ஈரான் மீது ஐக்கிய அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டு வந்த பொருளாதரத் தடை தம்மை ஒன்றும் செய்யாது என அதன் அதிபர் முகமது அகமதினிஜாத் சூளுரைத்திருந்தார். 2012 செப்டம்பரில் டெஹ்ரானில் நடந்த ஈராக் போர் நினைவு நாளில் உரையாற்றிய முகமது அகமதினிஜாத் தனது நாட்டின் மீது இஸ்ரோலோ அல்லது ஐக்கிய அமெரிக்காவோ அத்துமீறி நடந்தால் பலத்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
உலகப் பொருளாதார நிபுணர்களின் கருத்து முகமது அகமதினிஜாதுடன் உடன்படவில்லை. 2013இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் சிதறும் ஆபத்து உள்ளது என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். பொருளாதரத் தடைக்கு முன்னரே ஈரானியப் பொருளாதாரம் 2007இல் இருந்து உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்பட்டு ஒரு பலவீனமான நிலையிலேயே இருந்தது.
ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலை தொடர்ந்து மேற்கொள்வேன் என
அடம்பிடித்தது. ஈரான் அணு குண்டு தாயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என
இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் உறுதியாக அறிவித்தன. ஈரான் அசையவில்லை.
தனது யூரேனியம் பதப்படுத்தல் சமாதானத்திற்காகவே. அணுக் குண்டு
உற்பத்திக்கு அல்ல என்றது. ஈரான் மீது பல இணைய வெளித் தாக்குதல்களை
இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து தனித்தனியாகவும் நடாத்தியதாகக்
குற்றம் சாட்டப்பட்டது. ஈரானின் அணு விஞ்ஞானிகள் குண்டு வெடிப்பில்
கொல்லப்பட்டனர். ஈரான் தனது யூரேனியம் பதப்படுத்தலைக் கைவிடவில்லை. ஈரானின்
யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்த வேண்டும் என இஸ்ரேல்
அமெரிக்காவை வலியுறுத்தியது. பராக் ஒபாமா நிர்வாகம் பொறுமையக்
கடைப்பிடித்து தந்திரமாகக் காய்களை நகர்த்தி ஈரானுக்கு எதிராக பொருளாதாரத்
தடைகளைக் அமூல் படுத்தியது. பன்னாட்டு வங்கி கொடுப்பனவு முறைமையான SWIFT
இல் இருந்து தந்திரமாக ஈரானை வெளியேற்றியது. இந்தியா சீனா போன்ற நாடுகளை
ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய வேண்டாம் என வலியுறுத்தியது.
சீனாவும் இந்தியாவும் மறுத்தன. இறுதியில் இந்தியா தான் ஏற்கனவே இறக்குமதி
செய்யும் எரிபொருளை மட்டும் தொடர்ந்து இறக்குமதி செய்வதாக ஒத்துக் கொண்டது.
பொருளாதாரத் தடையின் பின்னர் ஈரானியப் பொருளாதாரம் பெரிதும்
பாதிக்கப்பட்டது என்பதை அதன் நாணயமான ரியால் 80% பெறுமதி வீழ்ச்சியைக்
கண்டது. ஈரானின் வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு (foreign exchange
reserves) இன்னும் ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு மட்டுமே தாக்குப்
பிடிக்கும் என்றும் கருதப்படுகிறது. ஈரானியப் பொருளாதரப் பிரச்சனைகளுக்கு
வெளியில் இருந்து வந்த பொருளாதாரத் தடை மட்டுமல்ல காரணம். அதன்
ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார நிர்வாகமும் ஒரு முக்கிய காரணம்.
பொருளாதாரத்
தடைகளுக்கு மத்தியில் பல வீராப்புகளை ஈரான் கொட்டியது. ஹோமஸ் நீர்ணையை
மூடி உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் பகுதியை தடை செய்வேன் என்றது. பல
ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்து காட்டியது. இஸ்ரேல் மீது தனது ஆளில்லா
விமானத்தைப் பறக்க விட்டது. ஈரானிய ஆதரவு விடுதலை இயக்கமான ஹிஸ்புல்லா
ஈரான் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது தாம் தீவிரவாதத் தாக்குதலை
மேற்கொள்வோம் என்றது. கடைசி நகர்வாக ஹோமஸ் நீரிணையில் எரிபொருள்களை
பெருமளவில் கசிய விட்டு அதை கப்பல் போக்கு வரத்திற்கு ஆபத்தான ஒரு இடமாக
மாற்றி அதன் மூலம் உலக எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பை
ஏற்படுத்தும் தனது திட்டத்தையும் கசிய விட்டது. ஆனால் இது ஈரானியப்
பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி ஒன்றை ஈரானின் நேச
நாடுகளும் விரும்ப மாட்டா.
தனது மொத்த எரிபொருள் ஏற்றுமதியையும் நிறுத்தப் போவதாக ஈரான்
எச்சரித்தது. ஈரானிடமிருந்து துருக்கி, இந்தியா, தென் கொரியா சீனா ஆகிய
நாடுகள் இப்போது எரிபொருள் இறக்குமதி செய்கின்றன. ஏற்றுமதியை நிறுத்தினால்
உலக எரிபொருள் விலையில் பெரும் அதிகரிப்பு ஏற்படும் என்று ஈரான்
எதிர்பார்க்கிறது. ஈரானிய மக்கள் பொருளதாரத் தடைகளின்
சுமையை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். மக்கள் கிளர்ந்து எழ முன்னர் ஈரானால்
செய்யக் கூடிய அதன் தெரிவுகள் மிகச் சிலவே:
1. ஈரான் இஸ்ரேல் மீது
தாக்குதல் நடாத்துதல். பொருளாதாரம் முறிவடைந்த பின்னர் இஸ்ரேலும்
அமெரிக்காவும் தாக்குதல் நடாத்துவதிலும் பார்க்க முறிவடையமுன்னர் போரை
ஈரான் ஆரம்பித்தால் சிறிது பலமான நிலையில் போர் புரிய முடியும். ஆனால்
முதலில் போர் தொடங்கிய ஈரானை இரசியாவும் சீனாவும் ஆதரிக்குமா என்பது
சந்தேகம்.2. யூரேனியம் பதனிடுவதை நிறுத்துதல். இப்படி நிறுத்தினால் உள் நாட்டில் ஆட்சியாளர்கள் தமது செல்வாக்கை பெரிதும் இழக்கலாம்.3. பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து வைத்தல்.
அந்தரங்கத்தில் பணிவு! பகிரங்கத்தில் வீராப்பு
அறையில் சரண். அம்பலத்தில் வீரம்பகிரங்கமாக
வீராப்புப் பேசும் ஈரானிய ஆட்சியாளர்கள் திரைமறைவில் ஐக்கிய
அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடச் சம்மத்தித்துள்ளார்கள். ஆனால்
ஈரான் இதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை. அமெரிக்காவைச் சாத்தான் என
விமர்சித்த ஈரானிய மதத் தலைவர்கள் முகத்தில் இது கரி பூசியதாக அமையும்.
பேச்சு வார்த்தைகளில் இழுபறி
நவம்பர் - 6ம் திகதி நடக்க
விருக்கும் தேர்தலில் பராக் ஒபமா தோல்வியடைந்தால் நிலைமை ஈரானுக்கு இன்னும்
மோசமாகலாம். இதனால் ஈரான் திரைமறைவில் அமெரிக்காவுடன் பேச்சு
வார்த்தைக்குத் தயாரானது. ஈரான் ஐக்கிய அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை
ஒரு பன்முகப்பட்டதாக அமைய விரும்பியது. லிபியா சிரியா போன்ற நாடுகளில்
ஏற்பட்டுள்ள நிலைமை பாலஸ்த்தீனப் பிரச்சனை போன்றவற்றை பேச்சு வார்த்தையில்
உட்படுத்த ஈரான் விரும்பியது. ஆனால் அமெரிக்கா இது காலத்தை இழுத்தடிக்கும்.
பேச்சு வார்த்தை இழுபட ஈரான் தனது நிலத்தின் கீழ் 30 அடியில் உள்ள தனது
யூரேனியம் பதப்படுத்தும் நிலையங்களில் தேவையான அளவு யூரேனியத்தைப்
பதப்படுதி விடும் என்று சந்தேகித்தி பேச்சு வார்த்தை யூரேனியப்
பதப்படுத்தலும் பொருளாதாரத் தடையையும் பற்றி மட்டுமே பேச்சு வார்த்தை
செய்வதாக தெரிவித்தது.
உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி
ஈரான்
சமாதான நோக்கத்திற்குத் தேவையான யூரேனியத்தை தயாரிக்க அமெரிக்கா
அனுமதிக்கும். அதற்கான கடும் பன்னாட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
இதனால் ஒரு உனக்கும் வெற்றி எனக்கும் வெற்றி (win-win) நிலைமையை ஏற்படுத்த
அமெரிக்கா முயல்கிறது. ஈரான பகிரங்கமாக தான் சமாதானத்திற்குத்தான்
யூரேனியம் பதப்படுத்துகிறேன் என்று இதுவரை சொல்லி வந்தது. அணுக் குண்டு
செய்யப்போகிறேன் என்று சொல்லவில்லை. ஈரான் சில அணு மின் நிலைகளை
உருவாக்கலாம். பொருளாதரத் தடை நீக்கப்படலாம். ஆனால் அமெரிக்காவின் சதி வேறு
விதமாக இருக்கலாம். அமெரிக்காவே தனது கையாட்கள் மூலம் அணு குண்டு எங்கே
எனக் கேட்டு கிளர்ந்து எழும் சில தீவிரவாதிகளை ஈரானில் உருவாக்கலாம்.
மோசமடைந்த பொருளாதாரத்தால் கொதிப்படைந்த ஈரானிய மக்கள் அரசுக்கு எதிராக
கிளர்ந்து எழுந்து அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment