அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் கிழக்குச் சீனக் கடலில் உருவாகியுள்ள போர் அபாயத்தைத் தவிர்க்க ஜப்பானிற்கும் சீனாவிற்கும் ஒரு பயணத்தை மேற் கொள்ளவுள்ளார். 03-12-2013 செவ்வாய்க் கிழமை டோக்கியோவில் பேச்சு வார்த்தை நடாத்திவிட்டு சீனாவிற்கு செல்லவுள்ளார் ஜோ பிடன்.
கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுக்கூட்டத்திற்கு ஜப்பானும் சீனாவும் உரிமை கொண்டாடி வருகின்றன. மக்களற்ற இத்தீவுக் கூட்டங்களை ஜப்பானியர்கள் செங்காகு எனவும் சீனர்கள் டயாகு எனவும் அழைக்கின்றனர். அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இந்த தீவுக் கூடங்களிள் இறையாண்மை இல்லை எனவும் ஆனால் ஜப்பனிற்கு அவற்றில் நிர்வாகக் கட்டுப்பாடு இருக்கின்றது எனவும் கூறுகின்றது. நவம்பர் 24-ம் திகதி இத்தீவுக் கூட்டத்தை உள்ளடக்கிய வான் பிராந்தியத்திற்குள் வரும் விமானங்கள் தனக்கு அறிவித்துவிட்டு வரவேண்டும் என ஒரு தலைப்பட்சமான பிரகடனம் செய்தது.
சீனாவின் வான் பாதுகாப்புப் பிரந்தியப் பிரகடனத்தை மறுக்கும் முகமாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் தமது விமானங்களை சீனாவிற்கு அறிவிக்காமல் அப் பிராந்தியத்திற்குள் பறக்க விட்டன. அமெரிக்க அரசு தனது நாட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் வர்த்தக விமானங்கள் சீன அரசிற்கு அறிவித்து விட்டு கிழக்குச் சீனக்கடலுக்கூடான பறப்புக்களை மேற்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது.
உலகில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் தமது வான்பரப்புக்களை பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தியுள்ளன. அப்படி ஒன்றைத் தான் சீன செய்துள்ளது என்பதே சீனர்களில் நிலைப்பாடு. ஆனால் மற்ற நாடுகள் தமது சொந்த வான் பரப்பைத்தான் அப்படிப் பிரகடனப் படுத்துயுள்ளன மற்றவர்களுக்குச் சொந்தமான பிராந்தியத்தையோ அல்லது பிரச்சனைக்கு உரிய பிராந்தியத்தையோ அப்படிப் பிரகடனப் படுத்தவில்லை என்கிறது ஜப்பான்.
போரை யாரும் விரும்பவில்லை
சீனா தனது எல்லைகளை அகலமாக்கும் திட்டத்தில் உறுதியாக இருந்தாலும் தற்போதைக்கு அது எந்த ஒரு நாட்டுடனும் போரை விரும்பவில்லை. தனது படை பலத்தைக் காட்டி சீனா தனது எல்லைகளை அகலமாக்க விரும்புகின்றன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஜப்பானும் ஒன்றை ஒன்று இரு நூற்றாண்டுகளாக வெறுக்கும் நாடுகளாகும். இரு தடவைக்கு மேல் இரு நாடுகளும் போர் புரிந்துள்ளன. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான், கொரியத் தீபகற்பம் ஆகியவற்றை ஜப்பான் பிடுங்கிக் கொண்டது. பின்னர் இரண்டாம் உலகப் போரின் பின்னர். வட கொரியா, தென் கொரியா, தாய்வான் ஆகியவை தனி நாடுகளாகின. சீனாவிற்கு ஜப்பானிற்கும் இடையிலான வர்த்தகம் 2012-ம் ஆண்டில் 334 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியானதாக இருந்தது. தமது பொருளாதார வளர்ச்சிக்கு இரு நாடுகளும் இந்த வர்த்தகத்தில் பெரிந்தும் தங்கியிருக்கின்றன. சீனாவிற்கான ஏற்றுமதியில் சோனி, டொயோட்டா போன்ற ஜப்பானிய நிறுவனங்கள் பெரிந்தும் தங்கியிருக்கின்றன. சீனா தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை ஜப்பானில் இருந்து மலிவாகப் பெற்றுக் கொள்ள முடியும். சீன மக்களிடை அதிகரிக்கும் ஜப்பானிற்கு எதிரான மனப்பாங்கு இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது.
ஜப்பானிற்கு உதவ வேண்டிய கடப்பாட்டில் அமெரிக்கா
இரண்டாம்
உலகப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஜப்பான் ஒரு தாக்குதல்
படையை தன்னிடம் வைத்திருக்க முடியாது என்றும் அது ஒரு பாதுகாப்புப்படையை
மட்டும் வைத்திருக்கலாம் எனவும் ஜ்ப்பானின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா உத்தரவாதம் என்றும் ஜப்பானில் அமெரிக்கப் படைகள் தளம் அமைத்துத் தங்கியிருப்பதற்கும் ஜப்பானும் அமெரிக்காவும் ஒத்துக் கொண்டன. இந்த ஒப்பந்தம் 1952இல் கைச்சாத்திடப்பட்டு பின்னர் 1960இல் திருத்தம் செய்யப்பட்டது. அதன் படி இரு நாடுகளும் ஒன்றிற்கு ஒன்று படைத்துறை ஆபத்து வரும்போது இரு நாடுகளும் ஒத்துழைக்கும் ஜப்பானிய நிர்வாகத்திற்கு உள்பட்ட பிராந்தியங்கள் ஆபத்திற்கு உள்ளாகும் போது அமெரிக்கா ஜப்பானைப் பாது காக்கும். இதனால் சென்காகு தீவைப் பாதுகாகக வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிர்கு உண்டு. பிரித்தானியாவும் ஜப்பானும் 2013-ம் ஆன்டு பாதுகாப்பு உபகரண ஒப்பந்த்ம் செய்துள்ளன. இன்று(02/12/2013) ஜப்பானியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரித்தானியக் கடற்படைத் தளபதியை சந்தித்து ஜப்பனின் மீது ஒருதலைப்பட்சமான தாக்குதல் நடக்கும் போது பிரிதானிய ஜப்பானைப் பாதுகாக்க களத்தில் இறங்கும் என உறுதியளிட்துள்ள அதே வேளை பிரித்தானியப் பிரதமர் சீனாவில் வர்த்தக ஒத்துழைப்பு தொடர்பாக உடன்பாட்டை எட்டியுள்ளார்.
நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை அனுப்பிய் அமெரிக்கா
நவம்பர் 24-ம் திகதி கிழக்குச் சீனக் கடலில் உருவான பதட்டத்தைத் தொடர்ந்து செய்யப்படும் முதல் படை நகர்வாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை வேட்டையாடும் விமானங்களை ஜப்பானிற்கு அனுப்பியுள்ளது. P-8 எனப்படும் இந்த விமானங்கள் torpedoes எனப்படும் ஏவுகணைகளையும் புது ரக கதுவிகளையும்(ராடார்) கொண்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment