அரபு வசந்தம் என்னும் பெயரில் நேட்டோப்படைகள் குண்டு மாரி பொழிய கேணல் மும்மர் கடாஃபின் ஆட்சி லிபியாவில் கவிழ்க்கப்பட்டு நீதிக்குப் புறம்பான வகையில் கடாஃபியும் கொல்லப்பட்டார். உலகிலேயே சிறந்த சமூக நலக் கொடுப்பனவுகளுடன் கடாஃபி ஆட்சி செய்த லிபியா இப்போது பிளவு படும் நிலையை அடைந்துள்ளது. பல இனக் குழுமங்கள் பல படைக்கலன் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. பலவீனமான லிபிய மைய அரசுக்கு எதிராக எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களின் மக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
லிபிய வரலாற்றில் முதன் முறையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சர் அலி ஜெய்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி அவர் நாட்டை விட்டு ஓடிவிட்டார். மொத்தத்தில் லிபியாவில் அரபு வசந்த்ம் அரபு இலை உதிர்காலமாக மாறிவிட்டது. லிபிய அரமைப்புச் சபைக்கான தேர்தலில் ஐந்தில் ஒரு பகுதிக்கு மேலான உறுப்பினர்களை தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலின் போது நடந்த வன்முறைகள் இதற்குக் காரணமாகும்.
பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா.
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன. இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாச்சார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன. மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. மும்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது. கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல் வாஹீர் ஆகிய இனக் குழுமங்கள் முக்கியமானவை. கடாஃபியின் மனைவி வார்ஃப்ல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.
காடாஃபியின் தேச ஒருமைப்பாடு
கடாஃபியின் ஆட்சியின் கீழ் இவ்வினக் குழுமங்களிடை மோதல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த இனக் குழுமங்களுக்கிடையிலான குரோதத்தை கடாஃபி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கடாபிக்கு எதிரான போர் ஆறு மாதங்கள் எடுத்தமைக்கு அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையின்மையே காரணமாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி மோதவும் செய்தனர். கடாஃபியிடம் இருந்து கைப்பற்றப் பட்ட இடங்களி இருந்த சில இனக் குழுமங்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களால் தாக்கப்பட்ட, கொளையிடப்பட்ட, பெண்கள் வன்முறைக்குள்ளான, சம்பவங்கள் நிறைய நடந்தன.
மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் பல தலைவர்கள் இருந்தனர். அவர்களில் மதவாதிகள், அரபுத் தேசியவாதிகள், மதசார்பற்றவர்கள், சமத்துவ வாதிகள், மேற்குலக ஆதரவாளர்கள் எனப் பல தரப்பட்டவர்கள் இருந்தார்கள். ஆனால் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தலைவர் என்று ஒருவர் கூட இல்லை. ஓரளவுக்குப் பலராலும் அறிய்பபட்டவர் மும்மர் கடாஃபிக்கு நீதி அமைச்சராக இருந்த முஸ்தபா அப்துல் ஜலீல். ஆனால் இவரைப் பலர் கடாஃபியின் முன்னாள் அமைச்சர் என்ற வகையில் பலத்த சந்தேகத்துடனேயே பார்த்தனர்.
கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி.
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இசுலாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான் மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவுதி அரேபியாவின் சில பிரதேசங்களை ஈரான் கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. .ஈரான் ஹிஸ்புல்லா மற்றும் ஹாமாஸ் போன்ற இசுலாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் சியா முசுலிம்களின் அமைப்பாகும். ஆனால் அல் கெய்தா ஒரு சுனி முசுலிம்களின் அமைப்பாகும். அல் கெய்தாவிற்கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல் கெய்தாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல் கெய்தா ஈரானில் எந்த வித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல் கெய்தாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா. இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகிறது, ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல் கெய்தாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல் கெய்தாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன. சிரியாவில் அல் கெய்தாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் லிபியா, எகிப்து, எதியோப்பிய ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்ச்சி பெற்ற அல் கெய்தாவினரே எகிப்தில் ஊடுருவி இருப்பதாக எகிப்தியக் காவற்துறை கண்டறிந்துள்ளது. 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நையீரியாவில் ஈரானில் தாயாரான படைக்கலன்களை அல் கெய்தாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல் கெய்தா பாவிப்பது கண்டறியபப்ட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல் கெய்தாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.
பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica) லிபியாவில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்காவில் இருந்து கிடைக்கின்றது. லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம் அதை உலகில் உள்ள மிகவு செலந்த நாடுகளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன் எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவும். சைரெனைக்கா தனக்கு என ஒரு மைய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணையை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரகு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்துள்ளது.
கடாஃபியின் மகன்கள்
கடாஃபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னர் கைது செய்யப்பட்ட அவரது 40 வயதான கால்பந்தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசாரணையின் போது அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதி கடாஃபி உட்பட 39 மும்மர் கடாஃபியின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார்கள் என்பது புதிய அரசு எப்படி மக்களாட்சி முறைமையை மதித்து நடக்கும் என்பதற்கான அளவுகோலாகக் கருதப்படுகின்றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங்கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.
லிபியாவின் பொதுத் தேசிய சபை
லிபியா பிளவுபடாமல் தடுக்கவும் லிபியாவில் அமைதியை நிலைநாட்டவும் லிபியாவின் பொதுத் தேசிய சபை பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. அது இடைக்காலத் தலைமை அமைச்சரால அப்துல்லா அலி தின்னியை நியமித்துள்ளது அவரது பதவிக்காலம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை நீடிக்கப்படுகின்றது. லிபியா பிளவு படாமல் தடுக்கக் கூடியதாகவும் படைக்கலன்கள் ஏந்திய குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொலைகள் செய்வதைத் தடுக்கக் கூடியாதாகவும் ஒரு அமைச்சரவையை அவர் உருவாக்கவேண்டும் எனப் பணிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரால் அப்படி ஒரு அமைச்சரவையை உருவாக்க முடியவில்லை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இனக்குழுமங்களையும் படைக்கலன் எந்திய குழுக்களையும் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் அவரால் ஓர் அமைச்சரவையை உருவாக்க முடியாததால் அவரால் அப்பதவியில் தொடர முடியவில்லை. தான் இடைக்காலத் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். இரண்டாவது மருமகன் வந்தால்தான் மூத்த மருமகனின் அருமை தெரியும்.
Tuesday, 15 April 2014
Sunday, 13 April 2014
விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்துக்கு அமெரிக்காவின் பதிலடி
ஐக்கிய அமெரிக்கா தனது கடற்படையினருக்கு என புதிய வகை லேசர் படைக்கலன் முறைமையை உருவாக்கியுள்ளது. இந்த
லேசர் படைக்கலன் முறைமை அமெரிக்கக் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில்
இணைக்கப்படவுள்ளன. இந்த லேசர் படைக்கலன் முறைமையை ஆங்கிலத்தில் Laser
Weapon System எனவும் சுருக்கமாக (LaWS) எனவும் பெயரிடப்பட்டுள்ளன. இந்தப்
லேசர் படைக்கலன்கள் விரைவாக அசையும் சிறு படகுகளையும் ஆளில்லா வேவு
விமானங்களையும் இலகுவாக தொலைவில் வைத்தே அழிக்கக் கூடியன. இந்த லேசர்
படைக்கலன்கள் பொருத்திய Arleigh
Burke-class வகையைச் சேர்ந்த USS Dewe நாசகாரிக் கப்பல்கள் மத்திய
கிழக்கின் வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்.
மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய கடற்போக்குவரத்து நிலையமான ஹோமஸ் நீரிணணக்கு அண்மையாக ஈரான் இருக்கின்றது. இதனால ஈரானின் பூகோளவியல் இருப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானின் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள நீரிணையாகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது.
ஈரானிற்கு அண்மையில் உள்ள ஹோமஸ் நீரிணையை ஈரான் தனது ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்தைப் பாவிப்பதாகக் நம்பப்படுகின்றது. இதற்காக அவர்களின் மிகைவிரைவுப் படகுகளையும் அதன் தொழில் நுட்பத்தையும் இலங்கையிடமிருந்து ஈரான் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் 2010-ம் ஆண்டு அடிபட்டன. இலங்கை அரசின் பெரிய கடற்படைக் கப்பல்களையும் வழங்கு கப்பல்களையும் தாக்கி அழிக்க குளவி குத்தல் தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தனர். இதன்படி இலங்கை அரசின் பெரிய கப்பலை நோக்கி விடுதலைப் புலிகளின் அதிக எண்ணிக்கையான சிறிய படகுகள் தாக்கச் செல்லும் இலங்கை அரசின் கப்பல் அவற்றை நோக்கிச் சுட்டுக்கொண்டிருக்கும் போது ஒரு கடற்கரும்புலிகளின் படகு மிக வேகமாக இலங்கை அரசின் கப்பலை நோக்கிச் சென்று அத்துடன் மோதி வெடித்து அக்கப்பலை அழிக்கும். ஈரான் இதே முறையை அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படகுகளையும் ஹிஸ்புல்லாப் போராளிகளையும் பாவித்து தாக்குதல் செய்யும் திட்டத்தை உருவாக்கியிருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கவே கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா ஆய்வு செய்து லேசர் படைக்கலன் முறைமை ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்துடன் அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிய விரைவாக அசையும் சிறு பொருட்களைத் தொலைவில் இருந்தே இனம் காணும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ஈரானின் திட்டத்தை அமெரிக்கா முறியடிக்கவுள்ளது

குரங்காக மாறிய காங்கிரசின் பிள்ளையர்
ஊழல் எதிர்ப்புக்கு என அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிற்கு எதிரான வாக்குக்களைப் பிரித்து காங்கிரசின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசின் திரைமறைவு ஆதரவு இருந்ததாகவும் வதந்திகள் அடிபட்டன.
இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெரும் பங்காற்றவிருக்கின்றது. 180 முஸ்லிம் வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாத நிலை இருக்கின்றது. 35 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 30% இற்கும் அதிகம். மேலும் 180 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 10%இற்கும் அதிகம். இதனால் இந்தியாவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான 543 தொகுதிகளில் 215 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றது. 96% அதிகமான முஸ்லிம்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த கல்வி ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த மூன்று அம்சங்களிலும் காங்கிரசு தோல்வி கண்டதாக பரவலான கருத்து நிலவுகின்றது. இந்தியா முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பொதுவான தேர்தல் கட்சியோ அல்லது தேர்தல் கொள்கையோ இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் இவர்களின் வாக்கு வங்கி பல்வேறுபட்ட கட்சிகளிக்காகப் பிளவுபடுகின்றது.
நரேந்திர மோடிக்கு எதிரான காங்கிரசின் வலுமிக்க படைக்கலன் ஆக இருந்த முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கிக்கு பெரும் ஆபத்து ஆம் ஆத்மி கட்சியினால் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு. 2ஜி அலைக் கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும்.
காங்கிரசின் உலக சாதனை படைத்த ஊழல்களால் முஸ்லிம் வாக்காளர்களும் காங்கிரசின் மீது பெரு வெறுப்பு அடைந்துள்ளனர். இவர்கள் காங்கிரசுக்கு எதிராககத் திரும்பி ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். 2009-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்கு காங்கிரசின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றின. பல தொகுதிகளில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளில் 25% முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்குகளே. கணிசமான அளவு முஸ்லிம்கள் மோடி தலைமையில் நல்லாட்சி அமையும் என நம்பி பாரதி ஜனதாக் கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். இதற்கான ஆதரம் டில்லி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஏழு பாரளமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பின் போது கிடைத்ததாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரசின் மூத்த அமைச்சரான கபில் சிபால் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் சாய்வதால தோல்வியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது அதிக அளவிலான முஸ்லிம்களைக் கொண்ட டில்லிப் பிராந்தியம் இதுவரை முஸ்லிம்களின் வாக்கு வங்கியால் காங்கிரசின் கோட்டையாகவே இருந்தது. ஆனால் இம்முறை நடந்த தேர்தலில் அதிக அளவிலான முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தமையினால் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி டில்லிப் பிராந்தியத் தொகுதிகளில் பெரும் வெற்றி ஈட்டும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, 9 April 2014
இந்தியத் தேர்தல் ஒரு பார்வை
எண்பத்தி ஒரு கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து மே 12-ம் திகதிவரை நடைபெறும். அதாவது தேர்தல் 36 நாட்கள் நடைபெறும். மே 16-ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்தியாவின் தேர்தலைப் பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும்.
அதிக எண்ணிக்கையான் இளம் வாக்காளர்கள்
81 கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முப்பத்து எட்டுக் கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் 18-இற்கும் 35இற்கும் இடைப்பட்ட வயதினரே. இவர்களில் பெரும் பான்மையானவர்களை எந்த அரசியல்வாதியும் கவரவில்லைசிறந்த கல்வி, சிறந்த பொருளாதாரம், ஊழலற்ற ஆட்சி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சிறந்த மருத்துவ வசதி என இவர்களது நீண்ட தேவைப் பட்டியலை எந்த ஒரு அரசியக் கட்சிகளாலும் நிறைவேற்ற் முடியாது.
முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் மோடி
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற முன்னர் தனது கட்சியைப் பிடிப்பதில் வெற்றி கண்டு கொண்டிருக்கின்றார். மோடியின் கட்சியைப் பிடிக்கும் முயற்ச்சி அவரது கட்சியில் பிளவுகளை உருவாக்கியுள்ளது என்ற செய்தி அண்மைக் காலங்களாக கடுமையாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங் தான் கேட்ட தொகுதியில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காமையினால் கட்சி சார்பில் போட்டியிடாமல் தன்விருப்ப வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். இதற்காக ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். தான் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதாக ஜஸ்வந்த் சிங் ஊடகங்களிற்கு கண்ணீருடன் பேட்டியளித்தார். இன்னும் ஒரு மூத்த தலைவரான சுஸ்மா சுவராஜ் அவர்களும் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றார். இந்தியாவில் வீசும் மோடி அலையில் சுஸ்மா சுவராஜ் ஒதுக்கப்பட்டார் எனச் சொல்லலாம்.
ஆனால் பாரதிய ஜனதாக் கட்சியின் மிகவும் மூத்த தலைவரான எல் கே அத்வானி தான் மோடியுடன் நன்கு ஒற்றுமையாக இருப்பதாகக் காட்சிப்படுத்தியுள்ளார். எல் கே அத்வானி தனது தேர்தல் வேட்பு மனுத் தாக்கலிற்கு மோடியை உடன் அழைத்துச் சென்றதுடன் நரேந்திர மோடியை சிறந்த நிர்வாகி எனப் புகழந்துள்ளார். மேடியின் நிர்வாகத் திறன் அவரை இந்தியாவின் சிறந்த தலைமை அமைச்சராகச் செயற்பட உதவும் என்றார் எல் கே அத்வானி.
நரேந்திர மோடி தேசிய அளவில் பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னணித் தலைவர்களான யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஸி, சுஸ்மா சுவராஜ், எல் கே அத்வானி ஆகியோரை ஓரம் கட்டி தலைமை அமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.
முன்னாள் கல்வி அமைச்சரான முரளி மனோகர் ஜோஸியின் தொகுதியை மோடி தனதாக்கி தான் போட்டியிடுகின்றார். வேண்டா வெறுப்புடன் ஜோஸி தனது தொகுதியை மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். மோடி தனது வெற்றியை உறுதி செய்ய Vadodara and Varanasi, ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.
ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் பல முன்னணித் தலைவர்களை ஓரம் கட்டி முதலமைச்சர் ஆனவர் மோடி. குஜராத்தில் மூன்று தடவை முதலமைச்சராகத் வெற்றி பெற்ற மோடி அங்கு ஒரு தனிமனித அமைச்சரவையையே நடத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு உண்டு. பல முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை மோடியே வைத்திருப்பார். மோடி எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்துபவர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது.
என்னதால் மோடி அலை வீசினாலும் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெறமாட்டாது எனப் பல கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன. 543 தொகுதிகளில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி 240 இற்கும் 260இற்கும் இடையிலான தொகுதிகளில் வெற்றி பெறலாம என எதிர்பார்க்கப்படுகின்றது.
2014 -ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடக்க விருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெற முடியாது என்ற நிலையில் ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும்.
தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முதலாம் இடத்தையும் காங்கிரசுக் கட்சி இரண்டாம் இடத்தையும் பெறும் நிலையில் அம்மா ஜெயலலிதாவின் அண்ணா திரவிட முன்னேற்றக் கழகம், உத்தரப் பிரதேசத்து அக்கா மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மேற்கு வங்கத்து அக்கா மம்தா பனர்ஜீயின் திரினாமூல் காங்கிரசு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. இவை மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் மூவரும் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சராகும் கனவுடன் இருக்கின்றார்கள். இவர்களிடை கடுமையான குணாதிசிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. ஆடமபரமான வாழ்கையையும் விலை உயர்ந்த அணிகலன்களையும் விரும்பும் திமிர் பிடித்தவர் ஜெயலலிதா அம்மா. இவர் தான் அம்மா என அழைக்கப்படுவதை விரும்புபவர். திரினாமூல் காங்கிரசுக் கட்சியின் தலைவியான மம்தா பனர்ஜீ மிகவும் எளிமையாக ஆடைகளை அணிவார். இவர் அமெரிக்கா சென்ற போது இவரது மருமகள் தனக்கு முகப்பூச்சு வாங்கி வரும்படி வேண்டியிருக்கின்றார். முகப்பூச்சு அனுபவம் இல்லாத மம்தா ஆண்களின் முகப்பூச்சை வாங்கி வந்து மருமகளுக்குப் பரிசளித்திருக்கின்றார். பொதுவுடமைக் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி தான் ஆட்சியைக் கைப்பற்றிச் சாதனை புரிந்தவர் மம்தா. பார்ப்பன எதிர்ப்பில் உருவான திராவிட இயக்கத்தின் கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தன்வசமாக்கிச் சாதனை புரிந்தவர் பார்ப்பனத்தியான ஜெயலலிதா. ஜெயலலிதா கன்னடத்து உயர் சாதி அய்யங்கர் சமூகத்தை சேர்ந்தவர் என்றால் மயாவதி அக்கா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் காங்கிரசின் கோட்டையாக இருந்த உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி முதல்வராகிச் சாதானை புரிந்தவர் மயாவதி. இவருக்குப் பிடித்தமானது அதிக செலவு செய்து தனக்குத் தானே சிலை அமைப்பது. இதனால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து தேர்தலில் தோல்வியுற்று முதல்வர் பதவியை இழந்தவர். எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத இடத்து இந்த இரண்டு அக்காக்களும் ஒரு அம்மாவும் முக்கியத்துவம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவின் கட்சி 23இற்கும் 26இற்கும் இடைப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறலாம். மயாவதியில் திரிணாமுல் காங்கிரசு மேற்கு வங்கத்தில் இதே எண்ணிக்கையான தொகுதிகளில் வெற்றி பெறலாம. மாயாவதி 7 இடங்களில் வெற்றி பெறலாம். ஜெயலலிதா தலைமை அமைச்சராக வருவதைத் தான் ஆதரிப்பதாக மம்தா ஏற்கனவே அறிவித்து விட்டார்.
இந்தியத் தேர்தல்களத்தில் முக்கியமான மாநிலங்கள்..
உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதல் தடவையாக பாரதிய ஜனதாக் கட்சி தனது செல்வாக்ககி கணிசமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாடிக் கட்சி இரண்டு இடங்களைப் பெறுவதே கடினம். புதிதாக உருவான ஆம் ஆத்மி கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆந்திரா: தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தை காங்கிரசுக் கட்சி தெலுங்கான என்றும் சீமந்திரா என்றும் இரு மாநிலங்களாகப் பிரித்தது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 42 தொகுதிகள் உண்டு. இதனால் சீமதிராவில் காங்கிரசு படு தோல்வியைச் சந்திக்கும். தெலுங்கானாவில் மாநிலத்தைப் பிரித்தமைக்காக சில தொகுதிகளில் வெற்றி பெறலாம்.
மேற்கு வங்கம்: 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏற்கனவே சொன்னது போல் மம்தா பனர்ஜீ அமோக வெற்றி பெறுவார். அங்கு பாரதிய ஜனதாக் கட்சிக்கு இடமில்லை எனச் சொல்லலாம். நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் சென்ற தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டும் பாஜகா வெற்றி பெற்றது, இம்முறை அரைவாசி இடங்களைக் கைப்பற்றலாம்.
பிஹார்: நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலத்தில் நிதிஸ் குமாரின் ஜனதளம் கட்சி, லாலுபிரசாத் யாதவ்வின் ராஸ்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. சில தொகுதிகளில் காங்கிரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு உரிய வேட்பாளர்களை நிறுத்துவதே சிரமமாக இருக்கின்றது. இதனால் காங்கிரசுக் கட்சி தனது தோழமைக் கட்சியான ராஸ்ரிய ஜனதா தளம் கட்சியிடமிருந்து ஒரு வேட்பாளரைக் தானமாக வாங்கி தேர்தலில் போட்டியிட வைக்கின்றது.
தமிழ்நாடு: 39 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஓரிரு தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற வாய்ப்புண்டு. காங்கிரசு ஒரு இடத்தில் தன்னும் வெற்றி பெற மாட்டாது. அதிகப்படியான இடங்களில் ஜெயலலிதாவும் அடுத்தபடியாக கருணாநிதியின் திமுகவும் வெற்றி பெறும்.
காங்கிரசின் கோட்டைகளில் ஒன்றான கேரளாவில் இம்முறையும் காங்கிரசுக் கட்சி வெற்றி பெறும். அதேவேளை இன்னும் ஒரு காங்கிரசுக் கோட்டையான ஹரியானாவில் காங்கிரசு தனது செல்வாக்கை இழந்து விட்டது. பஞ்சாப்பில் காங்கிரசுக்கும் பாஜகாவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது. 2009 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜஸ்த்தான் மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது இம்முறை ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும். 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் பாஜகா தனது செல்வாக்கை சிறிது உயர்த்தியுள்ளது.காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டைப் பார்ப்போமானால் காங்கிரசுக் கட்சி இம்முறைத் தேர்தலில் இரு நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஒன்று நூறுக்குக் கூடிய தொகுதிகளிலாவது வெற்றி பெற்று பாஜகாவிற்கு பாராளமன்றத்தில் சவாலாக வருவது. மற்றது ராகுல் காந்தியைத் தோல்வியடையாமல் செய்வது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இந்திராகாந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியின் மகனான வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் என்று தேர்தல் கூட்டத்தில் சூளுரைத்தார். இது பாஜகாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. காங்கிரசில் வெறுப்படைந்திருந்த இஸ்லாமியர்கள் காங்கிரசு தோல்வியடைந்து பாஜகா ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என்பதை வருண்காந்தியின் பேச்சால் நினைத்தர்கள். காங்கிரசுக் கட்சிதான் வருண் காந்தியை இப்படி ஒரு பேச்சை பேசும்படி தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதே போல் இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரான வருண்கான் வருண் காந்தி காங்கிரசுக் கட்சியின் ராகுல் காந்தி தனது அமேதி தொகுதிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார் என உரையாற்றியுள்ளார். இதை உடன் உணர்ந்த பாஜகா உசாரானது. வருண் காந்தியின் தாயாரான மனேக்கா கந்தி எனப்படும் மேனஹா காந்தி தனது மகன் சொல்வது தவறு எனப்பகிரங்கமாக அறிவித்தார்.
பணவலு மிக்க காங்கிரசுக் கட்சி இறுதி நேரத்தில் இப்படிப் பல உத்திகளைக் கையாளலாம்.

Thursday, 3 April 2014
அமெரிக்காவின் புதிய நீள் தூர எறிகுண்டுகள்
ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் பாவிப்பதற்கென Long
Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத்
தாக்குதல் எறிகுண்டுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை
அமெரிக்காவிடமுள்ள எறிகுண்டுகளில் மிக அதிக தூரம் பாய்ந்து தாக்கக்
கூடியவையாகும்.
Long Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத் தாக்குதல் எறிகுண்டுகள் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இலக்குகளை நோக்கிச் சென்று தாக்கக் கூடியவை. இவை தூரத்தில் இருந்தே வீசக் கூடியவை என்பதால் வீசும் படையினர் தமக்குப் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு எதிரி இலக்குகளை நோக்கி இவற்றை வீசலாம். அமெரிக்கப்படைகளுக்கான உபகரணங்களைத் தயாரிக்கும் லொக்ஹீட் நிறுவனம் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு செய்த ஒரு திட்டத்தில் இந்த எறிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 71கடல் மைல்கள் தூரம் பாயக்கூடியவை. ஒரு கடல் மைல் என்பது 1852 மீட்டர்களாகும், கடலில் இருந்து வீசப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கக் கூடியவையுமாகும்.
அமெரிக்கக் கடற்படையினருக்கு உருவாக்கப்பட்டுள்ள Long Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத் தாக்குதல் எறிகுண்டுகள் 2.2 மீட்டர் நீளமும் 155மில்லி மீட்டர் குறுக்கு விட்டமும், அரை மீட்டர் நீள் சிறகுகளும் உடையவை. ஒரு எறிகுண்டு 104கிலோ எடையுடையது. இவற்றை நாசகாரிக் கப்பல்களில் இருந்துஒரு நிமிடத்துக்கு 10 சுற்றுக் குண்டுகள் வீசக்கூடிய செலுத்திகளில் இருந்து வீசலாம். பலதரப்பட்ட எதிரி இலக்குகளை இவை துவம்சம் செய்யும்.
Long Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத் தாக்குதல் எறிகுண்டுகள் global positioning system (GPS) என்ற முறைமையைப் பாவித்து வழிகாட்டப்படும். இதனால் இந்த எறிகுண்டுகள் வழிகாட்டலுக்கு இணங்க பயணித்து எதிரி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றவை.

Tuesday, 1 April 2014
பின் லாடனைக் கண்டு பிடித்தது சித்திரவதையால் அல்ல என்கிறது அமெரிக்கப் பாராளமன்றம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத்துறையினர் பன்னாட்டு மனித உரிமை நியமங்களுக்குப் முரணான வகையில் இசுலாமிய தீவிரவாதிகள் பலரை உலகெங்கும் கைது செய்து கள்ளத்தனமாகக் கடத்தி கியூபாவில் உள்ள குவாண்டமானோ தீவில் வைத்து சித்திரவதை செய்தனர்.
சிஐஏயின் வதை முகாம்கள்
தடுப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை சிஐஏ அமெரிக்காவிற்கு வெளியே பல நாடுகளில் நிறுவி அங்கு தான் சந்தேகிப்பவர்களைத் தடுத்து வைத்திருந்து பல சித்திர வதைகளைச் செய்தது. ஜோர்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த போது அமெரிக்காவில் அல் கெய்தா சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்களைப் பெற சி ஐ ஏ உளவு நிறுவனம் Waterboarding Interrogation Techniques எனப்படும் Simulated drowning ஐப்பாவித்தது.
இந்த சித்திரவதையை விக்கிபீடியா இப்படிக் கூறுகிறது:
The prisoner is bound to an inclined board, feet raised and head slightly below the feet. Cellophane is wrapped over the prisoner’s face and water is poured over him. Unavoidably, the gag reflex kicks in and a terrifying fear of drowning leads to almost instant pleas to bring the treatment to a halt. According to the sources, CIA officers who subjected themselves to the water boarding technique lasted an average of 14 seconds before caving in. They said al Qaeda’s toughest prisoner, Khalid Sheik Mohammed, won the admiration of interrogators when he was able to last over two minutes before begging to confess.
சுருங்கக் கூறுவதானால் கைதி நீருள் மூழ்கி இறப்பது போன்ற ஒரு உணர்வைப் போலியாக ஏற்படுத்தி அதன் மூலம் அவருக்கு இறக்கப் போகிறேன் என்றபயத்தை ஏற்படுத்தி அவரை உண்மைகளைக் கக்க வைப்ப்துதான் இந்த water boarding சித்திரவதை. ஐரோப்பாவில் மட்டும் 14 நாடுகளில் சிஐஏயின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தன. இவை எந்த நாட்டுச் சட்டத்திற்கும் உட்பட்டவை அல்ல. போலந்தில் சிஐஏ இரகசியத் தடுப்பு முகாம்களில் அல் கெய்தா சந்தேக நபர்களைச் சித்திரவதை செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது. சிஐஏயின் "கைதுகளும் சிறை வைத்தலும்" எந்த ஒரு நாட்டுச் சட்டத்திற்கும் இசைய நடப்பவை அல்ல.
பலம் பெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நிலையம்.
சிஐஏயின் ஒரு பிரிவான பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் 09-11-2001இல் 300பேர் மட்டுமே பணி புரிந்தனர். 9-11 தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதில் 1200பேர் உடனடியாக இணைக்கப்பட்டனர். இப்போது அதில் 2000இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதைவிட ஒப்பந்த அடிப்படையில் வேலைசெய்யும் வெளிநாட்டினர்களின் பலர் உள்ளனர். உலகெங்கும் உள்ள அல் கெய்தா இயக்கத்து உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையத்தில் அதிகம் பேர் பணி புரிகிறார்கள் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்-பாக் பிரிவு
அல் கெய்தாவின் முக்கிய களம் ஆப்கானிஸ்த்தானிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையிலான எல்லைப் பிரதேசமாகும். இப்பிரதேசம் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டிலோ இல்லை. 9-11இன் பின்னர் சிஐஏயின் பிஏடி எனப்படும் பாக்கிஸ்த்தான் ஆப்கானிஸ்தான் பிரிவு உருவாக்கப்பட்டது. இதற்கிணங்க அமெரிக்க வெளியுறவுத்துறையும் ஆப்-பாக் கொள்கை ஒன்றை வகுத்துக் கொண்டது. சிஐஏயின் பயங்கரவாத எதிர்ப்பு நிலையமும் பிஏடியும் இணைந்து ஆப்கானிஸ்தானில் பல அல் கெய்தா எதிர்ப்பு நடவடிக்க்கைகள வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளன.
மோசமான படை அமைப்பாக மாறிய சிஐஏ
வெறும் உளவு நிறுவனமாக இருந்து கொண்டு முதலாளித்துவக் கட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் அரசுகளைக் கவிழ்த்தல் ஆட்சியாளர்களைக் கொல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சிஐஏ 9-11இற்குப்பின்னர் ஒரு படைப்பிரிவையும் தனக்கென அமைத்துக் கொண்டது. அமெரிக்காவின் படைத்துறையினர் அமெரிக்க சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு பொறுப்புக் கூறவும் வகை சொல்லவும் கடப்பாடுடையவர்கள். ஆனால் சிஐஏயின் படைப்பிரிவு அப்படி அல்ல. அப்படி ஒரு பிரிவு இருப்பதாக சிஐஏ பகிரங்கமாக சொல்வதுமில்லை. அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அப்படி ஒரு படைப்பிரிவு இல்லை என்றே கூறமுடியும். இதனால் சிஐஏயின் படைப்பிரிவு தன்னிச்சையாக பயங்கர நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.
சிஐஏயின் படைப்பிரிவு ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது.
சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் சிஐஏயின் படைப்பிரிவு எந்தவிதக் சட்டக் கட்டுப்பாடுமின்றி ஒரு ஒட்டுக் குழுபோல் செயற்படுகிறது என்று பகிரங்கமாகக் கூறுகின்றனர்.
சிஐஏயின் ஆளில்லா விமானங்கள்
சிஐஏயின் படைப் பிரிவினர் ஆளில்லாப் போர் விமானங்கள் பலவற்றைத் தம்வசம் வைத்திருக்கின்றன. இவை உண்மையில் கொல்லும் எந்திரங்கள். ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானிலும் அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றியில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிஐஏ மேலும் நவீன மயப்படுத்தப்பட்ட ஆளில்லாப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஆராச்சிக்குப் பெரும் பணம் செலவழித்துள்ளது. ஆப்-பாக் எல்லையில் உள்ள அல் கெய்தாவினர் பற்றிய தகவல்களை அறிந்து அதை அமெரிக்கப்படியினருக்கு அறிவித்து அவர்கள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட முன்னர் அல் கெய்தாவினர் நகர்ந்து விடுவார்கள். தாக்குதலுக்கான பெரிய விமானங்கள் தளத்தில் இருந்து கிளம்பும் தகவல் அல் கெய்தாவினருக்குச் சென்று விடும். சிஐஏ தனது சொந்த ஆளில்லா விமானங்கள் மூலம் உடனடித் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். சிஐஏயின் ஆளில்லாப் போர்விமானங்கள் இதுவரை இரண்டாயிரத்திற்கும் அதிகமான அல் கெய்தா உறுப்பினர்களைக் கொன்றுவிட்டன. அல் கெய்தாவில் இணைபவர்களிலும் பார்க்க அதிகமானவர்களைத் தாம் கொல்கிறோம் என்று சிஐஏ பெருமைப்பட்டுக் கொள்கிறது. கடந்த ஒரு வருடமாக யேமனிலும் சிஐஏயின் ஆளில்லா விமானங்கள் பல தாக்குதல்களை மேற் கொண்டன. ஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்தானிலும் சிஐஏ தளங்களை அமைத்து இந்த ஆளில்லா விமானங்களை இயக்குகின்றது. சிஐஏயின் படைப்பிரிவினர் பாக்கிஸ்தான் அரசுக்கோ படைத்துறைக்கோ தெரியாமல் அங்கு பல தாக்குதல்கள், கைதுகள், கடத்தல்கள், கொலைகள் பலவற்றைச் செய்கின்றனர். இதன் உச்சக்கட்டம்தான் பில் லாடன் கொலை.
பிடித்துக் கொல்லுதலும் கொன்று பிடித்தலும்
அல் கெய்தாவினருக்கு எதிரான சிஐஏயின் நடவடிக்கைகள் பிடித்துக் கொல்லுதல் என்ற செயற்பாட்டில் இருந்து கொன்று பிடித்தல் என்ற செயற்பாட்டுக்கு மாறியுள்ளதாகச் சிலர் தெரிவித்தனர். சிஐஏ தேவை ஏற்படும் போது தடை செய்யப்பட்ட நிலக்கண்ணி வெடிகளையும் பாவிக்கத் தயங்குவதில்லை என்றும் சில செய்திகள் கூறின. பின் லாடனைப் பிடித்துக் கொல்லப் போன அமெரிக்க சீல் படையினர் பின் லாடனின் மனைவி தற்கொலை அங்கி அணிந்திருக்கலாம் என்ற அச்சத்தில் பின் லாடனைக் கொன்று பிடித்தனர்.
கோழியா? முட்டையா?
சிஐஏ 9-11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் தனது நடவடிக்கைகளை பலமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்கிறதா அல்லது தனது நடவடிக்கைகளை பலமாகவும் தீவிரமாகவும் மேற்கொள்ள இரட்டைக் கோபுரத்தாக்குதலை சிஐஏ ஒழுங்கு செய்ததா என்ற கேள்வியும் இன்றுவரை உண்டு. Andreas von Bulow என்ற ஜெர்மனியர் த்னது The CIA and September 11என்ற நூலில் இந்தக் கேள்வியையே முன்வைத்தார்.
அமெரிக்கப் பாராளமன்றத்தின் விசாரணையும் அறிக்கையும்.
அமெரிக்கப் பாராளமன்றத்தின் அவைகளான மக்களவை(காங்கிரஸ்) மூதவை(செண்ட்) ஆகியவற்றின் தெரிவுக்குழுவினர் மேற்கொண்ட விசாரனையின்படி அமெரிக்கப்பாதுகாப்புத்துறையினரும் உளவுத் துறையினரும் மேற்கொண்ட நீர்ப் பலகை சித்திரவதை போன்ற கொடூரமான சித்திரவதைகளிலும் பார்க்க மரபுவழி விசாரணைகள் மூலமாகவே பின் லாடன் பற்றிய தகவல்கள் அறிய முடிந்தது. காலித் ஷேக் மொஹமட் (Khalid Sheikh Mohammed) என்பவரை மட்டும் 183 தடவைகள் நீர்ப்பலகைச் சித்திரவதை செய்தார்கள். ஆனால் இவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் ஏற்கனவே அமெரிக்க உளவுத் துறைக்குத் தெரிந்தவையே. பின் லாடனின் இருப்பிடம் அறிய உதவியது அவரது தகவற்பரிமாற்றக்காரர்(messenger) பற்றி அறிந்த தகவல்களே. இந்தத் தகவல்களை வழங்கியவர் மரபுவழி விசாரணையிலேயே விசாரிக்கப்பட்டவராம்.
குவாண்டமானோ ஏமாற்றம்.
குவாண்டமானோக் கைதிகளிடம் இருந்து பின் லாடனின் இருப்பிடத்தைப் பற்றி எந்தத் தகவல்களும் பெற முடியாமல் போனது அமெரிக்காவிற்குப் பெரும் ஏமாற்றம். அவர்கள் எவரும் உண்மையில் பின் லாடனின் இருப்பிடம் அறிந்திருக்கவில்லை.
மர்ம தகவல் பரிமாற்றக்காரர்.
அமெரிக்கா பல அல் கெய்தா ஆதரவாளர்களை கிழக்கு ஐரோப்பாவில் சிறைவைத்துள்ளது. அங்குள்ள கைதிகளிடம் இருந்து அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பெற்றுக் கொண்ட ஒரே ஒரு பெறுமதி மிக்க தகவல் பின் லாடனுக்கு ஒரு நம்பிக்கை வாய்ந்த தகவல் பரிமாற்றக்காரர் இருக்கிறார் என்பதே. பின் லாடன் தனது இரட்ண்டால் நிலை சகாக்களுடன் இந்த தகவல் பரிமாற்றக்காரர் ஊடாகத்தான் தொடர்புகளை வைத்திருந்தார். அவரின் உண்மையான பெயரைக் கூட அவர்களால் பெறமுடியவில்லை. இந்நிலையில் அமெரிக்கா குவாண்டமானோ சிறைச்சாலையிலும் மற்றும் கிழ்க்கு ஐரோப்பியச் சிறைச் சாலைகளிலும் கைக்கொள்ளும் சித்திரவதை விசாரணை முறை பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. அங்கு பாவிக்கப்படும் நீரடிக்கும்பலகைச் சித்திரவதை முறையும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. இவை எல்லாம் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இற்கு பலத்த ஏமாற்றத்தையே அழித்தது. கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள கைதிகளில் முக்கியமானவர்கள் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட காலித் ஷேக் முகமதுவும் அல் கெய்டாவின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் அபு பராஜ் அல்-லிபியும். அவர்கள் தங்களுக்கு தகவல் பரிமாற்றக்காரர் பற்றி ஏதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். இப்படி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது. 2005இல் பின் லாடன் இருப்பிடம் அறிவது என்பது ஒரு முடியாத காரியம் என்று ஆகிவிட்டது. விளைவு "ஆப்பரேஷன் கனன்போல்" இதில் பல சிஐஏ தலைகள் உருண்டன. பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் புதிய உளவாளிகள் அமர்த்தப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு முகவரகம்.
தேசிய பாதுகாப்பு முகவரகம் என்பது உருவாக்கப் பட்டு அது நவீன கருவிகளைக் கொண்டு பல தொலபேசிதொடர்புகளையும் மின்னஞ்சன்களையும் களவாகப் பதிவு செய்தது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது. பாக்கிஸ்த்தானில் இருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் இருந்து மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் குடும்பப் பெயரை சிஐஏ அறிந்து கொண்டது. இது நடந்தது 2007இல். பின்னர் அதிக உளவாளிகள் பாக்கிஸ்த்தானிலும் ஆப்க்கானிஸ்த்தானிலும் களமிறக்கப்பட்டனர்.ஆனால் அவரது இருப்பிடம் பற்றிய தகவல் கிடைக்கப்படவில்லை. அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதாகவும் அறியப்பட்டது. அவரது இருப்பிடமும் அறிய முடியவில்லை. அல் கெய்டாவின் நடவடிக்கைப் பிரிவுத் தலைவர் அபு பராஜ் அல்-லிபியை மரபு வழிச் சித்திரவதை விசாரணை செய்ததன் மூலம் மர்ம தகவல்பரிமாற்றக் காரரின் பெயர் பெறப்பட்டது. அது முழுப்பெயர் அல்ல. தொடர்ந்த பல நடவடிக்கைகளினால் அவரது முழுப்பெயரும் வாகன இலக்கமும் குடும்பப் பெயரும் பெறப்பட்டது. அவர் குவைத்தில் பிறந்த ஷேக் அபு அகமத். அவரது வாகனத்தை பல நாட்கள் பல தடவைகள் தொடர்ந்த போது. 2010 ஆகஸ்ட் மாதம் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் இருப்பிடம் அறியப்பட்டது. அது அபத்தாபாத் என்னும் அழகிய நகரம். பிரித்தானிய ஆட்சிக்குக் கீழ் பாக்கிஸ்தான் இருந்தபோது அந்த நகரில் ஜேம்ஸ் அபத் என்பவர் அங்கு ஒரு கூர்க்காப் படைத் தளத்தை அமைத்தார். அவர் பெயாரால் அந்த நகர் அழைக்கப்பட்டது.
.காட்டிக் கொடுத்த ஏழடிச் சுவர்.
அபத்தாபாத்தில் மர்ம தகவல் பரிமாற்றக் காரரின் சகோதரரின் வீட்டை நோட்டம் விட்ட அமெரிக்க உளவுப் பிரிவினர் அங்கு வீட்டைச் சுற்றி 12 அடி உயரச் சுவரும் மாடிகளில் ஏழடிச் சுவரும் இருப்பதைக் கண்டனர். பின் லாடனின் உயரம் ஆறு அடி ஐந்து அங்குலம். அங்கு பின் லாடன் இருப்பார் என அமெரிக்க உளவுத் துறை நம்பவில்லை. அங்கு ஒரு முக்கியமானவர் இருக்கிறார் என்றுதான் உளவுப்படையினர் நினைத்தனர். அது ஒரு மூன்று மாடி மாளிகை.
மீண்டும் ஏமாறிய தேசிய பாதுகாப்பு முகவரகம்
மூன்று மாடி மாளிகையை செய்மதி மூலமும் நவீன கருவிகள் மூலமும் வேவு பார்த்த தேசிய பாதுகாப்பு முகவரகம் மீண்டும் ஏமாறியது. அந்த மாளிகைக்கு தொலைபேசித் தொடர்போ அல்லது இணையத் தொடர்பு வசதிகளோ இருக்கவில்லை. அதனால் அங்கிருந்து எந்தத் தகவல்களையும் பெறமுடியவில்லை. ஆனால் அப்படி ஒரு மாளிகைக்கு அப்படிப்பட்ட வசதிகள் இல்லாதிருப்பது சந்தேகத்தை வளர்த்தது. அங்கிருந்து குப்பைகள் வெளியில் வீசப்படுகிறதா என்று பார்த்தார்கள். குப்பைகளுக்குள் ஏதாவது தகவல் பெறலாம் என்று. அதுவும் இல்லை. மொட்டை மாடியில் வைத்து குப்பைகள் எரிக்கப்படுவதைக் கண்டனர்.
வாலைத் தேடியவர்களுக்கு தலை கிடைத்தது.
பின் லாடன் எங்கோ ஒரு குகைக்குள் இருப்பதாகத்தான் சிஐஏ நினைத்தது. இந்த மூன்று மாடி மாளிகையில் பின் லாடன் இருப்பார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் வீடாக அது இருக்கலாம் என்று மேற்கொண்ட உளவு நடவடிக்கைகளில் அங்கு பின் லாடன் இருப்பதை உறுதி செய்து கொண்டனர். வாலைத் தேடியவர்களுக்கு தலை அகப்பட்டது. இப்போது 2011 பெப்ரவரி.
பெண்டகனும் சிஐஏயும் கலந்துரையாடின
சிஐஏ அதிபர் லியோன் பனெட்டா பெண்டகனின் சிறப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான வில்லியம் மக் ரவனை சிஐஏ பணிமனைக்கு பெப்ரவரி மாதம் அழைத்து அந்த மாளிகைமீது தாக்குதல் நடந்தும் திட்டங்களை வகுத்தார். அவர்கள் மூன்று மாற்றுத் திட்டங்களை வகுத்தனர். 1. பி-2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் குண்டு வீசி மாளிகையைத் தாக்குவது. 2. ஹெலிக் கொப்டர்கள் மூலம் படையினரை மாளிகைக்குள் இறக்கித் தாக்குவது. 3. பாக்கிஸ்தானின் உளவுத் துறையுடன் இணைந்து தாக்குவது.
ஒசாமாவைக் கொல்ல ஒபாமாவின் ஒப்புதல்
மார்ச் 14-ம் திகதி சிஐஏ அதிபர் லியோன் பனெட்டா மூன்று மாற்றுத் திட்டங்களுடன் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். பாதுகாப்புச் செயலர் ரொபேர்ட் கேர்ட்ஸ் இரண்டாம் திட்டமான ஹெலிக்கொப்டர் தாக்குதலை விரும்பவில்லை. அது ஆபத்தானது என்றார் அவர். விமானமூலம் தாக்குதல் நடத்துவதாயின் இரண்டாயிரம் இறாத்தல் எடையுள்ள 32 குண்டுகள் வீச வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விளைவு மாளிகை இருந்த இடத்தில் பாரிய கிடங்கு. ஆனால் பின் லாடன் கொல்லப்பட்டார் என்பதை உறுதி செய்ய முடியாது. பாக்கிஸ்த்தானுடன் இணைந்து தாக்குதல் நடத்துவது நம்பகரமானது அல்ல என்றும் கூறப்பட்டது. பல வாதப் பிரதி வாதங்களின் பின்னர் பராக் ஒபாமா தனக்கு சில மணித்தியாலங்கள் தருப்படி கேட்டார். 16 மணித்தியாலச் சிந்தனைக்குப் பின்னர் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் உயர் அதிகாரிகளை அழைத்த ஒபமா ஹெலிக் கொப்டர்கள் மூலம் படையினரை மாளிகைக்குள் இறக்கித் தாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அவருக்கு அத்திட்டம் பற்றி விளக்க முற்பட ஒபாமா அவர்களை இடைமறித்து போய் செய்து முடியுங்கள் என்றார். ஏற்கனவே அமெரிக்கப் படையினர் அபதாபாத் மாளிகை போல் ஒன்றை அமெரிக்காவில் உருவாக்கி தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பாக்கிஸ்தானுக்கு அறிவிப்பு
பாக்கிஸ்தானுக்கு அறிவிக்கும் நேரத்தை அமெரிக்கர்கள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டனர். முன் கூட்டி அறிவிக்காவிடில் பறக்கும் ஹெலிக்கொப்டர்கள் மீது பாக்கிஸ்தானியப்படைகள் தாக்குதல் நடத்தலாம். பாக்கிஸ்த்தானுக்கு வழங்கிய தகவல் அல் கெய்டாவிற்கு கசியப் போதிய கால அவகாசம் இல்லாதவகையில் தாக்குதலுக்கு சற்று நேரத்திற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. இந்த உண்மை வெளிவந்தால் பாக்கிஸ்த்தானில் தீவிரவாதிகள் கிளர்ந்து எழலாம் என்பதற்காக இரு நாடுகளும் இதை மறுக்கின்றன.
பின் லாடன் மீதான தாக்குதல் விபரம்
பின் லாடனுக்கு ஜெரேனிமோ என்னும் குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டது. அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், நிலம் ஆகிய மூன்று முனைகளிலும் சண்டையிடக்கூடிய சீல்(SEAL) பிரிவினர் ஒசாமா பின் லாடனைக் கொல்லும் சண்டையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கடல் Sea, வான் Air, தரை Land ஆகிய சொற்களின் முதல் எழுத்துக்களில் இருந்து SEAL என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது. SEAL படைப்பிரிவில் மிக நேர்த்தியாகத் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் இந்தப் படை நடவைக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இவர்களை TEAM - 6 என அழைப்பர். ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள ஜலலாபாத்தில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் மாளிகையில் வீரர்களை இறக்கியது. அவர்கள் சுவர்களைக் குண்டுகளால் தாக்கினர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த ஆணைக் காப்பாற்ற ஒரு பெண் குறுக்கே பாய்ந்தார். அவர் சுடப்பட்டார். அவர் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் மனைவி. ஒரு ஹெலிக்கொப்டர் பின் லாடனின் பாதுகாவலரின் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் எவரும் கொல்லப்படவில்லையாம். பின் லாடன் இருந்த அறையின் சுவர்களைத் தகர்த்தே தாக்குதல் அணியினர் உள்புகுந்தனர். அங்கு இருந்த பின்லாடனின் மனைவியும் இரு மகன்களும் பயத்தில் ஓடிப்போய் தந்தையைக் கட்டிக் கொள்ளுதல் இயல்பு. அதை அமெரிக்கர் பின் லாடன் மனைவியைக் கேடயமாகப் பாவித்தார் என்கின்றனர்.
பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து கணனிகள் மற்றும் பதிவேடுகளை அமெரிக்கத் தாக்குதல் அணியினர் எடுத்துச் சென்றுள்ளனர். அவை அமெரிக்காவிற்கு அல் கெய்தாவிற்கு எதிரான நடவடிக்கைகளிற்குப் பெரிதும் உதவும். பின் லாடனின் நிதி மூலங்கள் ஆயுதக் கிடங்குகள் ஆயுதம் வழங்குபவர்கள் போன்றவை பற்றிய தகவல்கள் அவற்றில் இருக்கலாம்.
பின்லாடன் துப்பாக்கிச் சண்டை புரிந்ததாக முதலில் சொன்ன அமெரிக்கா பின்னர் அதைத் திருத்திக் கொண்டது.
பின்லாடனின் உடலை ஹெலிக்கொபடரில் எடுத்துச் சென்று அரபுக் கடலில் இசுலாமிய முறைப்படி கிரியை செய்துவிட்டுவீசினராம்.

Monday, 31 March 2014
உக்ரேனின் கிரிமியாவிற்குள் இன்னும் ஒரு பிரிவினை?
உக்ரேனில் இருந்து இரசியா பிரித்தெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்ட கிறிமியாவில் இருந்து இன்னும் ஒரு பிரிவினைக்குத் தூபமிடப்பட்டுள்ளது. கிறிமியாவில் வாழும் டாட்டார் இனக்குழுமத்தினரின் தலைவர்கள் தாம் இரசியாவுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை என்றும் ஒரு கருத்துக் கணிப்பின் மூலம் பிரிந்து தனியாகச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிறிமியாவை துருக்கி தேசத்தவர்களின் ஒட்டோமன் பேரரசு ஆண்டு வந்தனர். பின்னர் அவர்களிடமிருந்த்து கிறிமியாவை 1774-ம் ஆண்டு போரின் மூலம் பறித்துக் கொண்டனர். 1853-ம் ஆண்டு இரசியாவிடமிருந்து கிறைமியாவைப் பறிக்க ஒட்டோமன் பேரரசு, பிரான்சு, பிரித்தானிய ஆகிய நாடுகள் கிறைமியா மீது போர் தொடுத்தன. 1853-ம் ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை போர் நடந்தது. இதில் இரசியா பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பிய வரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறைமியாவைத் தனதாக்கியது. 1917-ம் ஆண்டு இரசியப் புரட்சியின் போது கிறைமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் இரசியப் படைத்தளமானது. 1921-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசானது. 1942-ம் ஆண்டு உலகப் போரின் போது ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்ற ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்தது. 1944-ம் ஆண்டு கிறைமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜேசேப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறைமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர். 1945-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்ற நிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக (Crimean Oblast) மாற்றப்பட்டது. . 1954-ம் ஆண்டு கிறைமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் பொரிஸ் யெல்ஸ்ரின் கிறைமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் இருக்க வைத்து கிறைமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார். 1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறைமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன. 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் திகதி கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு அதன்படி கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்புச் செல்லாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு 100நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 11நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 58 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
கிறிமியாவில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்படும் போது டாட்டார் இனத்தவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. டாட்டார் இனக் குழுமத்தினரில் பெரும்பான்மையானவர்கள் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. டாட்டார் இனத்தவர்களை மேற்கு நாடுகள் தூண்டிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. கிறிமியாவில் இருக்கும் டாட்டார்கள் மீண்டும் 1944இல் செய்தது போல நாடுகடத்தப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டனர்.
கிறிமியாவின் பூர்வீக குடிகளில் டாட்டார் இனத்தினரும் அடங்குவர். இவர்கள் இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் ஹிடலரின் நாஜிப் படைகள் கிறிமியாவிற் படை எடுத்த போது அவர்களுடன் ஒத்துழைத்த குற்றத்திற்காக கிறிமியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டு சோவியத் ஒன்றியத்தின் நடு ஆசியப் பிராந்தியங்களில் ஒன்றான உஸ்பெக்கிஸ்த்தானிற்கு அனுப்பப்பட்டனர். பின்னர் பல இரசியர்கள் சோவித் ஒன்றிய அரசால் கிறிமியாவில் குடியேற்றப்பட்டு கிறிமியாவில் இரசியர்கள் பெரும்பான்மையாக்கப்பட்டனர்.
இப்போது கிறிமியாவில் வாழும் மூன்று இலட்சம் டாட்டார் இனத்தினர் இரசியாவிற்கு சவாலாகப் புதிய பிரச்சனையைக் கிளப்புகின்றனர். தம்மத்தியிலும் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு தாம் விதியைத் தாமே நிர்ணயிக்க வேண்டும் என கிறிமிய நகரான Bakhchisarayவில் கூடி முடிவெடுத்துள்ளனர். இவர்களின் தலைவர்களில் ஒருவரான ருபாட் சுபரோவ் கிறிமிய டாட்டார்கள் கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்படுவதை விரும்பவில்லை என்கின்றார்.

Subscribe to:
Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...