இந்திய ரூபாவின் பெறுமதி பலவீனமான அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 19% வீழ்ச்சியடந்து இப்போது ஆசியாவிலேயே பலவீனமான நாணயம் என்ற பெயரையும் பெற்றுள்ளது. சரியும் இந்திய ரூபாவின் மதிப்பை பாதுகாக்க இந்திய மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு மட்டும் ஏழு தடவை வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. இப்போது இந்திய வட்டி வீதம் 8.5%இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்ததுடன் இந்தியப் பணவீக்கமும் அதிகரித்துக் காணப்படுவதே இந்திய ரூபாவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும். பொருளாதர வளர்ச்சி குறையும் போது வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டும். பணவீக்கம் அதிகரிக்கும் போது வட்டி வீதம் அதிகரிக்கும் போது வட்டி வீதம் குறைக்கப்பட வேண்டும். இந்திய மத்திய வங்கி தலையிடிக்கு மருந்து கொடுப்பதா வயிற்றோட்டத்திற்கு மருந்து கொடுப்பதா என்று தெரியாமல் தடுமாறுகிறது. தலையிடிக்குக் கொடுக்கும் மருந்து வயிற்றோட்டத்தை அதிகரிக்கும். வயிற்றோட்டத்திற்கு கொடுக்கும் மருந்து தலையிடியை அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சிக்காக வட்டியை குறைத்தால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். அதிகரிக்கும் பணவீக்கத்தைக் குறைக்க வட்டி வீதத்தை அதிகரித்தால் பொருளாதர வளர்ச்சி மேலும் குன்றும். 2011இல் இந்தியப் பொருளாதாரம் 9% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7%தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
தேயும் ரூபா ஏற்படுத்தும் முக்கிய தாக்கம்.
தேயும் ரூபா இறக்குமதிப் பொருள்களின் விலையை அதிகரிக்கும். இந்தியா தனது எரிபொருள்தேவையில் மூன்றில் இரண்டு பகுதியை இறக்குமதி செய்கிறது. இந்திய நாணயம் பெறுமதி குறையும் போது இந்தியாவில் எரி பொருள் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தும். எரிபொருள் விலை அதிகரிக்கும் போது பொருட்களின் உறப்பத்திச் செலவு, விநியோகச் செலவு, போக்குவரத்துச் செலவு போன்றவை அதிகரித்து பொருட்களில் விலையை அதிகரித்து பணவீக்கத்தை அதிகரிக்கும்.
ஏன் ரூபா மதிப்பிறங்கியது?
இப்போது உலகச் சந்தையில் அதிக ஆயுதக் கொள்வனவு செய்யும் நாடு இந்தியா. படைத்துறைச் செலவு உட்படப் பல செலவுகளுக்கு இந்தியா கடன்பட வேண்டும். இந்திய மொத்த தேசிய உற்பத்தி எதிர்பார்ததைப் போல் அதிகரிகாததால் இந்திய தேசியக் கடன் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் 104%மாக அதிகரித்துள்ளது. ஒரு பொருளாதார அபிவிருத்தியடையாத இந்தியாவிற்கு இந்த 104% அதிகமானதே. ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டுமே பொருளாதார அபிவிருத்தியடைந்த நாடுகள். தற்போது இந்தியாவின் மொத்தத் தேசிய உற்பத்தி 48.77இலட்சம் கோடிகள், கடன் 51.12 இலட்சம் கோடி. இந்த 104%மே இந்திய ரூபாவின் மதிப்பைக் குறைத்தது.
களத்தில் இறங்கிய RBI
ரூபாவின் மதிப்பு இறங்கும் போது ஆரம்பத்தில் இந்திய மத்திய வங்கியான இந்திய ரிசேர்வ் வங்கி(RBI) பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை நிலமை மோசமாகியபோது தான் RBI தனது திறந்த சந்தை நடவடிக்கையில் இறங்கியது. முதலில் நாணய வர்த்தகர்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தது. டாலரின் பெறுமதி ரூபாவிற்கு எதிராக ஏற்றமடையும் எனப் பலர் தங்கள் டாலர் கையிருப்பை அதிகரித்தனர். அக்கையிருப்பை அவர்கள் விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளும்படி விதிகள் விதிக்கப்பட்டன. இன்று (16/12/2011) RBI நாணய வர்த்தகர்கள் தாம் ஏற்கனவே இரத்துச் செய்த நாணய நடவடிக்கை ஒப்பந்தங்களை மீளப் புதிப்பிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. நேற்று ஒரு டாலர் 54ரூபாக்களாக இருந்தது இன்று RBIஐயின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து 52.78ரூபாக்களாகக் குறைந்தது - ரூபாவின் மதிப்பு கூடியது.
நாணய மதிப்பிறக்கத்தால் நன்மையுண்டா?
இந்தியாவில் உள்ள பெரும் வர்த்தக நிறுவனங்களில் 70%மானவை ரூபாவின் மதிப்பிறக்கத்தால் நன்மையடையலாம். ஏற்றுமதி வர்த்தகம் செய்யும் நிறுவனங்களே பெரும் நன்மையடையும். Tata Consultancy Services Ltd. போன்ற நிறுவனங்கள் நன்மை பெறும். அதே வேளை பெரும் நிறுவனங்களில்30%மானவை பாதிப்புக்குள் ஆகலாம். வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் பெற்ற Bharti Airtel Ltdஇன் கடன் பளு அதிகரிக்கும்.
இந்தியப் பங்குச்சந்தை
உலகின் முக்கிய நாடுகளில் இந்தியாவின் பங்குச் சந்தையே மிகப் பெரிய வீழ்ச்சியை 2011இல் கண்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் சென்செக்ஸ் 14500இற்கு வீழ்ச்சியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் விவசாயத்துறை, கட்டிட நிர்மாணத்துறை, விமானப் போக்குவரத்துத் துறை போன்றவை இந்திய அரசின் பிழையான நிதிக்கொள்கைகளால் பாதிப்படைந்துள்ளன. பொருளாதார நிபுணரைப் பிரதம மதிரியாகக் கொண்ட ஒரு அரசு தனது நாணய வழங்கல்களை எவ்வளவு தூரம் அதிகரிக்க முடியும் என்று தெரியாமல் போனது எப்படி? நாணய வழங்கலைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க சிதம்பரம், பிரணாப் முகர்ஜீ, மொன்ரேக் சிங் அலுவாலியா போன்ற வல்லுனர்களால் கூட முடியவில்லை. இந்த வல்லுனர்கள் சுயமாகச் சிந்திக்கவில்லையா?
இந்தியா சொல்லும் நொண்டிச் சாட்டு
இந்தியாவில் முதலீடு செய்த வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பெரு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் ஏற்பட்ட நட்டத்தையும் நிதி நெருக்கடியையும் ஈடு செய்ய தாம் இந்தியாவில் செய்த முதலீடுகளை விற்று அதை டாலர்களாக மாற்றி தமது நிறுவனங்களின் ஐந்தொகையை(Balance Sheet) பலமுள்ளதாக முதலீட்டாளர்களுக்கும் தமது வங்கிகளுக்கும் காட்டுவதே இந்திய ரூபாவின் மதிப்பிறக்கத்துக்குக் காரணம் என்று சொல்கின்றன. இதுவும் ஒரு காரணம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. மற்ற BRIC நாடுகளுக்கும்(பிரேசில், இரசியா, சீனா) இது பொருந்தும். இருந்தும் இந்திய ரூபா மற்ற BRIC நாடுகளின் நாணயங்கள் இப்படிப் பாதிக்கப்படவில்லை. இந்தியப் பொருளியல் வல்லுனர் கௌசிக் பாசு பொது நலவாய நாடுகளிற்கிடையான விளையாட்டுப் போட்டியிலும் 2G அலைக்கற்றையிலும் நட்னத ஊழல்கள் இந்தியப் பொருளாதரத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு இருந்த நம்பிக்கையில் பாதிப்பை ஏறடுதியது என்கிறார். இந்தியாவின் செலவீனங்களும் கடனும் அதிகரித்தமையே முக்கிய காரணம். இந்தியா ஆயுதக் கொள்வனவில் அதிகம் செலவிடுவது இந்தியாவின் பாதுகாப்பை உயர்த்த மட்டுமல்ல. எந்த ஒரு ஆட்சியாளரும் இலகுவில் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்க சிறந்த வழி ஆயுதக் கொள்வனவே. பொருளாதார வளர்ச்சிக்கு என்று இந்திய அரசு செய்த நடவடிக்கைகள் சில வேண்டப்பட்ட பெரு முதலாளிகளின் நன்மையிலேயே இறுதியில் முடிந்தது. நாணய மதிப்பிறக்கத்திற்கு ஊழல் நிறைந்த தலைமையில் அரசு நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதே முதன்மைக் காரணம். நாணய மதிப்பிற்கு நாணயமான ஆட்சி முக்கியம்.
Friday, 16 December 2011
Thursday, 15 December 2011
நகைச்சுவைக் கதை: முழங்காலிட்ட மனைவி
சுந்தர் மதுபானக் கடைக்கு மிக விரைவாக வந்து தனக்கு ரெம்ப ஸ்ராங்காக ஒரு கட்டிங் வேணும் என்றான். தனது வழமையான வாடிக்கையாளன் வழமைக்கு மாறாக ரெம்ப ஸ்ராங்காக ஒரு கட்டிங் கேட்கிறானே என்று கவலையடந்த மதுபானக் கடைக்காரன். என்ன நடந்தது என்று மிக அக்கறையுடன் கேட்டான்.
எனக்கும் மனைவிக்கும் இடையில் இன்று வழமைக்கு மாறாக கடுமையான கைகலப்பு நிலைமை ரெம்ப மோசமாகிவிட்டது என்றான சுந்தர்.
அது இருக்கட்டும் கடைசியில் என்ன நடந்தது? எப்படி முடிந்தது என்று சொல் என்றான் மதுபானக் கடைக்காரன் ரெம்ப ஆவலுடன்.
கடைசியில் அவள் முழங்காலிட்டாள்.......என்று சொல்ல மதுபானக் கடைக்காரன் இடைமறித்து ஓ நல்லாத்தான இன்று மனைவியை உதைச்சிருக்கிறாய். இந்தாப்பா பெண் பாவம் பொல்லாதது என்பதற்காகச் சொல்லவில்லை. மனைவியை அடிக்கிறதுக்கும் ஒரு அளவு வேண்டும். அவள் காவல் துறைக்கு முறையிட்டால் நீ கம்பி எண்ண வேண்டிவரும் என்று ஒரு நீண்ட போதனைக்குத் தயாரக அவனை இடைமறித்தான் சுந்தர்.
நீ வேறு எரிச்சலைக் கிளப்பாதே. அவள் முழங்காலிட்டது கட்டிலுக்குக் கீழ் மறைந்திருக்கும் என்னை வெளியே வாடா என்று கூப்பிடவே என்றான்.
சில எஸ்.எம்.எஸ் நகைச்சுவைகள்
Love is like a long sweet dream and marriage is an alarm clock. So have a sweet dreams till your alarm wakes you up. Happy Unmarried Life.
Y girls r shorter than boys?
Bcoz when dey hug each other
The boy lets her head rest on his shoulder
&
he can see another girl behind.!
Wife: where ‘ll you take me on our 10th anniversary?
Husband: We’ll go to African jungle safari.
Wife: Nice. And on our 25th anniversary?
Husband: I’ll bring you back.

Wednesday, 14 December 2011
தேசக் குரல் பாலா அண்ணா
பெற்ற தாய் ஈழம் பரிதவிக்கையிலே
அற்ற குளத்துப் பறவைகளாய்
நாம் பறந்தோம் வெளி நாடுகள் நோக்கி
சொந்த நலம் காக்க
தாய் ஈழம் தவிக்கையில்
வெளி நாட்டுவாழ்க்கை
வேண்டாம் எனத் துறந்து
தாயகம் சென்ற செம்மல்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
போராளிகளுக்கு அரசியல்
பாடம் கூறும் ஆசானாய்
தலைமைக்கு மதியுரைக்கும்
பேரறிவாளனாய் வாழ்ந்தவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
இந்திய ஆக்கிரமிப்பிலே
காட்டிலும் மேட்டிலும்
வெளிநாட்டு மனைவியுடன்
நீரின்றி உணவின்றி
நித்திரையின்றி நிம்மதிதானின்றி
நோய் வாய்ப்பட்டவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
அவர் அங்கள் பல பழுது பட
மருத்துவ வசதிதர இந்தியா மறுக்க
வேதனைகள் சுமந்து வெளிநாடுகள் சென்று
தமிழர்களுக்காய் குரல் கொடுத்தவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
சரித்திரமும் படைத்து நின்றார்
சரித்திர நூலும் படைத்து நின்றார்
தமிழர் தரித்திரம் துடைக்க வந்த
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
தமிழீழத் தாய் துயர் துடைத்து
அவளுக்கு விடுதலை முடிசூடி
அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவதே
அவர் ஆன்மாவைச் சாந்தியாக்கும்
அற்ற குளத்துப் பறவைகளாய்
நாம் பறந்தோம் வெளி நாடுகள் நோக்கி
சொந்த நலம் காக்க
தாய் ஈழம் தவிக்கையில்
வெளி நாட்டுவாழ்க்கை
வேண்டாம் எனத் துறந்து
தாயகம் சென்ற செம்மல்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
போராளிகளுக்கு அரசியல்
பாடம் கூறும் ஆசானாய்
தலைமைக்கு மதியுரைக்கும்
பேரறிவாளனாய் வாழ்ந்தவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
இந்திய ஆக்கிரமிப்பிலே
காட்டிலும் மேட்டிலும்
வெளிநாட்டு மனைவியுடன்
நீரின்றி உணவின்றி
நித்திரையின்றி நிம்மதிதானின்றி
நோய் வாய்ப்பட்டவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
அவர் அங்கள் பல பழுது பட
மருத்துவ வசதிதர இந்தியா மறுக்க
வேதனைகள் சுமந்து வெளிநாடுகள் சென்று
தமிழர்களுக்காய் குரல் கொடுத்தவர்
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
சரித்திரமும் படைத்து நின்றார்
சரித்திர நூலும் படைத்து நின்றார்
தமிழர் தரித்திரம் துடைக்க வந்த
எம் தேசக்குரல் பாலா அண்ணா.
தமிழீழத் தாய் துயர் துடைத்து
அவளுக்கு விடுதலை முடிசூடி
அவருக்கு நாம் அஞ்சலி செலுத்துவதே
அவர் ஆன்மாவைச் சாந்தியாக்கும்
இலண்டன் காதல் பரதநாட்டியம் போல்
அம்மன் கோவில் தேர்த் திருவிழாவில்
கள்ளத்தனமாக கண்களின் சந்திப்பில்
அல்லாரிப்பாய் மலர்ந்தது
எம் இருவர் காதல்
நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில்
உந்தன் உதட்டோரப் புன்னகையில்
திஸ்ரத்தில் தித்திக்கும் ஜதீஸ்வரமானது
எம் இருவர் காதல்
தேம்ஸ் நதிக் கரையில் வில்லோ மர நிழலில்
கை கோர்த்து காம்போதியில் பாட்டு நீயாக
பாவங்கள் நானாக சப்தமானது
எம் இருவர் காதல்
மின்னும் வர்ண விளக்கொளியில்
Piccaddily Circurs நடன சாலையில்
ராக மாலிகையில் வர்ணமாய் ஆடியது
எம் இருவர் காதல்
இந்தோளத்தில் அபிநயங்கள் பலவாக
ரூபகத்தில் உணர்வுகள் தாளம் போட
இணைந்தோம் என் தனியறையில்
இனிய பதமாக நல்ல சுகமாக
தினமும் பேசி கைப்பேசியும் சூடாகி
தித்திக்கும் உதட்டில் பல்லவித்து
அனுபல்லவித்து சரணம் நானென
தில்லான ஆடியது நம் காதல்
எல்லாம் நடந்தும் எதுவும் நடவாதது போல்
மணவறையில் அரங்கேறாமல்
சுருட்டி நீ மங்களம் பாடி
பிரிந்தது பெரும் கொடுமை
கள்ளத்தனமாக கண்களின் சந்திப்பில்
அல்லாரிப்பாய் மலர்ந்தது
எம் இருவர் காதல்
நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில்
உந்தன் உதட்டோரப் புன்னகையில்
திஸ்ரத்தில் தித்திக்கும் ஜதீஸ்வரமானது
எம் இருவர் காதல்
தேம்ஸ் நதிக் கரையில் வில்லோ மர நிழலில்
கை கோர்த்து காம்போதியில் பாட்டு நீயாக
பாவங்கள் நானாக சப்தமானது
எம் இருவர் காதல்
மின்னும் வர்ண விளக்கொளியில்
Piccaddily Circurs நடன சாலையில்
ராக மாலிகையில் வர்ணமாய் ஆடியது
எம் இருவர் காதல்
இந்தோளத்தில் அபிநயங்கள் பலவாக
ரூபகத்தில் உணர்வுகள் தாளம் போட
இணைந்தோம் என் தனியறையில்
இனிய பதமாக நல்ல சுகமாக
தினமும் பேசி கைப்பேசியும் சூடாகி
தித்திக்கும் உதட்டில் பல்லவித்து
அனுபல்லவித்து சரணம் நானென
தில்லான ஆடியது நம் காதல்
எல்லாம் நடந்தும் எதுவும் நடவாதது போல்
மணவறையில் அரங்கேறாமல்
சுருட்டி நீ மங்களம் பாடி
பிரிந்தது பெரும் கொடுமை
Tuesday, 13 December 2011
ஈரான் கைப்பற்றிய அமெரிக்க ஆளில்லா விமானம் - அமெரிக்காவிற்கு பேரிழப்பில்லையாம்.
2011-ம் ஆண்டின் இறுதி மாதத்தை ஆக்கிரமித்த செய்தி அமெரிக்க ஆளில்லா விமானமான RQ-170 Sentinel ஈரான் கைப்பற்றியமையே. விமானம் சுட்டுவீழ்த்தப் பட்டதா அல்லது தரையிறக்கப்பட்டதா என்ற கேள்விகளுடன் இதில் சீனாவும் சம்பந்தப்பட்டுள்ளதா என்றா கேள்வியும் இணைந்து இருக்கிறது. Lockheed Martin நிறுவனத்தின் தயாரிப்பான RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தின் உயர் தர தொழில்நுட்பம் ஈரான் கைகளை மட்டுமல்ல அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கும் இரசியா சீனா போன்ற நாடுகளின் கைகளைப் போய்ச் சேரக்கூடும்.
RQ-170 Sentinel இன் சிறப்புத் தன்மைகள்:
1. தாழ அவதானிக்கும்(low observable) திறன்.
2. தாக்குதல் அணிக்கு இலக்குகள் பற்றி உடன் தகவல்கள் வழங்கும் திறன்
3. எதிரிகளின் ராடர்களிற்கு புலனாகாத திறன்(stealth)
4. உயர்தர உணரிகள்(Sensors)
5. செய்மதித் தொடர்புத் தொழில் நுட்பம்(Satcom or satellite communication)
இந்த RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயினால் 01-09-2005இல் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றன.
பின் லாடனும் RQ-170 Sentinel
பின் லாடன் இருக்கும் இடத்தை அறிய அமெரிக்கா activity based intelligence என்னும் நடவடிக்கை சார் உளவறிதல் முறையைப் பாவித்தது. பின் லாடனை அவர் தங்கியிருந்த மாளிகையில் கண்டதாக எந்தவிதமான நேரடியான சாட்சியங்களும் இல்லாமல் அவர் அங்கு தங்கி இருந்தமையை சிஐஏ உறுதி செய்வதற்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் பெரிதும் பயன்படுத்தப்பட்டன.
அமெரிக்க ஆளில்லா விமானம் ஈரான் கைப்பற்றியதைப்பற்றிய முந்தைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்:ஈரானில் அமெரிக்க விமானம் வீழ்த்தியதில் சீனவின் பங்களிப்புண்டா?
RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை தனது படைகள் அதன் கணனிப் பொறிகளை ஊடுருவிப் பொறுப்பேற்றுத் தரையிறக்கியதாக ஈரான் கூறுகிறது. கணனிப் பொறிகளில் ஈரானிய விமானத் தளத்தை சிஐஏயின் தளம் என்பது போல் உணரப்பண்ணியதாகவும் கூறுகிறது.
இப்படி RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை ஊடுருவிப் பொறுப்பெற்கும் தொழில் நுட்ப அறிவு ஈரானிடம் உள்ளதா என்பது கேள்விக்குரியது. இதில் சீனா சம்பந்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது..
அமெரிக்க சிஐஏயின் RQ-170 Sentinel ஈரான் கைப்பற்றியதால் ஈரான் என்ன நன்மைபெறப்போகிறது?
ஈரானிய எல்லைக்குள் சென்று அமெரிக்க விமானங்கள் நுழைந்து படைத்துறைத் தகவல்கள் திரட்டுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பல பறப்புக்கள் ஆப்கானிஸ்தான் - பாக்கிஸ்தான் எல்லையில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்னரே ஈரான் தான் stealth வகை உளவு விமானங்களை கண்டறியக்கூடிய ரடார்களை உருவாக்கியதாகத் தெரிவித்திருந்தது. RQ-170 Sentinel இன் stealth தொழில்நுட்பத்தை ஈரான் முறியடித்ததா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அது மட்டுமல்ல ஈரான் விரைவில் RQ-170 Sentinel பிரதிகளை reverse-engineering முறை மூலம் தான் உருவாக்கப் போவதாகவும் தெரிவிக்கிறது. ஈரான் இந்த தொழில்நுட்ப இரகசியங்களை வேறு நாடுகளுக்கு விற்பனையும் செய்யலாம். 1998இல் ஆப்கானிஸ்தானில் விழுந்து வெடிக்காமல் போன அமெரிக்க ஏவுகணையான Tomahawk cruise missiles ஐ விலை கொடுத்து வாங்கியது. 1999இல் ஆப்கானிஸ்தானில் விழுந்த அமெரிக்க விமானமான stealth F-117 Nighthawkஐயும் சீனா வாங்கியது. பின்னர் தனது J-20 stealth fighter விமானங்களை உருவாக்கியது. ஏற்கனவே சீனாவும் இரசியாவும் RQ-170 Sentinelஐப் பார்வையிடுவதற்கான அனுமதியை ஈரானிடம் கோரியுள்ளன.
ஈரான் வெளிவிட்ட படங்கள் போலியானதா?
ஈரான் வெளிவிட்ட படங்களின்படி பார்த்தால் RQ-170 Sentinel ஆளில்லா விமானம் எந்த வித சிதைவோ பாதிப்போ இன்றி தரையிறக்கப் பட்டது போல் இருக்கிறது. முதலில் ஈரான் RQ-170 Sentinelஐ சுட்டு வீழ்த்தியதாகவே தெரிவித்தது. ஈரான் வெளிவிட்ட படங்களில் அது சிதைவுற்ற விமானத்தை திருத்தி பார்வைக்கு சிதைவுறாதது போல் காட்டுவதாக ஒரு ஊடகம் தெரிவிக்கிறது.
அஞ்சிய ஈரானியர்கள்.
தனது இரகசியத்தைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா ஈரானில் ஒரு கொமாண்டோத் தாக்குதலைச் செய்து RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தைச் அழிக்க முற்படலாம் என்ற வதந்தி ஈரானில் பரவி இருந்தது. சில ஈரானிய ஊடகங்களில் இவை செய்தியாக அடிபட்டது.
அமெரிக்காவில் இருந்து வரும் செய்திகள் வேறு விதமாக இருக்கின்றன.
அமெரிக்க சிஐஏயின் RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் 2005-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டவை. ஆறு ஆண்டுகள் என்பது கணனித் தொழில்நுட்பத் துறையில் மிக நீண்டகாலமாகும். அமெரிக்கா ஈரானுக்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானங்களை அனுப்பும் போது அதற்கு அது சுட்டுவீழ்த்தப்படும் அல்லது கைப்பற்றப்படும் ஆபத்து உண்டு என்பதை சிஐஏ நன்கு அறியும். இருந்தும் அந்த ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஈரானில் இருந்து RQ-170 Sentinel திரட்டி அனுப்பும் தகவல்கள் அதிலும் மேன்மையான பயனுள்ளது என்று கருதியே சிஐயே இந்த ஆபத்தான நடவடிக்கையை எடுத்தது. MICAH ZENKOஎன்ற படைத்துறை ஆய்வாளர் ஈரானுக்கு RQ-170 Sentinel ஆளில்லா விமானத்தை அனுப்பியதை 1960-ம் ஆண்டு இரசிய ஏவுகணைத்திட்டத்தை உளவு பார்க்க அமெரிக்கா அனுப்பிய U-2 வேவு விமானம் அனுப்பியமைக்கு ஒப்பிடுகிறார். அப்போது U-2 வேவு விமானம் Operation Grand Slam என்ற குறியீட்டுப் பெயருடன் அனுப்பும் போது அது சுட்டு வீழ்த்தும் சாத்தியம் இருக்கிறது என்று தெரிந்தும் சிஐஏ இரசியாவிற்கு U-2வை அனுப்பியமைக்கான காரணம் அமெரிக்கா U-2 விமானத்திலும் பல மடங்கு திறனுள்ள விமானங்களை குறிப்பாக A-12 OXCARTரக விமானங்களை ஏற்கனவே உருவாக்கி விட்டமையே. சுட்டு வீழ்த்தப்பட்டாலும் அமெரிக்கா தனக்குத் தேவையான தகவல்களைப் இரசியாவில் இருந்து பெற்றுவிட்டது. அதைப் போலவே ஈரானின் அணு ஆயுதத் திட்டம், ஹிஸ்புல்லா போன்ற திவிரவாத இயக்கங்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம், தொலைதூர ஏவுகணைத்திட்டம், ஈரானின் விமான எதிர்ப்புத் திறன் போன்றவை தொடர்பான பல தகவல்களை RQ-170 Sentinel ஆளில்லா விமானங்கள் திரட்டிவிட்டன. 2005இல் உருவாக்கிய RQ-170 Sentinelஇலும் பார்க்க 65மடங்கு திறனுடைய ஆளில்லா விமானங்களை அமெரிக்கா ஏற்கனவே உருவாக்கிவிட்டது.

Monday, 12 December 2011
நகைச்சுவைக் கதை: சட்ட நிபுணரை மடக்கிய ஃபிகர்
இலண்டனில் இருந்து சென்னை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது அந்த விமானம். அதில் ஒரு சட்ட நிபுணரும் ஒரு அழகிய இளம் பெண்ணும் பக்கம் பக்கமாக அமர்ந்து கொண்டிருந்தனர். சட்ட நிபுணர் இளம் பெண்ணுடன் ரெம்பத்தான் ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்தார். தனது கல்வியைப் பற்றியும், தனது வருமானம் பற்றியும் நிறையக் கூறினார். பல நகைச்சுவைக் கதைகள் சொல்லி அந்தப் பெண்ணை மடக்கவும் பார்த்தார். அவள் ஒன்றுக்கும் மசிவதாகத் தெரியவில்லை..
சட்ட நிபுணரும் விடுவதாகவில்லை. கடையில் அந்தப் பெண் தனக்கு போரடிக்கிறது என்று கூறினாள். சட்ட நிபுணர் விடுவதாக இல்லை. அப்படியாயின் நாம் ஒரு போட்டி விளையாட்டு விளையாடுவோம். முதலில் நான் உன்னை ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு நீ சரியாகப் பதில் சொன்னால் நான் உனக்கு ஐந்து டாலர்கள் தருவேன். பிழையாகப் பதில் சொன்னால் நீ எனக்குப் ஐந்து டொலர்கள் தரவேண்டும். பின்னர் நீ என்னை ஒரு கேள்வி கேட்க வேண்டும் அதற்கு நான் சரியாகப் பதில் சொன்னால் நீ எனக்கு ஐந்து டாலர்கள் தர வேண்டும். பதில் பிழையாயின் நான் உனக்கு ஐந்து டாலர்கள் தரவேண்டும். இப்படியே சென்னை போகும் வரை மாறி மாறிச் செய்வோம் என்றார். அதற்கு அந்தப் பெண் நீங்கள் நிறையப் படித்தவர். நான் படிக்காதவள். எப்படி நாம் இருவரும் போட்டி போட முடியும் என்றாள். அதற்கு சட்ட நிபுணர். சரி நான் தோற்கும் போதெல்லாம ஐநூறு டாலர்கள் உனக்கு நான் தருவேன். நீ தோற்கும் போதெல்லாம ஐந்து டாலர்கள் மட்டும் கொடுத்தால் போதும் என்றாள்.
அந்த அழகி சிறிது யோசித்துவிட்டு மவனே உனக்கு வைக்கிறேண்டா ஆப்பு என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சரி அப்படியே செய்வோம் என்றாள்
சட்ட நிபுணர் தனது முதலாவது கேள்வியைக் கேட்டார். இலண்டனுக்கும் சென்னைக்கும் இடையிலான தூரம் எவ்வளவு என்று தனது முதற் கேள்வியை எடுத்து விட்டார். அழகி உடனே தனது கைப்பையில் இருந்து ஒரு ஐந்து டாலர் தாளை எடுத்து சட்ட நிபுணரிடம் கொடுத்தாள்.
சரி இப்போ உனது கேள்வியக் கேள் என்றார். மலையில் ஏறும் போது மூன்று கால்களுடன் ஏறி இறங்கும் போது நாலு கால்களுடன் இறங்குவது எது என்று தனது கேள்வியை எடுத்து விட்டாள் அழகி. சட்ட நிபுணர் நிறைய யோசித்தார். நீண்ட நேரம் எடுக்கக் கூடாது என்றாள் அழகி. அதற்கு அவர் போட்டி நிபந்தனையில் எந்த ஒரு கால அவகாசத்துக்குள்ளும் பதில் கூறப்படவேண்டும் என்று நாம் இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றார். அப்போது அழகி சரி தேவையான நேரத்தை எடுங்கள். நான் தூங்கப் போகிறேன். பதில் தெரியும் போது என்னை எழுப்புங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டாள்.
சட்ட நிபுணர் விமானத்தில் பயணம் செய்யும் மற்றவர்களிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டார். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. அதில் பிரயாணம் செய்து கொண்டிருந்த ஒரு தகவல் தொழில் நுட்ப நிபுணர் தனது மடிக் கண்னி(Laptop) எடுத்து கூகிள் முழுக்கத் தேடு தேடென்று தேடினார். ஒரு கணக்காளர் தனது கைப் பேசியை எடுத்து உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் தனது நண்பர்களுடன் தொடர்பு கொண்டு பதில் அறிய முயற்சித்தார். இப்படிப் பலரும் பலவிதமாக முயற்சித்தனர். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை. இப்படிப் பலரும் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்க விமானம் தரை இறங்கும் நேரம் வந்து விட்டது. அழகி அமைதியான தனது தூக்கத்தில் இருந்து விழித்து பதில் என்ன என்று கேட்டாள் சட்ட நிபுணர் ஐநூறு டாலர்களை அழகியிடம் கொடுத்தார். பின்னர் பதில் என்ன என்று கேட்டார். அப்போது அவள் ஒரு ஐந்து டாலர்களை சட்டவாளரிடம் கொடுத்துவிட்டு போட்டி நிபந்தனையில் கேள்வி கேட்பவருக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும் என்று நாம் இருவரும் ஒத்துக் கொள்ளவில்லை. எனக்கும் பதில் தெரியாது என்றாள்.

Sunday, 11 December 2011
தேர்வுப் பகிடிகள் - Exam jokes - புத்தகமும் சிவப்பு விளக்குப் பெண் போலே.
வகுப்பறைக்கும் தேர்வு மண்டபத்திற்கும் என்ன வித்தியாசம்?
வகுப்பறையில் சோறு அவிப்பது என்று சொல்லிக் கொடுப்பார்கள்.
தேர்வு மண்டபத்தில் புரியாணி செய்வது எப்படி என்று கேட்பார்கள்.
தேர்வுக்கு முதல் நாள்
இரவு மட்டும் உறவு
மறுநாள் பிரிவு
புத்தகமும்
சிவப்பு விளக்குப் பெண் போலே.
"மச்சான் இன்று பாடத்திற்கு பரீட்சை?"
"கணக்கு மச்சான்"
"எப்படீடா தெரியும்?"
"பக்கத்தில் இருந்த பெண் கல்குலேட்டர் வைத்திருந்தாள்டா"
Teacher asked: How to write 4 in between 5?
Medical student said: Joke!
Science student said: Impossible!
Management student: Not found on Internet
Engineering student said: F(IV)E
படிக்கும் போது
கல்வியை விரும்பு
தேர்வில் சித்தியடை
நல்ல ஃபிகர் உன்னைத் தேடிவரும்
படிக்கும் போது நல்ல ஃபிகர்
பின்னால் அலைந்தால்
தேர்வில் தோல்வி
ஃபிகர் உன்னை விட்டுப் போய்விடும்
Exams are near,
Subjects are not clear,
Questions appear,
Answers disappear,
Oh! my dear,
Dont fear,
Bcoz i'm here 2 wish u,
All clear!
Have a great exam ..
All the best.,,,,,,,,,,,
படிச்சவனுக்குப் பல கவலைகள்
எந்தக் கேள்வி வரும் என்று
படிக்காதவனுக்கு ஒரே ஒரு கவலை
இன்று எந்தப் பாடத்துக்குத் தேர்வு என்று
What is the true meaning of ‘Study’?
S. Sleeping
T. Talking
U. Unlimited sms
D. Dreaming
Y. Yawning
eXams are there,
at the paper u stare;
the answer is nowhere,
which makes u pull ur hair.
The teachers make u glare,
the grades r not fair,
but just like the past 20 yrs,
WE DONT CARE !!
My nights are going sleepless,
my days are going useless.
So I asked GOD,
“is this love?”
GOD replied,
“no dear, result is near”
Team work, team work என்கிறார்களேஅதை தேர்வு மண்டபத்தில் மட்டும் ஏன் அனுமதிப்பதில்லை?
Start Studying
100s of years have passed,
millions of tomorrows have come,
but still hope is alive in all students
“Tomorrow i will definitely start studying”
Four things Girls do in the Exam Hall either they know or not
1. Write
2. Write
3. Write
4. And just Write.
A Thermometer is not the only thing
that gets a ‘DEGREE’ without having a ‘BRAIN’!
9am-Wakeup
10am-Breakfast
11am-Thinkng To Score 80%
1pm-Lunch Then Sleep
5pm-Tea
6pm-Thinkng To Score 60%
9pm-Diner
10pm- கடவுள் விட்ட வழி
Teacher:4 girls r walking on the road. change it to exclamatory sentence
student: WOW..!!
Boys PLEDGE:
India is my natiOn
Girls r my destinatiOn
Dating is my OccupatiOn
Sighting is my ProfessiOn ...in b/w
What d hell is dis EDUCATION

Subscribe to:
Posts (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிர்கள் ஜெனிவாவில் உள்ள ஐநா முன்ஒன்று கூடி மானம் கெட்ட இந்தியா என்று முழங்கினர். இதன் காணொளியைக்காண click on ...
-
போரில் இறந்த எதிரியின் உடலைப் புணரும் பேய்களின் நாட்டுடன் நட்புறவைப் பேணுகிறது ஒரு மானங் கெட்ட நாடு பாதுகாப்பு வலயத்திற்கு வாவெனச் சொல்லிக...
-
வட கொரியா , ஈரான் ஆகிய நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் மிகவும் துரிதமாக வளர்ந்து வருகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் வட கொரியா உலகின் ...