இரத்த ஆறு கடந்து
கண்ணீர்க் கடல் நீந்தி
தீயாகத் தீயில் கருகி
துரோகச் சூறவளியில் சுழன்று
இளமை துறந்து உறவு இழந்து குடும்ப இனிமை இழந்து பள்ளி பிரிந்து நட்பு மறந்து விடுதலை வேள்வியில் மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி கத்தும் கடல் அலையாடி வேகப் படகுகள் பல ஓட்டி சுற்றும் பகை விரட்டி தாயக் கடல் தமிழன் ஆள விடுதலை வேள்வியில் மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி குண்டு மழையிடை முன்னோடி செங்குருதிப் புனலாடி பிஞ்சுக் கால்களுடன் கட்டாந்தரை நடந்து தாயக மண் காக்க விடுதலை வேள்வியில் மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி துணையென வந்து கால்வாரிய துரோகிகள் மத்தியிலே காக்கவென வந்து கழுத்தறுத்த இந்தியாவிற்கு எதிராகக் களமாடி இனமானம் காக்க விடுதலை வேள்வியில் மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி சாட்சியமில்லா வதைகள் சரணடையவந்தோர் கொலைகள் போரில் தப்பியோர் உயிருடன் புதையல் இத்தனை கொடுமைகள் மத்தியில் பிஞ்சுத்தோள் கொடுது தாயக விடுதலைக்காக மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி பல கோடி செலவழித்து பல்லாயிரம் சாகடித்து பாலர்களைச் சிதறடித்து பாவியர் செய்த போரில் உணவின்றி உறக்கமின்றி உரிய மருந்தின்றி தேசிய உணர்வோடு களமாடி மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி பூகம்பத்துள் பூவென சூறாவளிக்குள் சுடரென புயலிடைப் பறவையேன துயரங்கள் பல சுமந்து தம் தாகம் என்றும் தமிழீழத் தாயகம் என முழங்கி மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி யாரோ எவனோ தன் ஒரு தாலி அறுத்தமைக்கு ஒரு இலட்சம் தாலி பறித்தெடுத்த சேலையணிந்த இத்தாலி முசோலினியின் சதியை எதிர்த்து எமக்காக மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி சைட்டிஸ்ஸுக்கும் வழியில்லாதவன் விஸ்கிக்கு ஆசைப்பட்டதுபோல் இறந்தவர்க்கு அழக்கூட உரிமையில்லா தேசியக் கூட்டமைப்பு குடியரசு வேட்பாளர் விக்கி ஐயா என்கின்றது இந்த மாயவாதிகளை நம்பாமல் மூச்சாகி நின்றோர்க்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி கைப்பேசிக்காரர்கள் கைகளில் ஊடகங்கள் இப்போ பூடகமாகப் பொய்யுரைக்கும் ஊடகங்களை நம்பாமல் தாயகம் தேசியம் தன்னாட்சி என்னும் மும்மணிக்காய் மூச்சாகி நின்ற கணமணிகளுக்கு வீச்சாகி நிற்போம் தொடர்வோம் அவர் பணி
No comments:
Post a Comment