Tuesday, 7 April 2009

நோர்வேயில் காவல் துறையினர் சாலை மறியல் போராளிகள் மீது நடவடிக்கை







.
.
.
.
.
.
.
.
.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தமிழர்கள் ஆரிய-சிங்களக் கூட்டமைப்பின் இனக்கொலை யுத்தத்தை நிறுத்தக் கோரி மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல பன்னாட்டு நெடுஞ்சாலைகள் போக்குவரத்து செய்ய முடியாமல் தடுக்கப் பட்டன. இதனால் ஒஸ்லோ நகரம் பலத்த வாகன நெருக்கடிக்குள்ளானது.
சுவிர்சலாந்துக்கான நெடுஞ்சாலையை சாலை மறிப்புப் போராளிகள் தடுக்க முற்பட்டபோது காவல் துறையினர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.
அதைத்தொடர்ந்து அங்கு பெரும் களேபரம் ஏற்ப்ட்டது.
இச்சாலை மறியல் போராட்டங்கள் எந்தவித முன் அறிவித்தலோ அல்லது அனுமதியோ இன்றியே நடாத்தப் பட்டன. இதனால் போக்குவரத்துத் துறையினர் பெரும் நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. முதல் நாள் பிற்பகல் தொடங்கி மறுநாளும் இது தொடர்ந்ததால் பொதுமக்கள் பலத்த போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுருந்தது. இதனால் கவல் துறையினர் எதிர் நடவடிக்கை எடுத்து சாலை மறியல் போராளிகளை அப்புறப் படுத்தினர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...