2017-ம் ஆண்டில்
நடக்கவிருக்கும் சீன அதிபர் தெரிவில் ஷி ஜின்பிங் வெற்றி பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டு
விட்டது. 2012-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்து ஷி ஜின்பிங்
இரண்டு பணிகளில் அதிக கவனம் செலுத்துகின்றார். ஒன்று சீனாவில் தனது பிடியை
இறுக்குவது. இரண்டாவது சீனாவில் ஊழலை ஒழித்தல். சீனாவில் ஆட்சியில் இருப்பவர்
கட்சியையும் படைத்துறையையும் தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும். சீனாவில்
நடக்கும் ஊழல்களால் சீன மக்கள் ஆண்டு ஒன்றிற்கு ஒரு ரில்லியன் டொலர்களை இழந்து
கொண்டிருக்கின்றார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான சீன
ஆட்சியாளர்களின் போர் ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதிபர்
ஷி ஜின்பிங்கின் போர் எல்லாவற்றிலும் பார்க்க வலிமை மிக்கதும் ஆழமானதும் நீண்ட
காலமாக நடப்பதாகவும் கருதப்படுகின்றது.
எங்கும் ஷி ஜின்பிங்
நடைமுறையில் சீனாவின் உச்ச
அதிகாரமையம் Politburo Standing
Committee ஆகும் இதில் தற்போது அதிபர்
ஷி ஜின்பிங், தலைமை அமைச்சர் லி கெக்கியாங் உட்பட ஏழு பேர்
உள்ளனர். மாவோ சே துங் அதிபராக இருந்தபோது தலைமை அமைச்சர் சூ என் லாயிற்கு கொடுத்த
மரியாதை கூட ஷி ஜின்பிங்கிடமிருந்து லி கெக்கியாங்கிற்கு கொடுப்பதில்லை எனக்
குற்றம் சாட்டப்படுகின்றது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஷி ஜின்பிங்
சீனாவில் அதிகாரம் மிக்கவராகக் காணப்படுகின்றார். ஷி துரிதமாக அதிகாரத்தை தன் வசப்
படுத்தியது போல் வேறு எவரும் சீனாவில் செய்யவில்லை. அவரது தந்தைக்கு சீனப்
பொதுவுடமைக் கட்சிக்குள் இருந்த செல்வாக்கும் அவருக்கு உதவியாக இருந்தது. கட்சி, படைத்துறை
பொருளாதாரம், குடிசார் சமூக அமைப்பு என
எல்லாவற்றிலும் தனது பிடிகளை அவர் இறுக்கிக் கொண்டிருக்கின்றார். பொருளாதார
நிபுணரான லி கெக்கியாங்கை பொருளாதார விடயங்களில் கூட ஷி ஓரம் கட்டிவிடுகின்றார்.
முன்பு பொருளாதார விவகாரங்களை அரச சபையும் அதன் அமைச்சர்களுமே கையாண்டு கொண்டு
வந்தனர். அந்த அதிகாரத்தை ஷி தனதாக்கிக் கொண்டார். 2012-ம் ஆண்டு அதிபராக வர
முன்னரே சீனப் பொதுவுடமைக் கட்சியின் உச்சப் பதவியான பொதுச் செயலாளர் பதவியையும்
படைத்துறையின் உச்சத் தளபதிப் பதவியையும் ஷி தனதாக்கிக் கொண்டார். கிழக்குச் சீனக் கடலிலும் தென் சீனக் கடலிலும்
ஷி ஜின்பிங் தனது கொள்கைகளில் உறுதிப்பாட்டுடன் இருப்பதும் அவரது உள்நாட்டுச்
செல்வாக்கை அதிகரிக்க உதவுகின்றது. உலக அரங்கில் சீனா எல்லாத் துறையிலும்
முதன்மையான நாடாக இருக்க வேண்டும் எனச் சீனர்கள் விரும்புகின்றார்கள் என்பதை ஷி
நன்கறிந்து வைத்துள்ளார். ஷியின் வெளிநாட்டுப் பயணங்களிற்கு சிகரமாக அமைந்தது
அவரது பிரித்தானியப் பயணமாகும். பிரித்தானிய அரசியுடன் தங்கரததில் பவனி வந்தார்
ஷி.
இளைஞர் அணி
ஷி ஜின்பிங்கிற்கு எதிர்ப்புக் காட்டக் கூடிய ஒரு அமைப்பாக சீனப் பொதுவுடமைக் கட்சியில் இளைஞர் சபை இருக்கின்றது. அதற்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைந்து அதன் செயற்பாடுகளை ஷி முடக்கியுள்ளார். 88 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் சபையைச் சேர்ந்தோர் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பேசுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சீனப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவர்களின் பிள்ளைகளை இளவரசக் குஞ்சுகள் (princelings) என சீனாவில் அழைப்பர். ஷியும் ஒரு இளவரசக் குஞ்சுதான். பல இளவரசக் குஞ்சுகளின் ஆதரவு ஷ்யிற்கு உண்டு.
இளைஞர் அணி
ஷி ஜின்பிங்கிற்கு எதிர்ப்புக் காட்டக் கூடிய ஒரு அமைப்பாக சீனப் பொதுவுடமைக் கட்சியில் இளைஞர் சபை இருக்கின்றது. அதற்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவில் குறைந்து அதன் செயற்பாடுகளை ஷி முடக்கியுள்ளார். 88 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட இளைஞர் சபையைச் சேர்ந்தோர் பொதுவுடமைக் கட்சியின் சார்பில் பேசுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சீனப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவர்களின் பிள்ளைகளை இளவரசக் குஞ்சுகள் (princelings) என சீனாவில் அழைப்பர். ஷியும் ஒரு இளவரசக் குஞ்சுதான். பல இளவரசக் குஞ்சுகளின் ஆதரவு ஷ்யிற்கு உண்டு.
படைத்துறை
2016-ம் ஆண்டு ஜூலை மாதம்
சீன மக்கள் படையின் கட்டளை கட்டுப்பாடு பணியகத்திற்குச் சென்ற ஷி ஜின்பிங்
படைத்துறையினரி சீருடையை அணிந்து கொண்டு சென்றது பலரை ஆச்சரியப்பட வைத்தது.
வழமையாக மாவோ சே துங் பாணியில் இளம் பச்சை நிற ஆடையுடனே எல்லா சீனத் தலைவர்களும்
படையினரைச் சந்திக்கச் செல்வர். இந்த மரபை உடைத்ததன் மூலம் ஷி ஜின்பிங்
படையிருக்கு நான் கட்சியை மட்டும் பிரதிநிதித்துவப் படுத்துபவன் மட்டுமல்ல
உங்களில் ஒருவன் கூட என்ற செய்தியை சொல்ல முனைகின்றார் என்றார் அமெரிக்க
உளவுத்திறையான சிஐஏயின் முன்னாள் உதவி இயக்குனரும் சீன மக்கள் படை தொடர்பான
நிபுணத்துவம் பெற்றவருமான டெனிஸ் வைல்டர். ஷி ஜின்பிங் சீனப் படைத்துறையுன் உச்சத்
தளபதியும் ஆவார். ஷி இற்கு முன்னர் இருந்த சீன அதிபர்களில் ஒருவர் மட்டுமே அந்தப்
பதவியை வகித்தார். மாவோ சே துங் கூட உச்சத் தளபதி பதவியை வகிக்கவில்லை. சீன மக்கள்
படையினரை படைத்துறைச் சீருடையுடன் சந்தித்ததன் மூலம் சீனப் படைத்துறையை ஷி ஜின்பிங்
மறு சீரமைப்பதில் வெற்றி கண்டுள்ளார் என்பதையும் அவர் சீன மக்களுக்கும் உலகிற்கும்
உணர்த்த முயல்கின்றார். ஊழலில் ஈடுபட்டதாக சீனப் படைத்துறையின் முன்னணித்
தளபதிகளில் ஒருவரான ஷு கைஹௌ என்பவரை ஷி ஜின்பிங் கைது செய்திருந்தார். ஷு கைஹௌ
தண்டிக்கப் படவில்லை ஆனால் புற்று நோய் மூலம் இறந்தார். தமிழீழ விடுதலைப்
புலிகளின் அரசியல் துறையில் இருந்த தமிழினிக்கு வந்த புற்றுநோய் மாதிரியானதா இது? சீன அதிபரின்
படைத்துறைச் சீரமைப்பின் படி சீனப் படையினரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தால்
குறைக்கப்படவிருக்கின்றது. சீனப் படைத் துறை தரைப்படை, கடற்படை, வான்படை,
கேந்திரோபாய ஏவுகணைப் படை என நான்கு பிரிவுகளைக் கொண்டது. முன்னர்
இவை படைத்துறை ஜெனரல்களைக் கொண்ட ஒரு திணைக்களத்தால் முகாமைப் படுத்தப்பட்டது. முன்னர்
ஏழு பிராந்தியப் பிரிவுகள் இருந்தன. அதை ஷி நான்காகக் குறைத்துவிட்டார். தற்போது
ஷி ஜின்பிங் அதை மாற்றி மையப் படைத்துறை ஆணையகத்தின் முகாமையின் கீழ்
கொண்டுவரப்பட்டுள்ளது. மையக் கட்டுப்பாட்டு ஆணையகம் ஷியின் தலைமையில்
இயங்குகின்றது. சீனாவின் பொதுவுடமைக் கட்சியில் உள்ள உட் குழுப் பிரிவுகளின்
போட்டிகள் சீனப் படைத்துறைக்குள்ளும் ஊடுருவாமல் இருப்பதில் ஷி ஜின்பிங் அதிக
கவனம் செலுத்தி அதை இல்லாமற் செய்ய முயல்கின்றார். ஷி ஜின்பிங்கிற்கு முன்னர் எந்த
ஒரு சீன அதிபரும் சீனப் படைத்துறக்கும் பொதுவுடமைக் கட்சிக்கும் உள்ள தொடர்பைக்
கட்டுப்படுத்தவோ அல்லது மறுசீரமைக்கவோ முயலவில்லை. கட்சி உறுப்பினர்கள் செய்யும்
ஊழல்களை ஒழித்துக் கட்டுவதற்கு எதிராக ஷி ஜின்பிங் கடும் நடவடிக்கை எடுக்கின்றார்.
அதனால் ஊழல் செய்பவர்கள் படைத்துறையில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கு
எதிராகப் படையினரைத் திருப்பக் கூடாது என்பதற்காகவே ஷி கட்சிக்கும்
படைத்துறைக்கும் இடையிலான தொடர்பை கட்டுப்படுத்த முயல்கின்றார். சீனப்
படைத்துறையின் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை (reporting structure) மாற்றியமைப்பதன் மூலம் சீனப் படைத்துறையை தனது இரும்புப்
பிடிக்குள் கொண்டுவர ஷி ஜின்பிங் முயல்கின்றார். சீனாவைப் பொறுத்தவரை கட்சியின்
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆணிவேர் சீனப் படைத்துறையிடமே இருக்கின்றது.
மொஸ்க்கோ பலகலைக்கழகமான உயர் பொருளியல் பாடசாலையின் சீனா தொடர்பான நிபுணரான வசிலி
காஷிம் ஷி ஜின்பிங் கட்சியின் அதிகாரத்தின் அத்திவாரமாக சீனப் படைத்துறையை
மாற்றுகின்றார் என்கின்றார்.
உலக அமைதிக்கு ஆபத்தா?
சீனப் படைத் துறை சீனப் பொதுவுடமைக் கட்சியிலும்
ஆட்சியிலும் செலுத்தும் ஆதிக்கம் உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனச்
சில படைத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சீனா கிழக்குச் சீனக் கடலிலும் தென்
சீனக் கடலிலும் பெரும் முறுகல் நிலையைச் சந்தித்திருக்கும் வேளையிலும் பல
நாடுகளில் சீனாவிற்கு சார்பான ஆட்சியாளர்களை ஐக்கிய அமெரிக்கா அகற்றும் வேளையிலும்
சீனா ஒரு போருக்குத் தள்ளப்படும் ஆபத்து உண்டு என்கின்றார்கள் அவர்கள். 2030-ம்
ஆண்டு சீனப் படைத்துறை அமெரிக்கப் படைத்துறையிலும் வலுமிக்கதாகவும் படை
நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்யக் கூடியதாகவும் அமைய வேண்டும் என ஷி ஜின்பிங்
திட்டமிட்டுள்ளார். சீனப் படைத்துறை தொழில்நுட்ப ரீதியில் பல விதங்களில் பிந்தங்கி
உள்ளது என்பதை சீனப் படைத்துறையினரே ஒத்துக் கொண்டுள்ளனர். சீனப் படையினர்
கடைசியாகப் புரிந்த போர் வியட்னாமிற்கு எதிராக 1979-ம் ஆண்டு நடந்தது. அதில்
சீனப்படையின் செருப்பும் மென் தொப்பியும் அணிந்து கொண்டு சிவப்புக் கொடிகளை
அசைப்பதன் மூலம் தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்தனர். களமுனை அனுபவம் இல்லாத சீனப்
படையினர் ஒரு போர் என்று வரும் போது விமானம் தாங்கிக் கப்பல்களையும், ரடாருக்குப் புலப்படாத போர் விமானங்களையும்
அணுவலுவில் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களையும் எதிர் கொள்ளும் அனுபவம் பெற
இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும். தற்போது உள்ள நிலையில் ஜப்பானுடன் கூட ஒரு போர்
செய்து சீனா ஒரு காத்திரமான வெற்றியை ஈட்டுமா என்பது ஐயத்திற்கு இடமானது. அப்படி
ஒரு போரில் சீனா தோற்கும் போது அது சீனப் பொதுவுடமைக் கட்சியின் முடிவாகக் கூட
அமையலாம். ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட 2008-ம் ஆண்டு சீனாவின்
சிச்சுவான் மாகாணத்தில் நடந்த பூமி அதிர்ச்சியின் போது சீனப் படையினர் செயற்பட்ட
விதம் அவர்களது திறனற்ற தனமையை வெளிகாட்டியிருந்தது. தனது படையினருக்குப்
பயிற்ச்சியளிப்பதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சீனா எந்த ஒரு நாட்டுடனாவது
போர் புரிய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. அதன் மூலம் உலகம் மட்டுமல்ல சீனாவும் கூட தனது படைத்துறையின
வலுக்கள் வலுமின்மைகள் பற்றி உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். கடந்த ஐம்பது
ஆண்டுகளாக அமெரிக்கப் படையினர் தொடர்ந்து பல் வேறு நாடுகளில் படை நடவடிக்கைகளில்
ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் கொல்லப்படும் அமெரிக்கப் படையினரின்
எண்ணிக்கை சீனாவின் படையில் இருந்து தப்பி ஓடிச் சுட்டுக் கொல்லபடுபவர்களின்
எண்ணிக்கையிலும் குறைவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சவால் மிக்க பாதை
எந்ததச் சீர்திருத்தமும் சவால்களைச் சந்திக்க
வேண்டி வரும். ஷி ஜின்பிங்கின் சீர்திருத்தமும் அப்படியே. அரசியல்
விஞ்ஞானத்திற்கும் சட்டத்திற்குமான ஷாங்காய் பல்கலைக் கழகத்தின் கடற்படை நிபுணர்
நீ லிக்சியாங் ஷியின் படைத்துறைச் சீர்திருத்தத்திற்கு படைக்கு உள்ளேயும்
வெளியேயும் எதிர்ப்புக்கள் உண்டு என்றார். அவர் அந்த எதிர்ப்பை திரிபுவாதத்திற்கு
ஒப்பிட்டார். 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஷி ஜின்பின்கிற்கு எதிராக சினப்
பொதுவுடமைக் கட்சியின் இணையத்தளங்களில் சில கட்டுரைகளும் வெளிவந்தன. அதில் ஷி
அதிகாரப் பசி மிக்கவர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் கருத்து ஒரு
எதிர்ப்பியக்கமாக வளரவில்லை. சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலாளராக ஷி இருப்பதால்
அவரால் கட்சிக்குள் எழும் எதிர்ப்புக்களை இலகுவாக ஒழித்துக் கட்ட முடியும். மாவோ
சே துங்கின் பின்னர் சீனாவில் அதிகாரம் மிக்க தலைவராக Deng Xiaopin இருந்தார். அதனால் அவரால் சீனாவில் பொருளாதார சீர்திருத்தத்தை
ஆரம்பித்து வைக்கக் கூடியதாக இருந்தது. ஷி ஊழல் ஒழிப்பில் அதிக அக்கறை
காட்டுகின்றார். சீனாவில் உருவாகிய மாபியாக் கும்பல்கள் காவற்துறையில் ஊழலை
வளர்த்தது. அவர்கள் செய்யும் பாலியல் தொழிலுக்கும் போதைப் பொருள் விற்பனைக்கு
காவற்துறையினரின் ஒத்துழைப்புத் தேவைப்பட்ட போது அவர்கள் பணத்தின் மூலம்
காவற்துறயினரை விலைக்கு வாங்கினர். சீனாவின் பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையிலேயே
ஊழல் ஆரம்பித்தது அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், சொத்துக்கள்
காணிகள் விற்பனை செய்யும் போது பொதுவுடமைக் கட்சியினர் ஊழலில் ஈடுபட்டனர். அவர்கள்
அரசு விற்பனை செய்பவற்றை தாமே குறைந்த விலை கொடுத்து வாங்கினர். முன்னாள்
படைத்துறைத் தளபதி Zhou Yongkang நடுவண் படைத்துறை ஆணையகத்தின் அதிபராக இருந்த ஜெனரல் கௌ பொக்ஸியோங் போன்றோருக்கு
எதிராகவும் ஷி துணிந்து அவர்கள் செய்த ஊழலுக்காக தண்டித்தார். இதனால் அவருக்குப்
பல எதிரிகளும் உருவாகினார்கள். 2012-ம் ஆண்டு ஹிலரி கிளிண்டனை சந்திக்க ஏற்பாடு
செய்திருந்த கூட்டத்தில் ஷி கலந்து கொள்ளவில்லை அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
எனக் கருதியே அவர் கலந்து கொள்ளவில்லை என பிரித்தானியப் பத்திரிகையான தி
இண்டிப்பெண்டற் செய்தி வெளியிட்டது. பின்னர் ஷி எதிராக புரட்ச்சிச் சதி
நடப்பதாகக்கூட வதந்திகள் பரவின. ஷியின் சாப்பாட்டில் நஞ்சு கலக்கப்படலாம் என்ற
அச்சத்தில் அவர் இருப்பதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டது.
பொருளாதாரமும் ஷி
ஜின்பிங்கும்
2012- ம் ஆண்டு ஷி ஜின்பிங் பதவிக்கு வந்த போது
2008-ம் ஆண்டில் உலகில் உருவான பொருளாதாரப் பிரச்சனை சீனாவின் ஏற்றுமதியை பெரிதும்
பாதித்துக் கொண்டிருந்தது. அதனால் ஷியின் தலைமையில் சீனா பல பொருளாதாரப்
பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஷியின் தவறான கொள்கையோ அல்லது
வழிநடத்தலோ சீனப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை இழந்தமைக்குக் காரணம் அல்ல. சீனாவில்
பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைச் செய்து
கொண்டிருக்கையில் சீனப் படைத்துறையில் மூன்று இலட்சம் பேர்களைக் குறைப்பது பல
பொருளாதாரச் சவால்களையும் ஏற்படுத்தும். அதிபர் ஷி ஜின்பிங் படைத்துறைச் செலவைக்
குறைக்கும் நோக்கத்துடனும் படைத்துறையின் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனுமே
ஆட்குறைப்புத் திட்டத்தை முன்னெடுக்கின்றார். சீனாவின் பொருளாதாரம் 2008இன் பின்னர் ஏற்றுமதி
குறைவதால் பாதிப்படைந்து கொண்டிருக்கின்ற போதிலும். சீனாவால் ஆண்டு ஒன்றிற்கு ஒரு
ரில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும். சீனக்
கூட்டாண்மைகள் (corporations) ஆண்டு தோறும் மூன்று ரில்லியன் டொலர்களை இலாபமாக ஈட்டுகின்றன.
அதிலும் பல மடங்கு தொகையை சீன மக்கள் ஆண்டு தோறும் சேமிப்பதுடன் அவர்களது சேமிப்பு
வளர்ச்சி ஆண்டுக்கு பத்து விழுக்காடு அதிகரித்துக் கொண்டு போகின்றது. சீன அரசு
சமுகப் பாதுகாபு நிதியம், அரசி நிதியம் (sovereign wealth) வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு ஆகியவற்றில் பல ரில்லியன் டொலர்களைக்
கொண்டிருக்கின்றது. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் இந்த அரச
நிதியங்களின் முதலீகள் இலாபகரமானதாகவே இருக்கின்றன. இதனால் சீன அரசு தனது
பாதுகாப்புச் செலவைக் குறைக்க வேண்டிய எந்த நிர்பந்தத்திற்கும் முகம் கொடுக்கவில்லை.
சீனப் பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத்திலும் பார்க்க நான்கு மடங்கு கதியில்
வளர்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் சீனாவின் பாதுகாப்புச் செலவு அதிகரிப்பு
அமெரிக்காவினதிலும் பார்க்க அதிகமானதாக வளரும். தற்போதைய படைத்துறை நிபுணர்களின்
கருத்துப்படி Commanders win battles. Economies win wars. தளபதிகள் சண்டைகளில் வெல்வார்கள் பொருதாரங்கள் போரில் வெல்லும். சீனப்
பொருளாதாரம் உலகில் மிகப் பெரியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமுண்டோ?
No comments:
Post a Comment