உக்ரேனியப் படைகளுக்கு பயிற்ச்சி அளிக்க அங்கு சென்றுள்ள ஐக்கிய அமெரிக்கப்படைகளால் இரசியா அதிர்ச்சியடைந்துள்ளது. உக்ரேனின் கிறிமியாவை தன்னுடன் இணைத்த இரசியா உக்ரேனின் இரசியர்கள் பெரும்பான்மையினராக வாழும் அதன் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் கிளர்ச்சியைத் தூண்டியுள்ளது. அவர்கள் தமக்கு தனிநாடு கோரிப் போராடுகின்றார்கள். உக்ரேனுக்குள் இரசியா தனது படையினர் பலரை இரகசியமாக அனுப்பி உக்ரேனியப் படைகளுடன் சண்டை செய்ய வைத்துள்ளது.
மூலம் சிரியா
சிரிய விவகாரத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன்இரசியா ஒத்துழைக்காததால் அமெரிக்கா உக்ரேனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி உக்ரேனை இரசியாவிற்கு எதிராகத் திருப்பியது. அதனால் உக்ரேன் இரசியாவின் யூரோ ஏசியன் பொருளாதாரக் கூட்டமைப்பில் இணையாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முனைந்தது. இதனால் ஆத்திரமடைந்த இரசியா உக்ரேனில் வாழும் இரசியர்களை உக்ரேனிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்தது. முன்பு இரசியாவின் ஒரு பகுதியாக இருததும் இரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்படைத் தளத்தைக் கொண்டதுமான கிறிமியாவில் குழப்பம் உருவானது. கிறிமியாவில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தி அது இரசியாவுடன் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரசியாவிற்கு எதிராக நேட்டோ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இரசியாவின் தளரும் பொருளாதாரம்
இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் உலகச் சந்தையில் வீழ்ச்சியுறும் எரிபொருள் விலை வீழ்ச்சியும் அதன் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் இரசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த படியால் இரசியப் பொருளாதாரம் கோட்பாட்டு ரீதியாக மந்த நிலையை அடைந்துள்ளது என்பது உறுதியாகிவிட்டது. 2015-ம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டில் 2.2விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டிருந்தது. இரண்டாம் காலாண்டில் இரசியப் பொருளாதாரம் 4.6 விழுக்காடு வீழ்ச்சியை அடைந்ததுடன் அங்குவிலைவாசி 15.6விழுக்காடாக இருக்கின்றது. இரண்டாம் காலாண்டிற்கான வீழ்ச்சி எதிர்பார்த்த 4.5 விழுக்காட்டிலும் அதிகமாகும். 2015 ஜூலை வரையிலான 12 மாதங்களில் இரசிய நாணயம் அமெரிக்க டொலர்களுக்கு எதிராக 43 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
இரசியாவின் படை இரகசியம் கை மாறுமா?
உக்ரேனில் கிளர்ச்சி செய்பவர்களுக்கும் உக்ரேனுக்குள் இரகசியமாக நுழைந்த இரசியப் படையினருக்கும் எதிராகப் போர் புரிய உக்ரேனியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் போர்ப்பயிற்ச்சிகள் வழங்குகின்றன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஓரு உறுப்பு நாடாக இருந்த படியால் உக்ரேனியப் படையினர் இரசியாவின் போர் முறைகளைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அத்துடன் இரசியப் படைகள் எப்படிப் போர் புரிகின்றன என்பது பற்றி தற்போது உக்ரேனியப்படைகள் அறிந்து கொள்கின்றன. உக்ரேனியப் படைகளிடமிருந்து அமெரிக்கப் படைகள் இத் தகவல்களைப் பெற்றுக் கொள்வது பற்றி இரசியா கலவரமடைந்துள்ளது.
ஆளாளுக்கு போர் ஒத்திகை
ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, போலாந்து ஆகிய நாட்டுப் படைகள் உட்படப் பல நேட்டோப் படையினர் உக்ரேனியப் படைகளுடன் இணைந்து 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் போர்ப் பயிற்ச்சிகளில் ஈடுபட்டதும் இரசியாவைக் கரிசனை கொள்ள வைத்துள்ளது. இந்தப் போர்ப்பயிற்ச்சி தேவை ஏற்படின் அவர்கள் இரசியாவுடன் மோதலுக்குத் தயார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இப்பயிற்ச்சியில் 19 நாடுகளில் இருந்து 15,000 படையினர் ஈடுபட்டனர். ஒரு பயிற்ச்சியில் ஈரூடகத் தரையிறக்கம் செய்யப்பட்டது. இன்னும் ஒரு பயிற்ச்சியில் போல்ரிக் நாடுகளிலும் போலாந்திலும் தாங்கிகள் தாழப் பறக்கும் விமானங்களுடன் பயிற்ச்சிகள் நடந்தன. மூன்றவது பயிற்ச்சியில் நேட்டோ புதிதாக உருவாக்கிய ஏநசல ர்iபா சுநயனiநௌள துழiவெ வுயளம குழசஉந எனப்படும் அதி துரித தயார் நிலை அதிரடிப் படையினர் போலாந்தில் பயிற்ச்சியில் ஈடுபட்டனர். பதிலுக்கு இரசியப் படையினர் லத்வியாவை ஆக்கிரமிப்பது போன்ற ஒரு பயிற்ச்சியில் ஈடுபட்டனர். இரசியாவின் பயிற்ச்சியில் எண்பதினாயிரம் படையினர் ஈடுபட்டனர். நேட்டோப் படைகள் தேவை ஏற்படின் உக்ரேனின் படை நிலைகளையும் படைத்துறைக் களஞ்சியங்களையும் பாவிக்க உக்ரேன் அனுமதி வழங்கியுள்ளது.
இரசியப் பாதுகாப்புச்சபையில் தனித்த புட்டீன்
2015 ஜுலை மாதம் 3-ம் திகதி இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் நடை பெற்றது. பத்துப் பேரைக் கொண்ட இரசியப் பாதுகாப்புச் சபையில் இரசிய அதிபர் விளடிமீர் புட்டின் மட்டுமே தனது நாட்டுப் படைகள் தனது ஆணையை ஏற்றுப் நேட்டோப் படைகளுடன் போர் புரியும் என நம்புகின்றனர். ஐக்கிய அமெரிக்கா இரசியாவை ஆக்கிரமிக்க முயல்கின்றது என புட்டீன் உறுதியாக நம்புகின்றார். நேட்ட்ப்படைகளுடன் ஒரு போருக்கு அவர் தாயார் என்கின்றார். இரசியாவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் பின்னர் மாஸ்க்கோவின் எதிரொலி என்ற வானொலி எடுத்த கருத்துக் கணிப்பில் இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையில் நேரடி மோதல் நடக்கும் என 43 விழுக்காட்டினர் பதிலளித்துள்ளனர். இதுவரை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை எமது மேற்கத்தையப் பங்காளிகள் என குறிப்பிட்டு வந்த புட்டீன் இப்போது அவர்களை எமது புவிசார் அரசியல் எதிரிகள் எனக் குறிப்பிடத் தொடங்கியிருக்கின்றார் என்பதை அரசிய நோக்குனர்கள் கவனமாகக் கருத்தில் கொண்டுள்ளனர்.
பெருகும் போர் அபாயம்
இரசிய எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் கேஜீபி அதிகாரியுமான கென்னடி குட்கோவ் உக்ரேனில் நிலைமைகள் மோசமடைந்து இரசியப் படைகளுக்கும் நேட்டோ ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான ஒரு மோதல் சாத்தியமான ஒன்று என்றார். பிரித்தானியாவில் உள்ள நுரசழிநயn டுநயனநசளாip நேவறழசம என அழைக்கப்படும் போர் தொடர்பான சிந்தனையாளர் குழு நடக்கும் ஒத்திகைகள் போர் அபாயத்தை அதிகரித்துள்ளது என்கின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment