ஆதி பராசக்தியோ ஆதாமின் ஏவாளோ
பரிசுத்த ஆவியால் கருவுற்ற மேரியோ
இறைதூதரை இங்கு தந்த ஆமினாவோ
போதி மரத்தானைக் கருவுற்ற மாயாவோ
அகிலத்தின் கரு அம்மா அன்பின் உரு அம்மா
வாழ்வின் திரு அம்மா உயிரின் வழி அம்மா
இறைவன் ஆக்குவான் காப்பான் அழிப்பான்
அன்னை ஆக்குவாள் காப்பாள் அழிக்க மாட்டாள்
அதனால் அன்னை இறவனிலும் மேலான இறைவன்
அன்னை மடி தவழச் சிவனுக்கும் பாக்கியமில்லை
அன்னை மேரி ஒரு பாலனுக்கு அன்னை
அல்பேனியாவில் பிறந்த அன்னை திரேசா
அரவணைத்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு
அகிலத்தில் அளவே இல்லை அளவே இல்லை
சொர்க்கம் எங்கே எனக் கேட்டதற்கு
நபி நாயகம் கொடுத்த விடை
சொர்க்கம் அன்னையில் காலடியில்
அன்போடு பாக்கும் அக்காவும் அம்மா
பாசத்தோடு தோள் சாயும் தங்கையும் அம்மா
வாஞ்சையோடு கால் பிடிக்கும் மகளும் அம்மா
உரிமையோடு உதவும் மனைவியும் அம்மா
எத்தனை பெண்களைப் பார்த்தாலும்
அம்மம்மா அப்பம்மா காட்டும்
பாசம் பரிவுக்கு அகிலத்தில் ஈடில்லை
அம்மா எனும் நிலைவந்தால்
புள்ளி மானும் அன்பால்
கொடிய மிருகத்தையும்
விரட்டியடிக்கும்
கையளவு இதயத்தின் அன்பில்
கோடானு கோடி உலகங்களும்
அளவிட முடியா அண்ட வெளியும்
அடங்கிப் போகும்
அந்த அன்பின்
உற்பத்தி நிலையம் அம்மா
காகக் கூட்டில் முட்டையிட்ட
குயிலும் ஓர் அம்மா
பொரித்த குஞ்சைத் துரத்திய
காகமும் ஓர் அம்மா
மழையைப் பொழிந்து
மண்ணில் உணவாகி
உணவாக்கும் முகிலும் அம்மா
மண்ணை உழுது
வியர்வை சிந்தி
உணவாக்கு உழவனும் அம்மா
அன்பின் வற்றாத ஊற்று அம்மா
அழகு எது என்றால் அதுவும் அம்மா
அறிவின் ஆரம்பப் புள்ளி அம்மா
வெற்றியின் கரு அம்மா
தோல்வியின் மறைவிடம் அம்மா
அம்மாவின் கடையில்
பிள்ளைகளுக்கு என்றும் இலவசமே
அம்மாவின் நீதிமன்றில்
பிள்ளைகளுக்கு என்றும் மன்னிப்பே
அம்மாவின் பாடசாலையில்
பிள்ளைகளுக்கு என்றும் சித்தியே
அம்மாவின் பணிமனையில்
பிள்ளைகளுக்கு என்றும் ஊக்கத் தொகையே
வானில் இருந்து விழும் மழைத்துளிகளை
கணக்கிட்டுப் பார்
காற்றில் இருக்கும் அணுக்களை
கணக்கிட்டுப்பார்
விண்ணில் மீன்னும் உடுக்களை
கணக்கிட்டுப்பார்
கடற்கரை மணல்களை
எண்ணிக்கை இட்டுப்பார்
உன் அன்னையின்
அன்பின் அளவு கிடைக்கும்
தலைவன் வழி நடந்து
பிறர் வாழத் தன்னுயிர்
கொடுத்த வீரனும் ஓர் அம்மா
எட்டரை மணி நேரம்
எட்டாத் தூரம் நீந்திச் சென்று
சாதனை படைத்த
அங்கயற்கண்ணியும் ஓர் அம்மா
பேசும் மொழியும் அம்மா
வாழும் நாடும் அம்மா
மொத்தத்தில் பூமியே அம்மா
Saturday, 14 March 2015
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment