மாலையானதும் டேவிட் கொழும்பின் கடற்கரையின் அழகை இரசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு உல்லாசமாக இருந்த காதலர்களையும் இரசித்தபடி நடந்து கொண்டிருந்தவர் தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதிக்கு எப்படித் திரும்பிப் போவது என்று மறந்துவிட்டார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தவருக்கு ஒண்ணுக் கடிக்க வேண்டும் போல் இருந்தது. அதற்குரிய இடத்தையும் காணவில்லை. அங்கும் இங்கும் அதற்குரிய இடத்தைத் தேடியவருக்கு அப்படி ஒரு இடம் கிடைக்கவில்லை. ஒரு சந்துக்குள் போய் ஒண்ணுக்கு அடிக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை அவர் பின்னால் காக்கிச் சட்டையுடன் ஒரு சிங்களக் காவற்துறைச் சேர்ந்த ஒருவன் வந்து இங்கு இதெல்லாம் செய்யக் கூடாது என்று சிங்களத்தில் கூறினான். அதற்கு டேவிட் சைகை மூலம் தனக்கு ரெம்ப அவசரம் என்று சொன்னார். அதற்கு அந்த சிங்களவன் தன் பின்னே வரும்படி ஆங்கிலத்தில் சொன்னான். டேவிட்டும் பின் தொடர்ந்தார். ஏன் நீ என்னுடன் ஆங்கிலத்தில் முதலில் கதைக்கவில்லை என்றார் டேவிட். அதற்கு சிங்களவன் இது எங்கள் நாடு. எங்கள் ஆட்சி. எங்கள் ஆட்சி மொழி சிங்களம் என்றான் ஆங்கிலத்தில். அப்படிச் சொன்னபடியே ஒரு வெள்ளை நிறக் கட்டிடத்திற்கு டேவிட்டைக் கொண்டு போய் விட்டு இங்கு நீ எங்கு வேண்டுமானாலும் ஒண்ணுக்கு அடிக்கலாம் என்றான். டேவிட்டும் ஒரு நீண்ட அடி அடித்து ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுட்டு:
This is your hospitality - இது உங்கள் விருந்தோம்பல் என்றார். அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அந்தச் சிங்களவன்
No, it is not hospital.... it is Indian embassy இது மருத்துவ மனை இல்லை இது இந்தியத் தூதுவரகம் என்றான்.
No comments:
Post a Comment