மும்மர் கடாஃபி ஆட்சியில் இருக்கும் போது கிளர்ச்சி செய்த மாணவர்களைப் பொது இடத்தில் வைத்துக்கொலை செய்து விட்டு அவர்களின் உடல்களை அந்த இடத்திலேயே பல நாட்களாக அழுகும் வரை கிடக்கச் செய்தார். மற்ற வீதிகளை மூடி வாகனங்களை அந்த அழுகும் உடல்கல் கிடக்கும் வீதிவழியாக போகச் செய்தார். தன்னை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதப் பலருக்கும் உணர்த்த இந்த ஏற்பாடு. ஒரு புரட்சியாளராகவும் உலகெங்கும் உள்ளவிடுதலை இயக்கங்களுக்கு உதவி செய்பவராகவும் நிறவெறிக்கு எதிரான தென் ஆபிரிக்க மக்களின் போராட்டத்திற்கு பேருதவி செய்பவராகவும் கருதப்பட்ட கடாஃபி தனது 42 கால ஆட்சியின் இறுதிப் பகுதியில் ஒரு அடக்கு முறையாளராகவே செயற்பட்டார். அவர் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை அவர் இறந்தபின் மக்கள் ஆர்பரித்து மகிழ்வதில் காண முடியும்.
கடாஃபியின் தங்கப் துப்பாக்கியால் கடாஃபி சுடப்பட்டார்.
மும்மர் கடாஃபி பிடிபட்ட பின் அவர் நீண்ட நேரம் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இரத்தம் வழிய வழிய அவர் தாக்கப்பட்டுள்ளார். கடாஃபி வைத்திருந்த தங்கத் கைத்துப்பாக்கியல் அவர் சுடப்பட்டார். அவரை கொன்றபின்னரும் தாக்குதல் தொடர்ந்தது. அவரது இறந்த உடலை தெருவில் போட்டுக் கால்களால் உதைத்தும் உடைகளைக் கழற்றியும் கேவலப் படுத்தினர்.
கடாஃபி சித்திரவதை செய்யப் படும் புதிய காணொளி
குளோபல் போஸ்ற் இணையத்தளம் கடாஃபி சித்திரவதை செய்யப்படும் காணொளியை வெளிவிட்டுள்ளது. கடாஃபி நடத்தப்படும் விதம் பன்னாட்டுப் போர் விதிகளுக்கு முற்றிலும் முரணானது.
காணொளியில் அல்லாஹு அக்பர் என்று கூச்சலிடுபவர்கள் அல்லாவின் போதனைகளை மறந்தது ஏன்?
ஒரு அமெரிக்க ஊடகத்தில் வாசகர் தெரிவித்த கருத்து: Khadafy deserved to face justice for his actions. However, this seemed to be a tad barbaric. Civilized people do not dispense justice in that manner. Seeing these images plastered over the screen has to make the average person a little sick to the stomach
பழைய இறைச்சிக் கடையில் கடாஃபியின் சடலம்
பின் லாடனைக் கொன்றபின் அமெரிக்கர்கள் பன்னாட்டு சட்டங்களுக்கு ஏற்பவும் இசுலாமிய விதிகளுக்கு ஏற்பவும் இறுதி ஏற்பாடுகளைச் செய்தனர். சாதாம் ஹுசேயின் பிடிபட்ட பின்னர் அவர் மீது எந்த ஒரு வன்முறையும் பிரயோகிக்கப்படவில்லை. அவர் மருத்துவப் பரிசோதனை செய்யும் காணொளி வெளிவிடப்பட்ட போது அவரது உடலில் எந்த ஒரு கீறல் கூட இல்லை. கடாஃபியைக் கொன்றவர்கள் அவரது உடலத்தை ஒரு மருத்துவமனையின் குளிரூட்டிய அறையில் வைக்கவும் இல்லை. கேவலமாக ஒரு பழைய இறைச்சிக் கடையில் வைத்து அவரது உடலத்தை காட்சிப் பொருளாக்கியுள்ளனர். இசுலாமிய விதிகளுக்கு ஏற்ப 24 மணித்தியாலத்துள் அடக்கம் செய்யவுமில்லை. அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் திட்டமும் இல்லை.
நீர்க் குழாய்க்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் உண்டு
கடாஃபி வாகனத் தொடரணியில் தப்பி ஓட முயற்ச்சித்த போது பிரித்தானிய விமானங்கள் அவற்றை அடையாளம் கண்டு அமெரிக்க ஆளில்லா விமானப் படைக்கு அதை அறிவித்தன. முதலில் அமெரிக்க ஆளில்லா விமானங்களும் பின்னர் பிரெஞ்சு விமானங்களும் குண்டுகளை வீசின. குண்டு வீச்சுக்களில் இருந்து தப்ப கடாஃபி கொங்கிரீட்டால் ஆன நீர்க் குழாய்குள் அவரது பாதுகாப்புப் படையினரால் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கடாஃபி சாக்கடைக்குள் ஒழிந்தார் என்று அவரை கேவல்பபடுத்த செய்திகளை வெளியிட்டன.
நீர்ப்பாசனத்திற்கு அமைக்கப்பட்ட குழாய். சாக்கடை அல்ல... |
மௌனமாகிப் போன கடாஃபியின் நண்பர்கள்
அடைகு முறையாளர் மும்மர் கடாபிக்கு இலங்கை இந்தியா போன்ற நாட்டை ஆளும் கேவலமானவர்களின் நட்பு நிறைய உண்டு. அவரின் இறப்புத் தொடர்பாக இந்த நண்பர்கள் மௌனமாக இருக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகப் பேச்சாளர் ரூபேர்ட் கொல்வில் காடாஃபியின் கொலை தொடர்பாக விசாரணை தேவை என்று சொல்லியுள்ளார். பனனாட்டு மன்னிப்புச் சபை கடாஃபியை பிடித்தவர்கள் அவரை கொன்றிருந்தால் அது ஒரு போர்க்குற்றம் என்கின்றது.
லிபியாவின் புதிய அரசைச் சேர்ந்தவர்கள் கடாஃபியைக் கொன்றவர் யாரென்று தமக்குத் தெரியும் என்கின்றனர். அவர் ஒரு வயது குறைந்தவர் என்கின்றனர். அவர் ஒரு லிபியக் குடிமகன் என்ற வகையில் அவரைத் தாம் பாது காப்போம் என்கின்றனர். அவர் ஒரு லிபியக் கதாநாயகன் என்றும் சொல்கின்றனர். அவர் குறைந்த வயதினர் என்றபடியால் அவரைச் நீதி மன்றில் நிறுத்த முடியாது என்று சொல்கின்றனர். குறைந்த வயதினர் என்பது ஒரு நாடகமா?
No comments:
Post a Comment