பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜக் ஸ்ரோ (Jack
Straw) இலண்டனில் இருந்து வெளிவரும் டெயிலிகிராஃப் பத்திரிகையில் எழுதிய
பத்தி ஒன்றில் ஈரானுக்கு அணுக்குண்டு தொடர்பாக ஒரு விட்டுக் கொடுப்புச்
செய்து அதற்குப் பதிலாக இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களுக்கு அது
கொடுக்கும் ஆதரவுகளை நிறுத்தச் செய்ய வேண்டும் என்ற முன்மொழிபை
வைத்துள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான ஜக் ஸ்ரோ ஒரு வலதுசாரித்
தினசரியில் இப்படி எழுதியிருப்பதில் உள்நோக்கங்களும் இருக்கலாம்.
ஜக்
ஸ்ரோவின் பத்தி "The West should risk doing a deal with Iran" என்ற
தலைப்புடனும் "For the greater good, Tehran must be allowed to keep some
of its nuclear capability" என்னும் துணைத் தலைப்புடனும் வெளிவந்திருந்தது.
2005-ம்
ஆண்டு யூரேனியம் பதனிடக்கூடிய 200 சுழற்ச்சிக் குழாய்களை (centrifuges)
வைத்திருந்த ஈரானிடம் இப்போது 19,000இற்கு மேற்பட்ட சுழற்ச்சிக் குழாய்கள்
இருக்கின்றன. ஈரானின் அணு விஞானிகளைக் கொன்றும் இணையவெளியில் ஊடுருவி
ஈரானின் யூரேனியம் பதனிடும் சுழற்ச்சிக் குழாய்களை (centrifuges)
சிதைத்தும் பல நாசகார வேலைகளைச் செய்தும் ஈரானின் யூரேனியம் பதனிடுவதைத்
தடுக்க முடியவில்லை. பின்னர் கடுமையான பொருளாதரத் தடைகளை ஈரானுக்கு எதிராக
விதித்ததுடன் வங்கிகளுக்கு இடையிலான பன்னாட்டு கொடுப்பனவு முறைமையான SWIFT
இல் இருந்து ஈரானிய வங்கிகளை வெளியேற்றி ஈரானுக்கு SWIFT மூலம் எந்த
பணப்பரிமாற்றமும் செய்ய முடியாமற் செய்த படியால் அது அமெரிக்கா, இரசியா,
பிரான்ஸ், பிரித்தானியா, சீனா ஆகிய ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர
உறுப்பு நாடுகளுடனும் (P-5) ஜேர்மனியுடனும் பேச்சு வார்த்தைக்கு
முன்வந்தது.
இசுலாமிய அரசு எனத் தன்னை அழைத்துக் கொள்ளும்
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராகத் தாக்குதல் நடாத்த அமெரிக்க வெளியுறவுத்
துறைக்குப் பொறுப்பான அரசத் துறைச் செயலர் ஜோன் கெரி பல நாடுகளை இணைத்த ஒரு
கூட்டமைப்பை அமைக்க பெரு முயற்ச்சி எடுத்தார். அதில் சவுதி அரேபியா,
ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக்ஆகிய நாடுகளை
இணைத்தமை ஐக்கிய அமெரிக்காவிற்கு ஒரு பெரும் இராசதந்திர வெற்றியாகும்.
ஆனால் அதில் ஈரான் இணைந்து கொள்ள மறுத்துவிட்டது. ஐக்கிய நாடுகளின் பொதுச்
சபையில் உரையாற்றிய ஈரானிய அதிபர் ஹசன் ரௌஹானி சில உளவுத் துறைகள்
பைத்தியங்களின் கைகளில் படைக்கலன்களை கொடுத்தன, அவை இப்போது யாரையும்
விட்டு வைக்கின்றன இல்லை என மேற்கு நாடுகளைக் கடுமையாகத் தாக்கினார்.
("Certain intelligence agencies have put blades in the hand of madmen,
who now spare no one,")
அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா,
ஜோர்தான், ஐக்கிய அமீரகம், காட்டார், பாஹ்ரேய்ன், ஈராக் ஆகிய நாடுகளின்
தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகளாலும் கொரசன் போன்ற அல் கெய்தா ஆதரவுப்
போராளிக் குழுக்களாலும் தாக்குப் பிடிக்க முடியாமல் போனால் அவை ஈரானிற்குத்
தப்பி ஓடலாம். அங்கு அவை மீளிணைந்து மேற்கு நாட்டு இலக்குகள் மீது
தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடுக்கலாம். இதனால் இசுலாமியத் தீவிரவாதக்
குழுக்களை ஒழித்துக் கட்ட மேற்கு நாடுகளுக்கு ஈரானின் ஒத்துழைப்பு அவசியம்.
பிரித்தானிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜக் ஸ்ரோவின் பத்தி
இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கி விட்டது என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.
அதற்கான ஒரு கருத்துருவாக்க முயற்ச்சியே ஜக் ஸ்ரோவின் பத்தியாகும்.
இதேவேளை இன்னொரு அமெரிக்க ஊடகம் ஈரான் அணுக்க்குண்டுக்காக அல் கெய்தாவை
விற்குமா என்ற கேள்வியுடன் ஒரு கட்டுரையை வரைந்துள்ளது. ஈரான் தனது
பிராந்திய ஆதிக்கத்திற்கு உலகின் பல இடங்களிலும் செயற்படும் அல் கெய்தா,
காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ், லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா,
சிரியாவில் செயற்படும் கொரசன், லெபனானிற் செயற்படும் ஹிஸ்புல்லா ஆகிய
அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்ததக் கொண்டு அவற்றிற்கு
படைக்கலன்களையும் பணங்களையும் வழங்கி வருகின்றது. வளைகுடாப் பிராந்திய
நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் இந்த அமைப்புகளுக்கு வழங்கும் நன்கொடைகள்
ஈரானுடாகவே விநியோகிக்கப்படுகின்றது. ஈரான் தொடர்பான அமெரிக்க நிபுணர்
ஒருவர் இந்த அமைப்புக்கள் பற்றிக் குறிப்பிடும் போது "They are explosive
bargaining chips". என்றார்.
ஆனால் இசுலாமியப் போராளிக் குழுக்களைக்
காட்டிக் கொடுத்து ஈரானிய ஆட்சியாளர்கள் P5+1 நாடுகளுடன் ஒரு
உடன்பாட்டுக்கு வந்தால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கேஆபத்தான நிலையில் போய்
முடியும். இது ஈரானில் ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். இதனால்
ஈரான் வலுவிழந்த நிலை ஏற்பட்டால் இஸ்ரேல் ஈரானிய யூரேனிய பதப்படுத்தும்
நிலையங்கள் மீது குண்டு வீசி அழிக்கலாம். இப்படி ஒரு சதித் திட்டத்துடன்
ஈரானுடன் ஒரு உடன்பாடு செய்ய மேற்கு நாடுகள் தமது Indecent Proposal
முன்வைத்திருக்கலாம்.
Friday, 26 September 2014
Monday, 22 September 2014
இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் ஜப்பானும்
| மந்த நிலையில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் ஜப்பானியப் பொருளாதாரம். |
2014 ஓகஸ்ட் மாதம் இரசியாவிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பொருளாதாரத் தடைகள் கிறிமியாவுடன் தொடர்புள்ள இரசியாவின் சில நிறுவனங்களுக்கும்40 பணமுதலைகளுக்கும் எதிரானதாக இருந்தது. அப்போது ஜப்பானின் நிலை பற்றி இப்படிக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது:
- “Japan needs to show it shares the same values as the West, but it also wants to keep an opening with Russia.”
நியூட்டனின் மூன்றாம் விதி.
இரசியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையால் இரசியா மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை இரசியாமீது பொருளாதாரத் தடை விதிக்கும் நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும். 2013-ம் ஆண்டு ஜேர்மனியின் இரசியாவிற்கான ஏற்றுமதி 51 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமானதாகும். அத்துடன் ஜேர்மனியில் எரிபொருள் தேவையின் 30 விழுக்காடு இரசியாவில் இருந்து பெறப்படுகின்றது. இந்த இரண்டும் ஜேர்மனியப் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமானதாகும். இரசியாவிற்கான ஏற்றுமதித் துறை ஜேர்மனியில் நான்கு இலட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொன்டிருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இரசியவுடனான வர்த்தகம் 270 பில்லியன் டொலர்கள் பெறுமதியானதாகும். இரசியாவும் பதிலடியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் வட அமெரிக்க நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யும் விவசாயப் பொருட்களுக்குத் தடைவ் விதித்தது. இதற்கான மாற்றீடாக சீனா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதிகளை இரசியா அதிகரித்தது.
ஜப்பானிய இரசிய வர்த்தகம்
ஜப்பானின் வர்த்தகத்தில் மிகப்பெரும் பகுதி இரசியாவுடன் நடைபெறுகின்றது. அத்துடன் சீனாவின் மிரட்டலைச் சமாளிக்க ஜப்பனிற்கு அமெரிக்காவின் உறவு அவசியம். ஜப்பான் தனது வெளிப்பாதுகாப்பிற்கு அமெரிக்காவில் பெரிதும் தங்கியுள்ளது. அதே வேளை கடந்த 30 ஆண்டுகளாகத் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஜப்பானியப் பொருளாதாரம் உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகையைக் கொண்ட இரசியாவிற்கான ஏற்றுமதி அவசியமாகின்றது. இரசியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டால் ஜப்பானிய மொத்தத் தேசிய உற்பத்தியில் 0.2 விழுக்காடு வீழ்ச்சியடையும். இது ஜப்பானைப் பொறுத்தவரை பெரிய இழப்பாகும்.
அபேயும் புட்டீனும்
2014-08-21-ம் திகதி ஜப்பானியத் தலைமை அமைச்சரும் சின்ஷோ அபேயும் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஒரு உச்சி மாநாட்டை நடத்த ஒத்துக் கொன்டுள்ளனர். உக்ரேன் விவகாரத்திற்கு முன்னர் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்ஷோ அபே இரசியாவுடன் பெரும் பொருளாதார ஒத்துழைப்புக்குத் திட்டமிட்டிருந்தார். இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பானின் நிலங்களை இரசியா அபகரித்திருந்தது. நான்கு தீவுகளைக் கொண்ட ஒரு நிலப்பரப்பானது இரசியாவில் South South Kurils என்றும் ஜப்பானில் வட நிலப்பரப்பு என்றும் அழைக்கப்படும். இரசிய ஜப்பானிய உறவில் இது ஒரு முட்டுக்கட்டையாக இருக்கின்றது. அவை தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்த முறுகல்களை தீர்க்கவும் அபே திட்டமிட்டிருந்தார். அண்மையில் இத் தீவுக் கூட்டங்களில் இரசியா செய்த படை ஒத்திகையை ஜப்பான் கடுமையாக ஆட்சேபித்திருந்தது. இந்தப் படை ஒத்திகை ஜப்பான் 2014ம் ஆன்டு ஓகஸ்ட் மாதம் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கொண்டு வந்த பொருளாதாரத் தடையை ஜப்பான் ஒத்துழைத்தமைக்கு எதிரான இரசியாவின் பதிலடியாகும்.
வெறும் கையுடன் திரும்பிய உக்ரேன் அதிபர்.
அமெரிக்காவிற்குப் பயணம் செய்த உக்ரேன் அதிபர் பெட்றொ பொறொஷெங்கோ படைக்கலன்கள் ஏதும் வழங்காமல் ஒரு 53 மில்லியன் டொலர் பெறுமதியான பொதியை மட்டும் கொடுத்து அனுப்பினார் பராக் ஒபாமா. இதில் 46 மில்லியன் பெறுமதியானவை தாக்குதல்களுக்குப் பயன்படுத்த முடியாத படையினரின் கவச ஆடைகள், தொலைநோக்கிகள், முதலுதவிப் பொருட்கள் அடங்கும். எஞ்சிய 6 மில்லியன்கள் மனிதாபிமான உதவிப் பொருட்களாகும்.
புட்டீனிற்கான எதிர்ப்பலைகள்
இரசியாவில் ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி அதன் மூலம் புட்டீனிற்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்து இரசியாவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதே மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையின் நோக்கமாகும். ஆனால் முதலாவது பொருளாதாரத் தடை கொண்டு வந்த பின்னர் இரசியாவில் புட்டீனின் செல்வாக்கு உயர்ந்தது. இரசிய மக்கள் இரசியாவை மாஃபியாக்களின் கைகளில் இருந்து மீட்டு அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தவர் என நம்புகின்றனர். இரண்டாவது கட்ட பொருளாதாரத் தடையின் பின்னர் இரசியால் சிறு எதிர்ப்பலைகள் உருவானது. இரசியாவின் ஆட்சி அதிகாரமும் அதன் பொருளாதாரமும் Oligarch எனப்படும் சிலராணமை பணக்காரர்களின் கைகளிலேயே இருக்கின்றது. புட்டீனும் இவர்களில் ஒருவர். புட்டீன் உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவர். இரசியாமீதான் பொருளாதாரத் தடை இந்த சிலராணமை பணக்காரர்களை இலக்கு வைத்ததாகவே இருக்கின்றது. இவர்களில் ஒருவரான விளடிமீன் யெவ்டுஷெங்கோ புட்டீனிற்கு எதிராகத் திரும்பியதால் அவரை புட்டீன் கைது செய்துள்ளார். இவர் இரசியாவின் முன்னணிச் செல்வந்தர்களில் ஒருவராவர். இதற்கு எதிராக இரசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் புட்டீனிற்கு முறைப்பாடு செய்துள்ளார். புட்டீன் உக்ரேனில் தலையிட்டமைக்கு எதிராக இரசிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. புட்டீன் வலுவிழக்கும் இரசியப் பொருளாதாரத்தால் உள்நாட்டின் தனக்குப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கவே உக்ரேனை ஆக்கிரமித்தார் என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.
வலுவிழந்த உக்ரேன்
படைத்துறை ரீதியில் உக்ரேனால் இரசியக் கரடிக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாது. உக்ரேனைப் படைத்துறை ரீதியில் பலப்படுத்தாமல் இரசியாவிற்கு எதிராக வெறும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதால் மட்டும் இரசியாவை அடக்க முடியாது. இரசியா மீதான பொருளாதரத் தடையின் மறுதாக்கம் பொருளாதாரத் தடைவிதிப்பவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.
Sunday, 14 September 2014
ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை மிரட்டும் பண முதலைகள்.
1298-ம் ஆண்டு ரொபேர்ட் புரூஸ் தலைமையில் ஸ்கொட்லாந்து மக்கள் ஆங்கிலேயரைத் தோற்கடித்து தமது சுதந்திரத்தைப் பெற்றனர். அதன் பின்னர் ஆங்கிலேயர் ஸ்கொட்லாந்தைக் கைப்பற்ற பல தடவை முயன்றனர். கிரிஸ்த்துவ மதப் பிரிவுகளும் மன்னர் குடும்பத்தினரின் குளறுபடிகளும் ஸ்கொட்லாந்தைச் சிதறடித்தது.
அரச குடும்பக் குளறுபடி
ஸ்கொட்லாந்தின் ஐந்தாம் ஜேம்ஸ் மன்னர் இறக்கும் போது அவரது ஒரே மகளான மேரி பிறந்து ஆறாம் நாள் அரசியாக்கப்பட்டார். ஆட்சிஆளுநர்களால் நடாத்தப்பட்டது. அப்போது ஆட்சி புரட்டஸ்த்தாந்திரனருக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் இழுபறிபட்டது. கத்தோலிக்கருக்கு ஆதரவாக பிரான்ஸும் புரட்டஸ்தாந்தினருக்கு ஆதரவாக இங்கிலாந்தும் செயற்பட்டன. இரு நாடுகளும் தம்முடன் ஸ்கொட்லாந்தை இணைக்க முயன்றன. பிரான்ஸின் இரண்டாம் ஹென்றி மன்னர் ஸ்கொட்லாந்தின் குழந்தை அரசிக்குத் தன் மகனைத் திருமணம் செய்து வைத்து ஸ்கொட்லாந்தைப் பிரான்ஸுடன் இணைத்தார். வளர்ந்த அரசி மேரி Henry Stuart Lord Darnley என்னும் கத்தோலிக்க ஆங்கிலேயரை இரண்டாம்தாரமாகவும் James Hepburn என்னும் Lord Bothwellஎன்னும் புரட்டஸ்த்தாந்து ஆங்கிலேயரை மூன்றாம் தாரமாகவும் மணந்தார். மேரியின் மகன் ஸ்கொட்லாந்திற்கும் இங்கிலாந்திற்கும் மன்னரானார். ஒரு மன்னரின் கீழ் இரு அரசுகள் இயங்கி வந்தன. அரசி மேரிக்கு இறுதியில் கொலைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தவிச்ச முயல் அடித்த பிரித்தானியா
ஸ்கொட்லாந்து கத்தோலிக்கப் பிடிக்குள் அகப்பட்டு தனக்கு எதிரான நாடாக மாறக்கூடாது என இங்கிலாந்து கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது. 1707-ம் ஆண்டு ஸ்கொட்லாந்து அரசு ஒரு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அமெரிக்கக் கண்டத்தின் பனாமா பிரதேசத்தில் ஸ்கொட்லாந்து செய்த குடியேற்றத் திட்டத்தால் இந்த நிதி நெருக்கடி உருவானது. இத்திட்டத்தில் ஸ்கொட்லாந்து தனது செல்வத்தில் பாதியை இழந்தது. அதேவேளை இங்கிலாந்து செல்வம் கொழிக்கும் நாடாக இருந்தது. இதை வைத்து இரு நாடுகளும் ஒன்றாக்க இரு தரப்பினரும் ஒத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. இதன் பின்னர் ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்திலும் இங்கிலாந்துப் பாராளமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இரு நாடுகளும் ஒன்றாக்கப்பட்டன. ஸ்கொட்லாந்தின் பாராளமன்றத்தில் மிகவும் சிரமப்பட்டே இரு நாடுகளையும் ஒன்றாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஸ்கொட்லாந்தின் பாராளமன்ற உறுப்பினர்கள் விலை போனதாகவும் கருத்து நிலவுகின்றது. இரு நாடுகளின் இணைப்பிற்குப் பேராதரவு இருந்திருக்கவில்லை. இணைப்புச் சட்டம் நிறைவேற்றிய பின்னர் ஸ்கொட்லாந்தின் பாராளமன்றம் செயற்படாமல் போனது.
ஒன்றானால் பெரிது பெரிதானால் வலிமை
ஸ்கொட்லாந்து மக்கள் தமது ஆட்சியுரிமையை வெஸ்ற்மின்ஸ்டர் பாராளமன்றத்திற்குத் தாரைவார்த்து 307 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது ஸ்கொட்லாந்தால் ஒரு தனி நாடாக இருந்து செயற்பட முடியும். ஆனால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய தேசங்கள் ஒன்றிணைந்து ஐக்கிய இராச்சியமாக இருந்தால் அது இன்னும் சில ஆண்டுகளில் பிரான்ஸையும் ஜேர்மனியையும் மிஞ்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப் பெரிய நாடாக உருவெடுக்க முடியும். ஐக்கிய இராச்சியத்தில் குடியேறிய குடியேறிக் கொண்டிருக்கும் திறமை மிக்க இளையோரால் பொருளாதார ரீதியில் அது வலுவடைந்து கொண்டிருக்கின்றது. மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய இராச்சியம் அதிக அளவு இளையோரைக் கொண்ட ஒரு நாடாக இருக்கின்றது. இப்படிப் பட்ட ஒரு நாட்டை பல பெரும் கூட்டாண்மைகள் (Corporates) விரும்புகின்றன. இந்தப் பெரிய நாட்டில் அவர்களால் பெரும் இலாபம் ஈட்ட முடியும் என நம்புகின்றனர். இதனால் அவர்கள் ஸ்கொட்லாந்து மக்கள் சுந்தந்திரம் பெறுவதை எதிர்க்கின்றனர்
சிறியது அழகானது
சுதந்திர ஸ்கொட்லாந்தால் தனது தனித்துவத்தையும் பேண முடியும். அதன் பொருளாதாரத்தையும் திறம்பட நிர்வகிக்க முடியும். ஸ்கொட்லாந்தைப் போன்ற ஒரு சிறிய தேசமான நியூசிலாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிந்து தனி நாடாகத் திறம்பட இயங்கிக் கொண்டிருக்கினது. மலேசியாவிடமிருந்து பிரிந்த சிங்கப்பூர் ஒரு குட்டி நாடாக மிகத் திறமையாக நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மிரட்டும் கூட்டாண்மை நாட்டாண்மைகள்
ஸ்கொட்லாந்து பிரியும் போது பிரித்தானியா முழுவதும் ஒரு தற்காலிகப் பொருளாதாரத் தளம்பல் ஏற்பட வாய்ப்புண்டு. இதை ஒட்டி பங்குச் சந்தைகளில் விலை வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. ஸ்கொட்லாந்தின் பிரிவினைக்கு ஆதரவுத் தளம் கூடுகின்றது என்ற கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்தவுடன். பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. பிரித்தானிய நாணயமான ஸ்ரேலிங்க் பவுண்டின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது. இதை சாட்டாக வைத்துக் கொண்டு பெரு வர்த்தக நிறுவனங்களான கூட்டாண்மைகள் (Corporates) ஸ்கொட்லாந்து மக்களை மிரட்டட் தொடங்கி விட்டன. தற்போது ஸ்கொட்லாந்தில் இருந்து செயற்படும் கூட்டாண்மைகள் ஸ்கொட்லாந்து தனிநாடாகினால் தாம் ஸ்கொட்லாந்தில் இருந்து விலகி விடுவதாக மிரட்டுகின்றன. ஒரு கட்டத்தில் YouGov எடுத்த கருத்துக் கணிப்பில் பிரிவினைக்கு ஆதரவு எதிர்ப்பிலும் பார்க்கச் சிறிதளவு அதிகம் என்றவுடன் ஸ்கொட்லாந்தில் செயற்படும் கூட்டாண்மைகளின் பங்குச் சந்தைப் பெறுமதியில் 17 பில்லியன் பவுண்கள் வீழ்ச்சியடைந்தது. ஸ்கொட்லாந்து தவிர்ந்த மற்றத் தேசங்களான இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவற்றில் எடுத்த கருத்துக் கணிப்பில் 81 விழுக்காடு மக்கள் ஸ்கொட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனச் சொல்கின்றது. ஸ்கொட்லாந்தில் தலைமையகத்தைக் கொண்ட வங்கிகள் தாம் இங்கிலாந்து மைய வங்கிக்குக் கீழ் இருப்பதை விரும்புவதாகச் சொல்கின்றன. இறுதிக் கடன் வழங்கும் பாதுகாப்பு அதிலிருந்து தமக்கு அதிகமாகக் கிடைக்கும் என்கின்றன அவை.
போதுமடா சாமி
56 நாடுகள் இருந்த உலகில் இப்போது 193இற்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. இது கூட்டாண்மைகளுக்குப் (Corporates) பெரும் சிரமமாகும். வேறு வேறு நாணயங்கள் வேறு வேறு சட்டப் பிரச்சனைகளுக்கு அவை முகம் கொடுக்க வேண்டும். இதனால் கூட்டாண்மைகள் (Corporates) புதிய நாடுகள் உருவாகுவதை விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஸ்கொட்லாந்து பிரியக் கூடாது எனப் பகிரங்கமாக அறிவித்து விட்டார். நாடுகள் அதிகரிக்கும் போது அமெரிக்காவின் வெளியுறவுத் துறை, உளவுத் துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை ஆகியனவற்றின் பிரச்சனைகளும் பொறுப்புக்களும் அதிகரிக்கும். இதனால் அமெரிக்கா உட்படப் பல ஆதிக்க நாடுகள் புதிய நாடுகள் உருவாகுவதை விரும்புவதில்லை. பன்னாட்டு நாணய நிதியமும் பிரிவினைகளை விரும்புவதில்லை.
பரவும் பிரிவினை நோய்
ஸ்கொட்லாந்து பிரிந்தால் அந்தத் தனித்துவவாதம் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ வாய்ப்புண்டு. முக்கியமாக ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் இதே போன்ற கருத்துக் கணிப்பு வலியுறுத்தப்படும். அயர்லாந்திலும் வேல்ஸிலும் சுதந்திர வேட்கை உருவெடுக்கும். இதனால் வெளிநாடுகளில் ஸ்கொட்லாந்து பிரிவினைக்கு ஆதரவில்லை. இந்திய வெளிநாட்டமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் ஸ்கொட்லாந்தின் பிரிவினை பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது கடவுள் விட்ட வழி என்றார்.
நீண்டகால அடிப்படையில் எல்லாம் சரிவரும்
ஸ்கொட்லாந்தின் பிரிவினையால் ஸ்ரேலிங் பவுண் வீழ்ச்சி காண்பது ஒரு இடைக்கால நிகழ்வு மட்டுமே. 10 ஆண்டுகால அரச கடன் ஆவணமான Giltsஇன் பெறுமதியில் ஸ்கொட்லாந்துப் பிரிவினை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஸ்கொட்லாந்து மக்கள் பிரிவினை தொடர்பாக அரைவாசி ஆதரவு இருக்கும் வேளையில் ஸ்கொட்லாந்தின் வர்த்தகர்கள் நடுவே 10 விழுக்காட்டினர் மட்டுமே பிரிவினையை ஆதரிக்கின்றனர். ஸ்கொட்லாந்திற்கு அதிகாரப் பரவலாக்கம் செய்து அங்கு ஒரு மாநில அரசு உருவாக்கப்பட்ட போது அது பொருளாதாரச் சீரழிவை உருவாக்கும் என கடும் எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் அண்மைக்காலங்களாக ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் ஐக்கிய இராச்சியப் பொருளாதாரத்தைப் போலவே செயற்படுகின்றது:
பிரிவினையும் கட்சி அரசியலும்
ஸ்கொட்லாந்து தொழிற்கட்சியின் கோட்டையாக இருக்கின்றது. ஸ்கொட்லாந்தின் தேசியவாதம் அண்மைக்காலங்களாக வளர்ச்சியடைந்த போது அங்கு ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி செல்வாக்குச் செலுத்துகின்றது. இருந்தும் இன்னும் தொழிற்கட்சிக்கு அங்கு ஆதரவு இருக்கின்றது. பிரித்தானியத் தேர்தல் முடிவுகளின் சரித்திரத்தை வைத்துப் பார்க்கும் போது ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்தால் தொழிற்கட்சி ஒரு போதும் ஆட்சி அமைக்க முடியாது. இதனால் தொழிற்கட்சி பிரிவினையை விரும்பவில்லை. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த தொழிற்கட்சித் தலைவர்களே பிரிவினைக்கு எதிராகக் கடும் பிரச்சாரம் செய்கின்றனர். தொழிற்கட்சியின் தொழிற்சங்கங்களிடையே பிரிவினைக்கு கணிசமான ஆதரவு உண்டு. பழமைவாதக் கட்சி பிரிவினையை விரும்பாத போதும் அது பிரிவினைக்கு எதிராகப் பெரும் பரப்புரைகளைச் செய்யவில்லை. அப்படிச் செய்தால் எதிர்மாறான விளைவுகள் ஏற்பட்டு பிரிவினைவாதம் வளரும் என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பழமைவாதக் கட்சி பிரச்சாரம் செய்கின்றது.
மறைக்கப்பட்ட உண்மைகள்
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதிகளின் ஆரம்பத்தில் முதன் முதலாக ஸ்கொட்லாந்தின் 30விழுக்காடு மக்களின் ஆதரவை ஸ்கொட்லாந்தின் தேசியவாதக் கட்சி பெற்றிருந்தது. அப்போதைய தொழிற்கட்சி அரசு ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிக்கப்பட்டால் அதன் பொருளாதார வளம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஆராய பேராசிரியர் கவின் மக் குரோன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்த பேராசிரியர் மக் குரோனின் அறிக்கை நீண்ட நாட்களாக மறைத்து வைக்கப்பட்டது. அந்த அறிக்கை 2000-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவலறியும் சட்டத்தின் படி 2005-ம் வெளிவிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி ஸ்கொட்லாந்து தனிநாடாகப் பிரிந்தால் அதன் பொருளாதாரப் பிரச்சனைகள் பல தீர்க்கப்படுவதுடன் ஸ்கொட்லாந்து மக்களின் தனி நபர் வருமானம் 30 விழுக்காட்டால் அதிகரிக்கும். சுதந்திர ஸ்கொட்லாந்தின் வரவுகள் செலவிலும் அதிகமாக இருப்பதுடன் அதன் ஏற்றுமதியும் இறக்குமதியிலும் பார்க்க அதிகமாக இருக்கும்.
ஹரி பொட்டர் கதாசிரியை
ஸ்கொட்லாந்தில் வசிக்கும் ஆங்கிலேயரான ஹர் பொட்டர் கதாசிரியை றௌலிங் பிரிவினையைக் கடுமையாக எதிர்ப்பதுடன் பிரிவினைக்கு எதிரான பரப்புரைக்கு ஒரு மில்லியன் பவுண்களை வழங்கியுள்ளார். முன்னாள் மான்செஸ்டர் யுனைட்டெட் முகாமையாளரும் பயிற்ச்சியாலருமான அலெக்ஸ் ஃபெர்க்குசன் ஒரு ஸ்கொட்லாந்து தேசத்தவர். அவர் பிரிவினையை எதிர்க்கின்றார். ஜேம்ஸ் பொண்ட் நடிகர் சோன் கொன்ரி அமெரிக்காவில் வசிக்கும் ஸ்கொட்லாந்து தேசத்தவர். அவர் ஸ்கொட்லாந்துப் பிரிவினையை ஆதரிக்கின்றார்.
பிபிசி செய்தி நிறுவனம் பிரிவினைக்கு ஆதரவாக நின்று பாராபட்சம காட்டுவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. பிரிவினைக்கு ஆதவராக முன்னின்று செயற்படும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சமண்ட் தாம் பலவழிகளி்ல் பயம் காட்டப்படுவதாகவும் மிரட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றார்

Friday, 12 September 2014
அமெரிக்காவிற்கு சவால் விடும் ஈரானின் காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) ஏவுகணைகள்
சீனாவும் ஈரானும் அமெரிக்கக் கடற்படையால் அதிகம் அச்சுறுத்தலுக்கு உள்ளான இரு நாடுகளாகும். இரு நாடுகளும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அமெரிக்கக் கடலாதிக்கத்திற்கு ஈரானின் பதிலடியாக அமைந்தவை காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) எனப்படும் கப்பல்-எதிர் எறியியல் ஏவுகணைகளாகும் (anti-ship ballistic missile) இவை சுருக்கமாக AShBM என அழைக்கப்படுகின்றன.
உலக எண்ணெய் விநியோகத்தின் முதல்தரத் திருகுப் புள்ளியாக (chokepoint) ஈரானை ஒட்டிய ஹோமஸ் நீரிணை அமைந்துள்ளது. உலக எரிபொருள் வர்த்தகத்தின் இருபது விழுக்காடு ஹோமஸ் நீரிணையூடாக நடைபெறுகின்றது. இந்த நீரிணையை தனது முழுக் கட்டுப் பாட்டில் வைத்திருக்க ஈரான் நீண்ட காலமாக முயன்று வருகின்றது. 35மைல் அகலமான ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது. ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவைகள் மிரட்டியதுண்டு. அதற்கு அதனை மூடும் படை வலு இருந்ததில்லை.ஆனால் ஈரான் தன் படைவலுவை அதிகரிக்கப் பலகாலமாக பல வழிகளில் முயன்று வருகின்றது. அந்த முயற்ச்சியின் ஒரு அம்சமே காலிஜ் ஃபார்ஸ் (Khalij Fars) எனப்படும் கப்பல்-எதிர் எறியியல் ஏவுகணைளின் உற்பத்தியாகும்.
தரையில் இருந்து கடலுக்குள் ஏவக் கூடிய காலிஜ் ஃபார்ஸ் ஏவுகணைகள் ஈரானின் ஃபட்டா-110 (Fateh-110 tactical ballistic missile)இன் மேம்படுத்தப் பட்ட வடிவமாகும். இவற்றால் இலத்திரனியல் இலக்குத் தேடும் முறைமை உண்டு (electro-optical (EO) seeker) இவற்றால் 650 கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிக் கொண்டு 300 கிலோ மீட்டர்வரை பாய முடியும். இவற்றைக் கொண்டு ஈரானால் ஹோமஸ் நீரிணையிலும் பாரசீக வளை குடாவிலும் எந்த ஒரு இடத்தையும் தாக்க முடியும். இவற்றால் வளைகுடாப் பிராந்தியத்தில் பயணிக்கும் வர்த்தகக் கப்பல்களைத் தாக்க முடியும். ஈரானின் மற்ற ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில் காலிஜ் ஃபார்ஸ் ஏவுகணைகள் இடைமறித்துத் தாக்குவதற்குச் சிரமமானவையாகும்.
குறுகிய கடற்பரப்பு என்பதால் ஹோமஸ் நீரிணையில் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை செயற்பட வைப்பது சிரமமாகும்.
அமெரிக்கா தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு லேசர் துப்பாக்கிகளை வளைக் குடாவில் நிறுத்துமா?
ஈரான் பற்றிய முந்தைய பதிவுகளைக் காண கீழே சொடுக்கவும்:
1. ஹோமஸ் நீரிணையை மூட முயலும் ஈரான்
2. விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்திற்கு அமெரிக்காவின் பதிலடி.

Monday, 8 September 2014
பத்துப் பொருத்தங்களும் பொருந்திய ஜப்பானும் இந்தியாவும்.
184 நாடுகளைக் கொண்ட தனி நபர் வருமானப் பட்டியலில் இந்தியா 140வது இடத்திலும் ஜப்பான் 19-ம் இடத்திலும் இருக்கின்றன. ஜப்பானின் தனிநபர் வருமானம் இந்தியர்களினதிலும் பார்க்க 25 மடங்காகும். ஜப்பான் ஆசியாவில் முதலாவதாக வளர்ச்சியடைந்த நாடு என்ற பெருமையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தென் கொரியாவும் அந்தப் பட்டியலில் இணைந்து கொண்டது. ஆனால் 2013-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறக்குறைய 5 விழுக்காடாக இருக்கையில் ஜப்பானின் வளர்ச்சி 1.5 வீழுக்காடாக மட்டுமே இருக்கின்றது. ஆசியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் ஜப்பானினுடையது. இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. இந்த இரண்டு நாடுகளும் எப்படி இணைந்து செயற்படப் போகின்றன என்பது இப்போது முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
நாடி நின்ற அபேயும் தேடிச்சென்ற மோடியும்
இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஜப்பானிற்கான ஐந்து நாள் பயணம் ஒன்றை 2014 ஓகஸ்ட் 31-ம் திகதியில் இருந்து மேற்கொண்டார். இருபது ஆண்டுகளாக எழும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றது ஜப்பானியப் பொருளாதாரம். அதன் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு பெரிய சந்தை தேவை. ஐந்து விழுக்காட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதர வளர்ச்சியை எட்டு விழுக்காட்டிற்க்கு மேல் உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் மோடி இருக்கின்றார். ஜப்பானியத் தலைமை அமைச்சர் ஷின்சே அபே 2007-ம் ஆண்டு எழுதிய அழகிய நாட்டை நோக்கி: ஜப்பானிற்கான எனது பார்வை (Towards a Beautiful Country: My Vision For Japan) என்னும் நூலில் இந்திய ஜப்பானிய உறவின் முக்கியத்துவத்தை எதிர்வு கூறி இருந்தார். இதுவரை ஜப்பானை ஆண்டவர்களில் ஷின்சே அபேயே இந்தியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஒருவராவார். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அபே தனது மக்காளாட்சிப் பாதுகாப்பு வைரம் (Democratic Security Diamond) என்னும் முன் மொழிவில் அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, வியட்னாம், ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், புரூனே ஆகிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மோடி பதிவிக்கு வந்த 100 நாட்களில் மிக முக்கியத்துவம் கொடுத்த வெளிநாட்டுப் பயணமாக அவரது ஜப்பானியப் பயணம் அமைந்துள்ளது. ஜப்பான் நாடானது இந்துமாக்கடல் நாடுகளையும் மற்றும் பசுபிக்கடல் நாடுகளையும் அமெரிக்காவையும் இணைத்து ஒரு பெரும் கூட்டணியை சீனாவிற்கு எதிராக அமைக்க விரும்புகின்றது. காங்கிரசு ஆட்சியின் போது இதற்கு இந்தியா சற்றுத் தயக்கம் காட்டி வந்தது. இந்தியா சீனாவைப் பகைக்க விரும்பவில்லை. இதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்திய சீன வர்த்தகம். இரண்டாவது ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் ஆதரவுடன் இந்தியா ஒரு வல்லரசாக விருப்பம் கொண்டுள்ளது. பல இந்தியப் பெரு முதலாளிகள் இந்திய சீன வர்த்தகத்தால் பெரும் இலாபம் ஈட்டுகிறார்கள். மோடியும் அபேயும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியவிதம் பற்றி பல பத்திரிகைகள் குறைந்தது ஒரு பந்தியாவது எழுதியுள்ளன. அது ஒரு வழமைக்கு மாறான தழுவல் என்கின்றன.
1. பாதுகாப்புத் துறைப் பொருத்தம்
இந்தியாவும் ஜப்பானும் தமக்கிடையிலான ஒத்துழைப்பில் பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் சீனாவிற்கு எதிராகக் கைகோர்ப்பதே. இரு நாடுகளும் இணைந்து ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பல பாதுகாப்பு ஒத்துழைப்பைச் செய்ய முடியும். மலாக்க நிரிணையை இரு நாடுகளும் மலேசியாவுடனும் மற்றைய பிராந்திய நாடுகளுடனும் இணைந்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சீனாவின் கப்பப் போக்குவரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப் படுத்த முடியும். மோடியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் பூட்டானிற்கானதாக் இருந்தது. பின்னர் அவரது நேபாளத்திற்கான பயணமும் அதைத் தொடர்ந்து அவர் ஜப்பானிற்கு மேற்கொண்ட பயணமும் சீனாவின் பிராந்தியஅச்சுறுத்தலை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளன. ஏற்கனவே அமெரிக்கா, ஜப்பான் இந்தியா ஆகிய நாடுகள் மூன்றும் இணைந்து மலபார் பயிற்ச்சி என்னும் பெயரில் ஒரு பெரும் கடற்போர் ஒத்திகையைச் செய்துள்ளன. இது சீனாவை அடக்க எடுக்கும் முயற்ச்சி என்று சொல்லத் தேவையில்லை.
2. மனித வளப் பொருத்தம்
நாட்டில் வேலையில்லாப் பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்ற நிலையில் இருக்கின்றது இந்தியா. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே அதிக வயது போனவர்களை வைத்துக் கொண்டு தவிக்கும் நாடு ஜப்பான். ஜப்பானிய மக்கள் தொகை 2013-ம் ஆண்டு 270,000 ஆல் குறைந்துள்ளது. ஜப்பானின் மக்கள் தொகை 127 மில்லியன்கள் இந்திய மக்கள் தொகை இதிலும் பார்க்கப் பத்து மடங்கானது. மனிதவளம் மிக்க இந்தியாவும் தொழில்நுட்ப வளம் நிறைந்த ஜப்பானும் இணைந்து பெரும் பொருளாதார வெற்றிகளை ஈட்ட முடியும். வேறு வகையில் சொன்னால் இந்தியத் தொழிலாளர்களைச் சுரண்ட ஜப்பானிற்கு அதிக வாய்ப்புள்ளது.
3. வர்த்தகப் பொருத்தம்
2013-ம் ஆண்டு இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான வர்த்தகம் 15.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானதாக மட்டுமே இருந்தது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் காற்பங்கு மட்டுமே. இந்தியாவிற்கு ஜப்பான் பெருமளவு வாகனங்களை ஏற்றுமதி செய்ய முடியும். அதே வேளை யப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் தனது வாகனங்களை உற்பத்தி செய்யவும் முடியும். ஆனால் இந்த வகையிலான ஒத்துழைப்பைப் பற்றி மோடி அதிகம் அக்கறை காட்டியதாகத் தெரிவரில்லை. மோடிக்கு தேர்தலின் போது "உதவி செய்த” இந்திய வாகன உற்பத்தியாளர்களை மோடி அதிருப்திக்கு உள்ளாக்க விரும்பவில்லை. சீனாவின் உள்நாட்டு வாகன உற்பத்தித் துறை வளராமல் இருப்பதற்கு ஜப்பானே காரணம். சீனர்கள் சீனாவில் உற்பத்தியாகும் வாகனங்களைவிட ஜப்பானிய வாகனங்களை வாங்க அதிகம் விரும்புகின்றார்கள். இருந்தும் ஜப்பானும் இந்தியாவும் இருதரப்பிற்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் வர்த்தங்களை மேம்படுத்த முடியும். சோனி, டொயோட்டா, ஹொண்டா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்தியாவில் தமது பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
4. படைக்கல உற்பத்திப் பொருத்தம்
தற்போது உலகிலேயே அதிக அளவு படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. தனது படைக்கலன் உற்பத்தியை விரிவாக்கும் நோக்கத்துடன் ஜப்பான் இருக்கின்றது. 1998இல் இந்தியா மேற்கொண்ட அணுக்குண்டுப் பரிசோதனையைத் தொடர்ந்து ஜப்பான் இந்தியாமீது சில பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. மோடியின் பயணத்தின் போது ஆறு இந்தியப் படைத்துறை நிறுவனங்கள் மீது ஜப்பான் விதித்திருந்த தடைகளை நீக்க ஜப்பான் ஒத்துக் கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த பின்னர் ஜப்பான் எந்த ஒரு நாட்டிற்கும் படைக்கலன்கள் விற்பதில்லை என்ற முடிவில் இருந்தது. இந்த நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தியாவிற்கு ஈரூடக விமானங்களை விற்க ஜப்பான் முன்வந்துள்ளது. ஜப்பானின் இந்த மாற்றம் சீன விரிவாக்கத்திற்கு எதிராக ஜப்பானும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைக்கவிருக்கின்றன என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது. 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இற்சுனொரி ஒனோடேராவும் இந்திய (முன்னாள்)வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ கே அந்தோனியும் புது டில்லியில் சந்தித்து உரையாடிய போது "இருவருடன் இருவர்" என்ற ரீதியில் பேசுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஜப்பானிடம் இருந்து இந்தியா சின்மாய்வா யூஎஸ் -2 என்னும் ஈருடக விமானங்களை வாங்கவும் ஒத்துக் கொள்ளப்பட்டது. சின்மாய்வா யூஎஸ் -2 விமானங்கள் கடல் மேற்பரப்பில் படகு போல் மிதக்கவும் கூடியவை. 7,516.6கிலோ மீட்டர் (4,670.6 மைல்கள்) நீளமான தனது கடற்கரையைப் பாதுகாக்க இந்தியாவிற்கு அதிக வலுக்கொண்ட ஒரு கடற்படை தேவை. கப்பல் கட்டுமானத்தில் உலகில் முன்னணியில் நிற்கும் ஜப்பானும் கடற்படைக் கலன்களை நிர்மாணிப்பதில் அனுபவம் பெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவும் இணைந்து உலகிலேயே தரமான கடற்படைக் கலன்களை உருவாக்க முடியும்.
5. கலாச்சாரப் பொருத்தம்
பௌத்த மதத்தை முதலில் பரப்பிய நாடு இந்தியா. பௌத்தமதம் வாழும் நாடு ஜப்பான். 736-ம் ஆண்டு ஜப்பான் சென்ற போதி சேனா என்ற துறவி ஜப்பானில் புத்தமதத்தை பெருமளவில் பரப்பினார். பிரித்தானியக் காலனித்துவத்திற்கு எதிராகப் போராடுவதற்கு சுபாஷ் சந்திரபோஸிற்கு ஜெர்மன் உதவ மறுத்த போது ஜப்பான் அவருக்கு உதவியது. ஜப்ப்பான் உதவி வழங்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. இரு நாட்டு மக்களும் தற்போது தமது ஆட்சியாளர்களாக வலது சாரி அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
6. பிராந்தியப் பொருத்தம்
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் ஜப்பானும் இந்தியாவும் இருக்கின்றன. ஜப்பானின் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்தில் சீனா ஜப்பனிற்கு அச்சுறுத்தலாக இருகின்றது. அங்குள்ள செங்காகு, டயாகு ஆகிய தீவுகளை ஜப்பான் தன்னுடையது என்கின்றது. சீன விமானங்களும் கடற்படைக் கப்பல்களும் அத்தீவுகளின் பிராந்தியத்திற்குள் அடிக்கடி அத்து மீறி புகுவதாக ஜப்பான் குற்றம் சாட்டுகின்றது. சீனா அதை மறுத்து அவை தனக்கே சொந்தம் என்கின்றது. அதே போல் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரப்பளவைக் கொண்ட அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தன்னுடையது என்கின்றது. சீனப் படையினர் அடிக்கடி அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஊடுருவி படை முகாம்களை அமைக்கின்றனர். சீனப் பிராந்திய ஆதிக்கத்தைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இரு நாடுகளுக்கும் இருக்கின்றன.
7. கட்டுமானப் பொருத்தம்
ஜப்பானின் உள்ளகக் கட்டுமானம் உலகத் தரம் வாய்ந்தது. உலகிலேயே நெரிசல் மிக்க டோக்கியோ நகரை முகாமைத்துவம் செய்யும் அனுபவம் ஜப்பானிடம் உண்டு. துரித தொடரூந்துச் சேவை, புதிய நகரக் கட்டுமானம் ஆகியவற்றில் ஜப்பானின் அனுபவத்தையும் திறமையையும் இந்தியா பெற்றுக் கொள்ளலாம். மோடியின் ஜப்பானியப் பயணத்தின் போது இந்தியக் கட்டுமானங்களிலும் புது நகர உருவாக்க்கத்திலும் அடுத்த ஐந்து ஆண்டுகளின் ஜப்பானிய அரசும் தனியார் நிறுவனங்களும் 53 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன. இந்தியாவின் கட்டுமானப் பசியை ஜப்பானால் திருப்தி செய்ய முடியும். மோடி குஜாராத் மாநில முதலமைச்சராக இருந்த போது பாவித்த "முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை; சிவப்புக் கம்பளம் உண்டு" என்ற வாசகத்தை ஜப்பானிலும் வலியுறுத்திச் சொன்னார். வெளிநாட்டு மூதலீடுகள் தொடர்பான முடிவுகளை இந்திய அரசு இப்போது மிகவும் துரிதமாக மேற்கொள்கின்றது என உறுதியளித்தார் மோடி. ஜப்பானிய முதலீட்டார்கள் முன் பேசும் போது இந்தியா மக்களாட்சி, மக்கள் தொகை, மக்கள் தேவை ஆகிய மூன்றிலும் உலகில் முன்னணியில் நிற்கின்றது என்றார் மோடி. ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களை இணைக்கும் துரித தொடரூந்து சேவையை உருவாக்கும் திட்டத்துடன் மோடி இருக்கின்றார்.
8. வன்பொருள் மென்பொருள் பொருத்தம்
இந்தியா உலகில் சிறந்த கணனி மென்பொருள் உற்பத்தி செய்யக் கூடிய நாடு. அமெரிக்காவில் உள்ள உலகின் முதல்தர மென் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பல இந்தியரக்ள் முதுகெலும்பாக இருந்து பணிபுரிகின்றனர். ஜப்பான் கணனி வன்பொருள் உற்பத்தில் சிறந்து விளங்குகின்றது. இரு நாடுகளும் இணைந்து வரும் காலங்களில் கணனித் துறையில் அரசோச்ச முடியும்.
9. உலக அரங்கத் தேவைப் பொருத்தம்
தற்போது உலக அரங்கில் ஜப்பான் தனது பாதுகாப்பிற்கும் ஆதிக்கத்திற்கும் அமெரிக்காவில் பெரிதும் தங்கியிருக்கின்றது. அதே போல் இந்தியா தனது படைக்கல உற்பத்திக்கும் தேவையான போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு ஏற்ப இரத்து அதிகாரம் பாவிக்கவும் இரசியாவில் பெரிதும் தங்கியிருக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இருக்கும் சீனாவும் பிரேசிலும் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவிற்குப் போட்டியான நாடுகளாகும். இவ்விரண்டு நாடுகளும் தமது மக்களுக்கான வேலைவாய்ப்பை உலக அரங்கில் தேடுவதில் இந்தியாவுட்ன் போட்டி போடுகின்றன. உலக அரங்கில் ஒன்றுடன் ஒன்று போட்டி போடாமல் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து தமது பேரம் பேசும் வலுவை அதிகரித்துக் கொள்ளலாம.
10. மாற்று எரிபொருள் உற்பத்திப் பொருத்தம்
இந்தியா ஜப்பான ஆகிய இரு நாடுகளும் எரிபொருள் இறக்குமதியில் பெரிதும் தங்கியிருக்கின்றன. இரண்டும் இணைந்து காற்றலையில் இருந்தும், சூரிய ஒளியில் இருந்தும் வலு பெறும் பல முயற்ச்சிகளில் ஈடுபடலாம். சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் பெறும் துறையில் சீனா அமெரிக்காவையும் முந்தி முதலாம் இடத்தில் இருக்கின்றது. இந்தியாவும் சீனாவும் ஜேர்மனியும் இணைந்து முதலாம் இடத்தைப் பிடிக்கலாம்.
இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் இறுதியில் இணைந்து வெளிவிட்ட கூட்டறிக்கைக்கு இந்தியாவிற்கான டோக்கியோப் பிரகடனம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானிய இந்திய உறவு மேம்படும் போது ஜப்பானால் இந்தியாவை கேந்திரோபாய ரீதியில் மேலும் அமெரிக்காவிற்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல முடியும். சீனக் கடற்படைக்கப்பல்கள் அமெரிக்கக் கடற்படைக் கப்பலை மோதிவிடும் வகையில் நெருங்கிச் சென்றதும் சீனப் போர் விமானம் அமெரிக்காவின் நீர் மூழ்கி அழிப்பு விமானத்தை மிரட்டும் வகையில் நெருக்கமாகப் பறந்து சென்றது அண்மையில் நடந்த இரு நிகழ்வுகள். இவை அமெரிக்காவின் ஆசிய பசுபிக் கடற்பிராந்தியத்தில் செலுத்தும் படைத்துறை மேன்மையையும் ஆதிக்கத்தையும் சோதனைக்கு உள்ளாக்க சீனா முயல்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. இது நாளை ஒரு சவாலாக முன்னர் அமெரிக்கா தனது கேந்திரோபாய பங்காண்மையை ஜப்பானுடனும் இந்தியாவுடனும் செய்ய விரும்பும். இது ஆசிய பசுபிக் பிராந்தியத்தை ஒரு வல்லாதிக்க நாடுகளின் மோசமான போட்டிக்களமாக மாற்றும். இதில் தமிழர்களும் பாதிக்கப்படலாம்
சிங்களவர்களுக்கு உதவி செய்வதைத் தனது தலையாய கடமையாகக் கொண்ட ஜப்பானும் தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் சிங்களவர்கள் இந்தியாவிற்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பேரினவாத இந்துத்துவாக்களும் இணைவது தமிழர்களுக்கு உகந்தது அல்ல.
பத்துப் பொருத்தங்களும் பொருந்திய இந்தியாவும் ஜப்பானும்.

Thursday, 4 September 2014
திண்டாடும் உலகப் பொருளாதாரமும் திணறும் மைய வங்கிகளும்
2008-ம் ஆண்டில் விழுந்த உலகப் பொருளாதாரம் எழும்ப முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. உலக நாடுகளின் மைய வங்கிகள் 2008-ம் ஆண்டிலிருந்து தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமது நாணயப் பெறுமதிகளைத் தத் தம் நாட்டுப் பொருளாதார நிலைக்களுக்கு ஏற்ப மாற்றப் பெரு முயற்ச்சி செய்து கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாணயப் புழக்கத்தை அதிகரிப்பதும் அதனால் ஏற்படும் நாணயப் பெறுமதி வீழ்ச்சியையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்த மைய வங்கிகள் படும்பாடு பெரும்பாடு.
நாணயப் போர்
மைய வங்கிகள் ஒரு நாட்டின் வட்டி விழுக்காட்டைத் தீர்மானைக்கும் போது நாட்டின் பணவீக்கம், பொருளாதார வெளியீட்டு வித்தியாசம் (Output Gap) ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் உண்மையான மொத்தப் பொருளாதார உற்பத்திக்கும் அதன் மொத்த உற்பத்தி ஆற்றலுக்கும்(potential) உள்ள வித்தியாசத்தை வெளியீட்டு வித்தியாசம் என்பர். பணவீக்கத்தின் ஒன்றைரைப் பங்கையும் வெளியீட்டு வித்தியாசத்தையும் நாட்டின் வட்டி விழுக்காட்டிற்கு ஏற்ப இன்னும் ஒரு கணியத்தையும் கூட்டி வரும் தொகையை நாட்டின் வட்டி விழுக்காடாக இருக்க வேண்டும். ஆனால் பல நாடு மைய வங்கிகள் அப்படிச் செய்யாமல் தமது நாட்டுப் பொருட்கள் மற்ற நாடுகளில் மலிவாக இருக்கக் கூடியதாக தமது நாட்டின் நாணயப் பெறுமதி குறைவாக இருக்கக் கூடிய வகையில் தமது வட்டி விழுக்காட்டை தீர்மானிக்கின்றன. இதை நாணயப் போர் என்பர். இந்த நாணயப் போரில் பெரு வெற்றி அடைந்த நாடு சீனாவாகும்.
எரி பொருள் ஒளிகாட்டும்
உக்ரேனிலும் லிபியாவிலும் பிரச்சனைகள் தொடர்கின்றபோது உலக எரிபொருள் விநியோகம் பாதிப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் உலகில் எரிபொருள் தேவை குறைந்து கொண்டிருப்பதாக பன்னாட்டு வலுவள முகவரகம் தெரிவிக்கின்றது. 2014-ம் ஆண்டுக்கான சராசரி எரிபொருள் தேவை நாளொன்றிற்கு 180,000 பீப்பாய்களால் குறைவடைந்து விட்டதாக இந்த முகவரகம் தெரிவிக்கின்றது. 2014-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான எரிபொருள் பாவனை நாள் ஒன்றிற்கு 700,000 பீப்பாய்கள் மட்டுமே. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைவான எரிபொருள் பாவனையாகும். எரி பொருள்பாவனையும் அதற்கான தேவையும் பொருளாதாரம் வளர்ச்சியை எதிர்வு கூறக் கூடியவை. உலக எரிபொருள் பாவனை உலகப் பொருளாதாரம் இன்னும் 2008-ம் ஆண்டின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனச் சுட்டிக் காட்டுகின்றது. 2014-ம் ஆண்டு ஜி-20 நாடுகளின் சராசரிப் பொருளாதார வளர்ச்சி 2013-ம் ஆண்டைப் போலவே 2.8 விழுக்காடாகவே இருக்கும். 2015-ம் ஆண்டு இது 3.2 ஆக அதிகரிக்கலாம். ஜி-7 நாடுகளின் பொருளாதாரம் 2013-ம் ஆண்டு 2.2 விழுக்காடு வளர்ந்தது. 2014-ம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இந்த வளர்ச்சி 2 விழுக்காடு மட்டுமே.
அமெரிக்காவும் பிரித்தானியாவும் எழும்புகின்றன நிமிரவில்லை.
2008-ம் ஆண்டின் பின்னர் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரமும் ஐக்கிய இராச்சியப் பொருளாதாரமும் ஒரு திடமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டப் போதும் அவை காத்திரமான வளர்ச்சியாக இல்லை. அதே வேளை யூரோ வலய நாடுகளின் பொருளாதாரங்கள் இன்னும் மந்த நிலையிலேயே இருக்கின்றன. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வேலைவாய்ப்புகள் அதிகரிப்புக்கள் ஏற்படுகின்ற போதிலும் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க இரு நாடுகளும் பெரும் பாடு படுகின்றன. அமெரிக்காவில் ஒருவரு வேலை கொடுக்க அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு முப்பத்தேழாயிரம் டொலர்களை உட்செலுத்த வேண்டியுள்ளது. 2008-ம் ஆண்டு இது 7600 டொலர்களாக இருந்தது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீதான அதன் மைய வங்கியின் பிடி தளர்ந்து கொண்டு போவதைக் காட்டுகின்றது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்க எடுக்கும் பெரு முயற்ச்சிகளுக்கு மத்தியிலும் அமெரிக்க டொலர் தனது உலக நாணய நிலையை இழக்காமல் இருக்கின்றது. அமெரிக்க டொலரின் பெறுமதியும் உறுதியாக இருக்கின்றது. ஆனால் அமெரிக்காவில் உள்ள பல் வேறு உளவுத்துறைகள் அமெரிகாவில் தொடர்ந்து 25 ஆண்டுகள் பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம் என எச்சரிக்கின்றன. இந்த வீழ்ச்சி அமெரிக்காவின் உலக ஆதிக்க நிலையைப் பெரிதும் பாதிக்கலாம். பொருளதாரச் சுழற்ச்சி நிபுணர்கள் 2016, 2017 ஆண்டுகளில் அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியம்
ஒரு நாட்டின் வங்கிகள் தமது காப்பு வைப்புக்களை மைய வங்கிகளில் இடுவதுண்டு. இவற்றிற்காக மைய வங்கிகள் வைப்பிடும் வங்கிகளுக்கு வட்டி வழங்குவதுண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய மைய வங்கி வைப்பிடும் வங்கிகளிடம் இருந்து கட்டணம் அறவிடும் முறையை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. இது ஒரு எதிர்மறை வட்டி விழுக்காட்டை உருவாக்கும் முயற்ச்சியாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைச்சன் பிள்ளை ஜேர்மனியின் 2014 ஓகஸ்ட் மாதம் வெளிவந்த வியாபார சூழ்நிலைச் சுட்டெண் ஜெர்மனியின் பொருளாதாரம் இன்னும் மந்த நிலையிலேயே இருக்கின்றது எனச் சுட்டிக் காட்டுகின்றது. ஜேர்மனி மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சிக்கன நடவடிக்கையில் ஈடுபட நிர்பதந்திக்கின்றது. இந்த சிக்கன நடவடிக்கையைப் பின்பற்றுவது தொடர்பாக பிரான்ஸில் பெரும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. இந்த சிக்கன நடவடிக்கைகள் வருமானம் குறைந்தவர்களைப் பாதிக்கும் என்பதால் பிரெஞ்சு இடது சாரி அரசியல்வாதிகள் இவற்றிற்கு கடும் எதிர்ப்புக் காட்டுகின்றார்கள். இதனால் பிரெஞ்சுத் தலைமை அமைச்சர் பதவி விலகி அங்கு ஆட்சிய் மாற்றம் ஏற்படவிருக்கின்றது. பிரெஞ்சுப் பொருளாதாரம் 2014-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 0.2 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது.
எகிறும் இந்தியா
ஆண்டொறின்ற்கு ஒரு கோடி வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு உண்டு. இதற்கு இந்தியா குறைந்த அளவு எட்டு விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் 4ஐந்து விழுக்காட்டிலும் குறைவாகவே வளர்ந்தது. 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.6 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்தது. இக்காலாண்டில் இந்தியக் கைத்தொழில் துறை நிலக்கரிச் சுரங்கத் துறை ஆகியன தேய்வைச் சந்தித்தன. 2014-ம் ஆண்டு இந்திய ரூபாவின் பெறுமான வீழ்ச்சியைத் தடுக்க இந்திய மைய வங்கி வட்டி விழுக்காட்டை அதிகரித்தது. 2015-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் ஐந்து விழுக்காடு வளர்ச்சியை எட்டலாம். 2015-ம் ஆண்டு 5 முதல் 5.6 விழுக்காடு வளர்ச்சி ஏற்படலாம். இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உள்ளகக் கட்டுமானங்களில் பெரும் முதலீடு செய்ய வேண்டி இருக்கின்றது. இதற்கு அந்நிய முதலீட்டை வரவேற்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகக்த் தெரியவில்லை. இரசியாவிற்கு எதிரான முலதனத் தடை இந்தியாவில் அந்நிய முதலீட்டை இலகுவாக்குவதுடன் மலிவாகக் கிடைக்கவும் செய்யும். நரேந்திர மோடி தனது பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியனை நியமிப்பது அவர் இந்தியாவை சந்தைசார் பொருளாதாரமாக “சீர்திருத்தப்” போகின்றார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இவர் ஏற்கனவே இந்திய மைய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட ரகுராம் ராஜனுடன் இணைந்து நூல்கள் எழுதுவதிலும் ஆய்வுப் பத்திரங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டவர்.
பிரேசில்
பிரேலின் மைய வங்கி பொருளாதாரத்தை ஊக்குவிக்க நாலரை பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வழங்குதலை செய்ய முனைகின்றது. இது பிரேசிலின் இரண்டாவது பெரிய முயற்ச்சியாகும். பிரேசிலின் பொருளாதாரம் 2014-ம் ஆண்டு 1.8 விழுக்காடு மட்டுமே வளரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரேசிலிய மைய வங்கி பொருளாதாரம் 2.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்வு கூறியிருந்தது. பிரேசிலிய மைய வங்கி நாட்டின் பணவீக்கம் 4.5 விழுக்காட்டிலும் குறைவானதாக இருக்க வேண்டும் என முயல்கின்றது. ஆனால் தற்போதைய பனவிக்கம் 6.2 விழுக்காடாகும்.
சீன நாட்டாண்மைகளும் கூட்டாண்மைகளும்
கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் மைய வங்கியும் அரசும் நான்கு பெரும் பிரச்சனைகளை எதிர் கொண்டிருந்தன:
1. வீடு மற்றும் கட்டிங்களின் (Real Estate) விலை அதிகரிப்பு.
2. உள்ளூராட்சிச் சபைகளின் கட்டுக்கடங்காத கடன்கள்.
3. நிழல் வங்கிகள் (Shadow Banking) எனப்படும் பதிவு செய்யாத கடன் வழங்கு நிறுவனங்களின் அதிகரிப்பு.
4. கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) பளு அதிகரிப்பு.
இப்பிரச்சனைகளால் சீனப் பொருளாதாரம் பெரும் பிரச்சனைக்கு உள்ளாகி திடீர் சரிவை சந்திக்கலாம் என 2014-ம் ஆண்டின் ஆரம்பத்தில் பல பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியிருந்தனர். இதில் கூட்டாண்மைகளின் கடன் பளு சீன மைய வங்கிக்குப் மிகப்பெரும் சவாலாகும். சீனாவில் உள்ள கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) உலகிலேயே பெரியதாகும். 2013-ம் ஆண்டு இக்கடன் 142ரில்லியன்(14,200 கோடி) அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் கூட்டாண்மை எனப்படும் பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் (Corporate Debt) 13.1ரில்லியன்கள் மட்டுமே. சீனக் கூட்டாண்மைகளின் கடன் சீனவின் மொத்தத் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 120 விழுக்காடாகும். 2014-ம் ஆண்டு மார்ச் மாத முற்பகுதியில் சீன நிறுவனமான Shanghai Chaori Solar தனது கடன நிலுவைகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டமை சீன பெரிய வியாபார அமைப்புக்களின் கடன் மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியது. கடன் மீளளிப்பு வலுக்களைத் தரவரிசைப் படுத்திப் பட்டியலிடும் நிறுவனமான Standard & Poor சீனாவின் கூட்டாண்மைகளின் கடன் பளு ஆபத்தான வகையில் உயர்வாக இருக்கின்றது என அறிவித்தது. 1. சீனப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்த படியால் கூட்டாண்மைகளின் நிதிநிலைமை பாதிப்படைந்தமை; 2. சீன அரசு நாட்டில் கடன் வழங்குதல்களைக் கட்டுப்படுத்தியமை; 3. அதிகரித்த வட்டி ஆகியவை சீனக் கூட்டாண்மைகளின் கடன் பளுவை அதிகரித்தன. சீனக் கூட்டாண்மைகளின் இலாபத்திறன் ஆறு விழுக்காடாக இருக்கும் நிலையில் அவற்றின் கடன்களின் வட்டி விழுக்காடு ஏழிற்கும் அதிகமாக இருப்பது ஒரு நல்ல பொருளாதார அறிகுறியல்ல. சீனக் கூட்டாண்மைகளின் நிதிப் பாய்ச்சல் சீராக இல்லாத்தால் கடன்பளு மேலும் அதிகரிக்கின்றது. நிதிப் பாய்ச்சல் குறைவதால் கடன் படுதலைத் தொடர்ந்து கடன் பளுவால் நிதிப்பாய்ச்சல் குறைதன் என்பது ஒரு தொடர் சுழற்ச்சியாகி நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கின்றன. நிறுவனங்களின் கடனுக்கும் அதன்மொத்தப் பெறுமதிக்கும் அதன் உள்ள விகிதாசாரம் கடன் நெம்புத் திறனாகும்(debt leverage). சீனாவில் நிதி நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய கூட்டாண்மைகளின் கடன் நெம்புத் திறன் 113 விழுக்காடாக இருக்கின்றது. அதாவது ஒரு மில்லியன் பெறுமதியான ஒரு கூட்டாண்மை 113 மில்லியன்கள் கடன் பட்டுள்ளது. இந்தக் கடன் நெம்புத்திறன் குறைவதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை.
2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி சீனாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதைத் தடுக்க சீன அரசு சீனப் பொருளாதாரத்திற்கு நான்கு ரில்லியன் யூவான்களை உட்செலுத்தியது. இதில் பெரும் பகுதி கூட்டாண்மைகளுக்கு கடன்வழங்குவதாக அமைந்தது. அவற்றில் பெரும்பகுதி சீனா முன்னுரிமை கொடுத்த துறைகளில் முதலிடப் படவேண்டும் எனபது சீன அரசின் நிபந்தனையாக இருந்தது. ஆனால் அத்துறைகள் இலாபத் திறன் குறைந்தனவாக இருந்தன. தற்போது சீனவின் கூட்டாண்மைகளின் கடன்களில் நிலுவை செலுத்த முடியாத கடன்கள்(non-performing loans அதாவது உரிய நேரத்தில் மாதாந்த கடன் கொடுப்பனவையோ அல்லது வட்டிகளையோ கொடுக்க முடியாத கடன்கள்) அதிகரித்துச் செல்கின்றன. இது ஒரு ஆபத்தான நிலை என கூட்டாண்மைகளின் கடன்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனாவின் மேற்பார்வை செய்யும் National Development and Reform Commission இன் கூட்டாண்மை கடன் வழங்குதலை மேற்பார்வை செய்யும் பிரிவில் சீன அரசு பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. அப்பிரிவின் தலைவரை இடமாற்றம் செய்து புதியவரை அப்பதவிக்கு அமர்த்தியுள்ளது.தற்போது கூட்டாண்மைத் துறையில் ஏற்பட்டது போன்ற ஓர் ஆபத்தான கடன் அதிகரிப்பு 1998-இல் இருந்து 2001-ம் ஆண்டு வரை சீன அரச துறையில் ஏற்பட்டது. அப்போது சீன அரசு சீனப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக உள்கட்டமைப்புக்களிலும் (infrastructure) வீடுகள் மற்றும் கட்டிங்களிலும் (Real Estate)பாரிய முதலீடுகளைச் செய்தது. இதற்காக சீன அரசு பெருமளவில் கடன்பட்டது. கடன் பளுவைக் குறைக்கும் முகமாக வட்டி விழுக்காடு செயற்கையாக குறைந்த நிலையில் வைத்திருக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து வந்த பத்து ஆண்டுகளில் சீனப் பொருளாதாரம் பெரு வளர்ச்சியைக் கண்டது. 1998இல் இருந்து 2001 ஆண்டு வரை சீன அரச கடனின் அசூர வளர்ச்சி ஆபத்தானது எனப் பொருளாதார நிபுணர்கள் அப்போதும் எச்சரித்தனர். ஆனால் சீனா அந்தக் கடன் பளுவைச் சமாளித்து விட்டது. 1996-ம் ஆண்டு ஜப்பானின் அரச கடன் நெம்புத்திறன் எண்பது விழுக்காடாக இருந்த போது ஜப்பான் கடன் நெருக்கடியைச் சந்திக்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் தற்போது ஜப்பானில் அரச கடன் நெம்புத்திறன் இருநூறு விழுக்காடாக உயர்ந்து விட்டது. ஜப்பான் கடன் நெருக்கடியைச் சந்திக்காமல் தன் கடன் பளுவைச் சமாளித்துக் கொண்டே இருக்கின்றது. சீனா தனது பொருளாதாரத்தை சந்தை சார் பொருளாதாரமாகச் சீர்திருத்தம் செய்வதை மேலும் துரிதப்படுத்தும் போது அது பலதுறைகளில் பொருளாதார் முன்னேற்றம் அடையும். அப்போது சீனக் கூட்டாண்மைகளின் இலாபத் திறன் அதிகர்த்து அவற்றால் கடன்பளுவைச் சமாளிக்கக் கூடிய நிலை ஏற்படுமென நம்பலாம்.
தீக்குள் விரலை வைத்த இரசியா
இரசியப் பொருளாதாரம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பவர்களால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றது. இரசியாவின் மக்கள் தொகை குறைந்து கொண்டு செல்வது அதன் மொத்த தேசிய உற்பத்தியைப் பாதிக்கின்றது. நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் பெரும்பாலும் படித்த இளைஞர்கள். இது போதாது என்று இரசியா உக்ரேன் விவகாரத்தில் தலையிட்ட படியால் அதற்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வந்த பொருளாதாரத் தடை இரசியாவைப் பாதிக்கத் தொடங்கி இருக்கின்றது. இரசியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அலெக்ஸி உல்யுகயேவ் இரசியப் பொருளாதாரம் தேய்வுச் சுழற்ச்சிக்குள் நுழைந்து விட்டது என்கின்றார். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிதும் தங்கி இருக்கும் இரசியப் பொருளாதாரத்தை சீனாவையும் இந்தியாவையும் நோக்கி நகர்த்தும் முயற்ச்சி வெற்றியளிக்க நீண்ட நாட்கள் எடுக்கும். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் எரி வாயு விநியோகம் செய்ய பெரும் முதலீட்டை இரசியா செய்ய வேண்டியிருக்கும். இரசியாவின் மூலதனத் தேவையில் அரைவாசிப் பங்கு மேற்கு நாடுகளிடம் இருந்தே பெறப்படுகின்றன. இதனால் இரசியாவின் எரிவாயு விநியோகத்திற்கு ஆப்பு வைக்க மேற்கு நாடுகள் இரசியாவிற்கான மூலதனத் தடையை மேற்கொள்ளவிருக்கின்றன.
தற்போது மத்திய கிழக்கிலும் உக்ரேனிலும் இருக்கும் கொதி நிலை 2015-ம் ஆண்டு தென் சீனக் கடல் கிழக்குச் சீனக் கடல் தாய்வான் எனப் பல இடங்களில் விரிவடைய வாய்ப்புண்டு. 2017-ம் ஆண்டின் மையப் பகுதிக்குப் பின்னர்தான் உலகப் பொருளாதாரம் தற்போதைய மந்த நிலையில் இருந்து மீட்சியடையும்.

Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...