், 2. இரு நூற்று ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.கவிற்கு 43 உறுப்பினர் மட்டுமே இருப்பது, 3. இருபத்தெட்டு மாநில சட்ட மன்றங்களில் நான்கு மட்டுமே பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருந்தமை.
பா.ஜ.கவினர் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சி தடையின்றிச் செய்வதாயின் அது பல சட்ட மன்றங்களைக் கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவினர் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற முடியும் அத்துடன் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவைப் பெறமுடியும். 2014-ம் ஆண்டு இந்தியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தின் 11 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தது.
மோடிக்குத் தேவையான மஹராஸ்ட்ரா
நரேந்திர மோடியின் பொருளாதாரத் திட்டங்களையும் அவர் வாக்குறுதியளித்த பொருளாதாரச் சீர்திருத்தங்களையும்ம் முன்னெடுத்துச் செல்ல இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பாயைக் கொண்ட மஹராஸ்ட்ரா மாநிலத்தை அவர் எப்படியும் கைப்பற்ற வேண்டும். அதற்கான திடசங்கற்பத்துடன் மோடி செயற்பட்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த தேர்தலில் 288 தொகுதிகளில் 122 தொகுதிகளைக் கைப்பற்றினார். நரேந்திர மோடி இந்தச் சட்ட சபைத் தேர்தலிற்குச் செய்த பரப்புரை போல் இதற்கு முன்னர் எந்த ஒரு இந்தியத் தலைமை அமைச்சரும் செய்ததில்லை. இந்த முக்கியத்துவம் மிக்க மாநில சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளியமை மோடிக்கும் அவரது தளபதியான அமித் ஷாவிற்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும். இருவரும் தமது "கட்சி அரசியல் முகாமைத்துவத்தின் சிறப்புத் தன்மையை" மீண்டும் நிரூபித்துள்ளனர். பல வேறுபட்ட தரப்பினரைக் கொண்ட பா.ஜ.கவில் இவர்களது பிடி மேலும் இறுகியுள்ளது. அதே நாளில் நடந்த ஹரியானா மாநில சட்ட மன்றத்திற்கான தேர்தலில் பா.ஜ.கவினர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றனர்.
சிவசேனாவுடன் கூடாத கூட்டணி
மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் பா.ஜ.கவினர் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு மொத்த 48 தொகுதிகளில் பா.ஜ.க 23 இலும் சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரசுக் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதே கூட்டணி சட்ட மன்றத் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என இரு கட்சிகளும் விருப்பம் தெரிவித்தன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் "மண்ணின் மைந்தர்களுக்கே" என்ற கொள்கையுடையது சிவசேனா அமைப்பு. மும்பாயில் வேலை தேடியும் வர்த்தகம் செய்யவும் வேறு மாநிலத்தவர்கள் வருவதை எதிர்த்து சிவசேனா அமைப்பு 1966-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. புகழ் பெற்ற மராத்திய மன்னரான சிவாஜியின் படையினர் என்பதே சிவசேனை என்பதன் பொருளாகும். மராத்தியர்களைத் தவிர மற்றவர்கள் மும்பாயில் இருந்து விரட்டப்பட வேண்டும் என சிவ சேனாவைச் சேர்ந்த சில தீவிரவாதிகள் கருதுகின்றனர். இதனால் மும்பாயில் கலவரங்களும் வெடிப்பதுண்டு. சிவ சேனா மராத்தியப் பிரதேச வாதத்தையும் இந்துத் தேசிய வாதத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டுள்ளது எனச் சொல்லலாம். இந்துத் தேசியவாதக் கொள்கை சிவசேனாவையும் ப.ஜ.கட்சியினரையும் நெருங்கிச் செயற்பட வைத்தது. ஆனால் 2014 ஒக்டோபர் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமையினால் தனித் தனியே போட்டியிட்டன. இதே போல் காங்கிரசுக் கட்சிக்கும் அதில் இருந்து இத்தாலிப் பெண் காங்கிரசுக் கட்சிக்குத் தலைமை தாங்குவதை ஏற்காத சரத் பவார் பிரிந்து சென்ற உருவாக்கிய தேசியவாதக் காங்கிரசுக் கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு காண முடியாமல் தனித்துப் போட்டியிட்டன. இதனால் 288 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான நடந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடந்தது. பா.ஜ. கட்சி சிவசேனைக்கு 130 தொகுதிகள் வரை கொடுக்க உடன்பட்டிருந்தது. சிவசேனா அதிலும் மிக அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்பியது. ஆனால் தேர்தல் முடிவு பா.ஜ.கவிற்கு சாதகமாக அமைந்தது. பா.ஜ.க 122 தொகுதிகளிலும் சிவசேனா 63 தொகுதிகளிலும் காங்கிரசுக் கட்சி 41 தொகுதிளிலும் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மையை பா.ஜ.க பெற்றிராத நிலையில் சிவசேனா ஒரு பேரம் பேசக் கூடிய வலுவைப் பெற்றுள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் சரத் பவார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். பா.ஜ.கட்சி ஆட்சி அமைக்க தான் நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கப் போவதாக அவர் அறிவித்தார். இது சிவ சேனாவை வலுவிழக்கச் செய்ய அவர் எடுத்த நடவடிக்கையாகும். இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக இருந்த பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இப்போது ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மதவாதமும் இனவாதமும்
பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இந்து மத மேலாண்மையை ஏற்றுக் கொண்டாலும் சிவசேனாவின் மராத்தியப் பிராந்தியவாதத்தை பா.ஜ.க விரும்பவில்லை பா.ஜ.கவின் இந்திப் பேரினவாதத்தை சிவசேனா விரும்புவதில்லை. இரு தரப்பினரும் மற்ற மதங்களையிட்டு அதிலும் முக்கியமாக இசுலாமிய மதத்தையிட்டு ஏறக்குறைய ஒரே கொள்கையை உடையவர்கள். பாபர் மசூதி இடிப்பில் ஒரே கொள்கையுடையவர்கள். பால் தக்கரேயால் 1966-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிவசேனை அவரது மறைவின் பின்னர் அவரது மகனுக்கும்(உதவ் தக்கரே) அவரது தம்பியின் மகனுக்கும் (ராஜ் தக்கரே) இடையில் ஏற்பட்ட மோதலால் இரண்டாகப் பிளவு பட்டது. ராஜ் தக்கரே மஹராஸ்ட்ர புனரமைப்புச் சேனையை 2006-ம் ஆண்டு ஆரம்பித்தார். ராஜ் தக்ரே சிவசேனாவிற்குள் இருந்து அந்தக் கட்சியை தனதாக்கிக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு கட்சிக்குல் செல்வவக்கு இருந்தது. இருந்தும் சகோதரப் போரைத் தவிர்க்க அவர் தனிக் கட்சி ஆரம்பித்தார். இந்தப் பிளவால் சிவசேனா வலுவிழந்து விட்டது என இந்தியத் தலைமை அமைச்சர் மோடியும் அவரது தளபதி அமித் ஷாவும் உணர்ந்து கொண்டு செயற்படுவதாக சிவசேனாத் தலைவர் உதவ் தக்கரே கருதுகின்றார். 2014-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய மைய அரசில் சிவசேனா கேட்ட அமைச்சுப் பதவிகளை வழங்காமை இரு கட்சிகளிற்கும் இடையிலான மோதலை உருவாக்கியிருந்தது
விரோதத்தை பெரிதாக்கும் விதர்ப்ப தேசம்
மஹாராஸ்ட்ராவின் ஒரு பகுதியாக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேச மக்களில் பலர் தாம் மஹராஸ்ட்ராவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் சிவசேனா ஒன்று பட்ட மஹராஸ்ட்ரா என்பதில் உறுதியாக இருக்கின்றது. சிவசேனாவின் பிராந்தியவாதத்தை வலுவிழக்கச் செய்ய பேரினவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி விதர்ப்ப தேசப் பிரிவினையை ஆதரிக்கின்றது. இது இரு கட்சிகளிடையே பேதத்தை 2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தீவிரமடையச் செய்தது. 2014-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமல் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னர் பா.ஜ.க விதர்ப்ப தேசப் பிரிவினைக்கான தனது ஆதரவைத் தீவிரப்படுத்தியது.
குஜராத்திடம் மண்டியிட்ட மராத்த்தி
தேர்தலின் போது எதிரும் புதிருமாக நின்று போட்டியிட்ட பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றிய பேச்சு வார்த்தை ஆரம்பித்தவுடன் குஜராத்திடம் மண்டியிட்ட மராத்தி என சிவ சேனாவின் எதிரிகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். 1960-ம் ஆண்டு மஹாராஸ்ட்ராவில் இருந்து குஜராத்தைப் பிரித்து தனி மாநிலமாக்கப்பட்டது. மும்பாயில் பல குஜராத்தியர்கள் பலர் உயர் பதவிகளிலும் வர்த்தகத்திலும் இருக்கின்றார்கள். இதை சிவசேனா விரும்பவில்லை. மோடியும் ஒரு குஜராத்தியர் என்பதால் பா.ஜ. கவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் விரோதம் மேலும் மோசமடைந்துள்ளது. ஒன்றுபட்டுப் போட்டியிட்ட பாராளமன்றத் தேர்தலின் போதே தேர்தலிற்கு முதல் நாள் சிவசேனாவின் பத்திரிகைஓன்றில் குஜராத்தியர்கள் மும்பாயை ஆக்கிரமித்துக் கொள்ளை அடித்து பெரும் செல்வந்தர்களாக மும்பாயின் வாழ்வதாக ஆசிரியத் தலையங்கம் தீட்டியிருந்தது.
சொத்துக்கொரு மும்பாய்.
காங்கிரசுக் கட்சியினர், சிவசேனாக் கட்சியினர் தேசியவாதக் கட்சியினர் ஆகியோர் அதிக அளவு சொத்துக்களை மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் வைத்துள்ளனர். இதுவரை நடந்த காங்கிரசுக் கட்சியின் ஆட்சி மோசமான ஊழல்கள் நிறைந்த ஒரு ஆட்சியாகவே இருந்தது. இந்திய வரலாற்றில் மஹ்ராஸ்ட்ரா மாநிலத்தில் முதன் முறையாக பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு ஒரு ஊழலற்ற ஆட்சியை நிறுவ மோடி முயல்கின்றார்.
விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனர் மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சர்
இந்தியாவிலேயே அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்யும் பிரதேசமமக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்த நிதின் கட்காரி பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது இந்திய மைய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பணி புரிகின்றார். இது போதாது என்று மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத்தின் முதலமைச்சராக விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனரான தேவேந்திர பட்னவீஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இது சிவசேனையைப் பொறுத்தவரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும். இவரால் ஓர் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும் என எதிர்ப்பார்க்கப் படுகின்றது. ஆட்சியில் இணையாவிடினும் முதலமைச்சர் பதவி ஏற்பின் தாம் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.கவிடம் சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிந்திச் சென்ற பதவியேற்பு வைபவம்
2014-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ம் திகதி அதாவது நேற்று பாரதிய ஜனதாக் கட்சியின் தேவேந்திரப் பட்னவீஸ் மிகவும் ஆடம்பரமாக மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தாமும் பங்கேற்கப் போவதாக சிவசேனா அறிவித்தது. இது ஒரு உடன்படு நிலையை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல்வர் பதவி ஏற்ற பின்னரே சிவசேனாவின் தலைவர் உதவ் தக்கரே நிகழ்விற்குச் சென்றார். புதிய முதல்வருக்கு சிவசேனாவின் பத்திரிகை ஆலோசனையும் வழங்கியுள்ளது. பஜகாவின் முதல்வரும் மஹாராஸ்ட்ரா மக்களும் மருமகளும் மாமியும் போன்றவர்கள். திருமணத்தில் அன்று அன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் பின்பு மருமகள் தவறு செய்தால் மாமியார் மருமகளின் காதைப் பிடித்து முறுக்குவார் என்கின்றது சிவசேனனவின் ஊடகம். சிவசேனா மஹாராஸ்ட்ராவைப் பொறுத்தவரை ஒரு சண்டியர் கும்பல் எனச் சொல்லலாம். மும்பை நகரின் பெருந்தெருக்களில் வாகனங்களுக்கு Toll charge என்னும் பாதைவரி அறவிடும் முறை அறிமுகப்படுத்திய போது சிவசேனாவினர் ஆத்திரமடைந்து அந்த வரி அறவிடும் நிலலயங்களைப் பிடுங்கி எறிந்தனர். சிவசேனாவை ஆட்சியில் இணைக்காமல் வெளியில் எதிர்க் கட்சியாக விடுவது ஆபத்து என்பதை பாரதிய ஜனதாக் கட்சியினர் நன்கு அறிவர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுத்தும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. பாரதிய ஜனதாக் கட்சியினர் தாம் ஒரு தேசியக் கட்சி என்றும் சிவசேனா ஒரு பிராந்தியக் கட்சி என்றும் தமது நிகழ்ச்சி நிரலுக்கு சிவசேனா உடன்பட்டு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் சிவசேனா மஹராஸ்ட்ரா நம்ம ஏரியா இதனுள் எம்முடன் மோதவேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இது இந்தியாவின் பேரினவாதிகளுக்கும் பிராந்தியவாதிகளுக்கும் இடையில் உள்ள முறுகல் நிலையாகும். இதே மாதிரியான முறுகல் நிலை தமிழ்நாட்டிலும் உண்டு. மஹாராஸ்ட்ரா அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு பிரதிநிதித்துவம் கொடுத்தால் சிவசேனா உடன்பட்டு வரும் எனத் தெரியவருகின்றது. பிரதி முதலவர், உள்துறை, வலுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய அமைச்சுப் பதவிகளை சிவசேனா தமது கட்சியினருக்குத் தரும்படி கேட்கின்றது..
மாநிலங்களைப் பிடிக்க நீண்ட தூரம்
நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி இன்னும் பல மாநிலங்களைக் கைப்பற்ற வேண்டியுள்ளது. காங்கிரசு ஆட்சியில் பெரும் தொல்லையாக இருந்த உலகச் சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தற்போது தலைகீழாக மாறிவிட்டது. உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அடையும் வீழ்ச்சி மோடியில் ஆட்சிக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியின் கீழ் தற்போது மஹாராஸ்ட்ரா, ஹரியானா, குஜராத், ராஜஸ்த்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் கோவா என்னும் ஒன்றியப் பிரதேசமும் இருக்கின்றன. இவற்றின் பொருளாதார உற்பத்தி இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 37 விழுக்காடாகும். இதை வைத்துக் கொண்டும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒத்துழைக்கக் கூடிய பிராந்தியக் கட்சிகளின் ஆதரவுடனும் நரேந்திர மோடியால் தனது பொருளாதாரத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க முடியும்.

Sunday, 2 November 2014
அமெரிக்காவின் அளவுசார் தளர்ச்சியும்(Quantitative Easing) பொருளாதார வளர்ச்சியும்
2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஆறு ஆண்டுகளாக தனது
பொருளாதாரத்தில் அளவுசார் தளர்ச்சியைச் செய்து வந்த ஐக்கிய அமெரிக்கா
29-10-2014இல் இருந்து அதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. 2008-ம்
ஆண்டிற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி(Federal Reserve)
எண்ணூறு பில்லியன் டொலர்களுக்குக் குறைவான ஆவணங்களை (Bonds)மட்டும் வைத்திருந்தது.
2008இல் இருந்து அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) செய்யவதற்காக தொடர்ந்து
ஆவணங்களை வாங்கிக் குவித்ததால் அமெரிக்க மைய வங்கியிடம் இப்போது நான்கரை
ரில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது
பொருளாதாரத்தை தூண்டி வளரச்செய்ய எடுத்த இந்த முயற்ச்சியான அளவுசார்
தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது.
அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்தியவுடன் உலகின் முன்ன்ணி நாணயங்களான யூரோ, பவுண்ஸ், யென் ஆகியவற்றிற்கு எதிராக டொலர் பெறுமதி ஏற்றம் அடைந்தது. 600 பில்லியன் டொலர்களுக்கு ஆவணங்கள் வாங்கப்பட்டால் அது நீண்டகாலக் கடன்களுக்கான வட்டிவிழுக்காட்டை 0.15 முதல் 0.25 வரை குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மையவங்கியானது தனது வட்டி விழுக்காட்டை (federal funds rate) 0.75 முதல் ஒரு விழுக்காடுவரை குறைப்பதற்கு ஒப்பானதாகும். பன்னாட்டு நாணய நிதியம்(IMF) செய்த மதிப்பீடு இப்படிக் கூறுகின்றது:
“In the US, the cumulative effects of bond purchase programs are estimated to be between 90 and 200 basis points
(0.9 and 2 percentage points) . . . In the UK, cumulative effects range from 45 basis points to 160 basis points.”
என்ன இந்த அளவுசார் தளர்ச்சி?
நாட்டின் பொருளாதாரத்தைத் தூண்ட நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாட்டில் வட்டி விழுக்காடு குறைக்கப் பட வேண்டும். வட்டி விழுக்காட்டைக் குறைக்க மைய வங்கி குறுங்காலக் கடன் பத்திரங்களை(ஆவணங்கள்) வர்த்தக வங்கிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) என அழைப்பர். இதைத் தொடர்ந்து செய்ய பொருளாதாரம் வளர்ச்சியடையலாம். இப்படி நாட்டின் வட்டி விழுக்காடு குறைந்து சென்று பூச்சியத்தை அண்மித்தும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாவிடில் மைய வங்கி நீண்டகாலக் கடன் பத்திரங்களை வர்த்தக வங்கிகளிடமிருந்தும் தனியார் நிறுவனங்களிடமிருந்தும் வாங்கும். இதை அளவுசார் தளர்ச்சி என்பர். இதனால் நீண்டகால வட்டி விழுக்காடு வீழ்ச்சியடையும்.
அளவுசார் தளர்ச்சி எப்படி வேலை செய்கின்றது?விரிவாக்க நிதிக் கொள்கை(Expansionary Monetary Policy) நாட்டில் பணத்தின் விலையை (அதாவது வட்டி விழுக்காட்டைக்) குறைக்கும். அளவுசார் தளர்ச்சி(Quantitative Easing) நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும். மைய வங்கி நாட்டில் ஆவணங்களை(அரசக் கடன் பத்திரங்கள் போன்றவை) வாங்கும்போது ஆவணங்களின் விலை அதிகரிக்கும். இதனால் ஆவணங்களில் இருந்து கிடைக்கும் உறுதிறன் (வருமான விழுக்காடு yield) குறையும். இதனால் முதலீட்டாளர்கள் 9முக்கியமாக வர்த்தக வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், ஓய்வூதிய நிதியங்கள்) இந்த ஆவணங்களை வாங்குவதைத் தவிர்த்து வேறு துறைகளில் முதலீடு செய்வார்கள். மைய வங்கியிடம் ஆவணங்களை விற்றுப் பெற்ற பணத்தை முதலீட்டாளர்கள் நீண்ட காலக் கடனாக உற்பத்தி நிறுவனங்கள், கட்டிடம் கட்டும் நிறுவனங்கள், பொதுமக்கள் இப்படிப் பலதரப்பினருக்கு கொடுக்க முடியும். மைய வங்கிக்கு ஆவணங்களை விற்ற தனியார் நிறுவனங்கள் தமக்குக் கிடைத்த பணத்தை பொருளாதாரத்தில் முதலீடு செய்வர். இதனால் பங்குகளின் விலைகள் அதிகரிக்கும். நாட்டில் முதலீடு அதிகரித்து உற்பத்தி வேலை வாய்ப்பு என்பன அதிகரிக்கும். இது மக்களின் வருமானத்தை அதிகரிப்பதனால் அவர்கள் செலவு செய்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் உற்பத்தியும் வேலைவாய்ப்பும் மேலும் அதிகரிக்கும்.
அமெரிக்கா என்ன செய்தது?
2008-ம் ஆண்டு நவம்பரில் இருந்து ஐக்கிய அமெரிக்காவின் மைய வங்கி (Federal Reserve) ஈட்டுக்கடன் ஆவணங்களை வாங்கத் தொடங்கியது. இதனால் அதனது ஆவண இருப்பு800 பில்லியன் டொலர்களில் இருந்து 1.75 ரில்லியன் டொலர்களாக அதிகரித்தது. தொடர்ந்து செய்த ஆவணக் கொள்வனவால் 2010 ஜூனில் ஆவணக் கையிருப்பு 2.1 ரில்லியன் டொலர்களாக உயர்ந்தது. அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் சென்ற படியால் ஆவணக் கொள்வனவு நிறுத்தப்பட்டது. ஆனால் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை என உணர்ந்ததால் பின்னர் மாதம் தோறும் முப்பது பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இரண்டாம் சுற்று ஆவணக் கொள்வனவு 2010 நவம்பரில் செய்யப்பட்டது. இதில் 600 மில்லியன் டொலர்கள் பெறுமதியான திறைசேரிக் கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதிலும் பொருளாதாரம் போதிய வளர்ச்சியை எட்டாததால் 2012 செப்டம்பரில் மூன்றாம் கட்ட அளவுசார் தளர்ச்சி செய்யப்பட்டது. இதில் மாதம் தோறும் 40 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆவணங்களை அமெரிக்க மைய வங்கி வாங்க முடிவு செய்தது.
அமெரிக்க மைய வங்கியின் அளவுசார் தளர்ச்சி வெற்றியளித்ததா என்ற கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்காவில் 2008 அளவுசார் தளர்ச்சியை ஆரம்பித்து வைத்த அமெரிக்க மைய வங்கியில் முன்னாள் பென் பேர்னார்க் "Quantitative Easing works in practice but does not work in theory" என்றார் நகைச்சுவையாக.
அமெரிக்காவில் செய்யப்பட்ட அளவுசார் தளர்ச்சிக்கு ஆதரவாகச் சொல்லப்படும் கருத்துக்கள்:
1. அளவுசார் தளர்ச்சி 2008இல் உருவான பொருளாதாரச் சரிவு (recession) பொருளாதாரம் மந்த (depression)நிலையை அடைவதைத் தடுத்தது.
2. அளவுசார் தளர்ச்சி நாட்டில் விலைவாசி அளவிற்கு அதிகமாக வீழ்ச்சியடைவதைத் தடுத்தது.
3. அளவுசார் தளர்ச்சி விலைவாசியை அதிகரித்து பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
4. அளவுசார் தளர்ச்சி நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரித்தது.
5. அளவுசார் தளர்ச்சி மிகைப்பணவீக்கத்தைக்(hyper inflation) கொண்டு வரும் என்ற கூற்றுப் பொய்யாக்கப்பட்டுள்ளது.
6. அளவுசார் தளர்ச்சி அமெரிக்க டொலரின் பெறுமதியை உயர்த்தியது.
அமெரிக்க மைய வங்கி எப்போது ஆவணங்களை விற்கும்?
அமெரிக்க மையவங்கி வாங்கிக் குவித்துள்ள ஆவணங்களை விற்க வேண்டும். அதன் கால அவகாசம் வரும்போது அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும். இதைச் செய்யும் போது நாட்டில் மீண்டும் வட்டி விழுக்காடு அதிகரிக்கும். அமெரிக்கா 2015-ம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குப் பின்னர்தான் ஆவணங்களை விற்பது பற்றி யோசிக்கும்.
ஜப்பானில் தொடரும் அளவுசார் தளர்ச்சி
அமெரிக்கா தனது அளவுசார் தளர்ச்சியை நிறுத்துவதாக அறிவித்த மறுநாள் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சியைச் செய்யப் போவதாக அறிவித்தது. இதுவரை மாதம் தோறும் அறுபது முதல் எழுபது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கி வந்த ஜப்பானின் மைய வங்கி இனி மாதம் ஒன்றிற்கு எண்பது ரில்லியன் யென் பெறுமதியான ஆவணங்களை வாங்கப் போவதாக முடிவு செய்துள்ளது. ஜப்பானில் பணவிக்கம் இரண்டு விழுக்காடாக இப்போதைக்கு அதிகரிக்கப் போவதில்லை என உணரப்பட்டதாலேயே இந்த அளவுசார் தளர்ச்சி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பானிய நாணயமான யென்னின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இது ஜப்பானிய ஏற்றுமதியை ஊக்குவிக்கலாம். பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஜப்பான் புதிய அளவுசார் தளர்ச்சி செய்யப் போவதாக அறிவித்ததால் அமெரிக்காவில் பங்கு விலைகள் உயர்ந்தன.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அளவுசார் தளர்ச்சி பொருளாதாரம் சரிவு நிலையிலும், பணவிக்க்கம் வலுவிழந்த நிலையிலும் மக்கள் நம்பிக்கை இழந்த நிலையிலும் சிறப்பாக வேலை செய்யும் என அமெரிக்க மைய வங்கி நிரூபித்து விட்டது என இப்போது நம்பலாம். 2014-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சி 3.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது எதிர்பார்த்திருந்த 3 விழுக்காட்டிலும் அதிகமானதாகும். அளவுசார் தளர்ச்சியின் செயற்படு திறனை சரியாக அறிந்து கொள்ள இன்னும் சில மாதங்கள் எடுக்கும்.
பிரித்தானியாவின் கசப்பான அனுபவம்
2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானிய மைய வங்கி அளவுசார் தளர்ச்சியை மேற் கொண்டது. 375 பில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆவணங்களை அது வாங்கியது. இதனால் ஆவணங்களின் உறுதிறன் குறைந்தது. இது பல ஓய்வூதிய நிதியங்களைப் பாதித்தது. இந்த ஓய்வூதி நிறுவனங்களின் பற்றாக் குறை 312பில்லியன்களை எட்டியது.
செல்வந்தர்களுக்கு மட்டும் இலாபம்
ஆவணங்களை மைய வங்கி வாங்கும் போது அதன் விலை அதிகரிப்பால் செல்வந்தர்கள் இலாபம் அடைவார்கள். வட்டி விழுக்காடு குறைவதால் சிறு சேமிப்புக்களைச் செய்துள்ள வறியவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...