1. தௌஹீட் படை என்னும் சுதந்திர சிரியப் படையின் அலெப்போ படையணி, 2. லிவா அல் இஸ்லாம் எனப்படும் டமஸ்கசில் செயற்படும் பெரும் படையணி,
3. அஹார் அல் ஷம் எனப்படும் தேசம் முழுவதும் செயற்படும் மதவாதப் போராளிக் குழு
இவை ஒன்றாக இணைந்த 11 குழுக்களில் முக்கியமானவை.
2012 டிசம்பரில் வேறுபட்ட பல போராளிக்குழுக்களைச் சேர்ந்த 500பிரதிநிதிகள் துருக்கியில் ஒன்று கூடி 30 பேர் கொண்ட ஓர் உச்ச படைத்துறைச் சபையினை (Supreme Military Council) உருவாக்கினர். அதற்கு பொறுப்பாக ஒரு Chief of Staffஐயும் தெரிவு செய்தனர். இந்த கூட்டத்திற்கு இரு இசுலாமிய தீவிரவாத அமைப்புக்கள் அழைக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தினதும் ஒருங்கிணைப்பினதும் நோக்கம் மேற்கு நாடுகளில் இருந்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியைப் பெறுவதே. ஆனால் அவர்களுக்கு தேவையான உதவியோ அல்லது ஓர் ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானமோ இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என பலதடவைகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.தமக்குப் போதிய உதவிகள் மேற்கு நாடுகளில் இருந்து கிடைக்காமையினால் ஏமாற்றமடைந்த போராளிக் குழுக்கள் பல ஜபத் அல் நஸ்ரா தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன. இது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எஞ்சியுள்ள குழுக்கள் போதிய தாக்கும் திறன் கொண்ட அமைப்புக்கள் அல்ல.
சிரிய உச்சப் படைத்துறைச் சபையின் தலைவரான ஜெனரல் சலிம் இத்திரிஸ் பிரான்ஸில் மேற் கொண்டிருந்த பயணத்தை இடை நிறுத்தி சிரியாவிற்கு அவசரமாகத் திரும்புகிறார். இவர் ஜபத் அல் நஸ்ரா தலைமையில் இணைந்த சில குழுக்களை முக்கியமாக தௌஹீட் படையினரை தமது முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கோருவார்.
இந்த ஆண்டு நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி முக்கிய சிரியக் கிளர்ச்சிக் குழுக்களின் உறுப்பினர்கள் விபரம்:
Syria Free Syrian Army: 50,000 முதல் 80,000 வரை
Ahfad al-Rasul Brigade: 10,000 முதல் 15,000 வரை
Syrian Islamic Liberation Front: 37,000
Syrian Islamic Front: 13,000
Al-Nusra Front: 6,000
இவர்கள் 178,000 பேரைக் கொண்ட சிரிய அரச படையினருக்கு எதிராக போராடுகிறார்கள். மேற்கு நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஒன்றுபடுத்தி ஓர் இடைக்கால அரசை அமைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அதை மறுதலிக்கும் முகமாகவே ஜபத் அல் நஸ்ரா அமைப்பு ஒரு மதவாத கூட்டணியை அமைத்துள்ளது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலுக்குப் பின்னர் அரசு அல்லாத எந்த ஒரு அமைப்பும் படைக்கலன்களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவற்றிற்கு படைக்கலன்கள் வழங்கக் கூடாது என்றும் அமெரிக்கா சொல்லி வந்தது. இந்தக் கொள்கையாலும் இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் கைகளில் தனது படைக்கலன்கள் போகக் கூடாது என்ற நோக்கத்தாலும் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்குவதைத் தடுத்து வந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் தாம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கப் போவதாக அறிவித்திருந்த போதிலும் அவர்களுக்கு எந்த விதமான படைக்கலன்களையும் வழங்காமலேயே இருந்து வந்தன. ஆகஸ்ட் 21-ம் திகதி நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சில படைகலன்கள் இரகசியமாக சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.
Jarba said the "National Free Army" would be under the supervision of the FSA chief of staff General Salim Idriss and under the umbrella of the SNC.
சிரியக் கிளர்ச்சிக்காரர்களுள் சிரிய சுதந்திரப்படை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகும். அதன் தலைமையில் இயங்கும் தேசிய விடுதலைப் படை ஒரு சிறந்த போராளிக்குழு அல்ல.தாக்கும் திறன் கொண்ட பல போராளிக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அல் கெய்தாவுடன் தொடர்புடைய ஜபத் அல் நஸ்ராவின் தலைமையில் இணைந்தமை அமெரிக்காவிற்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அமெரிக்க சார்புக் குழுக்கள் சிறிய படையணிகளாகக் குறைந்து விட்டன. இது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைந்த பெரும் தோல்வியாகும்.
No comments:
Post a Comment