Wednesday, 10 July 2013
பின் லாடன் விவகாரத்தில் பாக்கிஸ்த்தானின் மானம் கப்பலேறியது
அல் கெய்தா இயக்கத் தலைவர் ஒசமா பின் லாடனைக் கைப்பற்ற அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் வான் பாதையூடாக பாக்கிஸ்த்தானுக்குத் தெரியாமல் உள் நுழைந்து ஒரு படை நடவடிக்கையை மூன்று மணித்தியாலங்கள் செய்து முடித்தனர் என்பதைப் பற்றி விசாரிக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த விசாரணைக்குழுவின் 336 பக்க அறிக்கை அல் ஜசீரா தொலைக்காட்சிச் சேவையிடம் கசிந்துள்ளது.
2001-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தன. 2002-ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் ஒசாமா பின் லாடன் பாக்கிஸ்த்தானுக்குத் தப்பிச் சென்றார். பல இடங்களில் மாறி மாறித் தங்கி இருந்த ஒசாமா 2005-ம் ஆண்டிலிருந்து அவர் இறுதியாக கொல்லப்பட்ட அபொத்தாபாத் மாளிகையில் தங்கியிருந்தார் என அவரது மனைவிகள் வழங்கிய தகவல்களில் இருந்து அறியப்பட்டது.
பின் லாடன் கொலை அமெரிக்க அதிபரால் உத்தரவிடப்பட்ட கொலைக் குற்றச் செயல் ("criminal act of murder")என்கிறது அறிக்கை. பின் லாடன் கொல்லப்பட்டதை பாக்கிஸ்த்தானியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் அவரது மகள் அமெரிக்காவில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவ்த்த போது முதல் தடவியாக அறிந்து கொண்டாராம்.
உலகில் மிகவும் தேடப்பட்டவரான ஆறடி ஐந்து அங்குல உயரம் கொண்ட அந்நிய நாட்டவரான பின் லாடன் ஒன்பது ஆண்டுகள் பாக்கிஸ்த்தானில் எப்படி ஒளிந்திருக்க முடிந்தது என்பதை அபோத்தாபாத் எனப் பெயரிடப்பட்டுள்ள விசாரணைக் குழு ஆராய்ந்துள்ளது. பின் லாடன் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்ததாக விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. ஒசமா பின் லாடன் இப்படி எல்லோர் கண்களிலும் மண்ணைது தூவி விட்டுத் தப்பியிருந்தமைக்கு பக்கிஸ்த்தானிய அரசு, பாக்கிஸ்தானியப் படைத்துறை, பாக்கிஸ்த்தானிய உளவுத் துறை, பாக்கிஸ்த்தானிய காவல் துறை ஆகியவற்றின் ஒன்றிணைந்த தோல்வியும் அசட்டையும் காரணம் என்கிறது அறிக்கை. பின் லாடன் தன்னை மற்றவர்கள் வெளியில் இருந்து இனம் காணாமல் இருக்க கஃவ் போய் தொப்பி அணிவார் எனவும் பாக்கிஸ்த்தான ஆறுமாத காலமாக இரகசியமாக வைத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாக்கிஸ்தானில் வல்லமை பொருந்தியதான அதன் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ பற்றி அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. பாக்கிஸ்த்தானின் அரச, பாதுகாப்புத்துறை, உளவுத்துறை ஆகியவற்றில் பில் லாடனுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்பதை மறுப்பதற்கில்லை என்கிறது அல் ஜசீராவிடம் கசிந்த இரகசிய அறிக்கை. பாக்கிஸ்த்தானில் சிலரது ஒத்துழைப்புடனேயே பின் லாடனால் தங்கியிருக்கக் கூடியதாக இருந்திருக்க வேண்டும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
பின் லாடன் பற்றி அதிக அக்கறையுடன் செயற்பட்ட பாக்கிஸ்தானிய அரசு, பாதுகாப்புத் துறை, உளவுத்துறை ஆகியன பின் லாடன் பாக்கிஸ்த்தானில் இருந்ததைக் கண்டு பிடிக்க முடியாமல் போனதால் குற்றத்திற்குரிய தகுதியீனமும் உதாசீனமும் வெளிப்பட்டிருப்பதாக அறிக்கை குற்றம் சாட்டுகிறது. அரச கட்டமைப்புக்களின் ஒவ்வொரு மட்டத்திலும் தகுதியின்மையும் உதாசீனமும் காணப்படுவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2009இல் இருந்து 2010வரை அமெரிக்க உளவுத் துறை பாக்கிஸ்த்தானிய உளவுத் துறையிடம் நான்கு தொலை பேசி இலங்கங்கள் தொடர்பான விபரங்களைக் கோரியிருந்தது என்றும் அவை எதற்கு எவர் தொடர்ப்பானது போன்றவற்றைப் பற்றி பாக்கிஸ்த்தானிய உளவுத் துறைக் அக்கறை காட்டவில்லை என்பதை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. அதிக அளவிலான அமெரிக்க ஒப்பந்தக்காரர்களுக்கு பாக்கிஸ்த்தானிற்கு நுழைவு அனுமதி(விசா) எந்த வித ஐயமும் இல்லாமல் பாக்கிஸ்த்தானால வழங்கப்பட்டதை அறிக்கை ஆச்சரியதுடன் விபரிக்கிறது.
2002, 2003-ம் ஆண்டுகளில் பின் லாடன் பயணித்த வண்டிகளை பாக் காவற்துறையினர் உயர் வேகத்தில் சென்றமைக்காக நிறுத்திய போதும் அவரை அவர்களால் இனம் காண முடியவில்லை என அவரது மனைவி தெரிவித்திருந்தார்.
ஆறு ஆண்டுகள் பின் லாடன் வசித்த மாளிகையின் மீது அயலவர்களுக்கோ காவற்துறைக்கோ எந்த வித ஐயமும் வராமல் இருந்தது அறிக்கை தயாரித்தவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது
25இற்கு மேற்பட்டவர்கள் குடியிருந்த பின் லாடன் கடைசியாகக் குடியிருந்த மாளிகையில் எவரும் குடியிருக்கவில்லை என உள்ளூராட்சிச் சபையின் பதிவேடுகளில் குறிப்பிடப்பபட்டிருந்ததை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மாளிகையின் மூன்றாம் மாடி விதிகளுக்கு முரணாகக் கட்டப்பட்டதை எந்த ஒரு உள்ளூராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தனர் என்கிறது அறிக்கை. இவையாவும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த அபோத்தாபாத்தில் நடந்தேறியுள்ளது.
அமெரிக்கப்படையின் வந்து தனது மாளிகையில் இறங்கித் தாக்கத் தொடங்கியவுடன் ஒசாமா தனடு குடும்பத்தினரை பதட்ட்பபடாமல் அமைதியாக இருந்து கலிமா ஓதும் படி பணித்தாராம். கைக்குண்டுகளைத் தனது பெட்டியில் தேடிக்கொண்டிருந்த பின் லாடன் திரும்பிய போது சுடப்பட்டாராம்.
ஒரு புறம் இந்தியா ஒரு எதிரி நாடாக இருக்கையிலும் மறுபுறம் ஆப்கானிஸ்த்தானில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல், உள்ளூரில் பல தீவிரவாத அமைப்புக்கள் என பல முனை அச்சுறுத்தலைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் இன்னொரு நாட்டு விமானப்படை உள் நுழைந்து மூன்று மணித்தியாலம் தாக்குதலில் ஈடுபட்டதை அறியாமல் இருந்ததை அறிக்கை விசனத்துடன் குறிப்பிடுகிறது. பாக்கிஸ்த்தான் தனது அதிக கவனத்தை இந்தியாவின் மீது மட்டுமே செலுத்துகிறது என்கிறது அறிக்கை. 1971இல் கிழக்குப் பாக்கிஸ்த்தானை இழந்த பின்னர் பாக்கிஸ்த்தானிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் பின் லாடனின் கொலை என்கிறது அறிக்கை.
அமெரிக்க கடற்படைகள் உள் நுழைந்து பின் லாடன் மாளிகை மீது தாக்குதல் செய்தது ஒரு போர் நடவடிக்கையே என்கிறது அறிக்கை. பாக்கிஸ்த்தானுக்குள் இருந்து கொண்டே பாக்கிஸ்த்தானுக்குத் தெரியாமல் அமெரிக்க உளவுத்துறை பின் லாடனைத் தேடிப்பிட்த்ததை ஒரு மோசமான தவறாகவும் தகுதியீனமாகவும் அறிக்கை இனம் கண்டுள்ளது.
பின்லாடன் பற்றிய முன்னைய பதிவுகள்:
1. பின் லாடனைக் கண்டுபிடித்தது எப்படி?
2. அமெரிக்காவின் போலித் தடுப்பூசி
3. ஆட்டம் காண்கிறதா அல் கெய்தா?
அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பாக்கிஸ்த்தானிற்கு நுழைந்து தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்காவுடன் பாக்கிஸ்த்தான் ஓர் எழுதப்படாத அரசியல் உடன்படிக்கைச் செய்திருந்ததும் ஒரு அமெரிக்க உளவாளி பாக்கிஸ்த்தானியரை இலகுவாக ஒரு அமெரிக்காவிற்கான நுழைவு அனுமதி மூலமாகவோ அல்லது ஒரு இரவு உணவுக்காகவோ வாங்கி விடலாம் என சொல்லியதும் இப்போது அம்பலமாகியுள்ளது.
பாக்கிஸ்த்தானிய ஊடகங்கள் அல் ஜசீரா அம்பலப்படுத்திய அறிக்கை 1971இல் கிழக்குப் பாக்கிஸ்தான் பிரிக்கப்பட்ட பின்னர் பாக்கிஸ்த்தானியர் எதிர் கொண்ட மோசமான அவமானம் என்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment