Tuesday 23 July 2013

போர் முனையில் கால நிலை மாற்றப்படலாம்


இரு நாடுகளிடையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு ஒரு நாடு தனக்கு சாதகமாக கால நிலையை மாற்றி மழையோ அல்லது பனிமழையோ பொழியச் செய்யும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ இந்த ஆராய்ச்சியில் பெருமளவு முதலிட்டுள்ளது.

வியட்னாம் போரின்போது அமெரிக்கப்படைகள் Weather warfare எனப்படும் கால நிலைப் போர் புரிந்தது. பனி மூட்டம் கூடிய இடங்களில் விமானத்தில் இருந்து குண்டு போடுவது சிரமம் என்பதால்  வானில் உப்புத்தூள் தூவி பனி மூட்டங்களைக் கலையச் செய்தது. சில சமயங்களில் மழை பனி மழை போன்றவற்றை செயற்கையாக உருவாக்கி  பின்னர் 1977இல் கால நிலைப் போர் தொடர்பாக ஒரு உடன்படிக்கையில் பல நாடுகள் கைச்சாத்திட்டன. இதன் படி சூழலுக்கு பாதகம் ஏற்படக்கூடிய வகையில் வானில் எந்த இரசாயனப் பதார்த்தங்களும் தூவக்கூடாது என ஒத்துக் கொள்ளப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பகல் நேரத் தாக்குதல்களுக்கு நாளைத் தெரிந்தெடுக்கும் போது முகில் கூட்டம் கூடிய நாட்களைத் தெரிந்து எடுப்பர். 2009-ம் ஆண்டின் பின்னர் சீனா இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதியில் பல தெருக்களை அமைத்து வருகிறது. தெருக்களின் வலையமைப்பு சரியாக இருந்தால் மரபு வழி படையினருக்கு எதிராக கரந்தடி படையினர் செயற்படுவது சிரமமாக இருக்கும். மரபு வழிப்படையினர் தமது நகர்வுகளை வேறு வேறு பாதைகளில் பயணம் செயவது அவர்களுக்குப் பாதுகாப்பானது. சீனா தெருக்கள் அமைக்கும் போது வானில் வாணத்தை வெடிக்கச் செய்வதன் மூலம் வானில் இரசாயனப் பதார்த்தங்களைத் தூவி மழை பெய்யாமல் செய்து விடும்.

இப்போது அமெரிக்கா solar radiation management  எனப்படும் சூரியக் கதிர் வீச்சு முகாமைத்துவ மூலம் போர் முனையில் கால நிலையை மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

சீனாவும் காலநிலைப் போர் ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. சீனா தனது வட மாநிலங்களில் வரட்சி நிலவிய போது வானில் இரசாயனப் பதார்த்தங்களைத் தூவி மழை வரச் செய்தது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...