Cruise missile எனப்படும் வழிகாட்டி ஏவுகணையை 12/03/2013 செவ்வாய்க்கிழமை இந்தியா பரிசோதித்துப் பார்த்தது. வழிகாட்டி ஏவுகணைகள் நிலத்தில் உள்ள தளத்தில் இருந்தும் விண்ணில் பறக்கும் விமானத்தில் இருந்தும் கடலுக்கடியில் இருக்கும் நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் செலுத்தி செலுத்தும் இடத்தில் இருந்து கணனி மூலம் வழிகாட்டப்பட்டு குறித்த இலக்கை துல்லியமாகத் தாக்கக் கூடியது.
இந்தியா உருவாக்கிய வழிகாட்டி ஏவுகணை ஒலியிலும் பார்க்கக் குறைந்த வேகத்திலேயே இயங்கும். இதனால் இதை subsonic என்று அழைக்கப்படும். இவை முதலில் 1944-ம் ஆண்டு ஜேர்மனியில் உருவாக்கப்பட்டது. பின்னர் transistorஇன் கண்டு பிடிப்பும் கணனிகளின் உருவாக்கமும் வழிகாட்டி ஏவுகணைகளில் பல மாற்றங்களை உருவாக்கின. அமெரிக்காவின் Tomahawk வழிகாட்டி ஏவுகணைகள் US$1,410,000 பெறுமதியானவை.
Hypersonic வழிகாட்டி ஏவுகணைகள் ஒலியிலும் பார்க்க 5 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியவை. ஒலியிலும் பார்க்க வேகமாகச் செல்லக் கூடியவற்றின் வேகம் Mach number ஆல் கணிக்கப்படும். Mach number என்பது ஒரு பொருளின் வேகத்தை ஒலியின் வேகத்தால் பிரிக்க வரும் எண்ணாகும். இந்தியாவும் இரசியாவும் இணைந்து உருவாக்கிய BrahMos வழிகாட்டி ஏவுகணைகள் Mach number 3 ஐ உடையவை. BrahMos என்னும் பெயர் இந்திய Brahmaputra நதியின் பெயரையும் இரசியாவின் Moskva நதியின் பெயரையும் இணைத்துச் சுருக்கி உருவாக்கப்பட்டது.
அமெரிக்காவின் வழிகாட்டி ஏவுகணைகள் சதாம் ஹுசேயினின் ஆக்கிரமிப்பில் இருந்து குவைத் நாட்டை மீட்கவும் பின்னர் ஈராக்கில் சதாமின் ஆட்சியைக் கவிழ்க்கவும் வெற்றீகரமாக பாவிக்கப்பட்டன. லிபியாவில் மும்மர் கடாஃபிக்கு எதிரான போரிலும் அமெரிக்கா வழிகாட்டி ஏவுகணைகளை தனது கப்பலகளில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் ஏவியது.
இந்தியா முழுக்க முழுக்க தானாகவே உற்பத்தியாக்கிய நடுத்தர தூரம் செல்லக்கூடிய வழிகாட்டி ஏவுகணைக்கு நிர்பய (பயம் இல்லாதது) என்னும் பெயரிடப்பட்டு 12-03-2013 செவ்வாய்க் கிழமை முதல் தடவையாக ஏவப்பட்டது. 2007-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடக்கப்பட்டது. ஒடிசாவில் புவனேஸ்வரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள் சண்டிப்பூரில் இருந்து காலை 11 மணியளவில் ஏவப்பட்டது. அது 20 நிமிடங்களில் திசைமாறி தான் போன போக்கிற்கு பறக்கத் தொடங்கி விட்டது. பிரச்சனைக்குரிய இடங்களில் விழுந்து வெடித்து பெரும் சேதம் விளைவிக்கலாம் என அஞ்சப்பட்டது. ஆனால் சேதம் ஏற்படாத இடத்தில் விண்ணில் வைத்து வெடித்தது.முன் கூட்டியே ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்தனர். நிர்பய விழுந்து வெடிக்கும் போது சிதறிய துண்டுகளால் பலர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் உயிரிழப்போ சொத்தழிவோ ஏற்படவில்லை.
வெற்றி என்றார் இயக்குனர்.
நிர்பய ஏவுகணைத் திட்டத்தின் இயக்குனர் ரவிக்குமார் குப்தா இந்தப் பரீட்ச்சார்த்த ஏவுகணை அடிப்படையில் வெற்றி எனத் தெரிவித்துள்ளார். ஆனால் வழிகாட்டி ஏவுகணையின் இரு முக்கிய அம்சங்கள் ஏவுகணை வழிக்காட்டுதலுக்கு இணங்கப் பயணித்தலும் இலக்கைத் துல்லியமாகத் தாக்குதலுமாகும். இந்த இரண்டு அடிப்படைத் தேவைகளிலும் நிர்பய வழிகாட்டி ஏவுகணை பிழைத்து விட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment