செங்காகு தீவுக் கூட்டத்தில் ஜப்பானியப் போர் விமானம் |
சீனாவின் அறிவிப்பை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது. இது சீனா தனது வான் பாது காப்பு வலயம் என அறிவிப்பதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பறப்பு என்றது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து ஜப்பானியப் போர் விமானங்களும் தென் கொரியப் போர் விமானங்களும் குறித்த வான்பரப்பிற்குள் பறந்து சென்றன.
போர் மூளுமா?
கிழக்குச் சீனக் கடலில் நடந்து கொண்டிருப்பது ஒரு மீசை முறுக்கலும் வேட்டியை மடிச்சுக் கட்டுதலும் தான். மோதலுக்கான ஆரம்பம் அல்ல. தமிழ்ப்படத்தில் வில்லன் டேய் எனக் கத்த கதாநாயகன் அதும் உரத்து டேய் எனக் கத்துவது போல்தான் இப்போது நடக்கிறது. இது ஒரு போராக மாறுவதை இதில் சம்பந்தப் பட்ட எந்த ஒரு நாடும் விரும்பவில்லை. ஒரு போர் மூளும் ஆபத்து இருந்தால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிக்கும். பங்குகளின் விலைகள் சரியும். அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. எந்த ஒரு நாடும் படைகளை நகர்த்தியதாக தகவல்கள் இல்லை. சீனா தொடங்கிய இந்த முறுகல் நிலையில் அது தோற்றுவிட்டதாக சீன மக்கள் உணர்வதை சீன ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள். சீனா தனது வான் பாது காப்பு அறிவிப்பை திரும்பப் பெற மாட்டாது. மாறாக இந்ந்த அறிவிப்பை தொடர்ந்து வலியுறுத்தாமல் நாளடைவில் அது நீர்த்துப் போகும்.
No comments:
Post a Comment