Sunday 23 June 2013

போர் முனையில் ஒரு பேனா முனை

எதை நான் இழந்தாலும்
எதிரிக்கு அடங்காத வரை
நான் தோற்காதவனே

எரிகுண்டில் கருகிய கருவறையால்
தீயும் அங்கே களங்கமானது
அவலக் குரல்களில் அலையியக்கங்களால்
காற்றும் அங்கு மாசுபட்டது
சிதறிய உடல்கள் அழுகிப் புதைந்து
நிலமும் அங்கே அழுக்கானது
அலுமினியப் பறவைகளின் கொலைவெறியால்
வானும் அங்கு கறை பட்டது
சிந்திய இரத்தங்கள் கலந்து
நீரும் தூய்மை கெட்டது
மாநிலமும் மாசுபட்டது
மாநிடமும் மாசுபட்டது

நான் ஒரு போராளியின் மனைவி
கணவன் புனர்வாழ்வு முகாமில்
அதனால் வாழ்விழந்தவன்
தேடி அலைவான் படைவீரன்
வார்த்தைகளால் வம்பு செய்வான்
தொண்டர் அமைப்பினன்
தினமும் கதறும் தாய்
விடை சொல்ல முடியாக் கேள்விகள்
தினம் கேட்கும் மகன்
வெறுமை இங்கே கண்ணீரால்
நிரம்பி வழிகிறது


சிரியாவில் குண்டுமழைக்குள் கவிபாடும் சிறுமி



போர் முனையில் போராளியின் கவி வரிகள்


கவி வரிகள் - நான் சிரியாவில் பிறந்தவன்



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...