Thursday, 21 February 2013

ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச கனிமொழிக்கு அருகதை இருக்கிறாதா?

"ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அல்லது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்." இப்படி இந்திய ராஜ்ய சபா உறுப்பினரான கனிமொழி கூறியுள்ளார்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானங்களை இந்தியா கெடுத்துக் கொண்டிருக்கிறது. அம்மா தாயே முடியுமானால் இலங்கைகு எதிராக இந்தியாவால் ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டுவரப்பண்ண உங்களாலும் முடியாது. உங்க அப்பனாலும் முடியாது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருவதாக முடிவெடுத்து விட்டது. அதை ஆதரிப்பதாக இந்தியாவும் முடிவெடுத்து விட்டது. இப்போது கனிமொழி என்ன சொல்கிறார். தான் சொல்லித்தான் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது எனத் தனது கழகத் தொண்டர்களை கனிமொழி ஏமாற்றலாம். ஆனால் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்ற முடியாது. இந்தியாவின் ஆதரவில்லாமலேயே அமெரிக்காவால் ஐநா மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்ற முடியும். ஆனால் இந்து மாகடல் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான படைத்துறைத் தந்திரோபாய நிலைப்பாட்டிற்கு இந்தியாவை அமெரிக்கா பங்காளியாக்க முயல்கிறது. இதைச் சாதகமாக வைத்து இலங்கையின் ராசதந்திரக் கைக்கூலியாகச் செயற்படும் அயோக்கிய இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் கடுமையைக் குறைக்கிறது.

2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதே மனித உரிமைக்கழகத்தில் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்த போது அதை அயோக்கிய இந்தியா பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அந்த இந்திய அரசில் கனிமொழியும் ஒரு முக்கிய பங்காளி. அப்போது தனது பதவியைத் துறக்காத கனிமொழிக்கு இப்போது இலங்கைப் பிரச்சனை பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?

ஒரு வயது முதிர்ந்த பெண்ணை மருத்துவச் சிகிச்சைக்கு இந்தியா செல்ல விசா அனுமதியைக் கொடுத்துவிட்டு பின்னர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர் பழிவாங்கும் நோக்குடன் நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டுப் பின்னர் திருப்பி அனுப்பிய அயோக்கிய இந்திய அரசின் கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த கனிமொழிக்கு என்ன அருகதை ஈருக்கிறது இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேச?

இறுதிப் போரின் போது சரணடைய சென்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவினரின் சரணடைவுப் பேச்சு வார்த்தையில் கனிமொழியும் சம்பந்தப்பட்டவர். அப்போது நடந்தவற்றைப் பற்றி கனிமொழி மனித உரிமைக்கழக உறுப்புரிமை நாடுகளுக்கு ஜெனிவா சென்று எடுத்துச் சொல்வாரா?

2009 இறுதிப் போரின் போது போர் முனையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் அகப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் உணவு மற்றும் மருந்துகளைத் தடுப்பதற்காக இலங்கை அரசு அங்கு 70,0000 மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் எனப் பொய் சொன்னது. இது பற்றி உங்கள் குடும்ப நண்பரும் ராஜபக்ச குடும்பத்துக் மிகவும் வேண்டியவரும் இப்போது இந்தியக் குடியரசுத் தலைவரும், அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருமாக இருந்த பிரணாப் முஹர்ஜீயிடம் வினவிய போது இலங்கை அரசு சொல்வது சரி அங்கு 70,000 பொது மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்றார். போர் முனையில் நடப்பவை அனைத்தையும் இந்திய செய்மதிகள் கவனித்த படியே இருந்தன. இந்தியாவிற்கு நன்கு தெரியும் இலங்கை அரசு பொய் சொல்கின்றது என்று. அப்படிப் பொய் சொன்ன பிரணாப் முஹர்ஜீக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த கனிமொழிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேச.

பாலச்சந்திரன் பிரபாகரனின் கொலை பற்றிய சனல் - 4இன் படங்களை தன்னால் நம்ப முடியாது என்று இந்திய வெளிநாட்டமைச்சர் சொல்லி விட்டார்.  உண்மையில் பாலச்சந்திரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்பது பற்றி தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் போரில் பங்காளியான இந்தியாவிற்கு நன்கு தெரியும். இறுதிப் போரின் போது பல இந்திய உளவாளிகள் போர் முனையில் இருந்து  செயற்பட்டனர். பாலச்சந்திரனை உயிருடன் வைத்திருப்பதா அல்லது கொவதா என்ற முடிவை எடுப்பதில் அப்போது இலங்கைக்கு படைத்துறை ஆலொசகர்ரக இருந்த சதீஷ் நம்பியாரும் சம்பந்தப் பட்டிருக்க வாய்புண்டு. இப்படி இருக்கையில் உங்கள் கூட்டாளிக் கட்சியான் காங்கிரசுக் கட்சியின் அமைச்சர் படத்தை நம்ப முடியாது என்கிறார். தடயவியலில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் படங்கள் நம்பகரமானவை என்கிறார். இலங்கை அரசைத் திருப்திப்படுத்த  பொய் சொல்லும் கட்சியுடன் உறவு வைத்துள்ள கனிமொழிக்கு என்ன அருகதை இருக்கிறது தமிழர்கள் பற்றிப் பேச.

இறுதிப் போரின் போது ஒரு சிறு நிலப்பரப்பில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுக் கொண்டு விட்டனர். நாற்புறமும் சிங்களப் படையினர் சூழ்து கொண்டனர். அவகளின் பின்னால் தமிழர்களின் எதிரி நாட்டில் இருந்து பின்கதவால் ஈழத்துக்குள் புகுந்த இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட அயோக்கியப் படைகள். சிறு நிலப்பரப்பைச் சுற்றி வளைத்த சிங்களப்படை கனரகப் படைகலன்களை ஏவினால் அது அந்தச் சிறு நிலப்பரப்பினுள் விழாது மறுபுறம் இருக்கும் சிங்களப் படைகள் மீதுதான் விழும். கனரகப் படைக்கலன்களை ஏவும் போது அது நீண்ட தூரம் சென்றுதான் தாக்கும். இதனால் சிங்களப்படையினருக்கு நிண்ட தூரம் பாயும் கனரகப் படைக்கலன்களை ஏவ முடியாத சூழல். இந்தச் சூழலில் கொழும்பிலும், புது டில்லியிலும் கோபால புரத்தில் இருந்தும் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதன் படி கனிமொழியின் தந்தை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். இலங்கை அரசு தான் இனி கனரக படைக்கலன்கள் பாவிக்கப் போவதில்லை என அறிவித்தது. அதை பிரணாப் முஹர்ஜி இனி இலங்க படைக்கலன்களை ஏவப் போவதில்லை என்றார். கருணாநிதியும் ப சிதம்பரமும் இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டது என்றனர். கனிமொழி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முழங்கினார் தனது தந்தை 4 மணித்தியால உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டது என்று. போர் முனையில் பதுங்கு குழிக்குள் ஒளித்திருந்த அப்பாவிப் பொது மக்கள் வெளியில் வந்தனர் இலங்கை விமானப்படையும் இந்தியா செய்து கொடுத்த குறுந்தூர ஏவுகணைகளும் அவர்கள் மீது வீசப்பட்டன. பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் என்றீர்களே இப்போதும் குண்டு வீசிக் கொல்கிறார்களே என்ற கேள்விக்கு கனிமொழி சொன்ன பதில் "இல்லை அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது". கருணாநிதி சொன்ன பதில் "மழை விட்டு விட்டது. இப்போது தூவானம் அடிக்கிறது". இந்தக் கனிமொழிக்கு இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது. தெலுங்கு இரத்தம் தமிழர்கள் மீது அக்கறை காட்டுமா? தமிழ் நாட்டு மக்கள் கடந்த சட்ட சபைத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு கொடுத்த அடி வெறும் தூவானம் மட்டுமே. 2014இல் நடக்க இருக்கும் பாராளமன்றத் தேர்தலில் காத்திருக்கிறது பெருமழை.

1 comment:

Anonymous said...

சூடு சொரணை வெட்கம் மானம் கெட்டவர்கள் இந்த தமிழக அரசியல் வியாதிகள். இவர்களைப் பற்றி எழுதியும் பேசியும் நாம் எம்மையே அவமானப் படுத்திக் கொள்கின்றோம்.விட்டுவிடுங்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...