அமெரிக்க நிர்வாகத்திற்கும் மக்களவைக்கும் மூதவைக்கும் இடையிலான இழுபறியால்
அமெரிக்க அரச பணிமனைகள் பல மூடப்பட்டன. அமெரிக்க அரசியல்
யாப்பின்படி அமெரிக்க அரச செலவீனங்களை அமெரிக்கப் பாராளமன்றமான காங்கிரசு
அங்கீகரிக்க வேண்டும். காங்கிரசில் மக்களவை மூதவை என இரு சபைகள்
இருக்கின்றன. இவை இரண்டும் அரச செலவீனங்களை அங்கீகரிக்க வேண்டும். அமெரிக்க
அதிபர் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். மக்களவையில் குடியரசுக்
கட்சியினர் பெரும் பான்மையாகவும் மூதவையில் மக்களாட்சிக் கட்சியைச்
சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினராகவும் இருக்கின்றனர்.
Obamacare
என்னும் பெயரில் பிரபலமான The Patient Protection and Affordable Care Act
(PPACA) என்னும் சட்டம் அமெரிக்கப் பாராளமன்றமான காங்கிரசில் பெரும்
முறுகலை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு மருத்துவக் காப்புறுதிச் சட்டமாகும்.
ஆரம்பத்தில் குடியரசுக் கட்சியினர் அதிபர் பரக் ஒபாமாவையும் அவரது
மருத்துவக் காப்புறுதிச் சட்டத்தையும் கிண்டலாக Obamacare என அழைத்தனர்.
அது பின்னர் பிரபலமாகி ஒரு நற்பெயராகிவிட்டது. 2010இல் Obamacareஇற்கு
எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது. 2012இல் அமெரிக்க உச்ச நீதிமனறம்
Obamacare செல்லுபடியான சட்டம் என தீர்ப்புக் கூறியது.
Obamacare
அரச செலவீனங்களை அதிகரிக்கும் அதனால் அதிக வரிச் சுமை செல்வந்தர்கள் மீது
சுமத்தப்படும் என்பதால் குடியரசுக் கட்சியினர் அதை எதிர்த்தனர். 20-09-2013
குடியரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மக்களவை Obamacareஇற்கான
நிதி ஒதுக்கீட்டை இரத்துச் செய்தது. Obamacareஇல் பல மாற்றங்களை
ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து குருவின் காலைப் பிடித்து விடுவதில்
சீஷ்யர்களுக்கு இடையில் போட்டி வந்து இரு கால்களையும் சீஷ்யர்ள் மாறிமாறித்
தாக்கியது போல் மக்களவையும் மூதவையும் மாறி மாறி ஒன்றிற்கு ஒன்று
முரண்பட்ட சட்டங்களை இயற்றின. இதனால் அமெரிக்க அரசை நடத்துவதற்குத் தேவையான
நிதி ஒதுக்கீடு இல்லாத நிலை ஏற்பட்டது. அமெரிக்க அரசின் பல பணிமனைகள்
மூடப்பட்டன. 800,000இற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் ஊதியமில்லா விடுமுறையில்
அனுப்பப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment