துருக்கிய நகர்
இஸ்த்தான்புல்லின் இரவு விடுதியில் உஸ்பெக்கிஸ்த்தானிய இளைஞர் துப்பாக்கியால்
சுட்டு 39 பேரைக் கொலை செய்ததுடன் 2017-ம் ஆண்டு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவில்
டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்று சாட், லிபியா, ஈரான், யேமன்,
சிரியா, சோமாலியா ஆறு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குப் பயணம்
செய்வதை தடை விதிப்பது என்ற குண்டை வெடிக்க வைத்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சாதியையும் மதத்தையும் வைத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை செய்ய முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு
மட்டும்தான். உலகத்திலேயே சாதியை ஏற்றுக் கொண்ட ஒரே அரசியலமைப்பு இந்திய
அரசியலமைப்பு.
அசிங்கப்பட்டாண்டா அமெரிக்காக்காரன்
தனக்குச் சாதகமாக இல்லாதவை
எல்லாம் போலிச் செய்திகள் என ஒரு புறம் டொனால்ட் டிரம்ப் அதிர்ந்து கொண்டிருக்க
அவர் பதவி ஏற்ற முன்னரே அவரது தேர்தல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பித்துவிட்டன.
உலகெங்கும் தேர்தல்கள் பலவற்றில் தலையிட்டு ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும்
அமெரிக்காவின் தேர்தலில் இரசியா தலையிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதா என்பது
தொடர்பான விசாரணையும் பல குற்றப் பத்திரிகைகளும் 2017-ம் ஆண்டு தாக்கல்
செய்யப்பட்டன. வெள்ளை மாளிகையில் ஒன்றுமாக டுவிட்டரில் ஒன்றுமாக டிரம்ப் இரண்டு
ஆட்சிகள் செய்து கொண்டிருக்கின்றார். பாக்கிஸ்த்தான் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக
டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
2017இல் உலகைக் கலங்கடித்து
அமெரிக்காவைத் திணறடித்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜொங் உன் ஆவார். சீனா அவருக்கு
எதிராக உருவாக்கலாம் எனக் கருதப் பட்ட அவரது மாற்றன் தாய் மகன் மலேசிய விமான
நிலையத்தில் வைத்து மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது தொடர்ச்சியான
அணுக்குண்டுப் பரிசோதனைகளையும் ஏவுகணைப் பரிசோதனைகளையும் சமாளிக்க முடியாமல்
அமெரிக்கா தடுமாறுகின்றது. டிரம்ப் வட கொரியாவை முழுமையாக அழிக்கப்படும் என்ற
மிரட்டல் கூட எடுபடவில்லை.
சரிந்த இஸ்லாமிய அரசு
2017இல் ரக்கா, ரமாடியா, மொசுல் எனப் பல நகரங்களை ஐ எஸ்
அமைப்பு சிரியாவிலும் இழந்தது. அவர்களின் இஸ்லாமிய அரசு ஆட்டம் காண்கின்றது.
அவர்களுக்கு எதிரான போரில் பாவிக்கப் பட்ட குர்திஷ் மக்கள் மீண்டும்
வஞ்சிக்கப்படுகின்றனர். அவர்களது தனிநாடு கோரும் கருத்துக் கணிப்புக்கு வலிமையான
மக்கள் ஆதரவு இருந்த போதும் பிராந்திய மற்றும் உலக வல்லரசுகளின் எதிர்ப்பை மட்டும்
பெற்றது. ஸ்பெயினில் இருந்து கடலோனியர்கள் பிரிந்து செல்வதற்கான கருத்துக் கணிப்பு
வாக்கெடுப்புக்கு எதிராக ஸ்பானிய அரசு கடுமையாக நடந்து கொண்டது.
சறுக்கிய சவுதி
ஆக்கிரமிப்பைத் தொடரும் இஸ்ரேல்
1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாட் போரின் ஐம்பதாண்டு
நிறைவு 2017இல் வந்தது. அப்போது இஸ்ரேல் ஜோர்தானிடமிருந்து அபகரித்த கிழக்கு
ஜெருசலேமையும் தன்னிடம் ஏற்கனவே இருந்த மேற்கு ஜெருசலேமையும் இணைத்த நகரில் தனது
இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை அமைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
அறிவித்தார். அதற்கு எதிராக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்படப் பல நாடுகள் குரல் கொடுத்தன.
திசை மாறிய ஊடகத்துறை
சமூகவலைத்தளங்களின் ஆதிக்கம் உலகத் தொடர்பாடலில்
2017இலும் இருந்தது. அதற்கு எதிரான சதிகள் பல 2017இல் மேற்கொள்ளப்பட்டன. இரசியா
அமெரிக்கத் தேர்தலில் தலையிட முகநூலைப் பாவித்தது என்ற குற்றச் சாட்டும்
முன்வைக்கப்பட்டது. 2017 பெண்களுக்கு எதிரான பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட பலரை
அம்பலப்படுத்துவதில் சமூக வலைத்தளங்கள் அம்பலப் படுத்தின. மியன்மாரில் நடந்த பல
படுகொலைகளும் சமூகவலைத்தளங்களினால் அம்பலப்படுத்தப்பட்டன.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத சிம்பாப்பே
சிம்பாப்பேயில் தன் மனைவியை தனக்குப் பின்னர்
ஆட்சியில் அமர்த்த முயன்ற முகாபேயை அவரது கட்சியினர் ஆட்சியில் இருந்து அகற்றினர்.
இந்தியப் படைகளும் சீனப்
படைகளும் ஒன்றிற்கு ஒன்று அண்மையாக பூட்டான் எல்லையில் முறுகல் நிலையில் இருந்து
பின்னர் போர் ஆபத்து தணிந்தது. நேப்பாளத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறையும்
உளவுத் துறையும் செய்த தவறுகள் அங்கு இந்தியாவிற்குப் பாதகமான அரசை ஆட்சிக்கு
கொண்டு வந்தது.
உக்கிரம் தணியாத உக்ரேன்
2017-ம் ஆண்டு முழுவதும் உலகில்
கொதிநிலையில் உக்ரேன் இருந்தது. உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் இரசியாவும் மூன்று
சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தின. சாதகமான முடிவு எட்டப்படவில்லை. ஔமெரிக்கா
உக்ரேனுக்கு தாக்குதல் செய்யக் கூடிய படைக்கலன்களை விநியோகிக்க முடிவு செய்தது.
பரிதாபத்துக்குரிய பிரித்தானியா
2017இல் உலகின் முன்னணி
நாடுகளில் பரிதாபத்திற்கு உரிய நிலையில் பிரித்தானியா இருந்தது. சிறப்பாகச்
செயற்பட முடியாத தலைமை அமைச்சர். அவரை மாற்றினால் கட்சிக்குள் மோதல் தீவிரமடையும்
என்பதால் அவரை மாற்ற முடியாமல் ஆளும் கட்சி தவிக்கின்றது. வீராப்பாக ஐரோப்பிய
ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்த பிரித்தானியா எப்படி வெளியேறுவது
என்று தெரியாமல் தவிக்கின்றது. அதே வேளை பிரான்ஸ் சிறாப்பாக ஒரு புதிய அதிபரைத்
தேர்ந்தெடுத்தது. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நனமை எனப் பலரும் சொல்லிக்
கொண்டிருக்க மூன்றாவது முறையாகவும் ஜேர்மனியில் தேர்தலில் வெற்றி பெற்ற அஞ்செலா
மேர்கெல் உறுதியான ஆட்சியை அமைக்க முடியாமல் தவிக்கின்றார். போலாந்திலும்
ஒஸ்ரியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாதகமான ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தனர். மற்ற
ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த போது பிரித்தானிய ஊடகங்கள்
அவற்றின் உளவுத்துறைகள் மீது குற்றம் சாட்டின. ஆனால் இலண்டனிலும் மன்செஸ்டரிலும்
மோசமான தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன.
அவலப் பட்ட ரொஹிங்கியர்கள்
2017-ம் ஆண்டின் மிகப் பெரும்
பேரவலத்தை மியன்மாரில் வாழும் இஸ்லாமியர்களான ரொஹிங்கியர்கள் சந்தித்தனர். மேற்கு
நாடுகளின் ஊடகங்களால் சமாதான தேவதையாக விமர்சிக்கப்பட்ட ஆங் சூ கீ அதைக்
கண்டிக்காமல் நியாயப் படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார். மியன்மாரில் நடப்பதை
இனச்சுத்தீகரிப்ப் என விபரித்தார் ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளர் அல் ஹுசேய்ன்.
ஆனால் அவரது சுதந்திரமான செயற்பாட்டுக்கு பல இன்னல்கள் வருவதாக அவர் தனது
பணிமையில் பணிபுரிவோருக்கு ஆண்டு இறுதியில் அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்ததுடன்
தான் 2018உடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் இரணாம் காலத்திற்கான பதவி
முயற்ச்சியில் தான் ஈடுபடப் போவதிலலை எனவும் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், யேமன் ஆகிய நாடுகள் கட்டாரைத்
தனிமைப் படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டன. கட்டார் ஊடகத் துறையில் ஆதிக்கம்
செலுத்துவதும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புடன் உறவை வைத்திருப்பதும் அதற்கான
காரணமாக முன்வைக்கப்பட்டது.
பங்குச் சந்தை
2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில்
உலகப் பங்குச் சந்தை ஒரு சிறிய அளவு மட்டுமே விலை அதிகரிப்பைக் காணும் என
எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்கப் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை 2017-ம் ஆண்டு
சாதனை மிக்க ஓர் ஆண்டாகும். கடந்த இருபது ஆண்டுகளில் 2013-ம் ஆண்டும் 2017-ம்
ஆண்டும்தான் Dow Jones சுட்டியின் சாதனை மிகு ஆண்டுகளாகும். Dow
Jones 26%,
S&P 20%,
Nasdaq 30% என சுட்டெண் அதிகரிப்பைக் கண்ட
ஆண்டு 2017 ஆகும். 2017-ம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை
உலகப் பங்குச் சந்தையில் நிகர முதலீடு 149பில்லியன் டொலர்களாகும். இது 2016-ம்
ஆண்டு முழுக்க முதலிட்ட தொகையிலும் பார்க்க 16பில்லியன் டொலர்கள் அதிகமானதாகும்.
நுண்நாணயம்(cryptocurrency)
2017-ம் ஆண்டு நுண்நாணயங்களின்
ஆண்டாகும். நுண்நாணயங்களில் ஒன்றான Bitcoin 2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் $1000 ஆக இருந்து ஆண்டின் இறுதியில் $19,000 ஆக அதிகரித்தது. ஆண்டின் பிற்பகுதியில் சீனாவும் இறுதிக் பகுதியில் தென்
கொரியாவும் நுண்நாணயங்களுக்கு தடை விதித்தமை அதன் பெறுமதிகளில் பாதிப்பை
ஏற்படுத்தியது. வட கொரியா பொருளாதாரத் தடைகளை உடைத்தெறிய நுண்நாணயங்களைப்
பயன்படுத்தியமை 2017இல் அதன் விலை அதிகரிப்புக்கு வழியமைத்தது.
பட்டுப்பாதை
29
நாடுகளின் அரசுத் தலைவர்கள், உலக வங்கி, பன்னாட்டு நாண்டிய நிதியம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் பல நாடுகளினதும் அமைப்புக்களினதும் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட வலயமும் பாதையும் மாநாடு (Belt and Road Forum)
ஒன்றை சீனா 2017-ம் ஆண்டு மே 14-ம் திகதி அமர்க்களமாக நடத்தியது. டொனால்ட் டிரம்ப்பின் தலைமையில் உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பிடியும் தலைமையும் ஆட்டம் காணும் வேளையில் அவற்றைத் தான் பிடிப்பதில் சீனா உறுதியாக உள்ளது என்பதை இந்த மாநாடு சுட்டிக் காட்டுகின்றது. அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காணமைத் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் இரத்துச் செய்ததமையை சீனா தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றது. கொழும்பு பன்னாட்டு நிதி நகரம், கென்யா தொடருந்து திட்டம் போன்றவை எல்லாம் புதிய பட்டுப்பாதையின் பகுதிகளே.
F-35
அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களில் சில பல களங்களில் இறங்கியுள்ளன. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும்.
இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது.
MiG-29
2017-ம் ஆண்டு ஜனவரி 26-ம் Mig-35 போர் விமானங்களின் பறப்பை. இதற்கென ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் 3300 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். Mig-35 போர்விமானங்கள் MiG-29இல் இருந்து மேம்படுத்தப்பட்டவையாகும். இப்போர்விமானங்கள் ஆரம்பத்தில் thrust vectoring எனப்படும் திசைமாற்றுத் திறன் தொழில்நுட்பமும் AESA radarரும் இல்லாமல் இருந்தன. பின்னர் அவை Mig-35இல் இணைக்கப்பட்டன.
இரசியாவின்
RSK-MiG போர்விமான உற்பத்தி நிறுவனத்தின் தொடர் இருப்பை உறுதி செய்யும் வகையில் மிக்-35 போர் விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வானில் இருந்து வானுக்கும் தரைக்கும் கடலுக்கும் ஏவுகணைகளையும் குண்டுகளையும் மிக்-35 போர்விமானங்கள் வீசக்கூடியவை.
2018-ம் ஆண்டிற்குள் 37 மிக்-35 போர்விமானங்கள் இரசிய வான்படையில் இணைக்கப்படும். பறப்பு வேகம், தாங்கிச் செல்லக் கூடிய படைக்கலன்களின் எடை(payloads) துரிதமாகத் திசைமற்றும் தன்மை(maneuverability), புலப்படாத்தன்மை (stealth), எதிரி இலக்குகளை இனம்காணும் தன்மை,
வானாதிக்கம் செலுத்தும் திறன் (air superiority), பார்வைத் தொலைவு (Beyond Visual Range), எரிபொருள் மீள் நிரப்பும்வரை பறக்கக் கூடிய தூரம் ஆகியவை போர்விமானங்களின் முக்கிய அம்சங்களாகும்
தீவிரவாதம்
22-03-2017 பிற்பகல்
2.-40 ஒரு தாக்குதலாளி ஒரு மகிழூர்தியை ( a motor car that is classified as
sport utility vehicle) வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்தின் மேலாக நடந்து சென்றவர்கள் மோதிக் கொண்டு சென்றார். அவரது வண்டி தெரு ஓரத்தில் மோதி மேலும் ஓட்ட முடியாத நிலை வந்தவுடன் கையில் இருந்த சமையலறைக் கத்தியுடன் பாராளமன்ற வளாகத்தினுள்
Carriage Gates entrance ஊடாக ஓடினார். அவரைத் தடுக்க வந்த காவற்துறையாளரைக் குத்திய போது இன்னும் ஒரு காவற்துறையாளர் அவரைச் சுட்டுக் கொன்றார். கத்தியால் குத்தப்பட்ட காவற்துறையாளர் அமைச்சர் ஒருவரால் கொடுக்கப்பட்ட முதலுதவிச் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். தெரு ஓரம் நடந்து சென்றவர்களில் இருவர் கொல்லப்பட்டன்னர் 39 பேர் மருத்தவ மனையில் சிகிச்சை அழிக்கப் படும் வகையில் காயமடைந்தனர். மன்செஸ்டர் நகரிலும் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றது.
2017-ம் ஆண்டின் இறுதி அதிரடிகளாக இந்தியா
தைவானுடன் தனது உறவுகளை வளர்ப்பதும், இரசியாவில் இருந்து மின்சார
இறக்குமதி செய்வதை பெலரஸ் நிறுத்தியதும் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment