ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் தமது விமானம் தாங்கிக் கப்பலிலும் ஆளில்லாப் போர் விமானங்களை இணைத்துள்ளன. இவை மற்றப் போர்விமானங்களை போல் பெரியவனவையாகவும் கதுவிகளுக்கு(Radar) புலப்படாத stealth தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கின்றன.
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பல நாடுகளில் இரகசியமாக அமெரிக்கச் சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஆளில்லாப் போர்விமானத் தளங்களை வைத்துக் கொண்டு பல நாடுகளை வேவு பார்த்தல், அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதிகளைக் கொல்லுதல் போன்ற பல நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. பாக்கிஸ்த்தானிற்குள் அத்து மீறி நுழைந்து சிஐஏயினதும் அமெரிக்கப்படைத்துறையினரினதும் ஆளில்லாப் போர் விமானங்கள் பல தாக்குதல்களை மேற்கொண்டன. இவற்றில் பாக்கிஸ்த்தான் படைவீரர்களும் கொல்லப்பட்டதுண்டு. 2013 மே மாதம் பாக்கிஸ்த்தானில் நடந்த பொதுத் தேர்தலில் அமெரிக்க ஆளில்லாப் போர்விமானங்களின் அத்து மீறல்கள் ஒரு முக்கிய விவாதமாகக் காணப்பட்டன.
அமெரிக்காவின் Marylandஇல் உள்ள Patuxent நதியில் 14/05/2013-ம் திகதி USS George என்னும் கப்பலில் இருந்து அமெரிக்கக் கடற்படையினர் முன்னோட்டம் விட்டுப்பார்த்த X-47B ரக ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்கக் கடற்படைக்குஉலகின் எப்பாகத்திலும் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல் செய்யக் கூடிய வல்லமையைக் கொடுத்துள்ளது. X-47B வழமையான Predator எனப்படும் தாக்குதல் ஆளில்லாப் போர் விமானங்களிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியவை.
ஆளே தேவையில்ல விமானம்
X-47B ஆளில்லாப் போர் விமானங்கள் வழமையான ஆளில்லாப் போர் விமானங்களைப் போல் தொலைக் கட்டுப்பாடு செய்யவும் ஒரு ஆள் இதற்குத் தேவைப்படாது. இது தனக்குத் தேவையான சமிக்ஞைகளை கடற்படைக் கப்பலில் இருக்கும் கணனிகளில் இருந்து பெற்றுக் கொள்ளும். இதன் இன்னும் ஒரு முக்கிய அம்சம் விமானிகள் ஓட்டும் போர் விமானங்களிலும் பார்க்க இவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறன் பெற்றுள்ளன. X-47B ஆளில்லாப் போர் விமானங்கள் 19mஇறக்கை அகலமும், 6,350kg எடையும் கொண்டன. வழமையான தாக்குதல் விமானங்கள் 15m அகலமும் 499kg எடையும் உடையன. இவற்றின் இறக்கைகள் மடிக்கக் கூடியவை. இவை விமானம் தாங்கிக் கப்பலில் நிறுத்தி வைக்கும் இடத்தேவையைக் குறைக்கிறது. X-47B ஆளில்லாப் போர் விமானங்கள் 40,000அடிகள் (12,192 meters) உயரத்தில் பறக்கக் கூடியன. அத்துடன் 2,100 nautical miles (3,890 kilometers) தூரம் பறக்கக்கூடியன. வழமையான Predator விமானங்கல் 675 nautical miles வீச்சைமட்டுமே உடையன. அத்துடன் வானிலே வைத்து எரிபொருள் மீள்நிரப்பபடக் கூடியவை என்பதால் அதன் வீச்சுத் தூரம் மேலும் அதிகமாகும்.
தேசிய எல்லைகளைத் தாண்டி பயங்கரவாதம் செயயும் அமெரிக்காவின் வல்லமை அதிகரித்துக் கொண்டே போகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
No comments:
Post a Comment