Friday, 3 April 2015

பிரித்தானியாவின் Global Combat Ship பூகோள தாக்குதல் கப்பல்கள்

ஐக்கிய இராச்சியத்தின் கடற்படைக்கு  Type 26 Global Global Combat Ship என்னும் பூகோள தாக்குதல் கப்பல்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இணைக்கப்படவிருக்கின்றன. Frigate வகையைச் சேர்ந்த பூகோள தாக்குதல் கப்பல்கள் பலதரப்பட்ட செயற்பாகுகளைக் கொண்டவையாகும். Frigate வகைக் கப்பல்கள் நாசகாரிக் கப்பல்களிலும் பார்கச் சிறியவையாகும். இவற்றைத் தொடர்ந்து இன்னும் பதினைந்து ஆண்டுகளில் Type 27 Global Global Combat Shipகள் ஐக்கிய இராச்சியக் கடற்படைக்கு இணைக்கப்படவிருக்கின்றன.

Type 26 Global Combat Ships அடுத்த தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்களைச் செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தரை நடவடிக்கைத் தேவைகளையும் இவை செய்யக் கூடியவை. முதலில் பதின்மூன்று Type 26 Global Global Combat Ships உருவாக்கப்படவிருக்கின்றன. அத்துடன் துருக்கி, ஒஸ்ரேலியா, இந்தியா, மலேசியா, நியூசீலாந்து, பிரேசில், கனடா ஆகிய நாடுகளுக்கும் இக்கப்பல்களை விற்பனை செய்யப்படவிருக்கின்றன. ஒரு கப்பல்  250 முதல் 350 மில்லியன் பவுண்கள் பெறுமதியானவை என எதிர்பார்க்கப்படுகின்றது. இவை Type 45 Destroyersகளிலும் பார்க்க மலிவானவையாகும். சிலவகைச் சிறப்புதாக்குதல்கள் விடுவிப்புக்கள் போன்றவற்றில் Type 26 Global Global Combat Ships நன்கு செயற்படக் கூடியவை என எதிர்பார்க்கப்படுகின்றது

பொதுவாக Frigate வகைக் கப்பல்கள் குறைந்த விலைகளில் உருவாக்கப்படுபவை. இவை நாசகாரிக் கப்பல்களுடன் ஒப்பிடுகையில் சிறியவையும் குறைந்த அளவு ஏவுகணைகளைக் கொண்டவையுமாகும். ஆனால் Frigate வகைக் கப்பல்கள் ஆழம் குறைந்த கடல்களிலும் கரையோரங்களிலும் திறமையாகச் செயற்படக் கூடியவை. Littoral Combat Ship என்னும் வகைக்கப்பல்கள் Frigate வகைக் கப்பல்களிலும் சிறியவை.

British Aerospace (BAe) என்னும் நிறுவனமும் Marconi Electronic Systemsஎன்னும் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய நிறுவனமான BAE Systems ஐக்கிய இராச்சியப் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து Type 26 Global Global Combat Shipsகளையும் Type 27 Global Combat Shipsகளையும் உற்பத்தி செய்கின்றன. இதற்கான முதல் திட்ட வரைபு 2005-ம் ஆண்டு செய்யப்பட்டது.

வேறு வேறு தாக்குதல் படைக்கலன்களையும் உணரிகளையும் தேவைக்கு ஏற்ப இணைக்கும் வகையில் Type 26 Global Combat Ships வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் எதிர்களின் ரடார்களுக்குப் புலப்படாத stealth தொழில்நுட்பமும் இதில் உள்ளது. அத்துடன் ஒரு உழங்கு வானூர்தியையும் எடுத்துச் செல்லக் கூடியது. இதில் 118 ஊழியர்களும் 72 படைவீரர்களும் பயணிக்கக் கூடியது.

Type 26 Global Combat Ships  5,400தொன் எடையும், 148மீட்டர் நீளமும் 19 மீட்டர் அகலமும் கொண்டது. Type 26 Global Global Combat Ships இல் மூன்று வேறு மாதிரிகள் உருவாக்கப்படவிருக்கின்றன. முதலாவது வகை நீர் மூழ்கி எதிர்ப்புக்களுக்கும், இரண்டாவது வகை விமான எதிர்ப்புக்களுக்கும், மூன்றாவது வகை பொது நடவடிக்கைகளுக்கும் பயன் படக்கூடியன.
நீர் மூழ்கி எதிர்ப்பு வகைகள் Sonar எனச் சுருக்கமாக அழைக்கப்படும் SOund Navigation And Ranging என்னும் தொழில் நுட்பத்தைக் கொண்டவை. இவற்றால் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டங்களைத் தொலைவில் இருந்தே இனம் காணமுடியும்.



விமான எதிர்ப்பு வகை Type 26 Global Global Combat Ships களில தொலைதூர மற்றும் நடுத்தர தூரம் பாய்ந்து சென்று விமானங்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் பொருத்தப் பட்டிருக்கும்

எல்லா வகைகளிலும் 127mm calibre துப்பாக்கிகளும்  சுருக்கமாக CIWS என அழைக்கப்படும்  phalanx close-in weapon systems இரண்டும் இரண்டு 30mm oerlikon KCB பொருத்தப் பட்டிருக்கும். oerlikon KCB என்பவையும் சிறு துப்பாக்கிகளாகும். Type 26 Global Global Combat Ships அறுபது நாட்கள் கடலில் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை அத்துடன் 11,000 கிலோ மீட்டர்கள் தொடர்ந்து பயணிக்கக் கூடியவை.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...