ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 21வது கூட்டத் தொடர் 10-09-2012இல் ஆரம்பமாகி நடக்கிறது. இக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) இடம் பெற இருக்கிறது. 2008இல் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) கடைசியாகச் செய்யப்பட்டது. இப்போது 2008இல் இருந்து 2012 வரை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு செய்யப்படவிருக்கிறது.
ஐநா மனித உரிமைக் கழகத்தின் 193 அங்கத்துவ நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும். ஒரு கூட்டத் தொடரில் 14 முதல் 16 நாடுகளின் மனித உரிமை மீளாய்வு செய்யப்படும்.இந்த மீளாய்வு முக்கியமாக மூன்று ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும்:
1. மீளாய்வு செய்யப்படும் நாடு சமர்ப்பிக்கும் இருபது பக்க அறிக்கை.
2. ஐநா மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை
3. மீளாய்வு செய்யப்படும் நாட்டின் குடிசார் அமைப்புக்கள், அரச சார்பற்ற
தொண்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளைச் சுருக்கி ஐநா
மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை.
ஐநாவின் பட்டயம் (the Charter of the UN), மனித உரிமைகளுக்கான அகிலப் பிரகடனம், மனித உரிமை ஒப்பந்த ஆவணம் human rights instruments ஆகியவற்றின்படி மீளாய்வு செய்யப்படும். இப்போதைய கூட்டத் தொடரில் செக் குடியரசு, ஆர்ஜெண்டீனா, கபன், பெரு, குவாட்டமாலா, பெரு, கொரியக்
குடியரசு, சுவிட்சலாந்து, பாக்கிஸ்த்தான், ஜாம்பியா, ஜப்பான், உக்ரேய்ன்,
இலங்கை ஆகிய 14 நாடுகள் மீளாய்வு செய்யப்படவிருக்கின்றன.
மீளாய்வின் நோக்கங்கள்
மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review)உறுப்பு நாடுகளின் மனித உரிமையை மேம்படுத்தவும் உறுப்பு நாடுகள் மனித உரிமை தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர் கொள்ளும் சவாலகளை அறிந்து கொள்ளவும் அதற்கான உதவிகளைச் செய்யவும், நாடுகள் தமக்கிடை மனித உரிமை தொடர்பான செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் நாடுகளிடையும் கழகத்துடனும் மனித உரிமை தொடர்பான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் செய்யப்படுகிறது.
மீளாய்வு செய்யப்படும் விவகாரங்கள்:
Accountability and impunity - பொறுப்புக் கூறலும் குற்றத்தில் இருந்து தப்புதலும்
Asylum seekers, refugees and internally displaced persons புகலிடம் கோருவோர், அகதிகள், உள்ளக இடப்பெயர்வுக்குள்ளானோர்.
Counter-terrorism measures - பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள்
Death penalty - இறப்புத் தண்டனை
Detention, including arbitrary detention and prison conditions - தடுத்து வைத்தல்(காரணமின்றித் தடுத்து வைத்தல் உட்பட) சிறைச்சால நிலைமை.
Development - அபிவிருத்தி
Due process protections -உரிய பாதுகாப்பு செயல்முறை
Education - கல்வி
Elections - தேர்தல்
Employment - வேலைவாய்ப்பு
Enforced disappearances - கட்டாய காணமற் போதல்
Environment - சுற்றாடல்
Extrajudicial executions - நீதிக்குப் புறம்பான கொலைகள்
Freedom of association - ஒன்று கூடும்(கூட்டம் நடாத்தும்) உரிமை
Freedom of opinion and expression, including media freedom - கருத்து, பேச்சு, ஊடக சுதந்திரம்,
Freedom of movement - பிரயாணம் செய்யும் சுதந்திரம்
Freedom of religion and belief - மத நம்பிக்கைச் சுதந்திரம்
Gender equality - ஆண் பெண் சமத்துவம்
Health - ஆரோக்கியம்
Housing - வீடமைப்பு
Human rights defenders - மனித உரிமைப் பாதுகாவலர்கள்.
Human rights education and training - மனித உரிமைக் கல்வியும் பயிற்ச்சியும்.
Human trafficking - மனிதக் கடத்தல்
Indigenous peoples - உள்நாட்டு மக்கள்
International humanitarian law, including the protection of civilians in armed conflict - பன்னாட்டு மனிதாபிமானச் சட்டம், படைக்கல முரண்பாட்டின் போது பொது மக்கள் பாதுகாப்பு
Judiciaries and justice systems - நீதி நிர்வாக முறைமை
Migrant workers - வெளிநாட்டு ஊழியர்கள்
Minorities - சிறுபான்மையினர்
National human rights mechanisms, including the establishment of NHRIs மனித உரிமைகளுக்கான கட்டமைப்பு
Non-discrimination, including on the bases of ethnicity, race, sex, and sexual orientation and gender identity - இன பால், சாதி வேறுபாட்டின்படி பாகு பாடு காட்டுதல்
Persons with disabilities - மற்றுத் திறனாளிகள்
Police and military - காவற்துறையும் படையினரும்
Ratification of/accession to international human rights instruments - பன்னாட்டு மனித உரிமை ஆவணங்களை ஏற்றுக்கொள்ளலும் சம்மதித்தலும்
Torture and other cruel, inhuman and degrading treatment or punishment - வதையும் கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் நடாத்துதல்
Violence against women. - பெண்களுக்கு எதிரான வன்முறை.
