ஊழல் எதிர்ப்புக்கு என அரவிந்த் கெஜ்ரிவால் உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சி காங்கிரசிற்கு எதிரான வாக்குக்களைப் பிரித்து காங்கிரசின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசின் திரைமறைவு ஆதரவு இருந்ததாகவும் வதந்திகள் அடிபட்டன.
இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கி பெரும் பங்காற்றவிருக்கின்றது. 180 முஸ்லிம் வாக்காளர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்று எதிர்வு கூற முடியாத நிலை இருக்கின்றது. 35 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 30% இற்கும் அதிகம். மேலும் 180 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் 10%இற்கும் அதிகம். இதனால் இந்தியாவின் பாராளமன்றத்தின் மக்களவைக்கான 543 தொகுதிகளில் 215 தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றது. 96% அதிகமான முஸ்லிம்கள் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த கல்வி ஆகியவற்றிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த மூன்று அம்சங்களிலும் காங்கிரசு தோல்வி கண்டதாக பரவலான கருத்து நிலவுகின்றது. இந்தியா முழுவதும் வாழும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு பொதுவான தேர்தல் கட்சியோ அல்லது தேர்தல் கொள்கையோ இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் இவர்களின் வாக்கு வங்கி பல்வேறுபட்ட கட்சிகளிக்காகப் பிளவுபடுகின்றது.
நரேந்திர மோடிக்கு எதிரான காங்கிரசின் வலுமிக்க படைக்கலன் ஆக இருந்த முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கிக்கு பெரும் ஆபத்து ஆம் ஆத்மி கட்சியினால் உருவாகியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு. 2ஜி அலைக் கற்றை ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும்.
காங்கிரசின் உலக சாதனை படைத்த ஊழல்களால் முஸ்லிம் வாக்காளர்களும் காங்கிரசின் மீது பெரு வெறுப்பு அடைந்துள்ளனர். இவர்கள் காங்கிரசுக்கு எதிராககத் திரும்பி ஆம் ஆத்மிக் கட்சிக்கு வாக்களிக்கின்றனர். 2009-ம் ஆண்டு நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்கு காங்கிரசின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றின. பல தொகுதிகளில் காங்கிரசுக்குக் கிடைத்த வாக்குகளில் 25% முஸ்லிம்களினதும் தலித்துக்களினதும் வாக்குகளே. கணிசமான அளவு முஸ்லிம்கள் மோடி தலைமையில் நல்லாட்சி அமையும் என நம்பி பாரதி ஜனதாக் கட்சிக்கும் வாக்களிக்கின்றனர். இதற்கான ஆதரம் டில்லி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள ஏழு பாரளமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பின் போது கிடைத்ததாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரசின் மூத்த அமைச்சரான கபில் சிபால் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் சாய்வதால தோல்வியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது அதிக அளவிலான முஸ்லிம்களைக் கொண்ட டில்லிப் பிராந்தியம் இதுவரை முஸ்லிம்களின் வாக்கு வங்கியால் காங்கிரசின் கோட்டையாகவே இருந்தது. ஆனால் இம்முறை நடந்த தேர்தலில் அதிக அளவிலான முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தமையினால் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி டில்லிப் பிராந்தியத் தொகுதிகளில் பெரும் வெற்றி ஈட்டும் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment