பக்கிஸ்த்தானிய பஞ்சாப் மாநிலத்தில் ஃபரிட்கொட் என்னும் கிராமத்தில் பிறந்த அஜ்மல் கசாப் 2008 நவம்பர் 26-ம் திகதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா என்னும் பக்கிஸ்தானிய தீவிரவாத அமைப்பினர் நடாத்திய துணீகரத் தாக்குதலில் பங்க்கேற்ற பத்துப் பேரில் தப்பிய ஒரேஒருவராகும். அஜ்மல் கசாம் 21/11/2012 காலை இந்திய நேரப்படி 7.30இற்கு புனேயில் உள்ள யெர்வாடாச் சிறைச்சாலையில் இரகசியமாகத் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டான்.
பத்துப் பேர் கொண்ட குழு ஒன்று மும்பையின் முக்கிய பகுதியை 60 மணித்தியாலங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை உலகின் 4வது பெரிய படையைக் கொண்ட் ஒரு நாட்டுக்கு பெருத்த அவமானமாக அமைந்திருந்தது.
25 வயதான அஜ்மல் கசாப்பின் கடைசி விருப்பம் என்ன என்று கேட்டபோது தனது தாயாருக்கு தன் இறப்புப்பற்றித் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னான். அவனுக்கு உயில் எழுதவும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக இந்திய அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கசாப் மறுத்துவிட்டான். முதலில் பதட்டத்துடன் இருந்த கசாப் தூக்குவதற்கு முன்னர் அமைதியாக இருந்தானாம். அஜ்மல் கசாப்பின் உடலை அவரது குடும்பத்தினரோ அல்லது பாக்கிஸ்த்தானிய அரசோ பொறுப்பு ஏற்க முன்வரவில்லை. அதனால் அவன் யெர்வாடாச் சிறையில் அடக்கம் செய்யப்பட்டான்.
கருணைக்கு இடமில்லை
கைதி எண் C-7096 அஜ்மல் கசாப்பிற்கு எதிரான வழக்கில் இந்திய அரசு தரப்பில் கசாப் தொடரூந்து நிலையம் மீது துப்பாக்கியால் சுடுவது கைக்குண்டு வீசுவது போன்றவற்றின் காணொளிப்பதிவுகள், கைரேகை அடையாளங்கள், டிஎன்.ஏ மாதிரிகள் ஆகியவை சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டன. முதலில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளை மறுத்த கசாப் பின்னர் தான் லஷ்கர் இ தொய்பாஅனுப்பிய தாக்குதலாளிகளில் ஒருவன் என்பதை ஒத்துக் கொண்டான். தனக்கு நீதியான விசாரணை இல்லை என்றும் தனக்கு சரியான சட்டப் பிரதிநிதித்துவம் இல்லை என்றும் வாதாடினான். வழக்கு உச்ச நீதமன்றம் வரை சென்றது. 2010 மே மாதம் கசாப்பிற்கு தூக்குத் தண்டனை வழ்ங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் 2012/11/05இலன்று நிராகரிக்கப்பட்டது.அதன் பின்னர் அஜ்மல் கசாப் தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிண்டே தான் ஒரு பயிற்றப்பட்ட காவல் துறையினன் என்பதால் எல்லாவற்றையும் இரகசியமாகவே வைத்திருந்ததாகச் சொன்னார். பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் செய்யவே இரகசியம் பேணப்பட்டது. கசாப் மீது எவரும் கருணை காட்டக் கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருந்ததா? மனிதாபிமான அடிப்படையில் கசாப்பிற்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருந்ததா? பன்னாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அறிவிப்பதால் என்ன கெடுதல் ஏற்படும்?
இந்திய பாக்கிஸ்தானிய அரசுகளிடை இழுபறி
அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையை தூக்கிலிடுவதற்கு 48 மணித்தியாலங்களிற்கு முன்னரே பாக்கிஸ்த்தான் அரசிற்கு அறிவிப்பதாக இந்தியா முடிவெடுத்து அதன்ப்டியே செய்தது. இந்திய அரசின் கடிதத்தை பாக் அரசு ஏற்க மறுத்தது. பின்னர் தொலைநகல்(ஃபக்ஸ்) மூலம் பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சுக்கு அறிவிக்கப்ப்டடது. பாக்கிஸ்த்தானில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தியாவின் கடிதத்தை ஏற்றதாக பாக்கிஸ்த்தானும் ஏற்கவில்லை என இந்தியாவும் கூறுகின்றன.
ஒன்றும் தெரியாத இந்தியப் பிரதமர்
அஜ்மல் கசாப்பின் தூக்குப் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்துத்தான் அறிந்து கொண்டாராம். இதுபற்றி அவருக்கு எதுவுமே தெரியாதாம். இதைப்பற்றி டுவிட்டரில் ஒருவர் அம்பானிதானே நாட்டை நடத்துகிறார் என்று எழுதினார். ஆனால் சோனியா காந்திக்க்கு கசாப் தூக்கிலிடப்படப் போகிறான் என்று தெரியுமாம். மற்ற அமைச்சர்களுக்கும் தெரியாதாம்.
கசாப்பைப் புகழ்கிறது லஷ்கர் இ தொய்பா
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் அஜ்மல் கசாப் ஒரு சிறந்த நாயகன். அவன் வழியைப் பலர் பின்பற்றுவார்கள். அவன் வழியில் பல தாக்குதல்கள் நடக்கும் என்கிறது. பல இசுலாமியத் தீவிரவாதிகளை கசாப்பின் தூக்குத்தண்டனை ஆத்திரமூட்டும் என்று கருதப்படுகிறது. பாக்கிஸ்த்தான் அரசுக்கு இது சங்கடத்தையும் ஏற்ப்படுத்தும். முதலில் கசாப் தனது நாட்டவன் அல்ல என்று பொய் சொன்ன பாக்கிஸ்த்தான் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டது. இந்திய மண்ணில் ஒரு முசுலிம் மகன் கொல்லப்பட்டது அதிர்ச்சியைத் தருகிறது என்கிறது தலிபான் இயக்கம்.
அரசியல் இலாபம்
நாட்டில் அந்நிய முதலீடு தொடர்ப்பான சர்ச்சையைத் திசை திருப்பவும் கட்சிக்கு செல்வாக்குத் தேடவும் கசாப்பின் தூக்குத்தண்டனைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே மிக விரைவாக நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனை அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையாகும். இது சிறிது சந்தேகத்தைக் கிளப்புகிறது.
காந்தியைக் கொன்ற நாட்டின் "கசாப்"புக் கடை
காந்தித் தொப்பி போட்டுக் கொண்ட அன்ன ஹசாரே அஜ்மல் கசாப்பை பொது இடத்தில் தூக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றார். மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கசாப்பின் தண்டனையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் பட்டாசு கொழுத்தி மக்கள் மகிழ்ச்சி கொண்டாடினர். அடுத்து அடுத்துஇரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ஒருவர் பின்னூட்டமிட்டுள்ளார். மற்றவர் பால் தக்ரே. இன்னொருவர் 25000 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற குஜராத் பயங்கரவாதிக்கு எப்போது தூக்குத் தண்டனை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 1984இல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது கொல்லப்பட்ட அப்பாவிச் சீக்கியர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்கிறார்.
எமக்கு எப்போது நீதி கிடைக்கும்
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் நடாத்திய தாக்குதலில் எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்படவில்லை. பத்துப் பேர் கொண்ட தாக்குதல் அணி செய்த அட்டூழியங்களுக்கு இது கசாப்பின் தூக்குத் தண்டனை நீதி என்றால் ஐம்பதினாயினரர் கொண்ட ஒரு கொலை வெறிப்படையணி ஈழத்துக்குள் நுழைந்து 3,500 பெண்களைக் கற்பழித்து 5000இற்கு மேற்பட்டோரைக் கொன்று இலட்சக்கணக்கானோரின் வீடுகளை அழித்தமைக்கு என்று கிடைக்கும் நீதி?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment