வேவுக் கப்பல் Haijian-50
சீனா தனது வேவுபார்க்கும் கப்பலுக்கு Haijian-50 எனப் பெயரிட்டுள்ளது. Haijian என்றால் சீன மொழியில் கடற்கண்காணிப்பு எனப் பொருள்படும். Haijian-50 வேவுக் கப்பலில் எந்த வகையான படைக்கலன்கள் பொருத்தப்படும் என்பது பற்றி எந்த விபரமும் சீன அரசால வெளிவிடப்படவில்லை. அண்மைக் காலங்களாக சீனா தனது கடற்படையை மிகவும் வலுமிக்கதாக மேம்படுத்தி வருகிறது. ஏற்கனவே சீனா தனது லியோலிங் எனப்படும் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியுள்ளது. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலைப் பற்றிப் பார்க்க இங்கு சொடுக்கவும்: லியோனிங்.
Corvette என்பது ரோந்துக் கப்பல்
சீனா தொழிற்சாலையில் பிஸ்கட் தயாரிப்பது போல corvette எனப்படும் சிறிய ரக கப்பல்களை அதிகம் தயாரித்து வருகின்றது. Corvette என்பது ரோந்துக் கப்பல் வகையைச் சார்ந்தவை. இவற்றை சீனா ஆழமற்ற கடல்களான தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் பாவிக்கத் திட்டமிட்டிருக்கின்றது. சீனாவின் கப்பல்கள் Type 056 என்னும் கப்பல்வகையைச் சார்ந்தவை. இவற்றில் தற்பாதுகாப்பு படைக்கலன்களும் கப்பல்களையும் நீர் மூழ்கிகளையும் தாக்கியழிக்கக் கூடிய 76மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும் 30 மில்லி மீட்டர் துப்பாக்கிகள் இரண்டும் பொருத்தப்பட்டிருக்கின்றன. சீனாவின் இந்த ரோந்துக் கப்பல்கள் அமெரிக்காவின் Phalanx CIWS ரோந்துக் கப்பல்களை ஒத்தவையாகக் கருதப்படுகின்றன. அத்துடன் சீனாவின் பறக்கும் சிறுத்தைகள் எனப்படும் ஏவுகணைகளும் 134 மைல்கள் ஒலியிலும் இரு மடங்கு வேகத்தில் பாயக் கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் இந்த ரோந்துக் கப்பல்களில் உள்ளன. மேலும் torpedo வகையைச் சேர்ந்த நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் உள்ளன. ஒரு உழங்கு வானூர்தியையும் இந்த ரோந்துக் கப்பல் தாங்கிச் செல்லும். இந்த வகை ரோந்துக் கப்பல்கள் இருபதை சீனா இப்போது உருவாக்கிக் கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
சீனாவின் நாசகாரிக் கப்பல்கள்
சீனா Type 052D வகையைச் சார்ந்த நாசகாரிக்கப்பல்களையும் உருவாக்கி வருகின்றது. இவற்றின் முக்கிய பணி மற்றக் கடற்படைக்கலன்களை விமானத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாகும். இதன் முன்புறமும் பின்புறமும் 32 ஏவுகணைகள் கொண்ட ஏவுகணை வீசிகள் இரண்டு உள்ளன. சீனாவின் HQ-9 வ்கையைச் சேர்ந்த செம்பதாகைகள் என்னும் ஏவுகணை எதிப்பு முறைமை இவற்றில் உண்டு. அத்துடன் ஒரு உழங்கு வானூர்தி்யையும் சீனாவின் Type 052D வகையைச் சார்ந்த நாசகாரிக்கப்பல் தாங்கிச் செல்லக் கூடியது.
Type 071 amphibious landing dock
சீனாவின் Type 071 amphibious landing dock எனப்படும் நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் கப்பல் 400முதல் 800 பேரைக் கொண்ட ஒரு படையணியையும் 18 கவச வண்டிகளையும் உழங்கு வானூர்த்களையும் தாஙகிச் செல்லக் கூடியவை. அத்துடன் இந்தக் கப்பலில் பல ஈரூடக வண்டிகளும் இருக்கின்றன. இந்தவகைக் கப்பல்கள் பலவற்றை சீனா உருவாக்கி வருகின்றது.
Dongdiao வேவு-கண்காணிப்புக் கப்பல்கள்
சீனாவின் Dongdiao வேவு மற்றும் கண்காணிப்புக் கப்பல்கள் தற்போது இரண்டு இருக்கின்றன. அத்துடன் மேலும் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவற்றை உளவுக் கப்பல்கள் என்றும் கூறுவர்.
தனது படைக்கலன்களை திட்டமிட்டுப் பெருக்கி வரும் சீனா இந்த ஆண்டு தென் சீனக் கடலில் தனது வலுவை உலக அரங்கில் நிச்சயம் அரங்கேற்றும்.
No comments:
Post a Comment