அந்த இளைஞனுக்கு காதலில் தோல்வி! வேலை இல்லாததால் தண்டச் சோறு என்ற பெயர் வேறு. விரக்தியின் எல்லைக்குச் சென்று விட்டான். தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டான் பாவம்!!
தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன்னர் தன்னை எண்ணிப் பார்த்தான். தன் இனத்தை எண்ணிப் பார்த்தான். தான் தனக்கும் நல்லது செய்யவில்லை, தனது இனத்திற்கும் நல்லது செய்யவில்லை என்பதை எண்ணும் போது தன் மீது அவனுக்கு இருந்த வெறுப்பு மேலும் அதிகரித்து விட்டது. தான் இறக்க முன்னர் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து சத்திய மூர்த்தி பவனுக்குச் சென்று காங்கிரசுக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தான். சத்திய மூர்த்தி பவனில் இருந்தவர்களுக்கு தமது கட்சியிலும் ஒருவன் வந்து அதுவும் ஒரு உண்மையான தமிழன் வந்து சேர்கிறானே என்று ஆச்சரியம். ஒருவர் அவனைத் தனியே அழைத்துச் செல்ல முற்பட்டார். அவர் சிதம்பரம் குழுவைச் சேர்ந்தவர் என்பதால் மற்றக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உடனே அவர்கள் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கினார்கள். அந்த இளைஞன் மிகுந்த சிரமப்பட்டு 7 கதர் வேட்டிகள் கிழிபட்டும், 5 கதர் வேட்டிகள் காற்றில் பறந்த பின்னர் எல்லோரையும் சமாதானப்படுத்தினான். பின்னர் சிதம்பரம் குழுவைச் சேர்ந்தவர் தான் அந்த இளைஞனைத் தனது குழுவில் இணைக்கக் கொண்டு செல்லவில்லை ஏன் காங்கிரசில் இணைகிறாய் என்று கேட்கத்தான் அழைத்துச் செல்ல முயன்றேன் என்றர். அப்போது அந்த இளைஞன் தனது சட்டைப்பையில் இருந்த நஞ்சுப் புட்டியை எடுத்துக் குடித்து விட்டான். எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அந்த இளைஞன் தான் இறப்பதற்கு முன்னர் தமிழினத்திற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என எண்ணினேன். தமிழினத்திற்கு செய்யக்கூடிய ஒரே நன்மை ஒரு காங்கிரசுக்காரனையாவது போட்டுத் தள்ள வேண்டும். அதற்கு நான் எடுத்த முடிவு காங்கிரசில் சேர்ந்து விட்டுத் தற்கொலை செய்வது என்பதே என்றான்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment