வெனிசூலா
அதிபர் ஹியூகோ சாவேஸ் இறந்ததின் பின்னர் அவருக்கு வந்த புற்று நோய்
அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயின் சதியா என்ற விவாதம் மீண்டும்
எழுந்துள்ளது. 2011இல் அவருக்கு புற்றுநோய்க் கட்டி உருவாகியது என்றவுடன்
அது சிஐஏயின் சதியா என்ற கேள்வி எழுந்தது. சாவேஸும் அந்த ஐயத்தைப்
பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
பிரேசெஇல், ஆர்ஜெண்டீனா ஆகிய
நாடுகளில் அமெரிக்காவிற்குப் பிடிக்காதவர்கள் ஒன்பது பேருக்கு ஒரே கால
கட்டத்தில் புற்று நோய் வந்தது எப்படி என்று ஹியூகோ
சாவேஸ் கேள்வி எழுப்பியிருந்தார். ஆர்ஜெண்டீனிய அதிபர் Cristina Fernández
de Kirchnerஇற்கு தொண்டையில் புற்று நோய். பராகுவே நாட்டின் அதிபர்
ஃபெர்னாண்டஸ் லூகோவிற்குப் புற்று நோய் வந்திருந்தது. அவர் பிரேசிலில்
சிகிச்சை பெற்று 2012இல் குணமானார். பிரேசிலின் அதிபர் டில்மா ருஸ்ஸெஃப்
2009இல் புற்று நோய் வந்து குணமானார். பிரேசிலின் முன்னாள் அதிபர் லூலா த
சில்வாவையும் புற்று நோய் விட்டு வைக்கவில்லை.
ஒரு ஆண்டுக்கு முன்னர் இப்படிக் கூறியிருந்தார்:
“I
don’t know but… it is very odd that we have seen Lugo affected by
cancer, Dilma when she was a candidate, me, going into an election year,
not long ago Lula and now Cristina… It is very hard to explain, even
with the law of probabilities, what has been happening to some leaders
in Latin America. It’s at the very least strange, very strange.”
அமெரிக்காவின்
உளவுத் துறையான சிஐஏ பலதடவை கியூபாவின் பிடல் காஸ்ரோவைக் கொல்ல சதி
செய்தது பகிரங்க உண்மை. நச்சு மாத்திரை, நஞ்சு தடவிய ஆடை, பேனாவில் நஞ்சு
ஊசி, நஞ்சு தடவிய சுருட்டு, சங்குக்குள் வெடிகுண்டு, தாடியை உதிரவைக்கும்
சதி, உரையாற்ற இருந்த வானொலி நிலையத்தில் நச்சுப் புகை, நச்சுக்
கிருமிகளுடனான கைக்குட்டை, நஞ்சு கலந்த பால் எனப் பல வழிகளில் பிடல்
காஸ்ரோவைக் கொல்ல சிஐஏ சதி செய்தது.
அமெரிக்க அரசு அல்லது அதன் உளவுத் துறை மட்டுமல்ல அதன் முதலாளிகளே
வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்களைக் கொல்லச் சதி செய்திருக்கலாம் என்கிறார் கெவில் பரற் என்னும் பத்தி எழுத்தாளர்.
Confessions of an Economic Hit Man என்னும் நூலில் John
Perkins என்பவர் அமெரிக்க தனியார் வியாபார நிறுவனங்கள் உலகத் தலைவர்களைக்
கொலை செய்யக் கூலிக் கொலையாளிகளை பயன்படுத்துகின்றன என்பதற்கு பல ஆதாரங்களை
முன்வைத்துள்ளார். அமெரிக்க பெரு வங்கிகள் ஒரு நாட்டிற்கு தன் கையாளை
அனுப்பும். அவர் அந்த நாடுத் தலைவரைச் சந்தித்து உனது நாடு குறிந்த
வங்கியில் இருந்து கடன் பெற வேண்டும் அல்லது உன்னை போட்டுத் தள்ளுவேன்
என்பார். கடன் பெற்றால் அவரது நாடு அமெரிக்க வங்கியின் கடனடிமையாகும். கடன்
வாங்க மறுத்தால் வங்கி தனது asteroid என்ற குறியீட்டுப் பெயருடன்
அழைக்கப்படும் கூலிக் கொலையாளியை அனுப்பி அவரைக் கொல்லும். இப்படி
அடுக்குகிறார் அமெரிக்க வங்கிகளுக்காக வேலை செய்த John Perkins என்பவர்.
1992-ம் ஆண்டு ஊழல் மிக்க ஆட்சியாளரான Carlos Andrés Pérez எதிரான படைத்துறைப் புரட்சியை மேற்கொண்ட ஹியூகோ
சாவேஸ் கைது செய்யப்பட்டார். பின்னர் 1994இல் மன்னிக்கப்பட்டு வெளியில்
வந்து 1998இல் தேர்தலில் போட்டியிட்டு வென்று வெனிசூலாவின் அதிபரானார்.
தான் இடது சாரியுமல்ல வலது சாரியுமல்ல என்று சொல்லி ஆட்சியைக் கைப்பற்றிய ஹியூகோ
சாவேஸ் பின்னர் தனது நாட்டை சோசலிசப் பாதையில் இட்டுச் சென்று பல வறிய
மக்களை வறுவையில் இருந்து விடுவித்தார். எண்ணெய் நிறுவங்கள் உட்படப் பல
அமெரிக்க நிறுவனங்களை நாட்டுடமையாக்கினார். பிடல் காஸ்ரோவின் நெருங்கிய
நண்பரானார்.
ஹியூகோ
சாவேஸ் அவர்களின் ஆட்சியில் வெனிசூலா நாடின் தேசிய வருமானம் 50%ஆல்
அதிகரித்தது. குழந்தைகளின் இறப்பு அரைவாசியாகக் குறைந்தது.
வேலையில்லாதவர்களின் தொகையும் அரைவாசியாகக் குறைந்தது. கல்லூரிகளின்
படிப்பவர்களின் தொகை இரட்டிப்பானது. 23 நாடுகளைக் கொண்ட லத்தின்
அமெரிக்காவில் வறியவர்கள் குறைந்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை
வெனிசூலா பிடித்தது. பொருளாதாரத்தில் வருமான மீள் விநியோகத்தில் அதிக கவனம்
செலுத்தினார். லத்தின் அமெரிக்க நாடுகளில் வெனிசூலாவின் ஏழைகளுக்கும்
பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி மிகக் குறைவானது. The Bolivarian
Republic of Venezuela has the lowest rate of income inequality – the
smallest gap between the rich and the poor – of all countries in Latin
America and the Caribbean, according to a report published Tuesday by
UN-HABITAT, the United Nations Human Settlements Program. இதனால் அவர்
ஏழை மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட தலைவரானார்.
FARC எனப்படும் ( The
Revolutionary Armed Forces of Colombia ) கொலம்பிய போராளிக்
குழுக்களுக்கு சாவோஸ் பெரிதும் உதவி புரிந்தார். அமெரிக்காவின் எதிரிகளான
ஈரான், சிரியா, முன்னாள் லிபியா போன்ற நாடுகளுடன் நெருங்கிய நட்பைப்
பேணினார். 2006-இம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அமெரிக்க
அதிபர் ஜோர்ஜ் புஸ் உரையாற்றிய மறுநாள் உரையாற்றிய சாவோஸ் நேற்று இங்கு ஒரு
பிசாசி உரையாற்றியது அதனால் இப்போதும் இங்கு கந்தகம் மணக்கிறது என்றார்.
இவரை அமெரிக்கா வெறுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment