சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று பெரும் எதிரிகளல்ல. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமல் சீனாவால் இருக்க முடியாது. சீனாவிடம் கடன் வாங்காமல் அமெரிக்காவால் இருக்க முடியாது. அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பது சீனாவிற்கு நன்மையளிக்கிறது. இரண்டுக்கும் இடையில் கடுமையான போட்டி உள்ளது. இரண்டுக்கும் இடையிலான போட்டியில் மோதலில்லாத ஒரு சமநிலையை எங்கு நிலை நிறுத்துவது என்பதில் இரண்டும் பெரு முயற்ச்சி செய்கின்றன.
சீனாவை சூழ உள்ள நாடுகள் சீனாவிற்கு பயப்படுகின்றன. போதாத குறைக்கு தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் உள்ள தீவுகள் யாருக்கு உரியது என்பதில் பெரும் சிக்கல். தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் ஒரு போர் மூளக் கூடிய சாத்தியமும் உண்டு. அவ்வப்போது ஜப்பான் - சீனா, பிலிப்பைன்ஸ் - சீனா, வியட்னாம் - சீனா ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கக் கூடிய சூழலும் ஏற்பட்டது. இது பற்றிய முன்னைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: கொதிக்கும் தென் சீனக் கடல்
அமெரிக்காவுடன் ஒரு படை மோதலை சீனா விரும்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சிக்கு இது பாதகமாக அமையும் என்று சீனா அறியும். தனது பொருளாதாரத்தை முற்றாக வளர்ச்சியடையச் செய்வதே சீனாவின் முதல் நோக்கம். வேகமாக வளரும் பொருளாதாரம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், மூன்று ரில்லியன் டாலர் வெளிநாட்டுச் செலவாணி இருப்பைக் கொண்ட பொருளாதாரம் என்ற பெருமைகள் சீனா இன்னும் ஒரு வளர்ச்சியடைந்த நாடு அல்ல. அதன் தனி நபர் வருமானம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதே. தனி நபர் வருமான அடிப்படையில் சீனா 93வது நாடாக இருக்கிறது. சீனாவிற்கு பொருளாதார வளர்ச்சி மிக முக்கியம். பொருளாதார வளர்ச்சியடைந்த சீனா ஒரு ஆபத்தான சீனா என்பதை அமெரிக்கா மட்டுமல்ல சீனாவைச் சூழவுள்ள நாடுகள் நன்கு அறியும்.
தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் உள்ள கொந்தளிப்புச் சூழலை மையமாக வைத்து அமெரிக்கா அப்பிராந்திய நாடுகளுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பையும் படைக்கலன்கள் விற்பனையும் அதிகரிக்கிறது.
அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காண்மை தந்திரம்.
சீனாவின் பொருளாதர வளர்ச்சிக்குக் காரணம் அதன் மக்கள் தொகையே. அதற்கு ஈடு கொடுக்க அமெரிக்கா TPP எனப்படும் பசுபிக் தாண்டிய பங்காண்மை (Trans-Pacific Partnership) ஐ உருவாக்கியுள்ளது. இது சீனாவைச் சூழவுள்ள நாடுகளுடனான அமெரிக்காவின் உறவையும் வர்த்தகத்தையும் விரிவு படுத்தும் நோக்கம் கொண்டது. தாய்லாந்து பசுபிக் தாண்டிய பங்காண்மையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தலில் வென்றவுடன் முதல் செய்த பயணம் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கே.ஆசியான் மாநாட்டுக்குச் சென்ற ஒபாமா வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல சீனாவின் அயல் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றி உரையாடினார். சீனாவின் அயலவர்களான தென் கொரியாவும் ஜப்பானும் பசுபிக் தாண்டிய பங்காண்மையின் இணையும் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. சிங்கப்பூரும் ஒஸ்ரேலியாவும் பல முனைகளில் அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்கின்றன. மேலும் அமெரிக்க நாடுகளான மெக்சிக்கோவும் கனடாவும் பசுபிக் தாண்டிய பங்காண்மையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. பசுபிக் தாண்டிய பங்காண்மையின் அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தை 2012 டிசம்பரில் நியூசிலாந்தில் நடக்கவிருக்கிறது. பசுபிக் தாண்டிய பங்காண்மை சீனாவை அமெரிக்கா பொருளாதார ரீதியில் சுற்றி வளைக்கும் தந்திரமே.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment