Friday 16 August 2013

நாய்களுக்கென்று தனியான தொலைக்காட்சிச் சேவை

நாய்களுக்கென்று தனியான தொலைக்காட்சிச் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் நாய்களுக்கென்று சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக்கள் செய்யப்பட்டன. இப்போது DOGTV என்னும் பெயரில் தனியான 24 மணிநேர சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாதாந்தக் கட்டணம் $10.

நாய்களை மகிழ்ச்சிப்படுத்தவும், ஊக்கப் படுத்தவும், நல்ல பழக்கப்படுத்தவும் கூடிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. நாய்கள் பார்க்கக் கூடிய வகையில் விஞ்ஞான ஆய்வுகள் செய்து நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன.

நாய்களுக்கான தொலைக்காட்சிச் சேவை பற்றி University of British Columbia வின் பேராசிரியர் Stanley Coren,  இப்படிச் சொல்கிறார்:
 Dogs have much sharper eyes than we do; dogs will still see that flicker up until about 75Hz. Luckily, newer TVs have much higher refresh rates, so you can grab a TV with a 120Hz, 240Hz, or even higher refresh rate. That's needed for a dog to identify the picture as moving and not as a series of still images. நாய்களின் கண்கள் எமது கண்களிலும் பார்க்கக் கூர்மையானவை. அதற்கேற்ப காட்சிகள் விரைவாக ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும். அல்லாவிடில் நாய்களிற்கு தனிப் புகைப்படங்களைப் பார்ப்பது போலிருக்கும்.
 2025இல் தமிழ்நாட்டில் நாய்கள் தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப்பார்த்து அழலாம்.

விரைவில் பூனைகளுக்கு என்றும் தனியான தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே வீடுகளில் ரிமோட் கொன்ரூலுக்காக நாய்கடி பூனைகடிச் சண்டை!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...