உலக வரலாறறில் முதற்றடவையாக ஒரு நாடு இன்னொரு நாட்டுப் படைத்துறை அதிகாரிகள்மீது இணையவெளித் திருட்டுக் குற்றச்ச்சாட்டுச் செய்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க அரசின் சட்டமா அதிபர் எரிக் ஹோல்டர் ஐந்து சீனப் படைத் துறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார். Wang Dong, Sun Kailiang, Wen Xinyu, Huang Zhenyu, Gu Chunhui ஆகியோர் மீது குற்றம் சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் செயற்படும் படைத்துறைப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் அமெரிக்காவின் அணு ஆராய்ச்சி, உருக்குத் தொழில்நுட்பம், சூரியவலுத் தொழில்நுட்பம் போன்றவை தொடர்பான இரகசியங்களை சீன அதிகாரிகள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களின் அணியானது பிரிவு 61398 என அழைக்கப்படுகிறது.
Westinghouse Electric, Alcoa, Allegheny Technologies, U.S. Steel, the United Steelworkers union, and SolarWorld ஆகிய நிறுவங்களின் கணனிகளள இணைய வெளியூடாக ஊடுருவி இரகசியங்களை 2006-ம் ஆண்டில் இருநநது சீனர்கள் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கணனியில் ஊழல் செய்யச் சதி செய்தது, வர்த்தக நலனுக்காக அனுமதியின்றிக் கணனிக்குள் நுழைந்தது, கணனகளின் மாற்றீட்டுக் குறியீடுகளையும் கட்டளைகளையும் சிதைத்தது, அத்துமீறிய அடையாளத் திருட்டு, வர்த்தக இரகசியங்களைத் திருடியமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. குற்றம் சுமத்தைப்பட்டவர்களுக்கு 15 ஆண்டுச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதற்கு அமெரிக்க அரசு சீன அரசிடம் இவர்களைக் கைது செய்து அனுப்பும்படி வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதை சீன அரசு ஏற்றுக்கொண்டு இவர்களைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். இவர்கள் அமெரிக்க நிறுவனங்கள், வர்த்தகக் கூட்டமைப்புக்கள், தொழிலாளர் ஒன்றியங்கள் ஆகியவற்றின் காணனிகளை ஊடுருவித் தகவல்களைத் திருடி அவற்றைச் சீன அரச உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளன.
அமெரிக்கா வேண்டுமென்றே திரிக்கப்பட்ட குற்றச்சாட்டை வைப்பதாக சீனா பதிலுக்குக் குற்றம் சாட்டுகிறது. உலகிலேயே இணையவெளி ஊடுருவிகளால் அதிகப் பாதிக்கப்படும் நாடு சீனா என்கின்றது சீனா. ஆனால் அமெரிக்க சட்ட மாஅதிபர் தமது நாடு வர்த்தக ரீதியான உளவு வேலைகளில் ஈடுபடுவதுமில்லை அதை ஊக்குவிப்பதுமில்லை என்றார். சீனாவில் இருந்து செய்யப்படும் இணைய வெளி உளவு வேலைகள் சீன நிறுவனங்களுக்கு உலகச் சந்தையில் சாதமான நிலையை உருவாக்கும் நோக்குடன் செய்யபப்டுவதாகவும் அவற்றால் அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக இழப்பீடு ஏற்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.
ஆனால் எட்வேர்ட் ஸ்நோடன் வெளிக் கொண்டுவந்த இரகசியங்கள் அமெரிக்காவை உலகிலேயே மோசமான இணையவெளி உளவாளியாகக் காட்டிவிட்டது. இதை நீங்கள் வாசிக்கும் போது அல்லது அதைத் தொடர்ந்து சீனாவும் ஒரு குற்றப்பத்திரிகையை வெளிவிடலாம.
சென்ற ஆண்டு அமெரிக்காவின் Fire Eye என்னும் நிறுவனத்தின் Mandiant பிரிவு சீனாவின் இணையவெளி ஊடுருவிகள் எனக் குற்றம் சாட்டப்படும் அணி 61398 பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
வர்த்தக நிறுவனங்களின் இரகசியங்களளத் திருடுவதால் ஆண்டு ஒன்றிற்கு அமெரிக்காவில் முன்னூறு பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படுகீன்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment