அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த சூடான், கியூபா, ஈரான் ஆகிய நாடுகளுடன் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக பிரெஞ்சு வங்கியான BNP Paribas மீது அமெரிக்க நிதித்துறை அதிகார சபை வழக்குத் தொடர்ந்தது. இக்குற்றச் சாட்டை BNP Paribas ஒத்துக் கொண்டதைத் தொடர்ந்து அதற்கு ஒன்பது பில்லியன் (90 கோடி) அமெரிக்க டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டது.
இது பிரன்ஸிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு முறுகலை ஏற்படுத்தியது. இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு இரசியக் கடற்படைக்கு நான்கு உழங்கு வானூர்தி தாங்கிக் கப்பலைகளை நிர்மாணிக்க பிரான்ஸ் ஒத்துக் கொண்டிருந்தது. இவை நீரிலும் நிலத்திலும் பயணிக்கக் கூடியன. இவற்றில் உழங்கு வானூர்திகள் இறங்கவும் இவற்றில் இருந்து பறத்து செல்லவும் முடியும். துருப்புக் காவியாகவும் மிதக்கும் மருத்துவ மனையாகவும் இந்தக் கப்பல்களைப் பயன்படுத்த முடியும். இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து இந்த உழங்கு வானூர்தி தாங்கி ஈரூடகக் கப்பல்களை இரசியாவிற்கு வழங்குவதை ஒத்தி வைக்குமாறு அமெரிக்கா பிரான்ஸிடம் வலியுறுத்தியது. ஆனால் இது 2011-ம் ஆண்டு ஒத்துக் கொண்ட ஒப்பத்தம் என்றபடியால் பிரான்ஸ் அதற்கு மறுத்துவிட்டது. இந்தக் கப்பல் விற்பனை மூலம் மேற்கு நாட்டுத் தொழில்நுட்பத்தை இரசியா பெற்றுக் கொள்ளும் என்ற அச்சமும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கப்பல் நிர்மாணத்திற்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைதான் அமெரிக்கா பிரெஞ்சு வங்கி மீது விதித்த அபராதம் என்கின்றன இரசிய ஊடகங்கள். 2014 ஜூன் 30-ம் திகதி நானூறு இரசியக் கடற்படையினர் பிரான்ஸ் சென்று இக்கப்பல்களை இயக்குவதற்கான பயிற்ச்சிகளைப் பெறுகின்றனர்.
2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ம் திகதி பிரெஞ்சு நி்தியமைச்சர் மைக்கேல் சப்பின் உலக வர்த்தகங்களுக்கான கொடுப்பனவு நாணயமாக அமெரிக்க டொலர் இருப்பதை விடுத்து அது பல நாட்டு நாணயங்களை உள்ளடக்கியாதாக இருக்க வேண்டும் என்று ஒரு குண்டைப் போட்டார். மேலும் அவர் இந்த உலகக் கொடுப்பனவு நாணயமாக வளரும் நாடுகளின் நாணயங்களும் உள்ளடக்கப் படவேண்டும் எனவும் தெரிவித்தார். சீன நாணயத்தை மனதில் கொண்டே பிரெஞ்சு நிதியமைச்சர் இப்படித் தெரிவித்தார். ஏற்கனவே பல நாடுகள் டொலர் உலக நாணயமாக இருப்பதை விரும்பவில்லை. தற்போது உலக நாடுகளின் பெரும்பான்மையான மைய வங்கிகள் தமது நாணயக் காப்பிருப்பை (currency reserve) அமெரிக்க டொலரிலேயே வைத்திருக்கின்றன. இரசியா, சீனா ஆகிய நாடுகள் டொலர் உலக நாணயமாக இருப்பதற்கு எதிராகப் பலதடவை கருத்துத் தெரிவித்துள்ளன. சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டத்தை வைத்துள்ளது. 2008-ம் ஆண்டின் பின்னர் 17 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயமான யூரோ பல நெருக்கடிகளைச் சந்தித்தது. இப்போது அது தனது பிரச்சனைகளில் இருந்து மீண்டு கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரம் உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரமாகும்.. இந்த நாடுகள் பொருளாதாரம் மேம்பட்டால் அமெரிக்காவின் உலகப் பொருளாதார ஆதிக்கத்திற்கு அது சவாலாக அமையலாம்.
உலக நாணயமாகப் பலநாடுகளின் நாணயங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற பிரெஞ்சு நி்தியமைச்சர் மைக்கேல் சப்பின் முன் மொழிவிற்கு பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் பேராதரவி தெரிவித்துள்ளன.
தற்போது உலக நாணயமாக இருக்கும் அமெரிக்க டொலரை அதன் நிலையில் இருந்து அகற்றினால் டொலர் தனது பெறுமதியைப் பெருமளவு இழக்க வேண்டிவரும். அது அமெரிக்கப் பொருளாதாரத்தில் உடனடியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் பெரும் பணவிக்க்கம், வட்டி வீத அதிகரிப்பு போன்றவை ஏற்படலாம்.
ஜேர்மன் அதிபர் அஞ்செலா மாக்கெல்லை அமெரிக்க உளவுத்துறை உளவு பார்த்ததால் ஜேர்மானியர்கள் ஆத்திரப்பட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸுடன் நெருக்கமாக இணைந்து செயற்படும் ஜேர்மனியும் டொலருக்கு எதிரான நடவடிக்கையில் இணையலாம். யூரோ நாணயத்தை உலக நாணயமாக மாற்ற வேண்டும் என்பது ஜேர்மனியின் நீண்டகாலத் திட்டமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment