சீனாவின் J-31 போர் விமானம் |
சீனாவின் J-31 stealth fighter
சீனா தான் உருவாக்கிவரும் stealth fighter வகையைச் சார்ந்த J-31 போர் விமானங்களை சீன விமானக் கண்காட்சியில் பகிரங்கப்படுத்தியுள்ளது. இரு இயந்திரங்களைக் கொண்ட ஒருவர் மட்டும் செலுத்தக் கூடிய J-31 ரடார்களுக்குப் புலப்படாத் திறனுடையவை. J-31 விமானங்கள் Falcon Eagle என்னும் குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்படுகின்றன. சீனா இந்த J-31 stealth fighter போர்விமானங்களை அமெரிக்காவின் F-35 போர் விமானங்களுக்குப் போட்டியாக உருவாக்கி வருகின்றது. இந்த உருவாக்கம் இன்னும் முற்றுப் பெறாத நிலையில் சீனா தனது ஆரம்ப உற்பத்திகளை இப்போது பகிரங்கமாகப் பறக்க விட்டுள்ளது. கிழக்குச் சீனக் கடலில் அமெரிக்காவினதும் ஜப்பானினது வான் ஆதிக்கத்திற்கு சீனாவின் J-31 stealth fighter என்னும் ஐந்தாம் தலைமுறை விமானங்கள் பெரும் சவலாக அமையும் என சீன வான் படையைச் சேர்ந்த Ni Leixiong கூறியுள்ளார். ஆனால் சீனாவின் J-31 stealth fighterவிமானங்களால் high-G maneuver எனப்படும் விமானப் பறப்பில் கடினமானதும் முக்கியமானதுமான பறப்பைச் செய்ய முடியாது என ஜேர்மனியைச் சேர்ந்த விமானத் துறை நிபுணர் தெரிவித்துள்ளார். சீனாவின் J-31 stealth fighter விமாங்களின் இயந்திரங்கள் இரசியாவில் தயாரிக்கப் படுபவை என்பது சீனாவின் பின்னடைவு நிலையை எடுத்துக் காட்டுகின்றது. அமெரிக்காவின் F-35 வாங்க முடியாத நாடுகள் தனது வ் J-31 விமானங்களை வாங்கும் என சீனா எதிர்பார்க்கின்றது. ஆனால் The Diplomat இணையத் தளம் சீனாவின் J-31 விமானங்களை ஒரு நாடும் வாங்கப் போவதில்லை என எதிர்வு கூறியுள்ளது. அமெரிக்கச் ஊட்கமான Wall Street Journal அமெரிக்காவின் F-35 விமானங்களின் தொழில் நுட்பத்தை சீனா இணையவெளியினூடாகத் திருடியே தனது J-31 விமானங்களை உருவாக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அசையக் கூடிய செய்மதி செலுத்திகள்
சீனா தனது விமானக் கண்காட்சியில் காட்சிப்படுத்திய இன்னும் ஒரு படைக்கலன் அசையக் கூடிய செய்மதி செலுத்திகள் ஆகும். இவை FT-1 solid launch vehicle for emergency satellite launches எனப்படுகின்றது இவை தெருக்களில் செல்லக் கூடிய பார் ஊர்திகளில் இருந்து செய்மதிகளை அவசரத் தேவைகளின் போது செலுத்தக் கூடியவை. இவற்றில் இருந்து மூன்னூறு கிலோ எடையிலும் குறைந்த செய்மதிகளைச் செலுத்த முடியும். இது போன்ற ஏவுகணைச் செலுத்திகளை வேறு எந்த நாடும் உருவாக்கவில்லை எனச் சொல்லலாம். இவற்றிக்கான தேவை எதுவும் ஏற்படவில்லை என்கின்றனர் படைத்துறை நிபுணர்கள். இவற்றை சீனா உருவாக்கியமை பலரையும் ஆச்சரியப் பட வைத்துள்ளது.
சீனாவின் ஆளில்லா வான்கலங்கள்
சீன விமானக்
கண்காட்சியில் சீனா உருவாக்கிய ஆளில்லா உழங்கு வானூர்திகளையும்
காட்சிப்படுத்தியுள்ளது. அத்துடன் தாக்கும் படைக்கலன்களைக் கொண்டஆளின்றிப்
பறக்கக் கூடியதுமான Stealthy WJ-500என்னும் விமானங்களையும் சீனா முதல்
தடவையாகக் காட்சிப் படுத்தியுள்ளது. இதன் பெயரில் இருக்கும் Stealthy
என்னும் சொல்லிற்கு ஏற்ப இவை ரடார்களுக்குப் புலப்படாமல் பறக்கக் கூடியவை. FM-3000 எனப்படும் air defense missile system |
சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள FM-3000 எனப்படும் air defense missile system சீன விமானக் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்படுள்ளது. மூன்று பகுதிகளைக் கொண்ட இந்த ஏவுகணை எதிர்ப்பு முறைமை வரும் குறுந்தூர மற்றும் நடுத்தரத் தூர ஏவுகணைகளை இனம் காணும் ரடார்கள் ஒரு பகுதியாகும். இரண்டாம் பகுதி கட்டளையும் கட்டுப்பாட்டு நிலையமாகும். மூன்றாவது வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகளை வீசும். ரடார் நிலையம் வரும் ஏவுகணைகளைப் பற்றிய தகவல்களை கட்டளை கட்டுப்பாட்டகத்திற்கு வழங்க அங்கிருந்து தாக்குதல் சமிக்ஞைகள் ஏவுகணைவீச்களுக்கு வழங்கப்படும்.
No comments:
Post a Comment