Wednesday 28 November 2012

வருகிறது விமானி இல்லா பயணிகள் விமானம்

ஆளில்லா போர் விமானங்கள் இப்போது படைத் துறையில் பிரபலமாகிவிட்டன. இனி இந்தத் தொழில் நுட்பம் பயணிகள் விமானத்திலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. ஆம் நாம் விமான ஓட்டி இல்லாத விமானங்களில் பயணம் செய்யப் போகிறோம்.

இரட்டை இயந்திரம் கொண்ட  பயணிகள் தாரை விமானம் ஒன்று பிரித்தானியாவில் பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கிறது. இது தரையில் இருந்து ரிமோட் கொன்ரூல் (Remote Control) மூலம் பறக்க வைக்கப்பட இருக்கிறது. பிரித்தானிய அரசும் ஏழு விமான நிறுவனங்களும் இணைந்து 62 மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் இத்திட்டத்தை செயற்படுத்துகின்றன. இத்திட்டம் Autonomous Systems Technology Related Airborne Evaluation and Assessment (ASTRAEA) என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் முதலில் பறக்க விடும் விமானம் Jetstream 41எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது விமானிகள் ஓட்டும் பல விமானங்களில் பல தானியங்கிக்கருவிகள் உள்ளன. விமானங்கள் மேலெழுதல் தரையிறங்குதல் போன்றவை தானியங்கிகள் மூலமே செய்யப்படுகின்றன.

ASTRAEAஇன் Jetstreamஇல் உருவங்களை இனம் காணும் காணொளிப்பதிவு கருவிகள் முக்கிய பாகம் வகிக்கின்றன. வேறு விமானங்களில் மோதும் சூழல் உருவாக்கப்பட்டு அதில் விமானியில்லா விமானங்கள் எப்படி செயற்படுகின்றன என்றும் பரீட்சித்துப் பார்க்கப்படவிருக்கிறது.

விமானிகள் இல்லாத விமானங்களை மலிவாக இயக்க முடியும். 2020ஆண்டு விமானிகள் இல்லாத விமானங்கள் ஐம்பது பில்லிய டாலர் பெறுமதியான விற்பனை வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...