Friday, 25 January 2013

Microsoft இன் அதிரடிப் பட்டிகைக் கணனி (Tablet computer)

Microsoft நிறுவனம் அதிரடியாக் ஒரு புதிய  பட்டிகைக் கணனியை (Tablet computer) அறிமுகம் செய்துள்ளது. இது   ஆப்பிளின் பட்டிகைக் கணனிகளுக்கு  (Tablet computer) சவால் விடுமுகமாக பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் தனது பட்டிகைக் கணனிகள் மூலமும் கைப்பேசிகள் மூலமும் தனது விற்பனையையும் இலாபத்தையும் பெருக்கிக் கொண்டு வந்தது. இப்போது ஆப்பிளின் விற்பனை வளர்ச்சி குறையத் தொடங்கி விட்டது.

 $999 விலை மதிப்பிடப்பட்டுள்ள Microsoft நிறுவனத்தின் Surface Pro என அழைக்கப்படும் பட்டிகைக் கணனி உலகிலேயே விலை கூடிய  பட்டிகைக் கணனியாக இருக்கும். 64GB பட்டிகைக் கணனி $899ஆகவும் 128GB பட்டிகைக் கணனி $999 ஆகவும் விற்கப்படும். RAM ஆனது 4GB அளவைக் கொண்டுள்ளது.

Microsoftஇன் பட்டிகைக் கணனி விண்டோஸில் முழுமையாக இயங்கும். சகல செயலிகள்(Applications) இயக்கக்கூடியதாகவும் Office மற்றும் Adobe Photoshop போன்ற மென்பொருள்களையும் இயக்கக் கூடியதாக இருக்கும். Office இயக்க முடியாமை ஆப்பிளின் ஐ-பாட் பட்டிகைக்களின் பெரும் பின்னடைவு எனப் பல பயனர்கள் கருதுகின்றனர். இந்த இடைவெளியை Microsoftஇன் பட்டிகைக் கணனி நிரப்ப முயல்கிறது. அத்துடன் மடிக்கணனி போல் நல்ல விசைப்பலகையையும் கொண்டுள்ளது. இவற்றால் இப்பட்டிகைக் office on the road எனக் கருதப்படுகிறது.

Surface Pro வையும் ஐ-பாட்-4ஐயும் ஒரு ஒப்பீடு:
நன்றி: டெய்லி மெயில்


2 comments:

Anonymous said...

உங்கள் facebook ID என்ன? பின் தொடர விரும்புகிறேன்.

Vel Tharma said...

Vel Tharma

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...