Sunday, 20 January 2013

அவளைக் கவர உகந்த Machine

காதலிக்கப்படாமல் காதலிப்பவன்
தூக்கமின்றி கனவு காண்பவன்
பசியின்றி உண்பவன்
உழைப்பின்றி செலவளிப்பவன்
உருப்படாதவன்.

அவளைக் கவர்வதற்கு
Exercise Machine பாவித்தேன்
சரி வரவில்லை
ATM பாவித்தேன்
சரி வந்தது

காதலிக்கப்படாமல் காதலிப்பவன்
தூக்கமின்றி கனவு காண்பவன்
பசியின்றி உண்பவன்
உழைப்பின்றி செலவளிப்பவன்
உருப்படாதவன்.

விபச்சாரத்திற்கு
அரசு வழங்கும் அனுமதி
திருமணம்

பிரிக்க முடியாத   நட்பென்றார்கள்
அவர்கள் மோதிக் கொண்ட போது
பிரித்துவிடச் சிரமமாய் இருந்தது.

திருமணத்தின் முன்
அவள் பார்வை கவர்ந்தது
திருமணத்தின் பின்
அவள் பார்வை பிரித்தது

வெற்றிகரமான ஒவ்வொரு ஆணின் பின்னும்
ஒரு பெண் இருப்பாள் எப்போதும் நச்சரிப்புடன்
வெற்றிகரமான ஒவ்வொரு பெண்ணின் பின்னும்
ஒரு ஆண் இருப்பான் அவள் அழை இரசித்துக் கொண்டு



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...