Friday 23 November 2012

கழுவ முடியாமல் தவிக்கும் கண்ணீர்த் துளிகள்

தான் பிறந்த மண்
மாசு படுவதைத்
தாங்காமல் உருகி
மீண்டும் கழுவ வருகிறது
முகில் மழையாக

XXXXXXX

இறங்காமல் தெரியாது
வாழ்க்கை ஆற்றின் ஆழம்
ஒரு பிரச்சனையில் இருந்து விடுபட
சிறந்த வழி இன்னொரு பிரச்சனை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயம்
பயங்களை வெல்வதே வாழ்க்கை

XXXXXXXX

வார்த்தைகள் எப்போதும்
திண்ணனார் சிவனுக்குக்
கொடுத்த இறைச்சி போலே
நாம் சுவை பார்த்து
சரி என்றபின்னர்தான்
மற்றவர்களுக்குப்
பரிமாற வேண்டும்

XXXXXXX

கண்ணில் கறையாகிய
உன் விம்பத்தை
கழுவ முடியாமல் தவிக்கும்
கண்ணீர்த் துளிகள்

2 comments:

Easy (EZ) Editorial Calendar said...

கண்ணீர் துளி கவிதை மிக அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Seeni said...

arumai!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...