Wednesday, 19 September 2012

ஒபாமா! ஒபாமா!! நாமெல்லாம் ஒசாமா! .இசுலாமிய நிந்தனையும் மேற்குலகப் பேச்சுரிமையும்

மேற்கு ஐரோப்பியாவிலும் வட அமெரிக்காவிலும் இசுலாமிய மதத்திற்கு எதிரான சிந்தனைகளும் நிந்தனைகளும் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பல காலத்திற்கு முன்பே உருவாகிவிட்டன. இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் இவை அதிகரித்துவிட்டன. மேற்குலகில் வாழும் ஒருவர் உலகெங்கும் கலவரம் கிளறுவதாயின் இசுலாமிய மதத்திற்கு எதிரான ஒரு கேலிச்சித்திரத்தை வரைந்தால் போதும்.

சல்மன் ருஸ்டியின் சாத்தானின் வரிகள் என்ற புத்தகம், டென்மார்க்கில் இசுலாமிய மதத்திற்கு எதிரான கேலிச்சித்திரம், அமெரிக்கப் பாதிரியார் டெரி ஜோனின் குர் ஆன் எரிப்பு நாள் போன்றவை உலகெங்கு பலத்த எதிர்ப்பைக் கிளப்பின. பாக்கிஸ்த்தானில் மதநிந்தனைக்கு எதிரான கடுமையான சட்டங்களைத் தணிக்க முயன்ற இரு அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.
பாதணிகளில் இராமர் படம்

முசுலிம்களின் களங்கமின்மை என்ற திரைப்படத்தை எகிப்தைச் சேர்ந்தவர் ஏன் அமெரிக்காவில் தயாரித்தார்?  அமெரிக்காவில் இதற்கு எதிரான சட்டங்கள் இல்லை என்பதால்தான் அவர் அமெரிகாவில் இதைத் தயாரித்தார்.ஆனால் உலகெங்கும் இசுலாமியர் பல மில்லியன்கணக்கில் திரண்டு "ஒபாமா...ஒபாமா....நாமெல்லாம் ஒசாமா...." எனக்குரல் கொடுத்தனர்.
உள்ளாடைகளில் திருமகள்
அமெரிக்காவில் மத நிந்தனைக்காக ஒருவரைத் தண்டிக்க முடியாது. கத்தோலிக்கர்களுக்கு நிந்தனையாகப் படுவது ஜோகாவாவின் சாட்சியத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நியாயமாகப்படலாம். இதற்காக ஜோகாவாவின் சாட்சியத்தைப் பின்பற்றுபவர்களின் பேச்சுரிமையைத் தம்மால் கட்டுப்படுத்த முடியாது. பேச்சுரிமை எமது அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படி வாதாடுகின்றனர் அமெரிக்க பேச்சுரிமையின் ஆதரவாளர்கள். ஆனால் முசுலிம்களின் களங்கமின்மை என்ற திரைப்படம் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் தலையிடியாகவும் அவர்களின் அண்மைக்காலச் செயற்பாடுகள் பலவற்றை தவிடு பொடியாக்கும் ஒன்றாகவும் அமைந்து விட்டது. அமெரிக்கச் சட்டத்தில் ஒருவரது பேச்சு கடுமையான சட்டவிரோதச் செயலில் ஈடுபட பலரைத் தூண்டுமாயின் அப்பேச்சு தடைசெய்யப்பட இடமுண்டு. இதை Heckler's vetoes என அழைப்பர்.

கூகிளும் முசுலிம்களின் களங்கமின்மை திரைப்படமும்.
கூகிள்  முசுலிம்களின் களங்கமின்மை திரைப்படத்தை தனது யூரியூப்பில் இருந்து நீக்க முடியாது என்று சொல்லிவிட்டது. யூரியூப்பின் கொள்கைப்படி வெறுப்பான பேச்சு என்பது "speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity." வெறுப்பான பேச்சுக்களை கூகுள் நீக்கிவிடுமாம். ஆனால் முசுலிம்களின் களங்கமின்மைத் திரைப்படம் வெறுப்பான பேச்சு அல்லவாம். யூரியூம் இத் திரைப்படத்தை இசுலாமிய மார்க்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் விவாதம் என்கிறது.

உலகமயமாதல்
உலகம் சுருங்கி வரும் வேளையில் உலகம் எல்லாம் கலாச்சாரங்கள் நெருங்கிவர வேண்டுமானால் மற்ற நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு உள்நாட்டுச் சட்டங்கள் மதிப்பளிக்க வேண்டும்.

இது தொடர்பான் முந்தைய பதிவு:

நபிகளுக்கு எதிரான படம்: சதிக் கோட்பாடுகள்!!!

1 comment:

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி..

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...