இவை தொடர்பாக ஒவ்வொரு நாடும் என்ன செய்தது என்பது பற்றி மீளாய்வு செய்யப்படும்.
மூவர் குழு Troika
ஒவ்வொரு நாட்டினதும் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு தொடர்பாக உதவுவதற்கு என மூன்று நாடுகள் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுகிறது. இக்குழு இரசிய மொழியில் Troika என அழைக்கப்படும். மற்ற நாடுகள் மூவர் குழு மூலமாக தமது கேள்விகளையும் சந்தேகங்களையும் தெரிவிக்கலாம்.
விளைவு அறிக்கை
மூவர் குழு 1. மீளாய்வு செய்யப்படும் நாடு சமர்ப்பிக்கும் இருபது பக்க அறிக்கை. 2. ஐநா மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை. 3. மீளாய்வு செய்யப்படும் நாட்டின் குடிசார் அமைப்புக்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளைச் சுருக்கி ஐநா
மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து மீளாய்வு செய்யப்படும் நாட்டுடன் இணைந்து விளைவு அறிக்கையைதாயாருக்கும். இவ் விளைவு அறிக்கை 47 நாடுகளைக்கொண்ட மனித உரிமைகள் கழகத்தின் செயற்குழுவால் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். விவாதத்தின் போது மீளாய்வு செய்யப்படும் நாட்டின் கருத்துக்கள் அறிக்கை தொடர்பான ஆட்சேபங்கள் கேட்டறியப்படும்.
மனித உரிமைகளை மீறும் நாடு தண்டிக்கப்படுமா?
ஒரு நாட்டுக்கு எதிராக மோசமான அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அது தண்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு மனித உரிமைக் கழகம் பதில் கூறவில்லை. தொடர்ந்து மீறல்கள் செய்யும் நாட்டிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையிட்டு 47 நாடுகளைக் கொண்ட செயற்குழு முடிவு செய்யும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
இலங்கையும் அகில காலாந்தர மீளாய்வும் (Universal Periodic Review)
இலங்கை 2008 ஆண்டு மீளாய்வு செய்யப்பட்ட போது Adopt measures to strengthen the rule of law, prevent human rights
violations, including enforced disappearances, extrajudicial executions
and torture, ensure punishment of those responsible, and include, inter
alia, systematic review of all detention areas. establish an independent
complaint mechanism in prisons, and prompt, impartial investigation
into allegations of torture as well as protection for witnesses and
others alleging torture or ill-treatment against reprisals, intimidation
and threats என்ற பரிந்துரை இலங்கைக்குச் செய்யப்படது. இது நிறைவேற்றப்பட்டதா? இலங்கை தொடர்பான தற்போதைய மீளாய்வு 10-09-2012இல் தொடங்கிய கூட்டத்தொடரில் நவம்பர் முதலாம் திகதி ஆய்வு செய்யப்படவிருக்கிறது. இலங்கை தனது அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டது. இதன் உண்மைத் தன்மையை யார் உறுதி செய்யப்போகிறார்கள். மனித உரிமைக் கழகத்தின் செய்முறையில் உண்மையை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா? மீளாய்வு செய்யும் மூன்று நாடுகள் கொண்ட குழுவில் இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் இடம்பெருகின்றன. இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுத்தால்இலங்கை சீனாபக்கம் சாய்ந்து விடும் என்று பயந்து நடுங்கும் அல்லது அப்படி பொய் சொல்லி இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிக்க உதவி செய்த இந்தியா எப்படிப்பட்ட அறிக்கையைத் தயாரிக்கும்? விளைவு அறிக்கை தயாரிக்கும் போது இந்த மூன்று நாடுகளுடன் இலங்கையும் இணைந்து கொள்ளும் போது இந்தியாவும் இலங்கையும் இணைந்து மற்ற இருநாடுகளையும் தமது பக்கத் திருப்பலாம். மனித உரிமைக் கழக ஆணையாளரின் பணிமனையும் பன்னாட்டு மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு போன்றவற்றின் நிலப்பாடு எப்படி இறுதி விளைவு அறிக்கையில் இடம்பெறும்?
இறுதியில் நாம் உணரப் போவது:
UPR - Useless politicians' Review
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
பகிர்வுக்கு நன்றி!
நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment