Saturday 27 October 2012

இணைவோம் எழுவோம் வெல்வோம்


ஓயாத அலைகளாய் சாயாத மலைகளாய்
தாழாத நிலைகளாய் சோராத தோள்களாய்
அணையாத தீயென நில்லாத காற்றென
இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

கீர்த்தியில்லாச் சில்லறைகள் உற்சவ மூர்த்திகள் நாமெனச்
உருத்திரம் கொண்டாலும் பிரிந்து நின்றாலும்
பிளவு பட்டாலும் நிலையது குலையோம் நிமிர்ந்து நிற்போம்
 

இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

எத்தனை பகை வரினும் எத்தனை இடர் வரினும்
எழ எழ வீழ்த்துவோம் என இந்தியா நின்றாலும்
விழ விழ வீறு கொண்டெழுவோம் வேங்கைகள் நாமாவோம்
 

இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

பெருமரமாகும் சிறு வித்துக்களாய் நாம் வருவோம்
ஆழ்கடல் சென்றெடுத்த நன் முத்துக்களாய்
களங்கமடையோம் பெருமைகள் சேர்ப்போம்
 

இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

தாயகத்துக் கனவுடன் மாவீரர்களாய் மரித்து
வானகத்துறையும் கானகத்து வேங்கைகளின்
கனவினை நனவாக்கிட துணிவோம் துணிவோம்

இணைவோம் எழுவோம் வெல்வோம் வெல்வோம்

2 comments:

Anonymous said...

kanavathu nanavaga emathu thunaiyathu endrum unakku . velga thamizh !

Anonymous said...

வீழ்வது எழுவதற்கே. எம் மாவீரரின் கனவினை நனவாக்க ஒன்று பட்டு எழுவோம். அவர்கள் சுமந்த இலட்சியக் கனவினை எம் தோள் தாங்கி முன்னெடுத்துச் செல்வோம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...