கடந்த பல ஆண்டுகளாக பல துன்பங்களை அனுபவித்து வரும் பலஸ்த்தீன தேசம் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெறுமா என்பது பற்றி 29/11/2012 வியாழக்கிழமை முடிவு செய்யப்படும். 2011இல் ஐநாவின் முழு உறுப்பினர் உரிமையைப் பெற பலஸ்தீனம் முயற்ச்சி செய்து ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் தோல்வி கண்டது. 2011இல் 1967இல் இருந்த எல்லை அடிப்படையில் தனது கோரிக்கையை பலஸ்தீனம் முன்வைத்திருந்தது. ஆனால் பாதுகாப்புச் சபையில் ஒருமித்த கருத்து இல்லாததால் பலஸ்தீனத்திற்கு வெறும் பார்வையாளர் நிலை மட்டும் வழங்கப்பட்டது. ஒரு முழு உறுப்புரிமை பெறும் அத்தனை தகுதிகளும் பலஸ்த்தீனத்திற்கு இருக்கிறது. தடையாக இருப்பது ஐக்கிய அமெரிக்கா.
பரவலான ஆதரவு
கசா நிலப்பரப்பு, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசேலம் ஆகியவற்றை இணைத்த ஒரு நாடு தமக்குத் தேவை என பலஸ்தீன மக்கள் கோருகின்றனர். இந்த நிலப்பரப்பில் தமது இறைமையை அங்கீகரிக்கும் படி அவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு நாட்டையும் கோருகின்றனர். ஐநா மன்றில் உறுப்புரிமையுள்ள 193 நாடுகளில் 132 நாடுகள் பலஸ்தீனத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதனுடன் ராசதந்திர உறவையும் ஏற்படுத்தியுள்ளன.
குறைத்த கோரிக்கை
2011இல் வைத்த கோரிக்கையை கைவிட்ட பலஸ்தீனம் இப்போது உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலை (non-member observer state). தற்போது உள்ள வெறும் பார்வையாளர் நிலை பலஸ்தீனப் பிரதிநிது ஐநா சபை விவாதங்களில் கலந்து உரையாற்ற முடியாது. இப்போது விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் உரிமையை பலஸ்த்தீனம் கோருகிறது. ஆனாலும் ஐநா பொதுச்சபையில் வாக்களிக்கும் உரிமையோ அல்லது பாதுகாப்புச் சபைக்குத் தெரிவு செய்யப்படும் உரிமையோ பலஸ்த்தீனம் கோரவில்லை. அப்படிப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படும் என்பதை பலஸ்தீனம் உணர்ந்துள்ளது. பலஸ்தீனம் பன்னாட்டு நீதிமன்றில் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாமா என்பது கேள்விக்குறி.
யுனெஸ்க்கோவில் பலஸ்த்தீனம்
2011 அக்டோபர் மாதம் யுனெஸ்கோவில் பலஸ்த்தீனம் ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பு மத்தியில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. ஆத்திரமடைந்த ஐக்கிய அமெரிக்கா யுனெஸ்க்கோவிற்கான தனது நிதியுதவியை குறைத்தது. அப்போது வாக்களித்த 173 நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 14 நாடுகள் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன.
1993 ஒஸ்லோ உடன்படிக்கை
பலஸ்த்தீன அதிகாரசபையே ஐநாவில் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையைக் கோருகிறது. 1993இல் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் இஸ்ரேலும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பலஸ்த்தீன அதிகாரசபை உருவாக்கப்பட்டது. இஸ்ரேல் பலஸ்தீன சமாதானப் பேச்சு வார்த்தை இஸ்ரேல் மேற்குக் கரையில் யூதர்களைக் குடியேற்றுவதால் முறிவடைந்து விட்டது. 29/11/2012இல் ஐநா வாக்களிப்பைத் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபடலாம என பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் மொஹ்மூட் அபாஸ் தெரிவித்துள்ளார்.
ஹமாஸும் பலஸ்தீன விடுதலை இயக்கமும்
பலஸ்த்தீனத்திற்கு உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலை வழங்கப்பட்டால் அது சமாதானப் பேச்சு வார்த்தையைக் குழப்பும் என இஸ்ரேலும் அமெரிக்காவும் எச்சரிக்கின்றன. ஆனால் மேற்கு நாடுகள் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் காசா நிலப்பரப்பில் பலமாக உள்ள ஹமாஸ் இயக்கத்தின் செல்வாக்கை அதிகரிக்கும் எனக் கருதுகின்றன. ஏற்கனவே ஹமாஸ் இயக்கத்துடன் ஒப்பிடுகையில் பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் மொஹ்மூட் அபாஸ் செல்வாக்குக் குறைந்த நிலையிலேயே இருக்கிறார். அமெரிக்காவும் இஸ்ரேலும் பலஸ்த்தீனம் இஸ்ரேலுடனான நேரடிப் பேச்சுவார்த்தையால் மட்டுமே தனது உரிமைகளை நிலை நாட்ட முடியும் ஐநா மன்றில் அல்ல என்கின்றன.
பன்னாட்டு நீதி
பலஸ்த்தீனர்களைப் பொறுத்தவரை பன்னாட்டு நீதி என்பதி நீண்டகாலமாகப் பிழையாகவே இருக்கிறது. பிரித்தானியா பலஸ்த்தீனம் ஐநா உறுப்புரிமை பெறுவதை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதிக்கிறது. உறுப்புரிமை பெற்ற பலஸ்த்தீனம் இஸ்ரேலை பன்னாட்டு நீதிமன்றிற்கு இழுக்கக் கூடாது என்பதே. பலஸ்த்தீனியர்களுக்கு எதிரான போர்க்குற்றத்திற்கு நீதி இல்லையா? உறுப்புரிமைக்காக வழக்குத் தொடுக்கும் உரிமையைக் கைவிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என பல மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
வெற்றி பெறும் தீர்மானம்.
அமெரிக்காவிற்கு அஞ்சி பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையை மட்டுமே கோருகிறது. உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையைப் பெற்றால் the International Civil Aviation Organization (ICAO), Law of the Sea Treaty (LST), NPT, International Court of Justice (ICJ), and International Criminal Court (ICC) ஆகிய அமைப்புக்களில் பலஸ்த்தீனத்தால் உறுப்புரிமை பெறமுடியும். அத்துடன் தனது நிலப்பரப்பிலும் வான்பரப்பிலும் பல உரிமைகள் அதற்குக் கிடைக்கும். பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் உறுப்புரிமை பெறுவதை எதிக்கவில்லை. ஆனால் தீர்மானத்தின் நகல் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. நகலைப் பொறுத்து சில நாடுகள் மாறலாம். பிரான்ஸ் தான் பலஸ்த்தீன உறுப்புரிமையை ஆதரிப்பதாக சைகைகாட்டியுள்ளது. சுவிஸ், டென்மார்க், நோர்வே, ஒஸ்ரியா ஆகிய நாடுகள் பலஸ்த்தீனத்தை ஆதரிக்கின்றன. நெதர்லாந்து வாக்களிக்க மாட்டது. கனடா பலஸ்த்தீனத்திற்கு எதிராக வாக்களிக்கும்.ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் தமது கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஜேர்மனை எதிர்க்கும் என்று இஸ்ரேலியப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. ரம்மல்லா நகர்வாழ் பலஸ்த்தீனியர்களில் பலர் பன்னாட்டு நீதி மன்றின் உறுப்புரிமையை விட்டுக் கொடுப்பதை விரும்பவில்லை. அந்த உரிமை எதிர்காலத்தில் இஸ்ரேலுடனான பேச்சு வார்த்தைகளில் நல்ல துருப்புச் சீட்டாக அமையும் என அவர்கள் கருதுகின்றனர். சிலர் பன்னாட்டு நிதிமன்றில் உறுப்புரிமை கோருதலோ அல்லது அதில் இஸ்ரேலை வழக்கிற்கு இழுக்கமாட்டோம் என்ற வாக்குறுதியை தற்போது வாய்மொழி மூலம் மட்டும் கொடுக்கலாம் எனக் கருதுகின்றனர். பிரித்தானியாவின் நிபந்தனையான பன்னாட்டு நீதி மன்ற உறுப்புரிமையை பலஸ்த்தீனம் கோரக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. பலஸ்த்தீன உறுப்புரிமை கோரலை பிரித்தானியா எதிர்த்தால் மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கையும் வர்த்தகத்தையும் இழக்க வேண்டி வரலாம்.
மீண்டும் பழிவாங்குமா அமெரிக்கா
29/11/2012 வியாழக்கிழமை ஐநா பொதுச் சபையில் பலஸ்த்தீனம் ஒரு உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையைப் பெற்றால் ஐக்கிய அமெரிக்காவும் இஸ்ரேலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராகப் பல நடவடிக்கைக்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா இரகசியமாக உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலைக்கு எதிராக தனது கருத்தை தெரிவித்துள்ளது. பலஸ்த்தீனத்தின் மீது ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரலாம். இஸ்ரேல் மஹ்மூட் அபாஸைப் அவரது பதவியில் இருந்து தூக்கும் சதியை மேற்கொள்ளலாம். தற்போது பலஸ்த்தீனியத் தொழிலாளர்கள் கொடுக்கும் வரியில் ஒருபகுதியை இஸ்ரேல் பலஸ்தீன அதிகாரசபைக்கு வழங்கி வருகிறது. இஸ்ரேல் அதை நிறுத்தலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
போரே இல்லாத உலகம் எப்போது அமையும்.
Post a Comment