Tuesday, 7 April 2009

நோர்வேயில் காவல் துறையினர் சாலை மறியல் போராளிகள் மீது நடவடிக்கை







.
.
.
.
.
.
.
.
.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தமிழர்கள் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் இனக்கொலை யுத்தத்தை நிறுத்தக் கோரி மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல பன்னாட்டு நெடுஞ்சாலைகள் போக்குவரத்து செய்ய முடியாமல் தடுக்கப் பட்டன. இதனால் ஒஸ்லோ நகரம் பலத்த வாகன நெருக்கடிக்குள்ளானது.
சுவிர்சலாந்துக்கான நெடுஞ்சாலையை சாலை மறிப்புப் போராளிகள் தடுக்க முற்பட்டபோது காவல் துறையினர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.
அதைத்தொடர்ந்து அங்கு பெரும் களேபரம் ஏற்ப்ட்டது.
இச்சாலை மறியல் போராட்டங்கள் எந்தவித முன் அறிவித்தலோ அல்லது அனுமதியோ இன்றியே நடாத்தப் பட்டன. இதனால் போக்குவரத்துத் துறையினர் பெரும் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. முதல் நாள் பிற்பகல் தொடங்கி மறுநாளும் இது தொடர்ந்ததால் பொதுமக்கள் பலத்த போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுருந்தது. இதனால் கவல் துறையினர் எதிர் நடவடிக்கை எடுத்து சாலை மறியல் போராளிகளை அப்புறப் படுத்தினர்.

இலண்டன் சாலை மறியல் போராளிகளை காவல் துறையினர் அப்புறப் படுத்தினர். - காணொளிகள்

இலணடன் பாராளமன்றத்துக்கு அருகில் தமிழர்கள் நடாத்திய சாலை மறியல் போராட்டத்தில் காவல் துறையினர் தலையிட்டனர். அங்கிருந்து அவர்களை பராளமன்ற சதுக்கத்திற்கு பலவந்தமாக இழுத்துச் சென்றனர்.
குழந்தைகள் முதியோர் என்று கூடப் பாராமல் பொலிசார் முரட்டுத்தனமாக அவர்களைத் தூக்கி வீசினார்கள். தமிழர்கள் தமது போராட்டத்தை இப்போது பாராளமன்ற சதுக்கத்தில் தொடருகின்றனர்.

பல இள வயதினர் இப்பேராட்டத்தில் உணர்ச்சி பூர்வமாகக் கலந்து கொண்டனர்: இதன் காணொளிகள்:


காணொளியில் - இலண்டனில் தமிழர் நடாத்தும் சாலை மறியல் போராட்டம்

இலங்கையில் யுத்த நிறுத்தும் வேண்டி இலண்டனில் வெஸ்ற்மின்டர் பாலத்தையும் சாலையையும் மறித்து இரவு பகலாக தொடர் போராட்டம் நடாத்துகின்றனர்.

மேலும் காணொளிகள் தொடர்ந்து தரப்படும்.

இலண்டனில் தொடர் சாலை மறியல் போராட்டம்






















இலங்கையில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தக்கோரி இலண்டனில் 5000இற்குமேற்பட்ட மக்கள் வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இப் போராட்டத்தில் பங்குபற்றுகின்றனர். இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை இப் போராட்டம் தொடருமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கர இரசாயனக் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றதைத் தொடர்ந்து கொதிப்படைந்த மக்கள் தெருக்ளில் இறங்கினர். வெஸ்ற் மின்ஸ்டர் பாலமும் தெருவும் இச்சாலை மறியல் போராட்டத்தால் மூடப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அவ்விடம் நோக்கி விரைந்ததால் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சன நெரிசல் காரணமாக தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. அங்கு பெருமளவில் வந்த காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் அவர்களுக்கு எதிராக எடுக்கவில்லை.
வரலாறு காணாத நிகழ்வு
இப்படி இரவு முழுவதும் இலண்டன் நகரில் சாலை மறியல் போராட்டம் நடப்பது இதுதான் முதல் தடவை. திங்கட் கிழமை மதியம் தொடங்கிய போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை தாம் அங்கிருந்து விலகப் போவதில்லை என்று அங்கு கூடியிருந்த மக்கள் அறிவித்துள்ளனர்.
தற்கொலை மிரட்டல்
உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் அத்தனை பேரும் தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக அறிவித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு இளைஞர் அவ்வாறு குதித்தார. காவல் துறையினர் அவரை மீட்டெடுத்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் படகுகள் மூலம் தேம்ஸ் நதியில் காவலில் ஈடுபட்டனர்.
ஐரோப்பா எங்கும் இருந்து தமிழர்கள் இலண்டன் நோக்கி விரைவு.
இப்போராட்டத்தில் கலந்து கொள்ள ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமிருந்து தமிழர்கள் இலண்டன் நோக்கி விரைந்து வருகின்றனர்.

Monday, 6 April 2009

ஈழத்தில் கைகள் இணைத்த பேரின வாதிகள்.





.
.
.
.
.
.
.
.
.
..
.
கையோங்கி நின்றது ஈழத் தமிழ்த் தேசியவாதம்
கை நடுங்கி நின்றது ஈனச் சிங்களப் பேரினவாதம்
ஒரு கை பார்க்க வந்தாள் இத்தாலிச் சனியாள்
கை கொடுத்து நின்றது பார்பனியச் சாதியவாதம்
கைகள் இணைத்துக் கொண்டன கொலைவெறி நாய்கள்
உத்தரப் பிரதேசத்துப் உதவாக்கரைப் பேரினவாதம்
சின்னத்தனமான சிங்களப் பேரினவாதத்திற்கு
நூறு மில்லியன் டொலர்களை அள்ளிக் கொடுத்தது
சீன எதிரியுடன் இந்தியாவிற்குப் போட்டா போட்டி
இனக் கொலைக்கு யார் கை கொடுப்பது என்று
ஆறாயிரம் ஆரியப் பிணந்தின்னிப் பேய்கள்
அடியெடுத்து வைத்தன ஈழ மண்ணில்
பல்லாயிரம் சிங்களப் கொலை வெறி நாய்களுடன்
கைகள் கோத்துக் கொண்டன குழந்தைகளைக் கொல்ல
கையில்லா உடல்களும் உடலில்லாக் கைகளும்.


ஆரியக் கடற்படையினர் அப்பாவித்தமிழர் மீது பேடித்தனமான தாக்குதல்




ஆரியக் கடற் படையினர் பேடித்தனமாக அப்பாவித் தமிழர் மீது தாக்குதல் நடாத்தி குழந்தைகள் உட்பட பல அப்பாவித்தமிழர்களை சிங்களக் கொலை வெறி நாய்களுடன் இணைந்து கொன்று குவித்துள்ளனர்.
இராமர் பாணித் தாக்குதல்
ஆரியர் "அவதார புருஷன்" எனப் போற்றும் கற்பனைக் கதாநாயகன் இராமர் வாலியைப் பின்னாலிருந்து வேறு எதிரியுடன் போரிட்டுக் கொண்டிருக்கம் போது கொன்றது போல். ஆரியப் பிணம் தின்னி நாய்கள் பாது காப்பு வலயத்துள் (சிங்களக் கொலை வெறியர்களின் கொலைக் களம்) தஞ்சமடைந்திருக்கும் அப்பாவித் தமிழர்களைச் சிங்களப் படைகள் ஐந்து முனையில் சுற்றி வளைத்துத் தாக்க, தொலை துாரம் பாயும் பயங்கர ஆயுதங்களைப் பிரயோகித்து கொன்று குவித்துள்ளன. இதனால் சில மணி நேரத்துள் 73 அப்பாவிகள் கொல்லப்பட்டத்துடன் 143 அப்பாவிகள் படுகாயமடைந்தள்ளனர்.
.
கொல்லக் கொடுவாள் கொடுப்பார்
கொழுத்தக் கொள்ளியும் கொடுப்பார் - அழிக்க
ஆயுதம்பல அள்ளிக் கொடுப்பார்
எம்மிடம் அபகரித்ததை
எமக்கே தானமாய்க் கொடுப்பார்
நாமெல்லாம் உடன் பிறப்பாம்
இரத்தத்தின் இரத்தங்களாம்.

Sunday, 5 April 2009

மீண்டும் மீனவர் மீது தாக்குதல் - மானம் கெட்ட இந்தியா.




சிங்கள கொலை வெறிப் படை தமிழ் நாட்டு மீனவர்கள் மீது மீண்டும் ஒரு எல்லை தாண்டிய பயங்கர வாதத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
சிங்கள கடற்படையினர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை துப்பாக்கிகளால் சுட்டு மிரட்டி கச்சதீவிற்கு கடத்திச் சென்றனர். அங்கு அவர்களை கொதிக்கும் மணலில் நிற்க வைத்து தாக்கி நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து அவர்கள் உடமைகளைக் கொள்ளையடித்தனர்.
இவற்றை வெளியில் சொன்னால் புகைப் படங்களைப் பாவித்து அடுத்த தடவை கடலுக்கு வரும்போது அவர்களைக் கொல்வோம் என்றும் மிரட்டினர்.
இது வரை பல நுற்றுக் கணக்கான தமிழ் மீனவர்களை சிங்களப் படையினர் கொன்றும் பல ஆயிரக் கணக்கானொரை அங்கவீனராக்கியு முள்ளது.
தமிழர்களைக் கொல்லும் சிங்களக் கொலை வெறியர்களுக்கு ஆரியப் பேய்கள் ஆயுதங்களும் பயிற்ச்சியும் பண உதவியும் செய்கின்றன.
இத்தாலிச் சனி நாய்க்கு தமிழர்களைப் பற்றி அக்கறை கிடையாது. ஒரு மானம் கெட்ட நாடுதான் தனது மக்களைக் கொல்லும் இன்னொரு நாட்டோடு நல் உறவைப் பேணும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...