பொம்பே ஜெயஸ்ரீயின் தமிழ்த் தாலாட்டுப் பாடலுடன் ஆரம்பமாகும் ஆங்கிலத் திரைப்படம் Life of Pi எதிர்பார்ப்புக்களையும் மீறி வசூலில் சாதனை படைத்து வருகிறது. Ang Lee இயக்கிய இப்படம் சிறந்த படம் சிறந்த இயக்குனர் உட்ப்ட 11 ஆஸ்கார் நியமனங்களையும் பெற்றுள்ளது.
Yann Martel என்னும் பிரபல நாவலாசிரியர் 2001இல் எழுதிய விருது பெற்ற Life of Pi நாவலை David Magee என்னும் இன்னும் ஒரு எழுத்தாளர் திரைக்கதையாக்கி உருவாக்கப்பட்ட படம் தோல்வியில் முடியும் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
குடியேற்ற ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் பிறந்த Piscine Patel என்னும் தமிழ்க்குடும்பத்தில் பிறந்த சிறுவனின் கதை இது. இவனது தந்தையார் ஓரு மிருகக் காட்சிச் சாலையை சொந்தமாக வைத்திருக்கிறார். Piscine என்பது பிரான்ஸில் இருந்த ஒரு நீச்சல் தாடாகத்தின் பெயர். இது Pissing என்ற ஒலியுடன் உச்சரிக்கப்படும். இதனால் மற்றவர்களால் கேலி செய்யப்படும் சிறுவன் பெய்ரைத் தானே Pi என்று மாற்றி விடுகிறான்.
Piஇன் குடும்பம் மிருகங்களுடன் கண்டாவிற்குப் பயணமாகும் போது கப்பல் கவிழ்ந்து Piயும் ஒரு வங்கப் புலியும், ஒரு வரிக்குதிரையும், ஒரு குரங்கும், ஒரு ஹையீனாவும் படகொன்றில் தப்புகின்றனர். திக்குத் தெரியாத நடுக்க்கடலில் நீண்ட நாட்களாக இவர்களுக்கிடையிலான போராட்டம் படத்தின் முக்கிய அம்சம். பலத்த ஆபத்தான கட்டங்களிலும் நகைச்சுவை மிளிர்கிறது.
தன் காதலியை பிரிந்து சென்ற கடலில் நீண்ட நாட்கள் இருக்கும் போது அவளை ஒருதடவை கூட நினைத்துப் பார்க்கவில்லை. இதையே தமிழ்ப்படமாக எடுத்தால் flash backஇல் காதலியுடன் குறைந்தது இரண்டு பாடல்களாவது இடம்பெற்றிருக்கும்.
சிறுவனின் தாயாக வரும் தபுவைத் தவிர மற்ற நடிகர்கள் பிரபலமற்ரவர்கள். $120மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட Life of Pi திரைப்படம் வசூலில் $500மில்லியன்களைத் தாண்டியுள்ளது. சீனாவிலும் Life of Pi திரைப்படம் சக்கைக்ப் போடு போடுகிறது. அங்கு மட்டும் வசூல் $90.8மில்லியனகள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment