ஆற்றைக் கடக்க முன் அண்ணன் தம்பிச் சண்டை.
பிளவு பட்ட சிரியக் கிளர்ச்சிக்காரர்களால் சிரிய அதிபர் அல் அசாத்தை பதவியில் இருந்து விலக்குவது இலகுவான காரியம்ல்ல என பலரும் உணர்ந்துள்ளனர். சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு இடையில் உள்ள பிரதான பிளவு புனிதப் போராளிகளுக்கும் இசுலாமியவாதிகளுக்கும் இடையினாலனதாகும். 19-02-2013இலன்று இசுலாமியவாதிகளின் முக்கிய வட முனைத் தளபதி தயர் அல் வாக்காஸ் கொடூரமாகக் கொல்லப்பட்டது இரு பிரிவினருக்கும் இடையில் மோதல் தீவிரமடைவதை உணர்த்துகிறது.வட சிரியாவையும் மற்றும் பல பிரதேசங்களையும் பல தியாகங்களைப் புரிந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் இப்போது அங்கு எப்படியான ஆட்சி முறைமை நிலவ வேண்டும் என்பதில் கடுமையாக முரண்படுகிறார்கள்.
ஈரானிய ஆதரவு
ஈரான், சிரியா, ஹமாஸ் இயக்கம், ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவை ஒன்று கூடி மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் மேற்குலக ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என ஈரான் நம்புகிறது. ஈரான் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. சிரியா சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. அங்கு சிறுபான்மையினரான அலவைற் இனக்குழுமத்தினர் பஷார் அல் அசாத் தலைமையில் அதிகாரத்தைத் தம் வசம் வைத்திருக்கின்றனர். அலவைற் இனக்குழுமம் சுனி முஸ்லிம்களின் ஒரு பிரிவு. இதனால் அசாத்திற்கும் ஈரானிற்கும் நெருங்கிய நட்புண்டு. அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு சிரியாவில் சுனி முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் அது மேற்காசிய வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் தந்திரோபாய சமநிலை ஈரானுக்குப் பெரும் பாதகமாக அமையும் என ஈரான் உறுதியாக நம்புகிறது. ஈரானுடன் நட்புறவைப் பேணும் சீனாவும் ஈரானின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது. இரசிய கடற்படைத் தளம் ஒன்று சிரியாவில் இருக்கிறது. சிரியாவானது ஈராக், துருக்கி, லெபனான். இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய சாதகமற்ற நாடுகளிடை இருக்கும் ஒரு நாடு. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதை சவுதி அரேபியாவும் காட்டாரும் பெரிதும் விரும்புகிறது. சிரியாவில் லிபியாவில் செய்தது போல ஒரு படை நடவடிக்கையை நேட்டோ செய்ய வேண்டும் என நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி நீண்டகாலமாகக் கோரிக்கை விட்டு வருகிறது. சிரியாவின் ஆபத்தான படைக்கலன்கள் தனக்கு எதிரான போராளிகள் கையில் போகாமல் இருக்க இஸ்ரேல் எதையும் செய்யத் தயங்காது. இத்தகைய சூழலில் சிரிய ஆட்சியாளர் அல் அசாத்தும் அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களும் மோதிக் கொள்கின்றனர்.
பேரவலத்தைத் தடுக்க முடியாத ஐக்கிய நாடுகள் சபை
ஏற்கனவே எழுபதினாயிரத்திற்கு மேற்பட்டோர் சிரியாவில் கொல்லப்பட்டுவிட்டனர். காணாமல் போனோர் தொகையும் பல்லாயிரக் கணக்கு. சொந்த வீடுகளை இழந்தவர்கள் தொகை இருபது இலட்சத்திற்கு மேல். வல்லரசு நாடுகளுக்கிடையில் ஒற்றுமையின்மையால் ஐக்கிய நாடுகள் சபை ஏதும் செய்ய முடியாமல் இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து தாம் சிரியாவில் தவறு விட்டதாகச் சொல்லுவார்கள்.
விலகி நிற்கும் மேற்குலகம்
நேட்டோப் படைகள் ஒருதலைப் பட்சமான விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க இரசியா தனது புதிய ரக விமான எதிர்ப்பு முறைமையை சிரியத் தலைநகர் டமஸ்கசில் நிறுவியுள்ளது. தாம் அசாத் ஆட்சியை அகற்றி அங்கு ஒரு இசுலாமியவாதிகளின் ஆட்சியை நிறுவ உதவி செய்வதா என்பது அவர்கள் முன் இருக்கும் கேள்வி. எகிப்தில் இசுலாமிய மதவாதிகளின் கை ஓங்குவதை அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனையில் இன்னொரு போர் முனையத் திறக்க முடியாது.
மேலும் பேரவலம் தொடரும்
பலமிக்க அசாத்தின் படை, பிளவு பட்டு நின்றாலும் அசாத்திற்கு எதிரான போரில் உறுதியாக நிற்கும் கிளர்ச்சிக்காரர்கள், கையாலாகாத ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை சிரியாவில் இனி வரும் மாதங்களில் போர் மேலும் தீவிர மடைவதைச் சொல்லி நிற்கின்றன. சில படைத் துறை வல்லுனர்கள் போர் ஆண்டுக்கணக்காக நீடிக்கலாம் என்கின்றனர். அப்படி நட்க்கும் போது சிரியா பல கூறுகளாகப் பிரிக்கப்படும். சில பிராந்தியங்கள் மேற்குலகிற்கு எதிரான போராளிகள் கைகளில் போய்ச் சேரும். அப்போது அப்பிராந்தியங்களைக் கைப்பற்ற மேற்குலகம் மற்ற போராளிக் குழுக்களுக்கு உதவி செய்யும். அது சிரியாவைச் சின்னாபின்னப்படுத்து.
1 comment:
nanba syria siaa desam , athu sunni desam illai
Post a Comment