ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையின் நாசகாரிக் கப்பல்களில் பாவிப்பதற்கென Long
Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத்
தாக்குதல் எறிகுண்டுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை
அமெரிக்காவிடமுள்ள எறிகுண்டுகளில் மிக அதிக தூரம் பாய்ந்து தாக்கக்
கூடியவையாகும்.
Long
Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத்
தாக்குதல் எறிகுண்டுகள் வழிகாட்டுதலுக்கு ஏற்ப இலக்குகளை நோக்கிச் சென்று
தாக்கக் கூடியவை. இவை தூரத்தில் இருந்தே வீசக் கூடியவை என்பதால் வீசும்
படையினர் தமக்குப் பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு எதிரி இலக்குகளை
நோக்கி இவற்றை வீசலாம். அமெரிக்கப்படைகளுக்கான உபகரணங்களைத் தயாரிக்கும்
லொக்ஹீட் நிறுவனம் 18 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு செய்த ஒரு
திட்டத்தில் இந்த எறிகுண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 71கடல் மைல்கள் தூரம்
பாயக்கூடியவை. ஒரு கடல் மைல் என்பது 1852 மீட்டர்களாகும், கடலில் இருந்து
வீசப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கக் கூடியவையுமாகும்.
அமெரிக்கக் கடற்படையினருக்கு உருவாக்கப்பட்டுள்ள Long
Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத்
தாக்குதல் எறிகுண்டுகள் 2.2 மீட்டர் நீளமும் 155மில்லி மீட்டர் குறுக்கு
விட்டமும், அரை மீட்டர் நீள் சிறகுகளும் உடையவை. ஒரு எறிகுண்டு 104கிலோ
எடையுடையது. இவற்றை நாசகாரிக் கப்பல்களில் இருந்துஒரு நிமிடத்துக்கு 10
சுற்றுக் குண்டுகள் வீசக்கூடிய செலுத்திகளில் இருந்து வீசலாம். பலதரப்பட்ட
எதிரி இலக்குகளை இவை துவம்சம் செய்யும்.
Long Range Land Attack Projectile (LRLAP) எனப்படும் நீண்ட தூர தரைத் தாக்குதல் எறிகுண்டுகள் global
positioning system (GPS) என்ற முறைமையைப் பாவித்து வழிகாட்டப்படும்.
இதனால் இந்த எறிகுண்டுகள் வழிகாட்டலுக்கு இணங்க பயணித்து எதிரி இலக்குகளைத்
துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றவை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment